வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி?

பிரிட்ஜில் கெட்ட வாடையா..? பிரிட்ஜில் கெட்ட வாடையா..?

சில வீடுகளில் பிரிட்ஜைத் திறந்தால் கெட்ட வாடை வரும். காரணம் மட்டன், சிக்கன், மீன் என அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து விடுவதுதான். அதற்காக அசைவ அயிட்டங்களை பிரிட்ஜில் வைக்கவே கூடாது என்பதில்லை. பதிலாக அசைவ உணவு வகைகளை பிரிட்ஜிக்குள் வைக்கும் போது அவற்றை தனித் தனியாக இரண்டு கவரில் போட்டு வைய்யுங்கள். இத்துடன் எலுமிச்சம் பழத்தை துண்டுகளாக்கி பிரிட்ஜில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் கெட்ட வாடையைத் தவிர்க்கலாம். பிளாஸ்க் பராமரிப்பு

பிளாஸ்கில் குளிர்ந்த பானங்களை வைப்பதாக இருந்தால் குளிர்ந்த நீரிலும், சூடான பானங்களை வைப்பதாக இருந்தால் வெந்நீரிலும் கழுவ வேண்டும். பிளாஸ்கில் ஊற்றி வைத்த பானங்கள் சூடாக இருக்க வேண்டுமானால் பிளாஸ்க் நிறைய ஊற்றி வைக்க வேண்டும். பிளாஸ்கில் வாடை வராமலிருக்க அதை பயன்படுத்தாத நேரங்களில் திறந்து வைக்க வேண்டும். உள்பக்கத்தை துடைக்க மெல்லிய துணி அல்லது ஸ்பாஞ்ச் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழாய்களில் இருந்து நேரடியாக பிளாஸ்கில் தண்ணீர் பிடிக்கக்கூடாது. வேகமாக குலுக்கி கழுவவும் கூடாது. அயர்ன்பாக்ஸ் பராமரிப்பு

அயர்ன்பாக்ஸை சில வீடுகளில் வேண்டாத பொருளைப் போல் போட்டு வைத்திருப்பார்கள். அதன் அடிப்பாகத்தில் கறை படிந்து அழுக்காக காட்சியளிக்கும். இவற்றை நீக்க அயர்ன்பாக்ஸில் சூடு தணிந்த பின்னர், சுத்தமான ஒரு துணியில் சிறிது சமையல் சோடாவைத் தெளித்து துடைத்தால் பளபளக்கும். எலக்ட்ரிக் அயர்ன்பாக்ஸில் சூடு ஆறுவதற்கு முன் அதன் மீது ஆலிவ் ஆயில் தடவினால் அயர்ன்பாக்ஸின் பளபளப்பு நீடித்திருக்கும். பட்டு ஜரிகை பார்டர் போட்டுள்ள புடவைகளை அயர்ன் செய்யும்போது அதன் உட்புறமாக செய்ய வேண்டும். அப்போதுதான் பட்டு ஜரிகையின் பளபளப்பு மங்காது. ஆர்கண்டி சேலைகளுக்கு கஞ்சி போடாமல் சிறிது ஈரமாக இருக்கும் போதே அயர்ன் செய்தால் மொடமொடப்பாக இருக்கும்.  பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்
பெண்களுக்கு இப்பகுதி மிகவும் உபயோகமானது. காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்? எப்படி சமைக்கவேண்டும்? எப்படி பாதுகாக்கவேண்டும்? காய்கறிகள் பாதுகாப்பு

கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.
கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்து விடும். ஒரு புதிய மண்பானையில் காய்கறிகளைப் போட்டுக் பானையை ஈரமுள்ள மணல் மேல் வைத்தால் இரண்டொரு நாள் வரை காய்கறிகள் புகிதாகவே இருக்கும்.

நீரில் நனைத்த காகிதத்தினால் கீரைகளைச் சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.

குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை வைக்கும் போது அவைகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவர்களில் வைக்க வேண்டும். எல்லாக் காய்கறிகளும் ஒரே பையில் வைக்கக் கூடாது.

கூடையில் காய்களைப் போட்டுக் ஈரத்துணியினால் மூடி வைத்திருந்தால் பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.

பச்சை மிளகாயைக் காம்புடன் வைத்தால் சீக்கிரம் வாடிவிடும். சில நாட்டுகளுக்கு மிளகாய் இருக்க வேண்டுமென்றால் அதன் காம்பை அகற்றி விட்டு நிழலான, குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.

பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் போது அதை உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாயைக் நன்கு இறுக்க கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல் இருக்கும்.

வாழைப் பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. வைத்தால் அதன் தோல் கறுத்துப் போய்விடும்.

பூ வாடாமல் இருக்க

முதல் நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்த பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடி வையுங்கள்.பூ வாடாமல் வதங்காமல் நீங்கள் வைத்த மாதிரியே இருக்கும்! கிழங்கு விரைவாக வேக

கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிஷங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

பாகற்காய் பழுக்காமல் இருக்க

பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க பாகற்காய்களை இரண்டிரண்டடாக நறுக்கி வைத்துவிடுங்கள்.

இஞ்சி மிச்சம் இருந்தால்

இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

பிறக்கும் குழந்தை பிரகாசமாக இருக்க

கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப் பூ கலந்த பால் குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும்.

ஷு மிருதுவாக இருக்க

மழைக்காலங்களில் தண்ணீர் பட்டு ஷு கெட்டியாகப் போயிருக்கும். ஒரு சிறு துணியை மண்ணெண்ணெயில் நனைத்து ஷுவைத் துடைத்தால் ஷு மிருதுவாக இருக்கும்.

%d bloggers like this: