Monthly Archives: ஒக்ரோபர், 2009

உங்களின் செல்போன் தரம் உயர்ந்ததா?

அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது,இருந்தும் யாரும் பயன்படுத்தாமல் இல்லை அந்த அளவுக்கு அது மனிதன்னுடன் பின்னி பிணைத்து விட்டது,

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

மேற்கண்ட செய்தி http://siruvan2.blogspot.com வலைபக்கத்தில் படித்தது

பெண்களுக்கு உடற்பயிற்சி


உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும்,மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

நமது உடல் வாகு, முகத்திற்கேற்ற தலையலங்காரம் ஒப்பனையில் சிறிது அக்கறை இருந்தாலே போதும் நாமும் அழகிதான். லிப்ஸ்டிக் கலர்,முகப்பவுடர் போன்றவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

உடையைப் பொறுத்தவரை அனைவருக்குமே ‘ ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ‘ இருப்பது அவசியம்.அனைவருமே ஆடை வாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒரு’ க்ரியேட்டிவ்சென்ஸ்’ இருக்கும்.அதுதான் அவர்களது ‘ஸ்பெஷாலிட்டியே’.

நம்மாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. முயற்சியுடையோர்… அதே தான்.

உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும் , பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தல் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட்,டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும்.

மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி,இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும்.

உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உணவுமுறை

உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உணவுமுறை

1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

6. உப்பின் அளவையும் குறைக்கவும்

7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம்

8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.

10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும். 11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20..40 நிமிடம் நடை பழகவும்.

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்


ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா… அதை பல வருடங்கள் போட்டு கிழித்து பின்னர் புது செருப்பு வாங்க சென்ற கடையில், கிழிந்த செருப்பைக் காட்டி இதே செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி நடந்து பார்த்து திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரீகக் காலம் இது.ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட் ஷ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன.

ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும்.

பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன. இதிலும் மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.

2000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை. அதாவது திருமண ஆடையின் நிறத்தில், அதில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ற வகையிலும், மணப்பெண் அணியும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் ஆடம்பரமான காலணிகளை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தலாம். ஆனால் தினமும் அலுவலகத்திற்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிபட்டு வராது.

மிகவும் நலினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன.

காலணிகள் என்றதும் குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும். விளக்கொளியில் மின்னும் செருப்பு, ஒலி எழுப்பும் செருப்பு, சிறுவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை இணைத்திருக்கும் வகை, பெண் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ண வண்ண மணிகளைக் கொண்டவை, புசுபுசுவென தோற்றமளிக்கும் செருப்புகள் என ஏராளம் ஏராளம். இதிலும் விளையாட்டு வீரர்கள் அணிந்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் ஆண் குழந்தைகளுக்கு என பல்வேறு விதங்களில் செருப்புகள் வந்துள்ளன.

சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள்.

காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.

எவ்ளோ தண்ணீர் குடித்தாலும்…

பொதுவாகவே டாக்டர்கள் சொல்வது; அதிகமாக தண்ணீர் குடிங்க; அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகள், தானிய வகை உணவுகளை சாப்பிடுங்க; எதிலும் இனிப்பை தவிருங்க. இதெல்லாம் கலோரி அதிகமில்லாத சத்தானவை என்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இதய நோய் உட்பட எதுவும் நம்மை அண்டாமல் வைக்கும். குளிர்பானங்கள் பருகுவதை விட, சாதா தண்ணீர் குடித்தால் பல நோய்களை தவிர்க்க முடிகிறதாம். அதிலும், இளம் வயதில் இருந்தே இந்த பழக்கம் வந்துவிட்டால்… அப்புறம் எதற்கும் கவலையே பட வேண்டாம் என்பது தான் டாக்டர்கள் கூற்று.

பகலில் தூங்கினால் ஷுகர் வரும்
“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’ (ஓ.எஸ்.ஏ.,) – தொண்டை பின் பக்கத்தில் உள்ள தசைநார் பாதிப்பால், இரவில் தூங்க விடாமல் அவ்வப்போது எழுப்பி விடும் கோளாறு. இதனால், பகலில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பகலில் தூங்கினால் மட்டும் நல்லதா? இது தான் சர்க்கரை நோய்க்கு காரணமாகி விடுகிறது. சமீபத்திய ஆய்வுகளில் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் தூக் கம் வராமல் தவிப்பவர்கள், உடனே அதை தவிர்க்க சிகிச்சை பெறுவது தான் நல்லது.

இடுப்பு பெருத்தால்… பெண்ணே உஷார்
பெண்கள் அதிகம் வெயிட் போட்டால் பல கோளாறுகளுக்கு காரணமாகி விடுகிறது என்பது தெரிந்தது தான்; ஆனால், சிலருக்கு ஆஸ்துமாவும் வரும் என்று தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு “பாடி மாஸ் இன்டெக்ஸ்’ எனப்படும் உயரம் – எடையை பகுத்து நிர்ணயிக்கப்படும் அளவை 30ஐ தாண்டி விட்டால் உஷாராக இருக்க வேண்டும்.
முப்பதுக்கு மேல் ஒன்று கூடினாலும், டாக்டரை பார்ப்பது நல்லது. அப்படியே விட்டுவிட்டால், சிலருக்கு ஆஸ்துமா கோளாறு கூட வரும் வாய்ப்பு அதிகம். இடுப்பு பெருத்தாலும் தொல்லை தான். 88 சென்டி மீட்டர் அல்லது 34 அங்குலம் சுற்றளவுக்கு மேல் போனால் கவனித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

நம்ம டயட் சூப்பர் தான்
சர்வதேச அளவிலேயே இப்போது பல நாட்டு நிபுணர்களும் சொல்லும் ஒருமித்த கருத்து என்ன தெரியுமா? இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க, தானிய வகை உணவும், பல்வேறு கடலை வகை உணவும் தான் நல்லது என்கின்றனர். பாலிஷ் செய்து சாப்பிடும் அரிசி சாதத்தை விட, புழுங்கல் அரிசி சாதம் நல்லது. அதுபோல, பழங்கள், பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் எப்படியாவது ஒரு வேளை வைத்துக்கொள்வது மிக நல்லது. அமெரிக்காவில் இப்போதெல்லாம் இது தான் முக்கிய டயட்டே.

உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்

தனது ரத்த உறவினருக்கு சோக நிகழ்வு ஏற்பட்டால், எனது இதயம் வெடித்து விட்டதே என்பர். உதாரணம்: கணவன் மரணச் செய்தி கேட்டவுடன் அல்லது சில மணி நேரங்களில், சில தினங்களில் மனைவியும் திடீர் மரணமடைவது நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் தான். இதற்கு காரணம் உடைந்த உள்ளம், துக்கச் செய்தி கேட்டவுடன் துயரம் அடையும் போது, மனதில் அழுத்தம் ஏற்பட்டு, நமது உடலிலுள்ள சிம்பத்தடிக் சிஸ்டம், ஊர்திகளிலுள்ள வேகத்தைத் தூண்டுவது போல, அதில் உள்ள “கேட்டகால் அமைன்’ வேதியியல் பொருள் சுரந்து, உடலின் செயல்பாட்டை மாற்றும். உலக இதய மையம் இதுபோன்று துக்கத்தில் இருப்பவர்களை ஆய்வு செய்தது. இதன் ஆய்வு முடிவு இதோ

துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக இதயக் கோளாறு ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு இளம் வயதிலிருந்து முதியோர் வரை ஏற்படலாம். நன்றாக எந்தவித கோளாறுமில்லாதவர் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கெட்ட கொழுப்புள்ளவர்கள், பை – பாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென் சிகிச்சைப் பெற்றவர்கள், மிகவும் கவனமாக துக்க நிகழ்வுகளை அனுசரிக்க வேண்டும். முதியோர்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆணும், பெண்ணும் சரி துக்கத்தை கேட்டவுடனே கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை சம்பவம்
எனது 30 ஆண்டு நண்பர் சம்பத்; அவரது மனைவி லீலா. இருவரும் ஐகோர்ட் வக்கீல்கள்; இதய நோயாளிகள். மனைவி இறந்தவுடன் சம்பத் என்னிடம் “என் மனைவி காலை எழுந்து காலை கடன் கழிக்கச் சென்றவர் மரணமடைந்துவிட்டார்; எனது இதயம் போய்விட்டது’ என்று கூறினார். “இதுபோலவே, ஈ.வெ.ரா., தனது முதல் மனைவி நாகம்மை இறந்தவுடன்,”எனது இதயம், எனது உயிர், என் சொத்து சுகம் எல்லாம் போய்விட்டது. நான் இதயமில்லாதவன்’ என்று, துக்கத்தை வெளிப்படுத்தி கதறி அழுததாக வரலாறு.
சில ஆண்டுகளுக்கு முன், எனது டாக்டர் நண்பர் சேலத்தில் உள்ளவர், இறந்த செய்தி கேட்டு துக்கம் விசாரிக்கச் சென்றபோது, அவர் மனைவி திடீர் மரணமடைந்தார். டாக்டரது மனைவி மரணத்தின் துக்கத்தை விசாரித்து வந்தேன். இப்படி பல சம்பவங்கள் உண்டு.

என்ன நடக்கிறது?
நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தவுடன் இவர்கள் அளவில்லாத துயரத்தோடு அழுது கொண்டு இருப்பர். இந்த நேரத்தில், உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத் துடிப்பு அதிகமாகிறது. ரத்தத்தில் உறையும் தன்மை அதிகமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. இதனால் மாரடைப்பு அதிகமாக வருகிறது.
இது இளம் வயதினருக்கும் வரும், வயதானவர்களுக்கும் வரும். இது எப்படி? துக்கப்படும் போது ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. அதே நேரம், ரத்தத்தின் அடர்த்தி தன்மை அதிகமாகிறது. இதனால், ரத்தம் உறைந்து, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணம் வரும். இது, சர்க்கரை ரத்தக் கொதிப்பு, முன்பே பை – பாஸ், ஸ்டென்ட் சிகிச்சை செய்தவர்களுக்கு மிகவும் எளிதாக வரும்.

துக்கம் ஆட்கொள்ளும் போது
ரத்தக் கொதிப்பு அதிகமாகி ரத்தத்தின் திரவத் தன்மை குறைந்து. சீக்கிரம் உறைந்து கரோனரி ரத்தக் குழாய் அடைத்து மாரடைப்பை உண்டாக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக பணிபுரிந்த போது, 22 வயதுள்ள இளம் பெண் கூலித் தொழிலாளிக்கு மாரடைப்பு வந்து; ஐ.சி.யூ.,வில் அனுமதித்து வைத்தியம் செய்தேன். இதுபற்றி டாக்டர்களுக்கும், மக்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இதன் காரணம், அந்த இளம் பெண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன் ஓடிப்போய்விட்டான். பெற்றோர் இல்லை. கூலி வேலை செய்து குழந்தையைக் காப்பாற்றி வர வேண்டிய நிலை. எவ்வளவு மனக்கவலை, மன அழுத்தம், சோகமே அவளது வாழ்க்கை. எப்படி அவளது இதயம் சீராக இயங்க முடியும்?

சில வருடங்களுக்கு முன், 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். அவரை சென்னை மையப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, ஆஞ்சியோகிராம் செய்ததில் கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புள்ளது தெரிந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்போன போது, இந்த கரோனரி ரத்தக்குழாய் அடைப்பு இல்லை. எப்படி காணாமல் போனது; இதற்கு காரணம் என்ன?
இந்த இளைஞர் கல்யாணமாகி ஓராண்டில் விவாகரத்து வழக்கு, ஒரு குழந்தையின் தந்தை, நிரந்தரமற்ற ஐ.டி., பணி. இவர் இதயம் எப்படி துயரத்தையும் வேதனையும் தாங்கும்; இவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு. இது கரோனரி ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து கட்டியாகி அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தது. குறிப்பிட்ட சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியதால் ரத்த உறைவு குறைந்து. அடைப்பு சீராக்கப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்து ஆலோசனை செய்பவர் தான், நவீன இதய நோய் நிபுணர்.
பை-பாஸ் கிராப்ட், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் செய்தவர்கள், மற்றும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயுள்ளவர்கள், அதிக கொழுப்புள்ளவர்கள் இதயத்தில், சில பகுதிகள் இஸ்கிமியா என்ற ரத்தக் குறைபாடுள்ள இடங்கள் இருக்கும், இந்த இடங்கள், மிகவும் ஆபத்தான இடங்கள். இந்த இடத்திலிருந்து தான், அரித்மியா என்ற, தத்தளித்து தடுமாறும் துடிப்புகளின் உறைவிடம். அதாவது மரணத்தின் இருப்பிடம்.
நீங்கள் உங்கள் இதய நோயின் அறிகுறிகளை தகுந்த நேரத்தில் அறிந்து கொண்டு, தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொண்டால் நலமுடன் வாழலாம் நோயாளிகளே!
1.டாக்டர் சொல்வதை கேட்டு நடங்கள்.
2.வியாதியைப் பற்றிய பயத்தைப் போக்கி அமைதி காக்கவும்.
3. வியாதியால் நம்பிக்கை சோர்ந்து வாழாதீர்.
4. எதையும் ஏற்காமல் எதிர்பதமாக பேசி வாழாதீர்.

டாக்டர் சு.அர்த்தநாரி, எம்.டி.டி.எம்.,

மென்மையான சருமம் வேணுமா?


நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.
வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
மென்மையான சருமத்தை கண்டறிவது:
* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல்.
* மாய்ச்சரைசர்கள் <உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாதல்.
* சூரிய வெப்பத்தால், எளிதில் பாதிப்பிற்கு ஆளாதல்.
* வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டினாலும் விரைவாக பாதிக்கப்படுதல்.
மேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை மிக மென்மையான சருமத்தினரை குறிக்கிறது.

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்:
மிக மென்மையான சருமத்தினர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
முகத்திற்கு செய்யப்படும் ஆவி பிடித்தல், கரும்புள்ளிகளை நீக்குதல் போன்றவை மென்மையான சருமத்திற்கு எரிச்சல் ஊட்டுபவை. எனவே, இவ்வாறான அழகு சிகிச்சைகள் செய்யப்படுவதற்கு முன், சரும நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.

உகந்த அழகு சாதனப் பொருட்கள்:
* எப்போதும் பவுடர் மேக்-அப் பயன்படுத்துவதே நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு நல்லது.
* பழைய அழகு சாதனப் பொருட்கள் குறிப்பாக, கண்களுக்கான அழகு பொருட்களில், வாங்கி சிறிது நாட்கள் ஆனதை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காரா மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். பவுடர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
* கறுப்பு ஐ லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தவது நல்லது. ஏனென்றால் அவை அதிகளவில் அலர்ஜியை தோற்றுவிக்காது.
* பென்சில் ஐ லைனர் மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப் படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனர் பயன் படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில், சேர்க்கப் படும் லேட்டக்ஸ் மென்மையான சருமத்தினர் சிலருக்கு ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம்.
* அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.
*எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னும், சோதனை செய்து கொள்ள வேண்டும்.
* மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.

அதிக ஆசைக்கு முற்றுப்புள்ள! (ஆன்மிகம்)-அக்.27., – ராகு, கேது பெயர்ச்சி!

ஆசையில்லாமல் வாழ்க்கையில்லை; அதே நேரம், அதிக ஆசை வாழ்க்கையை அழித்து விடும். ராகு, கேது என்னும் கிரகங்களின் வாழ்க்கை வரலாறு இதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்து, அதில் இருந்து இறப்பை அறவே நீக்கும் அமுதத்தைப் பருக திட்டமிட்டனர். இந்த முயற்சியில் அசுரர்களும் சேர்ந்து கொள்ள விரும்பினர். மிகப்பெரிய பாற்கடலைக் கடைய, ஒரு மலையே மத்தாக தேவைப்பட்டது. மேருமலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி இருதரப்பினரும் கடைந்தனர். தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும் வேளையில், அதைப் பிடுங்கிச் சென்று தாங்கள் அருந்திவிட வேண்டும் என்பது அசுரர்களின் திட்டம்.
இதை அறிந்த திருமால், இரு தரப்புக்கும் சமமாக அமுதத்தைப் பங்கிட முடிவு செய்து, தேவர்களுக்கு முதலில் அமுதம் பரிமாறப்படும் என்றும், இடையில் தெரியாமல் வந்து அமுதத்தை ஒரு அசுரன் பருக முயற்சித்தால் கூட, முழுமையாக தேவர்களுக்கே கொடுத்து விடுவதாகவும் கூறி எச்சரித்தார். அமுத கலசம் வெளிப்பட்டதும் மோகினி அவதாரம் எடுத்தார் அவர். அவளது அழகில் அசுரர்கள் லயித்திருந்த நேரத்தில், தேவர்களுக்கு அமுதத்தை வேகமாக பரிமாறினார். இதை கவனித்து விட்டான் சுவர்பானு என்ற அசுரன்.
தங்கள் இனத்துக்கே அமுதம் கிடைக்காமல் திருமால் சதி செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட அவன், தன் இனத்தாரை எச்சரிக்க முயன்றான்; ஆனால், மோகினியின் அழகில் மூழ்கியிருந்த அசுரர்கள், அவனது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. எனவே, அவன் மட்டும் தேவர் போல் வேடம் தரித்து அமுதம் பரிமாறும் வரிசையில் அமர்ந்து விட்டான். திருமால், அவனுக்கும், அமுதம் கொடுக்கவே வேகமாக சாப்பிட்டு விட்டான். எனவே, அவனுக்கு சாகாவரம் கிடைத்துவிட்டது.
சுவர்பானு உருமாறி அமுதம் பருகியதை சூரியனும், சந்திரனும் கவனித்து திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர். அவனை வெட்டித் தள்ளினார் திருமால். இரு துண்டானாலும், அமுதம் பருகியதால் அவனுக்கு உயிர் போகவில்லை; அவன் சிவபெருமானைச் சரணடைந்தான். அவனுடைய மனித முகம் இருந்த பாதி உடலில், பாம்பு உடலைப் பொருத்தி ராகு என்று பெயர் வைத்தார். தலையற்ற உடலுக்கு பாம்புத் தலையைப் பொருத்தி கேது என பெயர் வைத்தார் சிவன்; அவர்களை வானமண்டலத்தில் நிழல் கிரகங்களாக்கி வைத்தார்.
சூரிய, சந்திரரால் அவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதால், தினமும் ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) வீதம் சூரியனின் பணியையும், சந்திரனின் பணியையும் செய்ய அனுமதித்தார். இந்த காலமே ராகு மற்றும் எமகண்டம் எனப்படுகிறது.
ஆனாலும், அவர்களின் ஆதிக்க காலத்தில் சுபநிகழ்ச்சிகளை தேவர்கள் தவிர்த்து விட்டனர். பதவியிருந்தும் அதிகாரமில்லாமலே இன்று வரை அவர்கள் இருக்கின்றனர். அவர்களது அதீத ஆசையால் அசுரர்களுக்கு கிடைக்க இருந்த பாதிப் பங்கு அமுதமும் கிடைக்காமல் போய்விட்டது.
ராகு, கேதுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, எதற்கும் அவசரப்படாமல், நம் உழைப்புக்குரிய பலன் கிடைக்கும் வரை காத்திருந்து பெற்றால் தான் அது நிலைத்து நிற்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

நற்கதி பெற… (ஆன்மிகம்)

நம் முன்னோரும், மகான்களும், ரிஷிகளும் மிகுந்த தீர்க்கதரிசிகள். பிற்காலத்தில், அதாவது, இந்தக் கலியுகத்தில் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பர், அவர்களது வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டனர். இந்த கலியில், தர்மம் குறைந்து விடும்; பாவச் செயல்களில் மனிதர்கள் ஈடுபடுவர்; தெய்வ நம்பிக்கையும் குறைந்துவிடும்; ஆயுளும் குறையும்; நல்ல விஷயங்களில் ஈடுபடவே நேரமிராது என்பதையும் தெரிந்து கொண்டனர்.
“அடடா! கலியுகத்தில் மக்கள் இப்படி ஜென்மாவை வீணடிக்க வேண்டியிருக்குமே…’ என வருந்தியவர்கள், நற்கதி பெற என்ன வழி என்று ஆராய்ந்தனர்.
யுதிஷ்டிரருக்கு பல தர்மங்களை எடுத்துச் சொல்கிறார் பீஷ்மாசாரியார். பிராமண தர்மம், வைசிய தர்மம், இதர தர்மம், பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், யதி, ஸ்த்ரீ இவர்களுக்கான தர்மம், மோட்ச தர்மம் என்று பல தர்மங்களைச் சொல்கிறார். இதில் ஏதாவது குறை ஏற்பட்டால், அதற்கான பிராயச்சித்தங்களையும் கூறுகிறார். இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டார் தர்மபுத்திரர்.

“தாங்கள் சொன்னதெல்லாம் சரி! ஆனால், மனிதர்களுக்கு உபவாசம், பஜனை, பூஜை, ஜெபம் போன்றவைகளைசெய்து கொண்டிருக்க நேரமிருக்காதே! இப்படிப்பட்டவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய சுலபமான, சுருக்கமானதும், அதே பலன்களைக் கொடுக்கக் கூடியதுமான தர்மத்தைச் சொல்ல வேண்டும்…’ என்று கேட்டார்.
இதற்கு பதிலாக —
“ஏசமே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத!
யத் பக்த்யா புண்டரீகாசம் ஸ்தவனரர்ச்சேன் நர: சதா!’ என்றார் பீஷ்மாசாரியார். எல்லா தர்மங்களையும் விட சிறந்த தர்மம், தாமரை கண்ணனான ஹரியை பக்தி செய்வதுடன், அனவரதமும் ஸ்தோத்ரம் செய்வது தான் என்பது பொருள்.
இதில் நாராயணனை சதா ஸ்தோத்ரம் செய்தாலே, இந்த சம்சார பந்தங்களிலிருந்து விடுபடுகிறான் என்றால், இது கூட சிலருக்கு சிரமமாக இருக்கும். பகவானை எப்படி ஸ்தோத்ரம் செய்வது… அதற்கு ஆசார அனுஷ்டானம் உண்டா? அப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியுமா?
இப்படி பீஷ்மாசாரியார் சொன்ன தர்மங்களை பார்வதி, பரமேஸ்வரன், நாராயணன், மகாலட்சுமி உட்பட சகல தேவர்களும், ரிஷிகளும் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மனிதர்கள் மீது இன்னும் கொஞ்சம் கருணை பார்வதி தேவிக்கு ஏற்பட்டது. “மனிதர்கள் இன்னும் சுருக்கமாகவும், சுலபமாகவும், சம்சார பந்தத்திலிருந்து விடுபட வழி என்ன?’ என்று கேட்டாள்.
“மூன்று முறை ராம நாமத்தை எவன் ஒருவன் சொல்கிறானோ, அவன், விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொன்ன பலனைப் பெறுவான்!’ என்கிறார். இவ்வளவு சுலபமாக நமக்கு தர்மங்களை அனுஷ்டிக்கும் வழியையும், ஜென்மா கடைத்தேறும் மார்க்கத்தையும் சொல்லி வைத்திருக்கின்றனர்.

அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்


ஃ இறைவனது சிருஸ்டியில் அழகற்றதென எதுவுமே இல்லை. சிறப்பான இறைவனது சிருஸ்டியான உயிர்கள் ஒவ்வொன்றும் அழகானவை . குறிப்பாக பெண்கள் ஒன்றுதிரண்ட அழகின் உருவங்கள். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு விதமான எழில் தோற்றத்தை அமைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தி, ‘ நானும் அழகே ‘ நிமிர்ந்து நில்லுங்கள்!

ஃ தன்னம்பிக்கைதான் மனிதர்களின் முதல் அழகு. ‘ நான் நிச்சயம் அழகாக இருக்கிறேன் ‘ உங்களிடம் உறுதியாக இருக்க வேண்டும். இந்த தன்னம்பிக்கை உங்களை விட்டு அகலாதவரை, உங்கள் அழகுக்கு குறைவேதும் ஏற்பாடாது.

ஃ உங்களுடைய அழகைப் பற்றி மறந்துகூட பிறருடைய அபிப்பிராயத்தை & குறிப்பாக பெண்களின் கருத்தை வாய்விட்டு கேட்காதீர்கள். அந்த வினாவுக்குக் கிடைக்கக் கூடிய பதில் சில சமயம் உங்கள் மனத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடும். பலவீனமான மனம் அழகு இயல்பை நிலைகுலைய செய்துவிடும்.

ஃ பெண்களின் உடல் உறுப்புகளை , அவரவர்கள் உடல் வாகுக்கு ஏற்றாவாறு கடவுள் அமைத்திருக்கிறார். அகன்ற கண்கள் சில பெண்களுக்குதான் அழகாக இருக்கும், குறுகிய உள்ளடங்கிய குறுகிய கண்கள்தான் சிலருக்கு அழகு சேர்க்கும், சிலருக்கு எடுப்பான நாசியும் சிலருக்கு அடங்கிய மூக்கும் அழகின் சின்னங்களாக அமையக்கூடும். உயரமான சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் குள்ளமான பெண்களில் கட்டழகிகள் கிடையாதா! உங்களுக்கு அமைந்திருக்கும் உடல்வாகு உண்மையில் உங்களுக்கு அழகினைத்தான் உண்டாக்குகிறது என்ற உண்மையை உணருங்கள்.

ஃ கவர்ச்சியான உடல் தோற்றம் அழகின் ஓர் அம்சம் என்பது சரி. அப்படிபட்ட உடல் கவர்ச்சி உங்களிடம் இல்லையே என்பதனாலேயே நீங்கள் அழகியல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம். இனிய குரல் அழகின் ஓர் அம்சம் . உங்கள் குரல் அழகே பிறரை கவர்ந்திருக்கும் ஆற்றல் பெற்றிருக்கும்.உங்களிடம் குரல் வளம் அமைந்திருந்தால் அதைச் செம்மைபடுத்த முயலுங்கள். முறையான இசைப்பயிற்சியால் உங்கள் குரலில் பல்லாயிரக்கணக்கான மக்களை மயக்கச் செய்துவிடும்.

ஃ பகட்டான மேனியழகு இல்லாத பல பெண்கள் கட்டான உடல் அமைந்திருக்கும் . இந்த உடற்கட்டும் ஓர் அழகு என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் உடற்கட்டைக் காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு சிறப்புதான்.

ஃ உங்கள் உடலின் நிறம் சிவப்பாக இருப்பதே மட்டுமே அழகு என்றென்ன வேண்டாம் . கறுப்பான உடல் நிறத்திற்கும் ஒருவித கவர்ச்சி உண்டு. கறுப்பு நிறம் என்பதற்காக எந்த பெண்ணும் கலக்கமடைய தேவையில்லை.

ஃ புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டை போக்கிவிடும். நல்ல குணம், அனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய இந்த அக அழகிற்கு புற
அழகு சமானமே ஆகாது. புற அழகை விட அக அழகே உயர்ந்து நிற்கும்.

ஃ வேறு எந்த அழகையும் விட கல்வி அழகே பேரழகு என்று அழகு 1.காலையில் நீராகாரம் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு தம்ளர் நீர் பருக வேண்டும். இளநீர், பசுமோர், பழரசங்கள், மூலிகைப் பானங்கள் போன்றவைகளை அருந்தவும்.

2.செம்பருத்திப்பூ, இலை, கறி வேப்பிலை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி இவை எல்லாம் குளிர்ச்சி தரும் பொருட்கள். இவைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயாரித்து தலையில் பூசி வந்தால் உடம்பு சூடு குறையும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.

3.வெந்தயக்கீரை, கொத்தமல்லி இரண்டையும் மையாக அரைத்துத் தலையில் பூசி குளித்தால் கோடையில் தலைமுடி பட்டுப்போல் மின்னும். வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியிலிட்டு கூழாக்கவும்..இந்தக் கூழை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து அதன்பின் கண் இமை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் பூசிக் கொள்ளுங்கள். இயற்கையான பொலிவு கிடைக்கும்.

4.கோடையில் வெயிலில் அலைவதால் உஷணக் கட்டி ஏற்படும். அதைப் போக்க ஒரு கிண்ணத்தில் மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்துப் போட்டு கலக்கி கட்டி மீது பூசினால் கட்டி தானாகவே மறையும்.

5.நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை சாறும், வெங்காயச் சாறும் கலந்து பெருங் காயம் சேர்த்து குடித்தால் கோடை வெப்பத்தில் உடல் சோர்ந்து போகாது களைப்பும் தெரியாது.

6.குளித்து முடித்ததும் போக நன்றாக துடைத்துக் கொண்டு, ஏதாவது பாடி டால்கம் பவுடர் அல்லது டியோடரண்ட் ஸ்பிரே உபயோகிக்கவும். இது கோடைக் காலத்தில் நாள் முழுக்க உங்களை நறுமணத்தோடும், புத்துணர்சியுடனும் வைக்கும்.

7.சாத்துக்குடி, எலுமிச்சை, தர் பூசணி, நன்னாரி போன்ற சாறுகளில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் கோடையில் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

8.அதிகமாக வேர்க்கும் கோடைக் காலத்தில் படை, வேர்க்குரு போன்றவை ஏற்பட்டு அரிப்பும், எரிச்சலுமாக அவதிப்படுவீர்கள். கான்டிட்டஸ்டிஸ் பவுடரை பூசிக் கொண்டால் இந்தத் தொல்லை இருக்காது.
9.எண்ணெய், மசாலா, காரம் சேர்த்த உணவு வகைகளை கோடையில் தவிர்ப்பது நல்லது.

10.இரவில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெந்தயத்தை மென்று திங்க உடம்பு உஷணம் குறையும்.

11.நுங்கு சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் உடல் முழுவதும் பூசி குளித்தால் கோடையில் வறண்ட சருமம் மிருதுவாகும்.!