சயின்ஸ் ‘டிவி’

கம்ப்யூட்டர்களைச் சிறுவர்களுக்கு அவர்களின் அறிவுத் தேடலுக்கு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த நாம் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் அவர்களின் கல்வி கற்கும் பாங்கு உருவாக்கப்படும். இன்று பள்ளி போகும் சிறுவர்களுக்கு வகுப்பில் ஆசிரியர்கள் போதிப்பது போலவே வீடியோ பைல்கள் உருவாக்கப்பட்டு அவை இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக யு–ட்யூப் தளத்தில் இவை ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் அந்த கடல் போன்ற தளத்தில் சிறுவர்கள் விரும்பும் தளங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருக்கிறது. இந்த முயற்சியில் தளர்ந்துவிட்டால் அவர்கள் முயற்சி செய்வதையே விட்டுவிடலாம்.

மேலும் மோசமான பாலியியல் தளங்களுக்கு அவர்கள் சென்றுவிடும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கு விடை பெறும் வகையில் இணையத்தைச் சுற்றியபோது கிடைத்தது http://www.science.tv/ என்னும் முகவரியில் உள்ள தளம். அறிவியல் பாடங்களுக்கான வீடியோ வகுப்புகளைப் பெற இந்த தளம் ஓர் அருமையான தளமாகும். இங்கு அறிவியல் துறைகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வீடியோ காட்சிகள் தரப்படுகின்றன. கீழ்க்கண்ட பிரிவுகள் தரப்பட்டுள்ளன: Biology, Physics, Chemistry, Demos, Dangerous, Debate, Gadgets, Nature, Random, and Space இதில் எந்த பிரிவில் நீங்கள் காட்சிகளைக் காண விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்துக் காணலாம்.
இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அப்போது பார்க்கப்படும் வீடியோ காட்சிகளின் துவக்க காட்சிகளும், அவை எதைப் பற்றியது என்ற தகவலும் காட்டப்படும். இவற்றிற்குக் கீழேயும் சில பிரிவுகள் உண்டு. Featured, Top Rated, Most Viewed, and Most Recent. மேலும் இதில் உள்ள சர்ச் கட்டத்தில் நமக்கு வேண்டிய பொருள் குறித்தும் தேடிப் பெறலாம்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனை அழைத்து இந்த தளத்தைப் பார்க்குமாறு கூறிய போது, மிக ஆர்வத்துடன் பார்த்தான். பின் அவனே “”நிலா எப்படி விழாமல் பூமிக்கு அருகே உள்ளது. நாம் விண்வெளியில் எறியும் பொருள் மட்டும் கீழே விழுகிறதே” என்று கேள்வி கேட்டான். அவனுக்கு அது குறித்த வீடியோவினைத் தேடி எடுத்துக் கொடுத்தபோது ஓர் ஆசிரியை மிக அழகாக இதனைச் சிறுவர்களுக்கேற்ற வகையில் விளக்குவ தனைக் காண முடிந்தது.
எனக்கு ஓர் ஏக்கம் வந்தது. நாம் ஏன் தமிழில் இவற்றைத் தயாரித்து இது போன்ற தளங்களை உருவாக்கக் கூடாது என்பதுதான் அது. அப்படி உருவாக்கினால், இந்த தளத்திலும் நாம் நம் வீடியோ காட்சிகளை பதிக்கலாம். அதற்கு இந்த தளத்தினை உருவாக்கி யவர்கள் அனுமதி தருகின்றனர். இந்த தளமும் நம்மை இதற்கு அடிமையாக் கிவிடும். எனவே சிறுவர்கள் இதனைப் பார்க்கத் தொடங்கியபின், இதிலேயே மூழ்கி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

%d bloggers like this: