பிளாஷ் டிரைவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

எளிதான டேட்டா பரிமாற்றத்திற்கு உதவியபிளாஷ் டிரைவ்கள், தற்போது மேலும் பல பயன்களைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சில அப்ளிகேஷன் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல் பயன்படுத்த இந்த பிளாஷ் டிரைவ்கள் பயன்படுகின்றன.

பிளாஷ் டிரைவ்களில் காப்பி செய்து அப்படியே கம்ப்யூட்டரில் செருகிப் பயன்படுத்த ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கும் புரோகிராம்கள் குறித்து சில தகவல்கள் ஏற்கனவே இந்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. ஆனால் அண்மையில் ஓர் இணைய தளம் இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் பலவற்றை வகை வகையாய் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இணைய தளத்தின் முகவரி: http://portableapps.com/apps இங்கே நூற்றுக் கணக்கில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று அப்படியே வைத்துப் பயன்படுத்தக் கூடிய தன்மை உடையவை என்பது இவற்றின் சிறப்பு. இவை அனைத்தும் கீழே குறிப்பிடப்படும் தலைப்புகளில் குழுக்களாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவை: Accessibility, Development Education Games Graphics & Pictures Internet Music & Video Office Operating Systems, Utilities.

இவற்றை பிளாஷ் டிரைவில் பதிய முதலில் பிளாஷ் டிரைவினைக் கம்ப்யூட்டரில் இணைக்க வேண்டும். பின் இந்த புரோகிராம் மீது கிளிக் செய்தால்,எங்கு இன்ஸ்டால் செய்திட என்ற கேள்வி கேட்கப்படும். அப்போது பிளாஷ் டிரைவின் டிரைவைக் கிளிக் செய்தால், பிளாஷ் டிரைவில் அந்த புரோகிராம் பதியப்படும். பின் அதனை எடுத்துச் சென்று, கம்ப்யூட்டரில் இணைத்து நேரடியாகப் பயன்படுத்தலாம். புரோகிராமினை கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

%d bloggers like this: