எவ்ளோ தண்ணீர் குடித்தாலும்…

பொதுவாகவே டாக்டர்கள் சொல்வது; அதிகமாக தண்ணீர் குடிங்க; அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகள், தானிய வகை உணவுகளை சாப்பிடுங்க; எதிலும் இனிப்பை தவிருங்க. இதெல்லாம் கலோரி அதிகமில்லாத சத்தானவை என்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இதய நோய் உட்பட எதுவும் நம்மை அண்டாமல் வைக்கும். குளிர்பானங்கள் பருகுவதை விட, சாதா தண்ணீர் குடித்தால் பல நோய்களை தவிர்க்க முடிகிறதாம். அதிலும், இளம் வயதில் இருந்தே இந்த பழக்கம் வந்துவிட்டால்… அப்புறம் எதற்கும் கவலையே பட வேண்டாம் என்பது தான் டாக்டர்கள் கூற்று.

பகலில் தூங்கினால் ஷுகர் வரும்
“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’ (ஓ.எஸ்.ஏ.,) – தொண்டை பின் பக்கத்தில் உள்ள தசைநார் பாதிப்பால், இரவில் தூங்க விடாமல் அவ்வப்போது எழுப்பி விடும் கோளாறு. இதனால், பகலில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பகலில் தூங்கினால் மட்டும் நல்லதா? இது தான் சர்க்கரை நோய்க்கு காரணமாகி விடுகிறது. சமீபத்திய ஆய்வுகளில் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் தூக் கம் வராமல் தவிப்பவர்கள், உடனே அதை தவிர்க்க சிகிச்சை பெறுவது தான் நல்லது.

இடுப்பு பெருத்தால்… பெண்ணே உஷார்
பெண்கள் அதிகம் வெயிட் போட்டால் பல கோளாறுகளுக்கு காரணமாகி விடுகிறது என்பது தெரிந்தது தான்; ஆனால், சிலருக்கு ஆஸ்துமாவும் வரும் என்று தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு “பாடி மாஸ் இன்டெக்ஸ்’ எனப்படும் உயரம் – எடையை பகுத்து நிர்ணயிக்கப்படும் அளவை 30ஐ தாண்டி விட்டால் உஷாராக இருக்க வேண்டும்.
முப்பதுக்கு மேல் ஒன்று கூடினாலும், டாக்டரை பார்ப்பது நல்லது. அப்படியே விட்டுவிட்டால், சிலருக்கு ஆஸ்துமா கோளாறு கூட வரும் வாய்ப்பு அதிகம். இடுப்பு பெருத்தாலும் தொல்லை தான். 88 சென்டி மீட்டர் அல்லது 34 அங்குலம் சுற்றளவுக்கு மேல் போனால் கவனித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

நம்ம டயட் சூப்பர் தான்
சர்வதேச அளவிலேயே இப்போது பல நாட்டு நிபுணர்களும் சொல்லும் ஒருமித்த கருத்து என்ன தெரியுமா? இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க, தானிய வகை உணவும், பல்வேறு கடலை வகை உணவும் தான் நல்லது என்கின்றனர். பாலிஷ் செய்து சாப்பிடும் அரிசி சாதத்தை விட, புழுங்கல் அரிசி சாதம் நல்லது. அதுபோல, பழங்கள், பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் எப்படியாவது ஒரு வேளை வைத்துக்கொள்வது மிக நல்லது. அமெரிக்காவில் இப்போதெல்லாம் இது தான் முக்கிய டயட்டே.

%d bloggers like this: