Daily Archives: ஒக்ரோபர் 31st, 2009

சமையல் குறிப்பு அப்லோட் செய்திட

எனக்கு யார் தருவது சமையல் குறிப்பு? நானே ஒரு நல்ல எக்ஸ்பர்ட் ஆக்கும் என்று எண்ணுபவரா நீங்கள். இதோ உங்களுக்கென ஓர் இணைய தளம் இயங்குகிறது. இங்கு பலவிதமான உணவு தயாரிக்க சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படித்துப் பார்த்து, ஏதேனும் கூடுதலாகச் சேர்த்தால் உணவின் ருசி கூடும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா! அப்படியானால் அந்த விபரங்களைத் தயார் செய்து இந்த தளத்தில் அப்லோட் செய்திடலாம். இந்த தளத்தின் பெயர் புட்டிஸ்ட்டா (Foodista). இதன் முகவரி http://www.foodista.com/ . “The Cooking Encyclo pedia Everyone Can Edit” என்றே இதன் முகப்பில் இந்த தளத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே நம் உணவு முறைகளைப் பற்றிய குறிப்புகள், இதில் தரப்பட்டுள்ள உணவு முறைகளுக்கான குறிப்புகளில் மாற்றங்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாக இந்த தளத்திற்கு அனுப்பலாம். மேலும் நீங்கள் தயார் செய்திடும் உணவு இப்படித்தான் இருக்கும் என்று காட்ட அதனைப் போட்டோ எடுத்தும் அனுப்பலாம்.

சிறுநீரகம்,சிறுநீரகத்தில் கற்கள்


சிறுநீரகம்

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு முத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம். மனித உடலின் ஆதார சுருதி சிறுநீரகம்

சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி முடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது.

இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.

சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் முலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.

நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் முலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் முளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம்.

சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும்.

சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம்.

சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும்.

பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது.

பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.

கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது.

மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த லிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

சிறுநீரகத்தில் கற்கள்

உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்

வாழைத் தண்டு

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது ன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழைப் பூ

வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘

வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் லநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும்’ என்று தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் லம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.

நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். “நொறுங்கத் தின்று நூறு வயதிரு” என்பது துரையார் வாக்கு.

உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.