தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்


தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் முதலியன, தவறாமல் நம் உணவில் இடம்பெற வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை.

நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகிவிடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோயும் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கொரேனெரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரு ட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டாவதாக இடம் பெறட்டும்.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்த தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல் படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

பலமான விருந்தின்போது கேக், மட்டன் முலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும்.

இந்த வகையில் தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவதும் நல்லதாக அமைகிறது.

%d bloggers like this: