Daily Archives: ஒக்ரோபர் 29th, 2009

தண்ணீரின் அவசியம்

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், ட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.

மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது. உடலிலுள்ள நீர் எப்படி முறைப் படுத்தப்படுகிறது?

உங்கள் இல்லங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது, அவசியமான காரியங்கள் எவை யெனப் பகுத்துப் பார்த்துத்தானே காரியமாற்றுவீர்கள்.

உதாரணமாக, குடிப்பதற்கும் சமையலுக்கும் முதற்கட்ட முன்னுரிமை கொடுத்துப் பின், குளிப்பதற்கும், கழுவுவதற்கும் தண்ணீரைக் குறைத்துத்தானே நீங்கள் பயன்படுத்துவீர்கள். அதைப் போலவே, குறைந்த தண்ணீரைச் சரீரம் பெறும்போது, எல்லா உயிரணுக்களிலும் அடங்கியுள்ள ‘ஹிஸ்டாமின்’ என்ற வேதியியல் சேர்க்கை, உடனடியாகவே ஒரு நீரமைப்பை உருவாக்கிக் கொள்ளும். இந்த அமைப்பு, உடலில் உள்ள அவயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதாவது ளை, இதயம் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு நீரை விநியோகம் செய்யும்.

ஹிஸ்டாமின், நரம்பியல் செய்தி சாதனம் என்றொரு வேதியியல் முறையினை இயக்குகின்றது. இந்த வேதியியல் பொருட்கள், நரம்பு மண்டலங்களில் உந்தும் சக்திகளை மாற்றி அமைத்தோ அல்லது உள்ளே அனுப்பி வைப்பது போன்ற வேலைகளைச் செய்யும். அதேபோல் இந்தச் சாதனம், தண்ணீரை உள்ளே எடுப்பதையும் முறைப்படுத்தும் துணை அமைப்புகளையும் இயல்பாகச் செய்கின்றன. இந்தத் துணை அமைப்புகள் ணீஷீஜீ மீவீஸீ, ஸிமீஸீவீஸீணீஸீரீவீஷீ – மீஸீவீஷீஸீ போன்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு, தண்ணீரை உள்ளே எடுப்பதையும், அதனை விநியோகம் செய்வதையும் சரியாகவே முறைப்படுத்துகின்றன. வாசோபிரஸ்ஸின் என்பது ஒரு உட்சுரப்பியாகும். இது சிறுநீரகங்கள் உள்வாங்கும் தண்ணீரைக் கூடுதலாக்கும் வேலையைச் செய்கின்றன. சிறுநீர் உற்பத்தியைக் குறைக்கச் செய்துவிடும். ரெனின் என்பது (ஒருவகை செரிமானப் பொருளாகும்.) என்சைம் ஆகும். இது சிறுநீரகங்களில் சேமித்து வைக்கப்படுபவையாகும். எப்பொழுதெல்லாம் இரத்த அளவு குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த ரெனின் தொடர்ச்சியான இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, ஒரு இரசாயனப் படிவத்தை உற்பத்தி செய்கின்றன. இதுவே ஆஞ்சியோசென்சன் என்பதாகும். இந்த ஆஞ்சியோசென்சன், சிறுநீரகங்கள் வடிகட்டும் இரத்த விகிதாச்சாரத்தைக் குறைக்கச் செய்கின்றன. இப்படி குறைத்து வடிகட்டியதன் விளைவால், தண்ணீரை மேலும் தக்க வைக்க அது உடலுக்கு உதவி செய்கின்றன.

வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில், உடம்பின் நீரோட்டம் ன்று நிலைகளில் இயக்கப்படுகின்றன. அவை, ஒன்று —பிறப்பிற்கு முன்; அடுத்து பிறந்ததற்கும் பருவ வயதை அடைவதற்கும் இடையில்; ன்றாவதாக வாலிபப் பருவ காலத்தில். ஜனனத்திற்கு முன்பு, உலகம் காணாத குழந்தை, தனது வளர்ச்சிக்காகக் கூடுதல் தண்ணீர் தேவையெனக் கருதும்போது, தனது தாய்க்கு உரிய அறிவிப்புகளை சைகைகளை அனுப்பி வைக்கும். அப்படியொரு சைகை வராமல் இருந்தால் கூட, பேபியின் தேவையை தாயாரே அனுபவித்து, உணர்ந்து கொள்வார். கருவுற்ற தாயாருக்கு காலையில் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு, தனக்கான கூடுதல் நீர்த் தேவையின் அடையாளத்தினை, வெளிவராத பேபி காட்டும் அறிகுறிதான் இது.

தண்ணீர் விநியோகத்தின் மேம்பாட்டுத் தன்மை, இருபதாம் வயதில்தான் உடலின் உச்சகட்டத்தை அடைகின்றது. பின்னர் இது படிப்படியாக இறங்குமுகமாகவே வாழ்க்கையில் இருக்கிறது. எனவே வயது ஏறும்பொழுது, தாக உணர்வும் காலமுறையாக தணிந்து கொண்டே இருக்கும். இதனால்தான் வயதான காலத்தில், ஒருவேளை போதிய தண்ணீர் எடுக்காத காரணத்தினால் தான், உயர் இரத்தக் கொதிப்பு, ட்டுவலி போன்ற அச்ச ட்டும் நோய்கள் தாக்கத் தொடங்குகின்றன. தேநீர், காபி, மது, கரியமில வாயு கலந்த பானங்களை நீங்கள் வழக்கமாக உட்கொள்வதால், வாழ்வின் கடைசிப் பகுதியில், உடலின் நீரோட்டத்தை வெகுவாகவே பாதிக்கச் செய்துவிடுகின்றன.

உடலின் பல்வேறு அவயங்களில் காணப்படும் திசுக்களின் உள்ளேயும் உள்ள தண்ணீரின் விகிதாச்சாரம் மிக முக்கியமானதாகும். வயது கூடும் போதெல்லாம் திசுக்களின் தண்ணீர் கொள்ளளவு குறைந்து கொண்டே போகும்.

ஒவ்வொரு திசுவிலுள்ள தண்ணீரும் வழக்கமான வேலையினை நெறிப்படுத்துவதில் சரியான பங்கை ஆற்றுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஒரு சில வேலைகளைச் செயலற்றுப் போகச் செய்துவிடும். வேலைகள் முடங்கிப் போகும் போது, உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றிவிடும்.

தண்ணீர் நல்ல மருந்து!

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.

இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது. உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், ளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!

பைல்களை உருவாக்கிப் பாதுகாப்பது எப்படி?

கம்ப்யூட்டரை இப்போதுதான் பயன்படுத்தத் தொடங்கி உள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது அதில் எப்படி பைல்களை உருவாக்கி, சேவ் செய்வது என்பதுதான்.

கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்படும் ஒவ்வொன்றும், அது டாகுமெண்ட் எனப்படும் ஆவணம், படம், பாட்டு, விளையாட்டு இப்படி எதுவாக இருந்தாலும், அது ஒரு பைலாக சேமிக்கப்பட்டு பதியப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பைலை அதற்கான புரோகிராம் தான் திறந்து காட்ட முடியும். எடுத்துக் காட்டாக டாகுமெண்ட் பைல் ஒன்றை படத்திற்கான கிராபிக்ஸ் புரோகிராம் திறந்து படிக்க இயலாது. மியூசிக் புரோகிராம் ஒன்றினால் டாகுமெண்ட் பைல் ஒன்றைத் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு புரோகிராமிற்கும் அது எந்த பைலைத் திறந்து இயக்க முடியும் என்பது புரோகிராமிங் செய்யப்பட்டு அறிந்து கொள்ளும் வகையில் காட்டப்பட்டிருக்கும். அதாவது ஒவ்வொரு பைலும் குறிப்பிட்ட பைல் டைப் வகையினைச் சேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதனை அறியும் இடம் அந்த பைலின் பெயரை அடுத்து உள்ள முற்றுப் புள்ளியைக் கடந்து எழுதப்படும் எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்ட இடம் தான். எடுத்துக் காட்டாக ‘myletter.doc’ ’என்பது ஒரு பைலின் பெயர். இதில் முதலில் உள்ள myletter என்பது பைலின் பெயர்; doc என்பது அந்த பைல் எத்தகையது என்பதனைக் கூறும் பெயர். இதன் பொருள் என்னவென்றால் இந்த பைலைத் திறக்க doc என்பதைப் புரிந்து கொள்ளும் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற புரோகிராம் வேண்டும் என்பதே. புரோகிராம் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல வகையான பைல்கள் அடங்கியிருக்கலாம். இன்றையக் கம்ப்யூட்டர்களில் ஆயிரக்கணக்கான பைல்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பல இடங்களில் பரவி பதியப்பட்டுக் கிடக்கின்றன. இவ்வாறு பரவிக் கிடக்கும் பைல்களை ஒழுங்குபடுத்த போல்டர்கள் (Folders) உதவுகின்றன. எனவே புரோகிராம் ஒன்றின் அனைத்து பைல்களும் ஒரு போல்டரில் இருந்தால் அவற்றை அடையாளம் காண்பது எளிது. போல்டர் ஒன்றின் உள்ளே மேலும் பைல்கள் அடங்கிய துணை போல்டர்கள் (‘subfolders’) இருக்கலாம். எடுத்துக் காட்டாக உங்கள் நிறுவனம் அல்லது அலுவலகம் சார்ந்த பைல்களை Office என்னும் போல்டரில் வைத்திருக்கலாம். இதன் உள்ளே அலுவலர்கள், ஊதியம், போனஸ் என்பது போன்ற பல துணை போல்டர்கள் இருக்கலாம். போல்டர் ஒன்றை நீங்களே உருவாக்கலாம்; குறிப்பிட்ட போல்டர்களை எளிதாகக் கண்டறிய ஷார்ட் கட் வழிகளையும் நீங்களே உருவாக்கலாம். இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். உங்கள் டெஸ்க் டாப்பில் (My Documents) என்ற ஷார்ட்கட் உடன் கூடிய ஐகான் இருக்கும். இதன் மீது மவுஸைக் கொண்டு இருமுறை கிளிக் செய்தால் My Documents என்னும் போல்டரில் உள்ள மற்ற போல்டர்களையும் பைல்களையும் காணலாம். My Documents என்பது உங்களுக்காகத் தானாக உருவாக்கப்பட்ட பெரிய போல்டராகும். நீங்கள் உருவாக்கும் அனைத்து பைல்களையும் பிரித்து பல குழுக்களாக வைத்திட மை டாகுமெண்ட்ஸ் உதவுகிறது. எடுத்துக் காட்டாக மை டாகுமெண்ட்ஸ் போல்டரிலேயே மைமியூசிக், மை பிக்சர்ஸ், மை வீடியோஸ் போன்ற சப் போல்டர்கள் நம் தேவைக்காகவே உள்ளன. ஆனால் நாம் உருவாக்கும் பைல்களைக் கட்டாயம் இதில் தான் சேமித்து வைக்க வேண்டியதில்லை. எந்த போல்டரில் வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம். பைல்களை எளிதில் பின்னர் தேடும் வகையில் போல்டர்களை உருவாக்கி அவற்றை எளிதாக அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்து வைக்கலாம். அதே போல தேவையற்ற போல்டர்களை அழித்துவிடவும் வேண்டும். இல்லை எனில் பைல்களே இல்லாத போல்டர்கள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும்.

பைல்களைத் தேடும் வழிகள்: கம்ப்யூட்டரில் பைல்களைப் பல வழிகளில் தேடலாம். பலர் தங்கள் பைல்கள் எங்கிருக்கின்றன என அறியவும் அவற்றைத் திறக்கவும் மை கம்ப்யூட்டர் ஐகானைப் பயன்படுத்துகின்றனர். டெஸ்க் டாப்பில் இந்த ஐகான் மீது கிளிக் செய்தால் பைல்கள் பாதுகாத்து பதியப்பட்டு இருக்கும் பல்வேறு இடங்கள் காட்டப்படும். இதில் ‘C’ டிரைவ் மீது கிளிக் செய்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து பைல்களும் அல்லது அவை இருக்கும் போல்டர்களும் காட்டப்படும். வேறு எக்ஸ்ட்ரா டிரைவ் இல்லை என்றால் இதில் மட்டுமே பைல்களும் போல்டர்களும் இருக்கும். ஆனால் ‘C’ தவிர ‘D’, ‘E’, ‘F’ என டிரைவ்கள் இருப்பின் அந்த எழுத்துக்கள் மீது கிளிக் செய்து அந்த அந்த டிரைவில் உள்ள போல்டர்களையும் பைல்களையும் காணலாம். ‘C’ டிரைவில் அனைத்து போல்டர்களும் காட்டப்பட்டாலும் ஒரு சில போல்டர்கள் நீங்கள் திறந்து பார்க்கக்கூடாத போல்டர்களாக இருக்கும். இவற்றை நீங்கள் திறக்க முயற்சிக்கையில் இந்த பைல்கள் இயக்கத்திற்கு ஆதாரமானவை; எனவே திறக்க முயற்சிப்பது சிக்கலை உண்டாக்கும் என்பது போன்ற எச்சரிக்கை செய்திகள் காட்டப்பட்டு அந்த போல்டர்கள் திறக்கப்படும். பொதுவாக இது போன்ற எச்சரிக்கை செய்திகள் வந்தபின்னர் திறக்கப்படும் போல்டர்களில் உள்ள பைல்களை எடிட் செய்திடக் கூடாது; அழிக்கவும் கூடாது. இவற்றில் புரோகிராம் பைல்கள் மற்றும் சிஸ்டம் பைல்கள் அடங்கிய போல்டர்களும் விண்டோஸ் போல்டர்களும் இருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு மிக முக்கியமானவை. இவற்றை திறப்பதுவும் திருத்துவதும் கூடாது. விண்டோஸ் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க, இவை அப்படியே பதிந்த நிலையில் இருப்பது அவசியம்.

பைல்களையும் போல்டர்களையும் காட்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்க விண்டோஸ் (Windows+E) கீகளை அழுத்தலாம். அல்லது Start பட்டனில் ரைட் கிளிக் செய்து அதில் மேல் எழும் மெனுவில் இரண்டாவதாக உள்ள பிரிவில் கிளிக் செய்யலாம்.
எல்லா பைல்களும் டிஸ்க் ஸ்பேஸ் எடுத்துக் கொள்கின்றன. நாம் ஹார்ட் டிஸ்க்கில் தானே எழுதுகிறோம். எனவே எந்த அளவு இடத்தை இவை எடுத்துக் கொள்கின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே. எவ்வளவு ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸை தற்போது உள்ள பைல்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன? இன்னும் எவ்வளவு இடம் உள்ளது? என்று அறிந்து கொள்ள மை கம்ப்யூட்டரை டபுள் கிளிக் செய்த பின் டிரைவிற்கான எழுத்தில், எடுத்துக்காட்டாக சி:, டபுள் கிளிக் செய்திடாமல் ரைட் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் மெனுவில் கீழாக உள்ள புராபர்ட்டீஸ் என்பதில் கிளிக் செய்தால் டிஸ்க் வட்டவடிவமாகக் காட்டப்பட்டு அதில் பயன்படுத்தப்பட்ட இடமும் காலியாக உள்ள இடமும் காட்டப்படும். எவ்வளவு அளவு என்பது மேலாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். டிஸ்க்கில் இடம் குறைந்து அடுத்து வரும் பைல்களை எழுதுவது சிரமமாக இருக்கும் என்று எண்ணினால் உடனே தேவையற்ற பைல்களை நீக்கலாம். நீக்க வேண்டிய பைல்களை அடையாளம் கண்டு கொண்டால் அவை இருக்கும் டிரைவ் மற்றும் போல்டர் சென்று பைலின் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Delete பட்டனை அழுத்தினால் பைல் அழிக்கப்படும். ஆனால் அவ்வாறு அழிக்கப்படும் பைல்கள் கம்ப்யூட்டரில் உள்ள ரீசைக்கிள் பின்னில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் தவறான பைலை அழித்துவிட்டு பின் மீண்டும் அதனை வேண்டும் என உணர்ந்தால் அதனை மீட்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லுமுன் இந்த பைலை அழிக்க வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டு பின் தான் அந்த பைல் அழிக்கப்படும். அப்படியே அழிந்தாலும் அது ரீசைக்கிள் பின்னில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாம் இடம் காலியாக வேண்டும் என்று அழிக்கையில் மீண்டும் அந்த பைலை ரீ சைக்கிள் பின்னில் வைத்திட வேண்டிய அவசியமில்லை. எனவே உடனே அதை அங்கிருந்தும் அழித்துவிடலாம். ரீசைக்கிள் பின் ஐகானை அழுத்தி கிடைக்கும் மெனு மூலம் பைலை அழிக்கலாம். அல்லது முதலில் பைலை அழிக்க முயற்சிக்கையிலேயே ஷிப்ட் கீ அழுத்தி டெலீட் கீ அழுத்தினால் பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் அழிக்கப்படும். ஆனால் இதனை நாம் திரும்பப் பெற முடியாது.