பெண்களுக்கு உடற்பயிற்சி


உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும்,மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

நமது உடல் வாகு, முகத்திற்கேற்ற தலையலங்காரம் ஒப்பனையில் சிறிது அக்கறை இருந்தாலே போதும் நாமும் அழகிதான். லிப்ஸ்டிக் கலர்,முகப்பவுடர் போன்றவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

உடையைப் பொறுத்தவரை அனைவருக்குமே ‘ ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ‘ இருப்பது அவசியம்.அனைவருமே ஆடை வாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒரு’ க்ரியேட்டிவ்சென்ஸ்’ இருக்கும்.அதுதான் அவர்களது ‘ஸ்பெஷாலிட்டியே’.

நம்மாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. முயற்சியுடையோர்… அதே தான்.

உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும் , பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தல் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட்,டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும்.

மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி,இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும்.

4 responses

  1. na kunda irken,high vera kammi, asinga irukenu sollaranga yellorum ine nanum thannambikayoda try pannuven. kanndipa nadakumnu mambaren. intha matheri tips koduthathuku nanri

  2. மிகவும் அருமையான டிப்ஸ்

  3. tips ellam nalla irukkunga.. nanum try pandren.. tips koduthathukku romba nandri..

%d bloggers like this: