Daily Archives: நவம்பர் 4th, 2009

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்


உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1.கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.

இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.

ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் தனது ஆய்வின் முலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.

சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?

பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.

சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.

காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.

மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.

இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.

கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.

எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம்


மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்புடன் இணைந்து தரப்படும் எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தும் புரோகிராம் ஆகும். நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.  எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >> All Programs > Accessories > Paint  எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View  மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதான் எனப்பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரியவேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா?  Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம். இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக் காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா?

Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப்படாதீர்கள். செய்து பாருங்கள்.
படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப் படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.
ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம். மீசை வைக்கலாம். இது போல வேடிக்கையான செயல்களையும் சீரியஸான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open ன்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீதுகிளிக் செய்து இங்கு திறக்கலாம். ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன்படுத்தலாம். Image  மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி படங்களைச் சுழட்டலாம்.
உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா?  சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP, .JPEG,  அல்லது GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.

நோய் நாடி

நோய் நாடி

இயற்கை மருத்துவ தத்துவம், ‘நோய் ஒன்றே, பல அல்ல’ எனக் கூறி வருகின்றது. ஆனால் பிற மருத்துவங்கள் அனைத்தும் உடலின் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களை, குறிப்பிட்ட உறுப்பின் பெயரால் அழைத்து பல்வேறு நோய்களாகப் பிரிக்கின்றன.

எடுத்துக் காட்டாக கண்ணில் நோய் வந்தால் கண் நோய், பல்லில் ஏற்பட்டால் பல் நோய், செவியில் தோன்றினால் செவி நோய், இது போன்று தலை நோய், முக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், முல நோய் மற்றும் பல்வேறு பெயர்களில் நோய்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

அவ்வாறு பல்வேறு நோய்களுக்கேற்ப பல்வேறு வில்லைகள், ஊசிகள், மருந்துகள், முலிகைகள் என பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கேற்ப நடைமுறையில் உள்ளன.

ஆனால் உண்மை என்னவெனில், தவறான உணவுகள் உண்பதால் உடலில் அழுக்குகள் நிறைய சேர்ந்து எந்த உறுப்பு பலவீனமாக உள்ளதோ அவ்வுறுப்பில் படிந்து, அவ்வுறுப்பைத் தாக்கி, நோய் எனும் பெயரில் அவ்வுறுப்பில் பழுது ஏற்படச் செய்து தவறாக உடல் இயங்குகிறது. சரியான உணவுகள் உண்பதால் உடல் உறுப்புகள் சரியாகச் செயல்பட்டு, உடல் சரியாக இயங்குகிறது.

எடுத்துக் காட்டாக, இயற்கைக்கு மாறாக நெருப்பில் சமைத்த உணவுகள் அனைத்தும் தவறான உணவுகள், அழுக்குள்ள உணவுகள். எனவே சமைத்துண்ணும் பழக்கமுடைய மனிதனின் சிறுநீர், மலம், வேர்வை, உடல் அனைத்தும் அழுக்குள்ள உணவுகளை உண்பதால், துர் நாற்றம் வீசக் கூடிய இயல்புடையதாகி விட்டன. இயற்கைக்கு மாறுபாடில்லாத சமைக்காத பச்சையான இயற்கையுணவுகள் சரியான உணவுகள், தூய்மையுள்ள உணவுகள்.

எனவே பச்சையாகத் தின்னும் பறவைகள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களின் சிறுநீர், மலம் துர்நாற்றமில்லை.

பசுமாட்டின் சாணம் கொண்டு பிள்ளையார் பிடிப்பதும், பசுமாட்டின் சிறுநீர் மதச் சடங்குகளின்போது புனிதம் கருதி வீடுகளில் தெளிக்கப்படுவதும் நம் நாட்டில் பழக்கமாக உள்ளது.

பறவைகள், விலங்குகள் எவ்வளவு தூரம் பறந்து அலைந்தாலும், நடந்து ஓடினாலும் அவைகளின் உடலில் வேர்வையே ஏற்படுவதில்லை. மனிதனின் உடலில் மட்டும் சொல்லவொண்ணாத வேர்வை கொட்டி ஊற்றுப் பெருக்கெடுத்து துர்மணம் வீசுகிறது. எனவே இத்தகைய இயற்கை அடிப்படைகளே சமைத்த உணவுகள் அனைத்தும் சரியில்லாத தவறான அழுக்கு உணவுகள் என்றும், சமைக்காத பச்சையான இயற்கையுணவுகள் அனைத்தும் சரியான தூய்மையான உணவுகள் என்றும் நி ருபிக்கின்றன.

தவறான அழுக்குள்ள சமைத்த உணவுகளால்தான் மனிதனுக்கு அனைத்து உடல், உள நோய்களும் ஏற்படுகின்றன. அழுக்கு உணவுகளை உண்பதால்தான் மனிதனின் முளையிலும் அழுக்குகள் நிறையப் படிந்து மனிதனை கற்பழிப்பு, கொலை, கொள்ளை, பகை, லோபம், வெறி முதலிய தீய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.

உதாரணமாக பரம்பரையாக சைவ உணவு உண்பவர்களை விட, அசைவ உணவு உண்பவர்களே குற்றவியல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது புள்ளியில் துறை கூறுவதோடு மட்டுமல்லாமல் நாம் சிந்தித்துப் பார்த்தாலும் புலப்படும். எனவே இவ்வுலகில் மதம், இனம், மொழி, நாடு, வெறி சச்சரவுகள், மற்றும் கற்பழிப்பு, கொலை, கொள்ளை முதலிய தீய நிகழ்ச்சிகள் நிகழா வண்ணம் செய்யவும், அமைதி ஏற்படுத்தவும் மனிதனை அசைவ உணவை விடுத்து குறைந்த பட்சம் சைவ உணவிற்காவது மாற்ற முயலுதல் வேண்டும். சமைத்த சைவ உணவிலிருந்து சமைக்காத கனிகள், காய்கள் முதலிய இயற்கையுணவிற்கு மாற்ற முயலுதலே அறிஞர்கள், ஆட்சியாளர்கள், வல்லுனர்கள் ஆகியோரின் தலையாய இன்றியமையாத உயரிய பணியாகும்.

சரியான சமைக்காத பச்சையான தூய இயற்கையுணவுகள் உண்ணும் பறவைகள், விலங்குகளுக்குக் கண் நோய், பல் நோய், செவி நோய், தலை நோய், முக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், முல நோய், மற்றும் மனிதனுக்கு ஏற்படக் கூடிய இதர தொழு நோய், புற்று நோய், வாதம், எய்ட்ஸ் முதலிய எத்தகைறய நோயுமில்லை.

தவறான சமைத்த அழுக்கு உணவுகளை உண்ணும் மனிதனுக்கு மட்டும்தான் அத்தனை நோய்களும். இயற்கை உணவு உண்டு வந்தால் மனிதனுக்கு ஏற்படுகின்ற நோயை, எந்நோய் என எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் இதர மருத்துவப் பரிசோதனைகள் செய்து நோய் நாட வேண்டிய அவசியமில்லை என இயற்கை விதி நமக்கு நன்கு போதிக்கின்றது. எந்நோய் என நோய் நாடுவது பொருளாதார விரயம், கால விரயம், சக்தி விரயம் மற்றும் பல விரயங்களை ஏற்படுத்துகின்றது என்பதும் தெள்ளத் தெளிவாகின்றது.

மேலும் நோய் நாட ஆய்வு செய்யும் கருவிகள் முலம் நமது உடலினுள் செலுத்தப்படும் செயற்கைக் கதிர்கள், நமது உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகளைத் தாக்கி பாதிக்கச் செய்கிறது. எனவே நோய் நாடுவதை இத்துடன் நிறுத்தி, இனி நோய் முதல் நாடுவோம்.