Daily Archives: ஒக்ரோபர் 22nd, 2009

உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்


உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.

செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.

ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.

மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.

இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.

உடல் செழுமையும் வளமும் பெற

பயிற்சி 1

ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 2

முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி

பயிற்சி 3

முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 4

மூன்றாம் பயிற்சியை போலவே நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்தி முன் பாதங்களில் நிற்க வேண்டும். குதிகால் தரையில் படாமல் சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும்.இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி 5 முதல் பயிற்சியை போலவே இரு கைகளையும் ஊன்றி நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். குதிகால் தரையில் இருக்கும்படியே குதிகால் மீது உட்கார வேண்டும் கீழே குனியாமல், நேர்கொண்ட பார்வை இருக்க வேண்டும். சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு எழுந்த பிறகே மூச்சை விட வேண்டும்.

இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து விடும் பயிற்சிக்கு மேற்கூறிய பயிற்சிகளை, முன்னே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் செய்ய வேண்டும். தினந்தோறும் பயிற்சியின் அளவை மிகுதிபடுத்திக் கொண்டே வர வேண்டும். ஒரே மூச்சில் எவ்வளவு காற்றை அதிகம் இழுக்கிறோமோ அவ்வளவுக்கு இரத்த ஓட்டம் விரைவு பெரும். உடல் செழுமையும் வனப்பும் பெறும். அழகு மிளிரும்.நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.

ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பட்டுச் சேலை பராமரிப்பு

1.      விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று  வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.
2.      நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.
3.      எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.
4.      ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.
5.      பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.
6.      அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.
7.      பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம்.

வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.

அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே…

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

குறை தைராய்டு : பிறவி தைராய்டு குறைபாட்டால்
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும். குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அட்ரீனல் கோளாறு
: பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும்.

என்சைம் குறைபாடு : என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும்.

இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது….

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பொற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம் தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் எப்படி என்று பார்ப்போமா?

மருந்தை உணவுடன் கலந்து கொடுப்பது.

மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது பல பொற்றோர்களின் வழுக்கம். சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பறகே அப்படிக் கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் முன்கூட்டியே உணவையும் மருந்தையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலக்கவும்.

ஆண்டிபயாடிக்குகளை சீக்கிரமே நிறுத்துதல்….

உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆண்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்தும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம்.

தேவைப்படாத நேரத்தில் மருந்து கொடுத்தல்

சாதரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.

பழைய மருந்துகளைக் கொடுத்தல்

போனமுறை உங்கள் குழந்தைகக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறையும் ஏற்படலாம். அறிகுறிகள் ஓரே மாதிரி இருப்பதைப் பார்த்து, போன முறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத்தானது. அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும்.

பெரியவர்களுக்கான மருந்தை கொடுத்தல்

பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது. மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

மருந்துகளின் மேலிருக்கும் லேபில்களைப் படிக்காமை

மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும். அன்புள்ள அப்பா!

குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான ஆண்களைப் பொறுத்த வரை பெண்கள் சமாச்சாரம். குழந்தையை விரும்புகிற அப்பாக்கள் கூட, கைக் குழந்தையைத் தூக்கவோ அதைக் கவனித்துக் கொள்ளவோ தயாராக இருப்பதில்லை. காரணம் குழந்தையை தூக்கும் போது சிறுநீர், மலம் கழிக்கலாம். அல்லது வாந்தி எடுக்கும்.

இதனால் அருவருப்பு அடையும் அப்பாக்கள் சிலர் குழந்தைப் பருவ சிரமங்களைக் கடந்த பிறகு, குழந்தை ஓரளவுக்கு வளர்ந்த பிறகே அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இந்த மனப்பான்மை மிகத் தவறானது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். குழந்தை வளர்ப்பில் ஆரம்ப காலத்திலிருந்தே அப்பாக்களும் பழக்கப்படுத்தபட வேண்டும் என்கிறார்கள் அவர்கள். எந்தெந்த விதங்களில் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளச் செய்ய முடியும் என்பதற்கு சில யோசனைகள்.
பிறந்த குழந்தையைத் தூக்க முதல் நாளிலிருந்தே தன் கணவனுக்கே கற்றுத்தர வேண்டும் மனைவி. கழுத்து நிற்காத குழந்தையை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும், எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிரண்டு முறைகள் கற்றுக் கொடுத்தால் பழகி விடும். தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு பாலாடையில் அல்லது பாட்டிலில் எப்படிப் பால் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தையின் அப்பாவுக்கும் கற்றுத் தரலாம். இதனால் குழந்தை அழும்போதெல்லாம் பிரசவித்த தாய் எழுந்து, உடலை வருத்திக் கொள்ளாமல் சற்று நேரமாவது ஓய்வெடுக்க முடியும். கணவன்&மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்களானால் குழந்தைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு குழந்தையைக் குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது போன்றவற்றை ஒருவரும், இரவில் அதற்குச் சாப்பாடு கொடுத்துத் தூங்க வைப்பதை இன்னொருவரும் பிரித்துக் கொள்ளலாம். என்ன தான் பிசியான வேலையில் இருந்தாலும், தினம் சிறிது நேரத்தைக் குழந்தையுடன் செலவிடுவதை வழக்காமாகக் கொள்ளும்படி அவரைப் பழக்குங்கள். அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் சில குழந்தைகள் குழந்தை ஏதேனும் பேச முயற்சி செய்யும். அம்மாவிடம் கூட இப்படி இருக்காது. அவற்றறைக் காது கொடுத்து கேட்க வேண்டியது முக்கியம். எனக்கு நேரமில்லை அம்மா கிட்ட சொல்லு என்று தட்டிக் கழிப்பதுதான் உதாசீனப்படுத்தப் படுகிறோம் என்ற உணர்வைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடும். குழந்தை விருப்பமானதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதோடு அப்பாக்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தன் அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். வார்த்தைகளாலும், செயல்களாலும் மட்டுமே அன்பைக் குழந்தைகளால் புரிந்து கொள்ளமுடியும். குழந்தையின் பள்ளிக்கூடத்தில் விசேஷ நாட்கள், ஆண்டு விழா போன்றவற்றிற்குத் தவறாமல் தந்தை செல்ல வேண்டும்.

படுக்கையறை வாழ்க்கையில் பல கட்டங்கள்!


தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கிவைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது.

ஆகவே, `உறவு’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை’ எடுத்துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி…

முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள்

நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கையறை விளையாட்டை வைத்துக்கொள்ள விரும்புபவர் என்றால் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண்களுக்குக் கூறுகிறார்கள்.
இரடாவது : படி தனித்தனியே சுற்றுலா

பிரிந்திருபது அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டும். எனவே முடிந்தால் தம்பதி கள் இருவரும் தனித்தனியே வெளி யிடங்களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள், இரு வரும்… பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சாலஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர். முன்றாவது படி : ஒரு புதிய இடத்தில்…

ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதியான உணவகத்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு முலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.

நான்காவது படி :`பிளாஷ்பேக்’கில் முழ்குவது…

நீங்கள் முதன்முதலாக `அது’ வைத்துக்கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர
வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற் றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறார்கள்.

ஐந்தாவது படி : தடாலடியான செயல்பாடுகள்

விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோபோமைன்.’ உறவு விருப்பத்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்’ அளவை `டோபோமைன்’ கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக்கூடும். சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுவது `எடார்பினை’ விடுவித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கி றது, அப்போது `பங்கி ஜம்பிங்’ போன்றவை கூடத் தேவையில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.

ஆறாவது படி : விலகி… சீண்டி…

தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொதுவாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள். விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு’ நீண்ட காலமாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள்

அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்தான்! நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.

இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது. இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள்! இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிக மாக உள்ளது. பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாயப்பிருக்கிறது. ஆனால் முன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குத லினால் இறக்கின்றனர்.

ஏற்கனவே ஏ.எச்.ஏ எனபடும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசி யேஷன்) இது குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதய நோய் செயற்குழு ஒன்றினையும் அமைத் துள்ளது.

நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டபடாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.

இதயத் தமனிக் கோளாறுகள் ஆண்களை விட வயது முதிர்ந்த நிலையிலேயே பெண்களுக்கு ஏற்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார், அமெரிக்க குடும்ப மருத்துவர்கள் அகாடமியைச் சேர்ந்த டாக்டர் டொனால்டு கீத்.

பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரபில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.

அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது.

இப்போதிலிருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.

கொழுபையும், கொலஸ்ட்ராலைம் முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைம், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடை பயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருபவர்கள் இளமைடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எவராலும் எபோதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக் கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது. பாஸ்டனிலுள்ள பெண்கள் மருத் துவமனைம், மெட்ரோபாலிடன் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், சராசரி எடையை விட அதிகமான எடை கொடிருந்த பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது அறியபட்டது.

சி.டி.சி. எனபடும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிபாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாயப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் நேரம் போகவில்லையா?

வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை.

வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு

இதோ சில யோசனைகள்:

தோட்டம்

தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.

வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம்.

லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லால் மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம். அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.

தினமும் அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும். அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும்.
நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.
எம்ப்ட்ராயட்ரிங்: துணிகளில் பூவேலை (எம்ப்ட்ராயட்ரிங்) செய்வது என்பது என்னவென்றே எனக்குத் தெரியாதே என்றெல்லாம் நீங்கள் சாக்கு சொல்ல வேண்டாம்.

இந்த நவீன காலத்தில் கணினி முன் அமர்ந்தால் நீங்கள் எந்தக் கலையையும் கற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எத்தனையோ பூவேலை செய்யப்பட்ட துணிகளை உற்று கவனித்தால் அதன் போக்கு தெளிவாகத் தெரிந்துவிடும். அவ்வளவே, அதனை பழைய அல்லது உபயோகப்படுத்தாத துணிகளில் போட்டுப் பாருங்கள். முதலில் உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கும். பின்னர் அதன் நயத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

கடைகளில் எம்ப்ட்ராயட்ரிங் ப்ரேம் என்று ஒரு மரத்தில் கிடைக்கும். அதனை வாங்கி துணியை நன்கு டைட் செய்து கொண்டு பின்னர் துவக்குங்கள். பழகப் பழக புதிய புதிய டிசைன்களை நீங்களே உருவாக்குவீர்கள். மேலும் நீங்கள் வைத்திருக்கும் எத்தனையோ உடைகளில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு விதமான எம்ப்ட்ராயட்ரிங்குகளை போட்டுப் பாருங்கள்.

ஓரளவிற்கு நீங்கள் தெரிந்து கொண்ட பின்னர், உங்கள் கைக்குட்டை, துப்பட்டா, இரவு உடை போன்றவற்றில் முதலில் உங்கள் கைவண்ணத்தைத் துவக்குங்கள். பிறகு சாதாரண சுடிதாரில் கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் சிறிய சிறிய பூக்களை இட்டு நிரப்புங்கள்.

நீங்கள் போடப்போகும் டிசைனை முதலில் பென்சிலால் துணிப்பகுதியில் லேசாக வரைந்து கொள்ளுங்கள். அதன் மேலேயே பூவேலை வருவது போன்று செய்து பாருங்கள்.

பின்னர் பிளைன் சாரி வாங்கி அதன் இரு புறங்களிலும் அழகான பூக்களை வடிவமைத்து ஏதாவது நிகழ்ச்சிக்குக் கட்டிக் கொண்டு போகும் போது உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டேத் தனிதான் போங்க. திறமையை வளர்க்கலாம் உங்களிடம் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதாவது ஒரு சிலர் பாடல் பாடுவது, நடனம், சமையல், நல்ல கல்வி அறிவு போன்றவை பெற்றிருப்பார்கள்.

இவர்கள் பெரிய பெரிய கல்வி நிலையங்களை எல்லாம் உருவாக்க வேண்டாம். நமக்கு கிடைக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு நமக்குத் தெரிந்த கலையை சொல்லிக் கொடுத்தாலே போதும். பிற மொழி தெரிந்திருந்தால் அதற்காக வரும் பிள்ளைகளுக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பெடுத்து அவர்களுக்கும் உதவலாம். நாமும் பயனடையலாம்.

சமையல் பற்றி அதிக அனுபவமுள்ளவர்கள் எத்தனையோ பத்ரிக்கை, இணையதளங்களுக்கு தங்களது புதிய சமையல் குறிப்புகளை அனுப்பி புகழடையலாமே.

புதிய கருத்துக்கள் இருந்தால் கட்டுரைகள் எழுதியோ அல்லது கவிதைகள் எழுதியோ புத்தகங்களுக்கு அனுப்பலாம். அவ்வளவு ஏன் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருப்பவர்கள் சிரிப்பு துணுக்குகளையும் அனுப்பி பரிசுகளைப் பெறலாம்.

இது எதுவுமே வேண்டாம் என்று சொல்பவர்கள், தினந்தோறும் அல்லது முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் அளவளாவி வரலாம். அவர்கள் ஏங்கும் ஒரே விஷயம் உறவுகள்தான். அதையும் நீங்கள் செய்த மாதிரி இருக்கும். உங்களுக்கும் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கும்.

சயின்ஸ் ‘டிவி’

கம்ப்யூட்டர்களைச் சிறுவர்களுக்கு அவர்களின் அறிவுத் தேடலுக்கு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த நாம் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் அவர்களின் கல்வி கற்கும் பாங்கு உருவாக்கப்படும். இன்று பள்ளி போகும் சிறுவர்களுக்கு வகுப்பில் ஆசிரியர்கள் போதிப்பது போலவே வீடியோ பைல்கள் உருவாக்கப்பட்டு அவை இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக யு–ட்யூப் தளத்தில் இவை ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் அந்த கடல் போன்ற தளத்தில் சிறுவர்கள் விரும்பும் தளங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருக்கிறது. இந்த முயற்சியில் தளர்ந்துவிட்டால் அவர்கள் முயற்சி செய்வதையே விட்டுவிடலாம்.

மேலும் மோசமான பாலியியல் தளங்களுக்கு அவர்கள் சென்றுவிடும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கு விடை பெறும் வகையில் இணையத்தைச் சுற்றியபோது கிடைத்தது http://www.science.tv/ என்னும் முகவரியில் உள்ள தளம். அறிவியல் பாடங்களுக்கான வீடியோ வகுப்புகளைப் பெற இந்த தளம் ஓர் அருமையான தளமாகும். இங்கு அறிவியல் துறைகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வீடியோ காட்சிகள் தரப்படுகின்றன. கீழ்க்கண்ட பிரிவுகள் தரப்பட்டுள்ளன: Biology, Physics, Chemistry, Demos, Dangerous, Debate, Gadgets, Nature, Random, and Space இதில் எந்த பிரிவில் நீங்கள் காட்சிகளைக் காண விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்துக் காணலாம்.
இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அப்போது பார்க்கப்படும் வீடியோ காட்சிகளின் துவக்க காட்சிகளும், அவை எதைப் பற்றியது என்ற தகவலும் காட்டப்படும். இவற்றிற்குக் கீழேயும் சில பிரிவுகள் உண்டு. Featured, Top Rated, Most Viewed, and Most Recent. மேலும் இதில் உள்ள சர்ச் கட்டத்தில் நமக்கு வேண்டிய பொருள் குறித்தும் தேடிப் பெறலாம்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனை அழைத்து இந்த தளத்தைப் பார்க்குமாறு கூறிய போது, மிக ஆர்வத்துடன் பார்த்தான். பின் அவனே “”நிலா எப்படி விழாமல் பூமிக்கு அருகே உள்ளது. நாம் விண்வெளியில் எறியும் பொருள் மட்டும் கீழே விழுகிறதே” என்று கேள்வி கேட்டான். அவனுக்கு அது குறித்த வீடியோவினைத் தேடி எடுத்துக் கொடுத்தபோது ஓர் ஆசிரியை மிக அழகாக இதனைச் சிறுவர்களுக்கேற்ற வகையில் விளக்குவ தனைக் காண முடிந்தது.
எனக்கு ஓர் ஏக்கம் வந்தது. நாம் ஏன் தமிழில் இவற்றைத் தயாரித்து இது போன்ற தளங்களை உருவாக்கக் கூடாது என்பதுதான் அது. அப்படி உருவாக்கினால், இந்த தளத்திலும் நாம் நம் வீடியோ காட்சிகளை பதிக்கலாம். அதற்கு இந்த தளத்தினை உருவாக்கி யவர்கள் அனுமதி தருகின்றனர். இந்த தளமும் நம்மை இதற்கு அடிமையாக் கிவிடும். எனவே சிறுவர்கள் இதனைப் பார்க்கத் தொடங்கியபின், இதிலேயே மூழ்கி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

தலை சுற்றுகிறதா?

யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம். ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள். அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம். கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்! முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.

இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறைம். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம். உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து செகடுகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.

உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம். ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.

உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், முட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் முலம் பெருக்கிக் கொள்ள முடியும்.

இந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும். .

கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்

கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11 லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங்

கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் சோதனையும், 1521 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் சோதனையும் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.

பிரசவ கால ஆலோசனைகள்

சிருஷ்டிப் புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிறாள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத்துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனால் பெண் தாய்மைப்பேற்றை அடையும் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்றாள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கு ஒரு விளக்கம் கிடைத்து விடுகின்றது! ஆம்; குழந்தைகள் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அந்த ஆத்மானை அருளுகிற & அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி & ஒரு தவம்!

உண்மைதான்; தாய் தவம் இருந்து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மழலை உலகின் ஜனத் தொகையில் ஓர் அங்கம் வகிக்கத் தொடங்குகிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக்காத்திருக்கின்றது! வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாகவும் இயங்கத் தொடங்கி விடுகின்றது!

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே!” என்று சொல்லப்படுவது உண்டல்லவா! & இம்மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண்டாடப்படும்போது தான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம் பெறுகின்றன! கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான். குழந்தையின் நிலையும் அமைகிறது.

இத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணாமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது; தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல & அமைந்து விடுகிற & அந்தத் தாயைப் போற்றுகிறோம்; அத்தெய்வத்தின் பொறுமைக்கு & தர்மத்துக்கு & சகிப்புத்தன்மைக்கு & அன்புக்கு & அருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும்.

வாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச்சட்டம் ஆட்சி செலுத்துகிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக்கொடுக்கும் உரிமை, ஆண் & பெண் எனும் மகத்தான மெய்ப்பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக & இயங்கும் அல்லது இயக்கப்படும் பிண்டங்களாக விளையாடும் அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண் & பெண் என்கிற தூண்டுதலின் கூட்டுறவு தான் வாழ்வு; அதுவேதான் அவனி.

மெய்தான் : புவனமே சக்தி சிவம் வடிவமானது என்று சைவ ஆகமங்கள் சொல்லவில்லையா? ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வரம்புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக் கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.

பட்டினத்தடிகள் அழகு கனிந்த ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்:

ஆண்&பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்ந்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளிர்கின்றது.

“காதல் செய்வது, தூய்மையுடன் காதலனும், காதலியும் இருப்பது ஆகிய இவ்விரு கடமைகளும் என்றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற&காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற ஓர் அறவழிப் பண்பாடாகும்!

இவ்விதச் சிந்தனையையும் இதோ ஒலிக்க விருக்கிற அடிகளாரின் குரலையும், விஞ்ஞான ரீதியில் ஒன்றாக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண், பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங்களின் புதிர்களும் அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு புலனாக முடியும்.”

இயற்கையின் இயல்பான, தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண்-, பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு ‘திருமணம்’ என்கிற சடங்கும் ‘முதல் இரவு’ என்கிற விழாவும் இன்றியமையாத பாதுகாப்பாக இனிமை கொண்ட எச்சரிக்கையாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஓர் அற்புதமாகத் திகழ்கிறாள் ‘தாய்’ என்னும் மகாசக்தி. அந்த மகாசக்தி பெற்றெடுக்கும் மகத்தான அற்புதமாகவே ‘குழந்தை’ எனும் ‘புதுமை’ பொலிகிறது!

“குழந்தை என்று சொல்லக்கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உலகம் என்ற ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும்.” என்று மொழிந்த ஆசிய ஜோதியான நேருஜியின் சொற்களை நாம் எப்போதுமே மறந்து விட முடியாது. ‘இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்!’ என்று இளைய பாரதத்தினோர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிருக்கும் உடைத்தானது குழந்தை உலகம்.

இந்த இருபதாம் நூற்றாண்டை ‘குழந்தைகளின் நூற்றாண்டு’ எனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் கே அவர்கள்.

‘குழந்தை’ என்கிற ஒரு தவத்தை ஓர் அன்பை ஒரு மந்திரத்தை ஓர் அற்புதத்தை, ‘பிள்ளைக்கனியமுது’ எனவும் ‘பேசும் பொற் சித்திரம்’ என்றும் ‘ஆடிவரும் தேன்’ எனவும் போற்றிப் புகழ்ந்திடும் தண்ணளியும், மோன புளகிதமும் பாரதி ஒருவனுக்கே சொந்தம்.

இந்த மகோன்னத நிலைக்கு ஆதாரமாக விளங்கும் ‘தாய்’ தன்னுடைய பேறுகாலக் கண்டங்களைத் தாண்டி குழந்தையைப் பெற்றெடுத்த, ‘புனர்ஜன்மம்’ பெறுவதற்குள், அவள் முன்னே தலைவிரித்தாடும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? அவள் கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரையிலும் அவள் கண்காணித்துப் பேண வேண்டிய குறிப்புரைகள் ஒன்றல்ல&இரண்டல்லவே!

‘விதி’ யின் முன் பணயம் வைத்து, பெண் என்பவள் தாயாக உயர்ந்து ஒரு சமூக அந்தஸ்தைப் பெறும் ஓர் அதிர்ஷ்டவசமான நல்வாய்ப்புக்கு முதற்காரணமாகிறது குழந்தை. இக்குழந்தையின் மூலமாக ஆணும், பெண்ணும், தந்தையும் தாயும் ஆகி, ஒரு சமுதாய மதிப்புப் பெறும் பாக்கியத்தையும் அடைகின்றனர்.

‘கருத்தரிப்பு’ என்பது எவ்வாறு தெய்வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு ‘பிரசவம்’ என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய மனநிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்யணிக்கலாம்.

பிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை. ஒரு நிகழ்ச்சி. ஒரு விடிபொழுது!