Daily Archives: நவம்பர் 1st, 2009

மைலோமா…! 35 லட்சம் இந்தியரை பயமுறுத்தும் நோய்

கேன்சர் என்றாலே, யாருக் கும் உச்சகட்ட கவலை தான். ஆனால், அந்த புற்றுநோய்களும் இப்போது, வயதானவர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வயதினருக்கும் கூட வர ஆரம் பித்துவிட்டது. ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய், பெண் களுக்கு மார்பக புற்றுநோய் என்று பல வகைகள் இருந் தாலும், பத்தாண்டுக்கு முன் இருந்தது போன்ற நிலை இப்போது இல்லை. முறைப்படியான சிகிச்சை முறைகளை கையாண்டால், ஆயுள் நீட்டிக்கலாம் என்பது மட்டும் நிச்சயம்.
புற்றுநோய்களில் இந்தியாவில் அரிதாக இருந்த ஒரு வகை தான் “மல்டிபில் மைலோமா’ என்பது. வெள்ளை “பிளாஸ்மா’ அணுக்களை எலும்பு மஜ்ஜையில் தாக்கி, புற்றுநோய் கட்டிகளை ஏற்படுத்துவது தான் இந்த பாதிப்பு. இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு இப்போது உள்ளது. வியாதி வந்து 20 ஆண்டுகள் கூட எந்த பயமுமின்றி வாழ இப்போது சிகிச்சை வந்து விட்டது. இருந்தாலும் லட்சக்கணக்கில் பணம் வேண்டுமே.

நடிகைக்கு வந்த ஷாக்
கனடாவை சேர்ந்த நடிகை லிசா ராய்; இந்தியாவின் பெங் காலி தந்தைக்கும், போலந்து தாய்க்கும் பிறந்தவர். தீபா மேத்தாவின் வாட்டர் உட்பட படங்களில் நடித்து விருதுகள் பெற்றவர். கனடாவில் டொரன் டோ நகரில் வசிக்கும் அவர், சில மாதங்களாக அடிக் கடி சோர்வடைவதும், முதுகு வலியால் துடிப்பதுமாக இருந்தார்.
மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின் “மல்டிபில் மைலோமா’ புற்றுநோய் இருப் பது தெரிந்தது. அவர் மனம் தளரவில்லை. ஒருபக்கம் கீமோதெரபி சிகிச்சையும், இன் னொரு பக்கம் மன திடத்தையும் கொண்டுள்ளார். நோயில் போராடினாலும், நம்பிக்கையுடன் உள்ளார். இந்த நோய் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

தமிழக இன்ஜினியர்
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன்; வயது 42; கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவர், சூரத்தில் டாடாவின் பாலியஸ்டர் இழை ஆலையில் புரொடக்ஷன் இன்ஜினியராக ஆறாண்டுக்கு முன் சேர்ந்தார்.
நான்கு ஆண்டுக்கு முன், திடீரென அவருக்கு தொடர்ந்து முதுகுவலி வந்தது. சோர்வும் அடிக்கடி ஏற்பட்டது. பரிசோதித்ததில் அவருக்கு “மல்டபில் மைலோமா’ புற்றுநோய் வந்திருப்பதை மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை கண்டுபிடித்தது. அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் முடிவு செய்தனர்; சிகிச்சைக்கான செலவு ஐந்து லட்சத்தை நிறுவனம் ஏற் றது. குமரேசன் இப்போது புது மனிதராகிவிட்டார்.
“நான் கடவுள் பக்தி உள்ளவன்; யோகா, பிராணாயாமம் தினமும் செய்வேன். புத்தகங் கள் படிப்பேன்; வாக்கிங் போவேன்; வெளியில் பிரஷ் ஜூஸ் தவிர எதையும் சாப்பிட மாட்டேன்’ என்கிறார்.. இவர் பழையபடி ஆனதை மற்ற நோயாளிகளிடம் சொல்ல ஜஸ்லோக் டாக்டர்கள் தவறுவதே இல்லை. அந்த அள வுக்கு மருத்துவமனையில் இவர் பெயர் பிரபலம்.

எப்படி வரும்?
இந்த நோய்க்கு காரணம் என்ன என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. மரபணு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள் ளது. அமெரிக்காவில் தான் ஆண்டுதோறும் இந்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். ஆனால், இந்தியாவில் இப் போது தான் அதிகரித்து வருகிறது.
சில ஆண்டுக்கு முன், மாஜி பிரதமர் வி.பி.சி., ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய் தியை படித்திருப்பீர்கள். அவருக்கு வந்தது இந்த வியாதி தான். சிறுநீரக கோளாறும் இருந் தது. நோய் வந்த பின், சிகிச்சை மூலம் அவர் 17 ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார்.
வெள்ளை அணுக்களில் ஒரு வகை தான் பிளாஸ்மா செல் கள். இவற்றை தான் முதலில் புற்றுநோய் தாக்குகிறது. எலும்பு மஜ்ஜையில் தான் இந்த பிளாஸ்மா செல்கள் அதிகம். உடலில் தொற்றுக்கிருமிகளை எதிர்க்கும் இந்த செல்கள் வலுவிழந்துபோவதுடன், எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய்க்கட்டி உருவாகிறது. இதுவே, சிலருக்கு பல கட்டிகளாக உருவாகும். இது தான் “மல்டிபில் மைலோமா’ என் பது. ரசாயனம், பிளாஸ்டிக், கதிரியக்க சக்தி போன்றவை மூலம் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

ஸ்டெம் செல் சிகிச்சை
இப்போது பழுதான செல் களை அகற்றி, புதியவற்றை புகுத்தும் “ஸ்டெம் செல்’ மாற்று சிகிச்சை முறை பற்றிய முன்னேற்றம் அதிகரித்து வருகிறது. இந்த ஸ்டெம் செல் தெரபி தான் “மைலோமா’வை நீக்கும் அரிய மருந்தாக இருக் கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கீமோதெரபி உட்பட சிகிச் சைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்தியாவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது பெரிய செலவு. ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை முறை இன்னும் இரண்டாண்டில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிகுறி என்னென்ன?
அடிக்கடி முதுகு வலி, எலும்பு பாதிப்பு, தொற்றுநோய் மூலம் அடிக்கடி ஜுரம் , வெயிட் சரிவு, சோர்வு, மலச் சிக்கல் போன்றவை தான் இதன் அறிகுறி. இந்த அறிகுறிகள் வந்துவிட்டால், டாக்டரிடம்போய் விடுவது நல்லது. சிகிச்சை ஆரம்பித்து விட்டால், நோயை விரட்டி விட முடியும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்களும் நிறுவனங்களின் தவிப்புகளும்

இந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்கள் வர இருப்பதால், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. முதலாவதாக எந்த சர்வீஸ் புரவைடர் கொடுத்த எண்ணையும் இன்னொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வசதி விரைவில் வர இருக்கிறது. தங்கள் எண் பலருக்குத் தெரிந்து, தம்மை அடையாளம் காட்டும் எண்ணாக இருப்பதாலேயே, நம்மில் பலரும் மொபைல் சர்வீஸ் மோசமாக இருந்தாலும், வேறு எண்ணுக்கு மாறாமலேயே இருக்கிறோம். இந்த வசதி வந்துவிட்டால், அதற்கு எவ்வளவு கட்டணமாக இருந்தாலும், பலர் தங்கள் மொபைல் சேவை நிறுவனத்தினை மாற்றிக் கொள்வார்கள். எனவே அடுத்து வரும் மாதங்களில், இந்த நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிவதைக் காட்டிலும், இருக்கிற வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதில் தான் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இரண்டாவதாக, இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். நம்பர் மாற்றி வரும் வாடிக்கை யாளர்கள் கணக்குகளை அப்டேட் செய்வது மட்டுமின்றி, விரைவில் வர இருக்கும் 3ஜி சேவை சார்ந்தும் இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் மாறுதல்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அல்லது இந்த இரண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய பில்லிங் சிஸ்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். ஏனென்றால் 3ஜி சேவைக்கென புதிய கட்டண விகிதங்களை, ஏற்கனவே உள்ள மற்ற கட்டண விகிதங்களுடன் அமல்படுத்த வேண்டியதிருக்கும்.
மேலும் பில்களின் அமைப்பிலிருந்து தான் இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் களின் மொபைல் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் தான் புதிய திட்டங்களை வடிவமைத்துத் தர முடியும். எனவே புதிய வகை பில்லிங் சிஸ்டம் என்பது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
மொபைல் சேவை நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் சேவைகளைப் புதிய திட்டங்களின் அடிப்படையில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். நீண்ட காலம் வாடிக்கையாளர்களைத் தங்களிடம் வைத்திருக்க இலவச மொபைல்களைத் தரலாம். இதனாலும் பில்லிங் முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

3ஜி வருவதால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தலாம். 2ஜி சேவையில் இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த இயலா நிலை உள்ளது. ஆனால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தும் வகையில் இதுவரை எந்த திட்டமும் உருவாக்கப் படவில்லை. இதற்குத் தற்போது கிடைக்கும் இன்டர்நெட் அடிப்படைக் கட்டமைப்பினை நன்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் அமைக்கப்பட வேண்டும். தற்போது புழக்கத்தில் இருக்கும் மொபைல் போன்கள் மற்றும் 2ஜி அலைவரிசைக்கு இது இணைவாக இருக்காது. 3ஜி மற்றும் மொபைல் எண் போர்ட்டபிளிட்டி வந்த பின்னர், கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் பில்லிங் இருப்பதே சிறப்பாகவும் பயனுள்ள முறையிலும் இருக்கும் என்பதால், மொபைல் சேவை நிறுவனங்கள் அனைத்துமே புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களையும் தங்களுடன் தக்கவைத்திட பெரும் முயற்சிகளையும் தொடர்ந்து எடுக்க வேண்டும்.

டப்பா கூல்டிரிங்ஸ், கவர்ச்சி மொறுமொறு

குளிர் பானங்கள் எல்லாமே கெடுதல் என்று டாக்டர்கள் சொல்வது கிடையாது; எப்போதுமே “பிரஷ் ஜூஸ்’ நல்லது. சாத்துக்குடி, திராட்சை, ஆப்பிள் என்று பழங்களை பிழிந்து அப்போதே தயாரித்து தரும் ஆரோக்கியமான பானங்கள் நல்லது தான்.ஆனால், அதில் இல் லாத ஈர்ப்பு டப்பாக்களில் அடைக் கப்பட்ட குளிர்பானங்களில் இருக்கிறதோ தெரியவில்லை. உண்மையில், இதில் உள்ள “ப்ரக்டோஸ்’ என்ற ஒரு வகை இனிப்பு தான் கெடுதலான பொருள்.
ஒரு நாளைக்கு டப்பா குளிர் பானம், கவர்ச்சியான பிளாஸ்டிக்கில் அடைக் கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகள் மூலம் 200 கிராம் “ப்ரக்டோஸ்’ உடலில் சேர்ந்தால் போதும், கண்டிப் பாக, ரத்த அழுத்தம் விர்ர்ர்…தான் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காதில் விழுந்ததா இளம் “எதிர்கால’ தூண்களே.

ஒல்லியா இருக்கான்; அள்ளறான் பாவி
கண்டபடி , கண்ட உணவுப்பொருட்களையும் , நொறுக்குத்தீனிகளையும் சாப்பிட தூண்டுவது எது? வாய்க்கு ருசியான, கண்ணை பறிக்கும் பாக்கெட்களில் உள்ள விதவித கொழுப்பு பொருட்கள் மட்டுமல்ல, நம்மை சுற்றியவர்களும் தான்.
ஆம், நுகர்வோர் உணவுப்பழக்க ஆய்வு ஒன்றில் வித்தியாசமான தகவல்கள் வெளியாகி உள்ளது. “நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்; ஆனால், கட்டுப்பாடு தேவை. உடலுக்கு ஊறு விளைவிப்பது என்றால், அதில் எச்சரிக்கையாக இருங்கள். ருசியாக இருக்கிறது என்பதால் எப்போதாவது சாப்பிடுவது சரி தான். ஆனால் அதையே அடிக்கடி சாப்பிடக்கூடாது; இப்படி சாப்பிட தூண்டுவது, நம்மை சுற்றியிருப்பவர்கள் தான்’ என்கிறது.
அத்துடன் நிற்கவில்லை, “ஒல்லியாக இருக்கும் இவன் இவ்வளவு சாப்பிடும் போது< நாம் சாப்பிடாமல் இருந்தால் எப்படி' என்று சிலர் சாப்பிடுகின்றனர். குண்டாவதற்கு இதுவும் ஒரு காரணம்' என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஓட்டலில் அடுத்தவரை பார்த்து சாப்பிடாதீங்க, சரியா?

இளம் வயது டும் டும் உடனே குவா குவா
உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் ஒன் றரை கோடி குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக் கின்றன; அவற் றில் போதிய சுகாதார வசதி இல்லாமல், முதல் மாதத்திலேயே 10 லட்சம் குழந்தைகள் இறந்து விடுகின்றன.
குறைப்பிரசவத்தில் முன்னணியில் இருப்பது ஆப்ரிக்க நாடுகள், வட அமெரிக்க நாடுகள். ஏழை நாடுகளான இங்கு, பல்வேறு சுகாதார குறைபாடுகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
பணக்கார நாடான அமெரிக்கா போன்ற நாடுகளிலும் குறைப்பிரசவங்கள், பாதிப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால், நவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு கருத்தரிப்பது, வயதான பின் குழந்தை பெறுவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. முதிர்ச்சியான உடல் அமைப்புடன் இல்லாமல் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேளாத, வாய் பேசாத ஊனம் உட்பட வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான். இளம் வயதில் டும்டும்…உடனே குவாகுவா; இப்படித்தான் நாம் பாரம்பரியமாக கடைபிடித்துவந்தோம். அதை விட்டதால்… கணக்குல சரியா

ஷுகரும் கன்ட் ரோல்
உங்களுக்கு ஷுகர் இருக்கிறதா? அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்களா? சரியாக உணவும், மருந்துகளும் சாப்பிட்டு வந்தாலே போதுமே. ஆனால், மற்ற நோய்களை விட, இதில் துல்லியமாக நேரப்படி எதையும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஷுகர் விர்ர்ர் தான்.
வெளிநாடுகளில், சர்க்கரை நோயாளிகளுக்கு சில கணித சோதனைகள் வைக்கின்றனர் டாக்டர்கள். அதை சரியாக கணக்கிட்டு விட்டால், அவர்களுக்கு ஷுகர் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொருள். இப்படி பல நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயை கட்டுப்பாட் டில் கொண்டு வந்துள்ளனர் டாக்டர்கள். இந்த முறை இப்போது இந்தியாவில் நுழைந்துள்ளது. இருந்தாலும், ஷுகர்ன்னு வந்திட்டதென்றால் நம்மவங்க உஷார் தானே.

ஆயுளில் பத்தாண்டு குறையுமாம்
புகைப் பிடிப்பது, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றும் அதிகமாக இருந்தால், ஆயுளில் பத்தாண்டு குறையுமாம். கண்டபடி "பேலன்ஸ்' செய்யத்தவறியவர்களுக்கு தான் இந்தநிலை.
உயரம், எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல் இயக் கம் சீராக இருந்தாலும், கொலஸ் ட்ரால் இருந்தால் பாதிப்பு தான். கட்டுப்பாட்டில் வைத் திருந்தால் 90ஐ கூட எட்டலாம் என்பது தான் நிபுணர் கள் கருத்து. ஆனால், சிகரெட் பிடிப்பவர்கள் சிலர் "பேலன்ஸ்'ஆக இருந்து 90ஐ கடந்தவர்களும் உள்ளனர் என்பது மறுக்க முடியாது.

வங்கிப் பணியில் சாதனை புரிந்த டி.எஸ்.நாராயணசுவாமி! (கட்டுரை)

ஜூலை 19, 1969ல், 14 பெரிய வங்கிகளை, தேசிய மயமாக்கினார், அப்போதைய பிரதமர் இந்திரா. அந்த எண்ணிக்கை இப்போது 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில், இதுவரை யாரும் செய்யாத சாதனையை, டி.எஸ்.நாராயணசுவாமி செய்திருக்கிறார். மூன்று பெரிய வங்கிகளுக்கு, சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை வகித்து, வங்கிகளை திறம்பட நடத்தி இருக்கிறார்.
கடந்த 2000 முதல், ஏப்ரல் 2004 வரை, பஞ்சாப் நேஷனல் வங்கியின் எக்சிக்யூட்டிவ் டைரக்டராக, வங்கியில், இரண்டாவது முக்கிய பதவியை வகித்திருக்கிறார்; 2004 ஏப்ரல் முதல், 2005 மே வரை, ஆந்திரா வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2005 முதல், மே 2007 வரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2007 முதல், மே 2009 வரை, பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
மூன்று வங்கிகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று, சிறப்பாக செயல்பட்ட முதல் இந்தியர், டி.எஸ்.நாராயணசுவாமி மட்டும் தான். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது, புதியதாக ஆரம்பிக்கப்பட்ட, “யுனைட்டெட் ஸ்டாக் எக்ஸ்சேஞ்’ தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இவரது விசேஷ பேட்டி…

வங்கிகளின் எக்சிக்யூடிவ் டைரக்டர், சேர்மன் ஆகிய பதவிகளுக்கு எப்படி தேர்வு செய்கின்றனர்?
அடுத்த ஆண்டு அல்லது 18 மாதங்களில், 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், எக்சிக்யூடிவ் டைரக்டர்கள், எவ்வளவு பேர் ஓய்வு பெறுகின்றனர், எவ்வளவு பதவி நிரப்பப்பட வேண்டும் என்று முதலில் தகவல் சேகரித்து, எண்ணிக்கையை முடிவு செய்கின்றனர். ஜெனரல் மேனேஜராக, குறைந்தபட்சம், இரண்டு வருட அனுபவம் பெற்றவராக, ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருட சர்வீஸ் மீதம் இருப்பவர்களை தேர்வுக்கு அழைக்கின்றனர்.
எவ்வளவு பதவிகள் காலியாக போகின்றன என்பதை பொறுத்து, மேலே சொன்ன அடிப்படை விதிகள், வருடங்களைப் பொறுத்தவரை மாறுபடலாம்.
இந்த தேர்வை, “இன்டர்வியூ’ என்று இல்லாமல், “இன்டர் ஆக்ஷன்’ – கலந்து பேசுதல் என்றே அழைக்கின்றனர். மத்திய அரசின் வங்கித் துறை, அடிஷனல் செகரட்டரி, நிதி இலாகாவின் காரியதரிசி, ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்ற அமைப்புகளிலிருந்து, இரு நிபுணர்கள் அடங்கிய ஐவர் குழு, இன்டர் ஆக்ஷன் நடத்துகிறது. குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் திறமையாக செயல்பட்ட எக்சிக்யூடிவ் டைரக்டர்களிலிருந்து, வங்கி சேர்மன் பதவியை நிரப்ப, இதே முறையில் தேர்ந்தெடுத்து, பதவி உயர்வு அளிக்கின்றனர்.
மேலே குறிப்பிட்டவை, 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பொருந்தும்; பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதை சார்ந்த வங்கிகளுக்கு (ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், திருவாங்கூர் போன்ற வங்கிகள்) பொருந்தாது; அவற்றுக்கு வேறு அமைப்பு.

தேசிய மயமாக்கப்பட்ட மூன்று வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்த அனுபவம் பற்றி?
மூன்று, பெரிய, புகழ்பெற்ற வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்தது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. எக்சிக்யூட்டிவ் டைரக்டராக பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட நான்கு மாறுபட்ட கலாசாரம், பணி சூழ்நிலை, உடன் பணிபுரிந்த நிபுணர்கள், வங்கிகளின் கிளைகள் அமைந்திருந்த வேறுபட்ட மாநிலங்களில் பணியாற்றியது, எனக்கு கிடைத்த சவாலாக கருதுகிறேன்.
இந்த வங்கிகளின் சேர்மன் பதவிகள் நிரப்பப்பட வேண்டிய நேரங்கள், எனக்கு சாதகமாக அமைந்துவிட்டன.
ஏற்கனவே எனக்கு கிடைத்துள்ள அனுபவத்தில், சமுதாயத்தில், பலதரப்பட்ட மக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர் என்று அனைவரோடும், சுலபமாக பழக முடிந்தது. இந்த பெரும் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் அறிந்து கொண்டதில், எனக்கு பெரு மகிழ்ச்சி.

வெளிநாடுகளில் இயங்கும் நமது வங்கிகளின் கிளைகளையும், அந்தந்த நாடுகளின் வங்கிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், உங்கள் கருத்து?
பாங்க் ஆப் இந்தியாவிற்கு, 25 கிளைகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. லண்டன் கிளை, 60 வருடமாக இயங்குகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், சிங்கப்பூர் போன்ற இடங்களில், 60 ஆண்டுகளாக கிளைகள் இயங்குகின்றன.
வெளிநாடுகளில் இயங்கும் இந்திய வங்கிகளின் கிளைகளுக்கு, அதிகமான வாடிக்கையாளர்கள், அங்கு வசிக்கும் இந்தியர்களும், அங்கு இயங்கும் இந்திய வியாபார, தொழில் நிறுவனங்கள் தான். 99 சதவீதம் இப்படித்தான். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெகு குறைவு.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி போல, அந்தந்த நாடுகளில் இயங்கும் ரெகுலேட்டர்களின் விதிமுறைகளை, நமது வங்கிகள் பின்பற்றி நடக்க வேண்டும்; அப்படித்தான் செயல்படுகின்றன. திடீர் அவசரம் என்றால், இந்திய வங்கிகள், வேண்டிய உதவிகளை தங்களுக்குள் செய்து கொள்கின்றன. அவர்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது.
நமது வங்கிகளின் மொத்த வால்யூம், அதாவது, வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் டிபாசிட்டுகள், பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்கள், வெளிநாட்டு வங்கிகளின் வால்யூமை விட ரொம்ப குறைவு.

வங்கிப் பணியில் உங்கள் சாதனைகளாக கருதுவது…
என் தனிப்பட்ட சாதனை என்பதைவிட, நான் தலைவராக செயல்பட்ட வங்கிகளின் சாதனைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…
ஏப்ரல் 2004லிருந்து, மே 2005 வரையான ஒரு ஆண்டின் ஆந்திரா வங்கியின் பிசினஸ், 36 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 45 ஆயிரம் கோடியாக வளர்ந்தது. ஜூன் 2005லிருந்து, மே 2007 வரையான இரு ஆண்டிற்கான ஐ.ஒ.பி.,யின் பிசினஸ் 65 சதவீதம் உயர்ந்தது. 2006 – 07 ஒரு ஆண்டில், ஐ.ஒ.பி.,யில் ரிகார்டு லாபமாக ஆயிரம் கோடியை தாண்டியது. லாபம் 1008 கோடி ரூபாய்.
மேலும், கே.பி.எம்.ஜி., என்ற ஆடிட்டிங் நிறுவனமும், எர்னஸ்ட் அண்டு யங் என்ற ஆடிட்டிங் நிறுவனமும் எடுத்த தனித்தனி சர்வேயில், 2006 – 07 ஆண்டில் சிறப்பாக இயங்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்று அறிவித்திருக்கிறது.
கடந்த 2008 – 09 நிதி ஆண்டில், பாங்க் ஆப் இந்தியாவின் லாபம், 3007 கோடி ரூபாயாக உயர்ந்தது. (2007 – 08 ஆண்டின் லாபம் 2009 கோடி ரூபாய்).
இதுவரை இந்தியாவில், வேறு எந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும் செய்யாத மற்றொரு சாதனையை, பாங்க் ஆப் இந்தியா செய்திருக்கிறது. மத்திய அரசு அனுமதியோடு, பதினைந்தே நாட்களில், 1400 கோடி ரூபாய், பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றோம். 10 ரூபாய் பேஸ் வேல்யூ உள்ள பங்கை, 360 ரூபாய்க்கு விற்று, வங்கியின் மூலதனத்தை உயர்த்தினோம்.
பொதுமக்களிடம் பங்குகள் விற்காமல், எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் நிறுவனங்கள், யூனிட்டிரஸ்ட் ஆப் இந்தியா போன்ற சில முக்கிய நிறுவனங்களுக்கு மட்டும் விற்பனை. என்.டி.டி.வி., பிசினஸ் வேர்ல்டு போன்ற ஊடகங்களால், 2007 – 08 ஆண்டில், சிறப்பாக செயல்படும் வங்கியாக, பாங்க் ஆப் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
எந்த விஷயத்திலும், தாமதம் செய்யாமல் முடிவுகள் எடுக்கும் பழக்கம், தேவையான அதிகாரத்தை, செயல்படும் சுதந்திரத்தை தகுதியானவர்களுக்கு அளிப்பது, வங்கிக்கு பொது மக்களிடையே போதுமான விளம்பரம் பெறுதல், அரசு தொழில் துறை, நிர்வாகம், வியாபாரம் என்று பல துறைகளிலும் தேவையான வியாபார தொடர்பை உருவாக்குவது, பப்ளிக் ரிலேஷன்ஸ், வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் போன்ற என் கொள்கைகளும், பணியில் வெற்றி பெற உறுதுணையாக, உதவியாக இருந்தன; இவை எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.

வங்கி செயல்பாடுகளில் அதிகமான விஷயங்கள், அரசு விதிகளின்படி நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, உங்களுக்கு சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு உள்ளதா?
இந்திய பொருளாதார வளர்ச்சியில், வங்கிகள் பெரும் பங்கு வகிப்பதால், நாட்டின் பொருளாதார நன்மை கருதி, ரிசர்வ் வங்கி, சில, “கெய்ட்லைன்ஸ்’களை பின்பற்றுமாறு வங்கிகளுக்கு வகை செய்கிறது. வங்கிகள், பொது மக்களின் பணத்தை பெற்று, அவற்றை, தேவைப்படும் பிரிவினருக்கு கடனாக கொடுத்து வருகிறது. பொதுமக்களின் பணம் பத்திரமாக இருப்பதற்கும், அவர்களுக்கு அதனால் பலன் கிட்டுவதற்கும் இந்த விதிமுறைகள் அவசியம்.
வங்கி சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, இப்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மத்திய அரசு வைத்திருக்கும் 51 சதவீத பங்குகளை மேலும் குறைத்து, 39 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு வரை, உலகில் சிறந்த ரெகுலேட்டராக, அமெரிக்காவில் இருந்த சிஸ்டம் கருதப்பட்டது. சில அமெரிக்க வங்கிகளின் தடுமாறும் நிலைமையை அடுத்து, வங்கிகளை வழிநடத்தும் ரெகுலேட்டர்களில், நமது வங்கித்துறை, வலுவானதாக கருதப்படுகிறது.

இந்தியாவில், வங்கிகளின் எதிர்காலம் பற்றி…
நமது நாட்டில், வங்கிகளுக்கு, வங்கித்துறைக்கு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், வியக்கத்தக்க அளவு நமது வங்கிகள் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. வராத கடன் என்ற அளவு கோல், 15 சதவீதத்திலிருந்து ஒன்றரை சதவீதமாக குறைந்திருப்பது, மற்றொரு சாதகமான விஷயம். இது போன்று பல முக்கிய விகிதங்கள், இப்போது சாதகமாகவே உள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது, ஒரு ஆரம்ப கட்டம். மேலும், சில வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து செய்யப்படும் மேற்பார்வை, வங்கித்துறையை தொடர்ந்து கவனித்து, வங்கித் துறைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெகுலேட்டரின் வழிகாட்டுதல், நமது வங்கித் துறை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக, இன்றியமையாததாக உள்ளது.)

நல்லதையே எண்ணுவோம்! (ஆன்மிகம்)


நவ., 2 – சிவாலய அன்னாபிஷேகம்!

பால், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு என பல பொருட்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வர்; ஆனால், ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவன் கோவில்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு சாதத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.
மற்ற பொருட்களை விட நம் அன்றாட வாழ்வில் சாதம் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் சாப்பிடும் போது, “சாதம்’ என்று பெயர் பெறும் இப்பொருள், இறைவனுக்கு படைக்கப்பட்டால், பிரசாதம் ஆகிறது. “ப்ர’ என்ற சொல்லுக்கு, கடவுளுடன் சம்பந்தமுள்ளது’ என்று பொருள்.
அரண்மனைக்கு வந்தார் ஒரு மகான். அவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான் ராஜா. குருவும் சாப்பிட்டார். ஒரு அறையில் ஓய்வெடுக்கச் சென்றார். அங்கே ஒரு முத்துமாலை தொங்கியது. என்ன காரணத்தாலோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுமென மகானுக்கு தோன்றியது.
சந்நியாசத்துக்கு முற்றிலும் மாறாக அதை ஒளித்து வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். மறுநாள் முத்துமாலை காணாமல் போனது தெரிய வந்தது. மகானை யாருமே திருடன் என சந்தேகப்படக் கூட இல்லை. மற்றவர்களிடம் கடும் விசாரணை நடந்தது. அடித்தும் பார்த்தனர்; எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
ஆசிரமத்துக்குப் போன மகானின் மனம் சங்கடப்பட்டது. “இப்படி திருடிவிட்டோமே, அப்பாவிகள் அடிபடுவரே…’ என வருந்தினார். சற்றுநேரத்தில், அவருக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விட்டது. ஐந்தாறு முறை போனதில் மிகவும் சோர்ந்து போனார். அதன் பின், ராஜாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி, தண்டனை தரும்படி கேட்டார்; ஆனால், ராஜா நம்பவில்லை.

“யாரோ ஒரு திருடனைக் காப்பாற்ற, நீங்கள், உங்கள் மீது பழிபோட்டுக் கொள்கிறீர்கள்…’ என்று சொல்லி, அவரைத் தண்டிக்க மறுத்து விட்டான். திரும்பத்திரும்ப தன் நிலையை மகான் சொல்லவே, ஒரு வழியாக நம்பிய ராஜா, “எதற்காக இந்த திருட்டு புத்தி இவருக்கு வந்தது?’ என ஆராய்ந்தான்.
அரண்மனையில் விசாரித்த போது, சில திருடர்கள் கடத்திச் சென்ற அரிசியை அரண்மனைக் களஞ்சியத்தில் வைத்திருந்ததும், அதைக் கொண்டு சமையல் செய்து மகானுக்கு உணவளித்ததால், இத்தகைய மனநிலை அவருக்கு ஏற்பட்டது என்பதும் தெரிய வந்தது. எனவே, உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, சிவபெருமானுக்கு மிக முக்கியமான அன்னத்தால் மதிய நேரத்தில் அபிஷேகம் செய்வர். வெள்ளை சாதம் சமைத்து சிவலிங்கத்தை மூடுமளவு செய்து விடுவர். பின்னர் இதனுடன் கறிவகைகள் சேர்த்து பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப் பர்.
இவ்வாண்டு அன்னாபிஷேக நாளில், சமையல் செய்யும் போதும், விவசாயம் செய்யும் போதும் நல்ல எண்ணங்களை மனதில் எண்ணியபடியே பணியில் ஈடுபட வேண்டும் என்பதைக் கடைபிடிப்போம். நல்ல சிந்தனையுடன் சமைக்கப்படும் உணவு நம் உடலுக்கு சிறந்த மருந்தாக அமையும்.

கிருஷ்ணர் அளித்த வரம்! (ஆன்மிகம்)

வாழ்நாளில் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும்; பாவத்தை தேடிக் கொள்ளக் கூடாது. மகான்களையோ, பெரியோரையோ நிந்திப்பது, தூஷிப்பது பாவத்தை சேர்க்கும்; அதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும். இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கும் பொருந்தும்.
பலராமன் மற்றும் கிருஷ்ணருக்கு முன் பிறந்த தேவகியின் ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். இந்த ஆறு குழந்தைகளை அவன் கொன்றதற்கு ஒரு கதை உண்டு…
மரீசியென்ற பிரஜாபதிக்கு ஆறு புத்திரர்கள் இருந்தனர். ஒருமுறை, பிரம்ம தேவரை, மரீசியின் புதல்வர்கள் பரிகாசம் செய்தனர். இந்த பாவத்தால், இவர்கள், பூமியில் அசுர குலத்தில் பிறந்து, பல ஜென்மங்களுக்குப் பின் தேவகியின் வயிற்றில் பிறந்து அசுரனால் கொல்லப்பட்டு, கிருஷ்ணனுடைய அநுக்ரகத்தால் சாபவிமோசனம் பெற்று நற்கதியடைவர் என்று சபிக்கப்பட்டனர்.
இந்த ஆறு குழந்தைகளின் பெயர்கள், ஸ்மரன், உத்கீதன், பரிஷ்வங்கன், பதங்கன், ஷ�த்ரபூ, கிருணி. பிறந்ததுமே கம்சனால் இந்த குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டன.
ஒருசமயம், தன் தாயார் தேவகியிடம் கிருஷ்ணன் பேசிக் கொண்டிருக்கும் போது, “அம்மா! உனக்கு என்ன வேண்டும், கேள்!’ என்றார். தேவகிக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது. அதனால், “கிருஷ்ணா! உனக்கு முன் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்று விட்டான்; அந்த குழந்தைகளை நீ மறுபடியும் இங்கு கொண்டு வர வேண்டும்!’ என்றாள். கிருஷ்ணனும், மாதாவின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக, பாதாள லோகம் சென்று, பலிசக்ரவர்த்தியை சந்தித்தார். கிருஷ்ணனை வரவேற்று உபசரித்து, கிருஷ்ணன் வந்த காரணத்தை கேட்டார்.
கிருஷ்ணன் காரணத்தை சொல்ல, அந்த ஆறு குழந்தைகளையும் அவரிடம் ஒப்படைத்து வழியனுப்பி வைத்தார் பலி சக்கரவர்த்தி.
அந்த குழந்தைகளை தேவகியிடம் ஒப்படைத்தார் கிருஷ்ணன். குழந்தைகளைக் கண்ட தேவகி, தாய்ப்பாசம் பொங்க குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள். உடன் தாய்ப்பால் பெருகியது. குழந்தைகளும் தாய்ப்பாலை பருகின.
இதில் ஒரு விசேஷம் உள்ளது. ஏற்கனவே தேவகியிடம் தாய்ப்பால் குடித்துள்ளான் கிருஷ்ணன். அதில் மிகுந்தது தான் இந்த ஆறு பேரும் பருகிய பால். அதனால், கிருஷ்ணன் சாப்பிட்ட மிச்சம் பிரசாதமாகி விட்டது.

பிரசாதத்தை ஆறு குழந்தைகளும் சாப்பிட்டதும் சாபவிமோசனம் பெற்று, நாம் தேவ சாபத்தால் பூமியில் பிறந்தோம் என்ற ஞானம் ஏற்பட்டு, கிருஷ்ணன், பலராமன், தேவகி ஆகியோரை நமஸ்காரம் செய்து, தங்கள் இருப்பிடமான தேவலோகம் சென்றனர். இதையெல்லாம் பார்த்த தேவகி, எல்லாம் கிருஷ்ணனுடைய மாயலீலை என்று தெரிந்து பெருமைப்பட்டாள்.
இதிலிருந்து, பெரியோரையும், மகான்களையும் பரிகாசம் செய்தால், அதனால் கிடைக்கும் தண்டனையை தெரிந்து கொள்ளலாம்; அதோடு, தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு, மிகுதியான பிரசாதத்தை உண்பதால், சகல பாப, சாபங்கள் நிவர்த்தியாகிறது என்பதையும் அறியலாம்.

அகத்திக் கீரை

அகத்திக் கீரை

செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.

பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.

சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

பிரசவ கால ஆலோசனைகள்


சிருஷ்டிப் புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிறாள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத்துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனால் பெண் தாய்மைப்பேற்றை அடையும் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்றாள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கு ஒரு விளக்கம் கிடைத்து விடுகின்றது! ஆம்; குழந்தைகள் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அந்த ஆத்மானை அருளுகிற & அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி & ஒரு தவம்!

உண்மைதான்; தாய் தவம் இருந்து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மழலை உலகின் ஜனத் தொகையில் ஓர் அங்கம் வகிக்கத் தொடங்குகிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக்காத்திருக்கின்றது! வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாகவும் இயங்கத் தொடங்கி விடுகின்றது!

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே!” என்று சொல்லப்படுவது உண்டல்லவா! & இம்மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண்டாடப்படும்போது தான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம் பெறுகின்றன! கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான். குழந்தையின் நிலையும் அமைகிறது.

இத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணாமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது; தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல & அமைந்து விடுகிற & அந்தத் தாயைப் போற்றுகிறோம்; அத்தெய்வத்தின் பொறுமைக்கு & தர்மத்துக்கு & சகிப்புத்தன்மைக்கு & அன்புக்கு & அருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும்.

வாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச்சட்டம் ஆட்சி செலுத்துகிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக்கொடுக்கும் உரிமை, ஆண் & பெண் எனும் மகத்தான மெய்ப்பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக & இயங்கும் அல்லது இயக்கப்படும் பிண்டங்களாக விளையாடும் அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண் & பெண் என்கிற தூண்டுதலின் கூட்டுறவு தான் வாழ்வு; அதுவேதான் அவனி.

மெய்தான் : புவனமே சக்தி சிவம் வடிவமானது என்று சைவ ஆகமங்கள் சொல்லவில்லையா? ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வரம்புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக் கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.

பட்டினத்தடிகள் அழகு கனிந்த ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்:

ஆண்&பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்ந்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளிர்கின்றது.

“காதல் செய்வது, தூய்மையுடன் காதலனும், காதலியும் இருப்பது ஆகிய இவ்விரு கடமைகளும் என்றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற&காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற ஓர் அறவழிப் பண்பாடாகும்!

இவ்விதச் சிந்தனையையும் இதோ ஒலிக்க விருக்கிற அடிகளாரின் குரலையும், விஞ்ஞான ரீதியில் ஒன்றாக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண், பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங்களின் புதிர்களும் அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு புலனாக முடியும்.”

இயற்கையின் இயல்பான, தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண்-, பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு ‘திருமணம்’ என்கிற சடங்கும் ‘முதல் இரவு’ என்கிற விழாவும் இன்றியமையாத பாதுகாப்பாக இனிமை கொண்ட எச்சரிக்கையாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஓர் அற்புதமாகத் திகழ்கிறாள் ‘தாய்’ என்னும் மகாசக்தி. அந்த மகாசக்தி பெற்றெடுக்கும் மகத்தான அற்புதமாகவே ‘குழந்தை’ எனும் ‘புதுமை’ பொலிகிறது!

“குழந்தை என்று சொல்லக்கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உலகம் என்ற ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும்.” என்று மொழிந்த ஆசிய ஜோதியான நேருஜியின் சொற்களை நாம் எப்போதுமே மறந்து விட முடியாது. ‘இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்!’ என்று இளைய பாரதத்தினோர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிருக்கும் உடைத்தானது குழந்தை உலகம்.

இந்த இருபதாம் நூற்றாண்டை ‘குழந்தைகளின் நூற்றாண்டு’ எனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் கே அவர்கள்.

‘குழந்தை’ என்கிற ஒரு தவத்தை ஓர் அன்பை ஒரு மந்திரத்தை ஓர் அற்புதத்தை, ‘பிள்ளைக்கனியமுது’ எனவும் ‘பேசும் பொற் சித்திரம்’ என்றும் ‘ஆடிவரும் தேன்’ எனவும் போற்றிப் புகழ்ந்திடும் தண்ணளியும், மோன புளகிதமும் பாரதி ஒருவனுக்கே சொந்தம்.

இந்த மகோன்னத நிலைக்கு ஆதாரமாக விளங்கும் ‘தாய்’ தன்னுடைய பேறுகாலக் கண்டங்களைத் தாண்டி குழந்தையைப் பெற்றெடுத்த, ‘புனர்ஜன்மம்’ பெறுவதற்குள், அவள் முன்னே தலைவிரித்தாடும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? அவள் கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரையிலும் அவள் கண்காணித்துப் பேண வேண்டிய குறிப்புரைகள் ஒன்றல்ல&இரண்டல்லவே!

‘விதி’ யின் முன் பணயம் வைத்து, பெண் என்பவள் தாயாக உயர்ந்து ஒரு சமூக அந்தஸ்தைப் பெறும் ஓர் அதிர்ஷ்டவசமான நல்வாய்ப்புக்கு முதற்காரணமாகிறது குழந்தை. இக்குழந்தையின் மூலமாக ஆணும், பெண்ணும், தந்தையும் தாயும் ஆகி, ஒரு சமுதாய மதிப்புப் பெறும் பாக்கியத்தையும் அடைகின்றனர்.

‘கருத்தரிப்பு’ என்பது எவ்வாறு தெய்வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு ‘பிரசவம்’ என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய மனநிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்யணிக்கலாம்.

பிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை. ஒரு நிகழ்ச்சி. ஒரு விடிபொழுது!

மணத்தக்காளி-வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

மணத்தக்காளி

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.