ஜஸ்ட் ரிலாக்ஸ்

கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறதா? எக்ஸெல் மற்றும் வேர்ட் என வேலை பார்த்து உற்சாகம் குறைகிறதா?
இதோ ஓர் அதிர்ச்சி டானிக்.
1. கண்ட்ரோல் + ஆல்ட் + மேல் அம்புக் குறி அழுத்தவும்.
என்ன ஒன்றும் ஆகவில்லையா! பொறுங்கள். அடுத்து
2. கண்ட்ரோல் + ஆல்ட் + வலது அம்புக் குறி அழுத்தவும்.
அய்யோ இது என்ன! மானிட்டர் அப்படியேஇருக்க உள்ளே ஸ்கிரீன் மட்டும் திசை மாறித் தொங்குகிறதே எனப் பதற வேண்டாம்.
3. அடுத்து கண்ட்ரோல் + ஆல்ட் + இடது அம்புக் குறி அழுத்துங்கள். இப்போது ஸ்கிரீன் இன்னொரு பக்கத்தில் முறைத்துக் கொண்டு தொங்குகிறதா!
4. மீண்டும் கண்ட்ரோல்+ ஆல்ட்+ கீழ் அம்புக்குறி, அதன் பின் இதே சேர்க்கையில் மேல் அம்புக்குறி என அழுத்துங்கள்.
உங்கள் திரை பழையபடி ஆகிவிட்டதா!
என்ன! மறுபடியும் தைரியமாய் விளையாடப் போகிறீர்களா!
அதான் கம்ப்யூட்டர். என்ன செய்தாலும் ஒன்றும் கெட்டுப் போகாது.

One response

  1. […] ஜஸ்ட் ரிலாக்ஸ் […]

%d bloggers like this: