பைல்களை மறைக்கலாம்

ஒரே கம்ப்யூட்டரை அலுவலகத்திலும், வீட்டிலும் பலர் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று எங்கும் காணப்படுகிறது. இதனால் ஒருவரின் உழைப்பில் உருவான பைலை மற்றவர்கள் திருத்தாமல் இருக்கவும், மேலும் மற்றவர்கள் அறியாமல் இருக்கவும் இது போல பாதுகாக்க வேண்டியதுள்ளது. இத்தகைய தேவைகளை நிறைவேற்று வதற்கென பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இன்டர்நெட்டில் உள்ளன. இங்கு தேர்ட் பார்ட்டி என்பது மைக்ரோசாப்ட் இல்லாமல் மற்ற சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் தயாரித்து வழங்கும் புரோகிராம்களாகும். ஆனால் இவற்றை எந்த அளவிற்கு நம்ப முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே. எனவே நாம் விண்டோஸ் தயாரித்து வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளையே காணலாம்.

ஒரு போல்டரை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பது என்று ஏற்கனவே பல முறை எழுதி உள்ளோம். பாதுகாக்க வேண்டிய போல்டரைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ஷேரிங் அண்ட் செக்யூரிட்டி என்ற பிரிவில் கிளிக் செய்தால் அங்கு போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பதற்கான வழிகள் தரப்பட்டிருக்கும். மேலும் ஒரு வழியினை இங்கு பார்க்கலாம். இந்த செயலை மேற்கொள்ள நமக்கு கிடைக்கும் கட்டளை Attrib என்பதாகும். இந்த சொல் ஒரு பொருளுக்கு நாம் அமைக்கும் பண்பினைக் குறிக்கிறது. இங்கு ஒரு பைலுக்கு நாம் அளிக்கும் பண்பே அது. படிக்க மட்டும், மறைத்து வைக்க மற்றும் சிஸ்டம் பயன்படுத்த (Read only, Hidden and System attributes) என மூன்று வகைகளில் பொதுவாக பண்புகளை கொடுக்கலாம். கீழ்க்காணும் வழிகளில் செயல்பட்டு உங்கள் போல்டருக்கு இந்த பண்புகளை அளிக்கலாம். இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும். இனி மறைக்க வேண்டிய தகவல் உள்ள பைல்களை அடைத்து வைக்க ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும். எடுத்துக் காட்டாக உட்ரைவில் Personal என ஒரு போல்டரை உருவாக்கலாம். இதில் அனைத்து பைல்களையும் கொண்டு வரவும். மறைக்கப்பட வேண்டிய இந்த பைல்களுக்கு காப்பி பைல்கள் வேறு எங்கும் இருக்கக்கூடாது. பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt) கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக்காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib +s +h E:\Personal” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக்கூடாது) இந்த கட்டளை உங்கள் ஈச்tச் போல்டரை E டிரைவில் மறைத்து வைத்திடும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை “Show hidden files and folders” என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. சரி, மறைத்து வைத்துவிட்டீர்கள். என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு நேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம். அல்லது மேலும் சில பைல்களை, இதன் பின் மறைத்து வைக்க எண்ணி, இந்த போல்டரில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது “attrib s h E:\Personal”என டைப் செய்திட வேண்டும். இதற்கு இந்த போல்டரின் பெயர் மற்றும் டைரக்டரியின் பெயர் உங்களுக்கு நினைவில் இருக்க வேண்டும்.
ஒரு பைலை மட்டும் தனியாக மறைக்க, அதற்கு மட்டும் ஒரு பாஸ்வேர்ட் கொடுப்பது பற்றி இங்கு ஏற்கனவே தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஒரு பைலை யாரும் எதற்கும் அனுமதிக்காத வகையில் பாஸ்வேர்ட் தரலாம். அல்லது பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கலாம். எடிட் செய்வதனைத் தடை செய்திடலாம். இந்த வசதிகள் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் அனைத்திற்கும் உள்ளன.

எடுத்துக்காட்டாக வேர்டில் உருவாக்கப்படும் ஒரு பைலுக்கு எப்படி பாஸ்வேர்ட் கொடுப்பது என்று பார்க்கலாம்.
பைலைத் திறந்து பின் File > save as எனச் செல்லவும். இப்போது Save அண் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் வலது மூலையில் டூல்ஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Security Options என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் Password to Open, Password to Modify என்று இரு பிரிவுகள் இருக்கும். இதில் எந்த வகையில் நீங்கள் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க வேண்டுமோ அந்த வகையில் பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஆனால் கொடுத்த பாஸ்வேர்டினை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

One response

  1. […] பைல்களை மறைக்கலாம் […]

%d bloggers like this: