Daily Archives: நவம்பர் 7th, 2009

பெண்களை குறிவைக்கும் குடல் உளைச்சல்

எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். காலையில் பால் பாக்கெட் வராததில் தொடங்கும் டென்ஷன் திடீரென வேலைக்காரி லீவு போடுவது, குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருபது என இப்படியே தொடர்கிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம். இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களைம் இது அதிகம் பாதிக்கிறது. அறிகுறிகள்: வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாபிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும். அடிவயிற்றில் வலி இருபதால் பலர் குடல்வால் நோய் என நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். ஆனால் அதன் பின்னரும் வலி இருக்கும். சிலர் அமீபா கிருமியின் தாக்குதல் என நினைத்து அதற்கு மருந்து சாப்பிடுவார்கள். ஆனாலும் வலி தீராது. எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

வழி நடத்தும் நன்னடத்தை!

இளைஞர்களே, நீங்களும் நிர்வாகி ஆகலாம். அதற்கான நிர்வாக மேலாண்மைத் திறன்களை உங்களில் ஏற்படுத்திக் கொள்ள தேவையான பயனுள்ள தகவல்களை இந்த பகுதியில் அளித்து வருகிறோம்.

நிர்வாகி என்பவர் தானும் உழைத்து, பணியாளர்களையும் வழிநடத்துபவராக இருக்க வேண்டும் என்பதை கடந்த வாரம் விளக்கி இருந்தோம். இந்த வாரம் நடத்தை பற்றிய பண்புகளை அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான நிர்வாகங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும்போது மதிப்பெண் சான்றிதழையே பெரிதும் கவனிக்கிறார்கள். அது அவர்களைப் பற்றிய எல்லா விஷயங்
களையும் தெரிவிக்கும் என்று சொல்ல முடியாது. மதிப்பெண் சான்றிதழானது அவர்களின் நினைவுத்திறனையோ அல்லது கவனிக்கும் திறனையோ மதிப்பிடுவதாகக் கொள்ளலாம். அதுவும் அவர் அந்தக் காலக்கட்டத்தில் இருந்த நிலைக்கு ஏற்ப எடுத்த மதிப்பெண்களே தவிர வாழ்க்கை முழுவதற்குமான மதிப்பீடு என்ற கோணத்தில் கருத்தில் கொள்ள முடியாது.

சான்றிதழுடன் இணைத்து நடத்தைக்கான (காண்டாக்ட் சர்ட்டிபிகேட்) சான்றிதழும் கொடுக்கப்படும். இந்த சான்றி தழ்களிலும் மாணவர்கள் நலன்கருதி பெரும்பாலும் நேர்மறையான குறிப்புகளே இருக்கின்றன என்பது வெளிப்படை. ஆனால் அவரது நடத்தையே நமது நிர்வாகத்துக்கு அவசியமானது.

நடத்தையை சான்றிதழ்கள் மூலம் ஓரளவு அறிய முடியுமே தவிர முழுத் தெளிவைத் தந்துவிடாது. எனவே ஒருவரது பின்புலத்தை அறிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது நிர்வாகியின் கடமை.

இதற்காக தங்கள் சேவை சார்ந்த மற்ற நிறுவனங்களுடன் வைத்திருக்கும் தொடர்பைக் கொண்டு பணி தேடி வருபவரின் நடத்தையை அறிய முயற்சிக்கின்றன. அது சரியான வழிமுறைதான். இதைக்கூட சில நிறுவனங்கள் செய்வதில்லை. வருபவரின் வார்த்தைகளை மட்டும் நம்பி பணியில் சேர்த்துக் கொள்கின்றன.

ஒருவர் ஒரு பணி நிறுவனத்தில் ஓராண்டுக்கு மேல் நிலைத்து வேலை செய்ததே இல்லை. 6 ஆண்டுகளில் 6 நிறுவனத்துக்கு மாறியவர். புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் அவரை பல நிறுவனங்களில் அனுபவம் பெற்றவர் என்ற முறையில் முன்னுரிமை கொடுத்து எடுத்துக் கொண்டது. உயர்ந்த பதவி கொடுத்து கவனித்து வந்தது. புதிய நிறுவனம் என்பதால் போட்டிகளை சமாளிக்க பல யுக்திகளை கையாண்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அடுத்த வருடமோ அந்த நபர், நான் அங்கு உயரிய பொறுப்பை வகித்தேன், அதன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என்று கூறிக்கொண்டு போட்டியான மற்றொரு நிறுவனத்துக்கு மாறிவிட்டார். அந்த புதிய நிறுவனம் சற்று தடுமாறித்தான் போனது.

உரிய விவரங்களை சேகரிக்காமல் பணி அளித்துவிடுவது பின்னாளில் நிர்வாகத்துக்கு இதுபோன்ற இடைறுகளை ஏற்படுத்தலாம். எனவே நடத்தையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரின் நடத்தையை அவரது பாவனைகளை வைத்து ஓரளவு அறியலாம். அவர் உங்கள் முன் அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே கணிக்கலாம். சிலர் நமக்காக ஒரு மாதிரியும், தனியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், பழக்கம் உடையவர்கள் வட்டத்தில் ஒருவிதமாகவும் நடந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட பண்புடைய ஒருவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பது சிக்கலானது. எனவே ஆரம்பத்திலேயே அவரை கண்காணித்து அறிந்து கொள்ள வேண்டும்.

“ஒருவனைப் பற்றி அறிய வேண்டுமா? அவனிடத்தில் பொறுப்பை கொடுத்து பாருங்கள்” என்று கூறுவார்கள். இந்த விதத்தில் ஒரு பணியைக் கொடுத்தும் ஒருவரின் நடத்தை, செயல்படும் விதத்தை அறியலாம்.

ஒருவரின் கடந்த காலத்தை வைத்து எதிர்காலத்தை ஓரளவு கிக்க முடியும். அதன் அடிப்படையிலேயே ஒருவரின் நடத்தை பரிசோதிக்கப்படுகிறது. நமது சட்ட மேதை அம்பேத்கார், `வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது’ என்று கூறிஇருக்கிறார். நேருவோ, “கடந்த கால வரலாறைப் படிக்கும்போது நிகழ்காலம் புரிகிறது, எதிர்காலத்தையும் கணிக்க முடிகிறது” என்கிறார். இந்த உண்மை மொழிகளை நிர்வாகத்தோடும் பொருத்திப் பார்க்கலாம். அதாவது பணியாளர், போட்டியாளரின் வரலாறை (நடத்தை, கடந்தகாலத்தை) அறிவதன் மூலம் நமது நிர்வாகத்தை திறம்பட செய்ய முடியும்.

இப்படி பண்புகளைக் கொண்டு தேர்வு செய்யும்போது சில பிரச்சினைகள் வரலாம். அதாவது அவரின் நடத்தை உங்கள் விருப்பப்படி அமைந்திருந்தும், நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றாலும் பணியில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் தனி மனிதர்கள் சூழலின் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடியவர்கள்
தான்.

ஆகவே கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, நம்பகத்தன்மை இவற்றை எதிர்பார்த்து ஒருவரை தேர்வு செய்வதால் மட்டும் சிறந்த பணியாளராகவோ, நிர்வாகியாகவோ செயல்பட மாட்டார். ஒருவரது நடத்தையை கண்காணித்து பொறுப்பு கொடுத்தால் அதை அவர் சரியாக செய்து முடிப்பார் என்பது கண்கூடு.

முல்லைப் பூவின் மருத்துவ குணம்!


முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

இலவச புரோகிராம்கள் நான்கு

இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது. இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.

1. பயர்பாக்ஸை வேகப்படுத்த:
யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும் , சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனை SpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக் கொண்டு வருகிறது. பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கிகளை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாகச் செயல்படுத்துகிறது. இதனை http://www.crystalidea.com/speedyfox என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

2. சிஸ்டத்திற்குள் சிஸ்டம்:
ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு சிஸ்டங்கள் இருந்தால், பூட் செய்கையில் எந்த சிஸ்டத்தில் நுழைய என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, நம் ஆப்ஷனைக் கேட்கும் ஒரு விண்டோ தரப்படும். ஐ ரிபூட் (iReboot) என்ற புரோகிராம் விண்டோஸ் தொடங்கிய பின்னரும் அதனுள்ளாக இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதற்கான ஆப்ஷனைத் தருகிறது. அப்படி ஆப்ஷன் தரும் சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. விண்டோஸ் இயங்கிய பின் இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. அதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்வு செய்திட ஆப்ஷன்ஸ் தருகிறது. இதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தேர்ந் தெடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் நுழைந்து கொள்கிறது. இதைப் போன்ற ஒரு வசதி, விண்டோஸ் 7 உட்பட, எந்த விண்டோஸ் சிஸ்டத்திலும் தரப்படவில்லை. இதனைப் பெற http://neosmart .net/dl.php?id=11 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

3. விண்டோஸ் நேரம்:
கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். “Work”, “School”, “Fun” எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினை http://code.google .com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.

4: ஈஸி பைல் லாக்கர் (Easy File Locker):

எத்தனையோ வாசகர்கள் அவர்களின் கடிதங்களில் பைல்களை எப்படி மற்றவர்கள் அணுகாமல் பாதுகாப்பது என்று கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நாமும் அவர்களுக்குப் பலமுறை பல வழிகளைச் சொல்லி வந்திருக்கிறோம். இந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது. அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெற http://www.xoslab.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?

மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அமெரிக்க இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் மனிதன் கடுமையாக உழைத்து நன்றாக தூங்குவது இயல்பான வாழக்கை . சிலர் தூங்குவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்படுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப்பதாக சொல்லி தங்களை தாங்களே சமரசம் செய்து கொள்வர். சிலர் தூக்கம் பெரிதல்ல உழைப்பே பெரிது என்ற இலட்சிய வாழ்க்கை வாழ்பவரும் உண்டு. பலவாறான தூக்கத்திற்கு பயன்கள் என்ன ? தீமைகள் என்ன ? இவ்வாறு தூக்கத்தின் சந்தேகங்கள் பலவாறு இருக்கிறது.

தூக்கம் குறித்து யாருக்கும் உறுதியான நிலை தெரிந்தபாடில்லை. இந்நிலையில் அனைவருக்கும் உதவும் வகையில் அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., இணையதளத்தில் பலரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலும் , டாக்டர்கள் கூறும் அறிவுரைகளையும் தொகுத்து தளத்தின் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

தூக்கத்திற்கென கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டுள்ள கிளினிக் சென்டர் கோ. ஆர்டினேட்டர் டாக்டர் . டேனியல் கிரிப்க் கூறுகையில் ; பலர் வீக்எண்ட் நாளில் அதிகம் தூங்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன்படி தூங்கி எழுந்தவர்கள் பலர் இன்று மிகவும் அசவுகரியமாக இருப்பதாக கூறுகின்றனர். நன்றாக இருந்தது என யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் டாக்டர்கள் பலர் மருத்துவ துறையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்த தூக்க பாதிப்பை யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு யாரும் முன்விழைவதில்லை. நீண்ட நேரம் தூங்குவதால் அவரது பழக்கவழக்கமே மாறிவிடுகிறது.நீண்ட தூக்கத்திற்கு பின்னர் எழுந்ததும் தூக்க நிலையே நீடிப்பதாக உணரப்படுகிறார்கள்.

சிக்காகோ நகர்ப்புற 25 வயது இளைஞர் ஒருவர் தூக்கம் குறித்து கூறுகையில் தான் சரியான அளவு தூங்கி எழுந்தால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறு, சுறுப்பாக இருக்கிறது. அதிகமாக தூங்கி எழுந்தால் அந்தநாள் முழுவதும் படு சோம்பேறியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பணியில் இருக்கும் போது டே லைட் சிஸ்டம் படி வரும்போது சிலர் கூடுதலாக தூங்க வேண்டியுள்ளது. இந்நேரத்தில் 5 முறை அலாரம் அடித்தாலும் எழுந்திருக்க முடியவில்லை என்கிறார் ஒரு அமெரிக்கவாசி. இதனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை. வார நாட்களில் 5 மணி நேரம் தூங்கி விட்டு வார இறுதி நாளில் 12 மணி நேரம் தூங்குவதாக சிலர் சொல்கின்றனர். இவ்வாறு 12 மணி நேரம் தூங்கியதால் நன்றாக இருந்தது என்று கூறமுடியாது என்கின்றனர் .

இது குறித்து இல்லினாய்ஸ் நகர டாக்டர் . லிசாஷிவ்ஸ் கூறுகையில்; அதாவது சிலர் தூக்க வியாதி (தூக்க போதை ) கொண்டவர்களாக இருக்கின்றனர். எந்த நேரமும் தூங்கி கொண்டே இருக்க விரும்புவர். விழித்திருந்தாலும் தூங்கும் மன நிலையில் இருப்பர். இது மிக மோசமானது எப்போது என்ன செய்வான் என்றே தெரியாது.

கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) : அளவுக்கதிகமான தூக்கம் உடல் நலத்திற்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். இது ஆயுள் நாளையும் குறைத்து விடும். இது குறித்து ஆய்வாளர் மைக்கேல் பிரேயூ கூறுகையில் ; சில ஆய்வுகள் மூலம் இதுதொடர்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . அதாவது நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்திற்குள்ளாவர். இதனையே பிரிட்டிஷ் ஆய்வும் தெரிவிக்கிறது. மற்றொரு ஆய்வில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ஏனையோரை தவிர கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு ஹைபர்சோமியா என்ற நோய் ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ்வதும், தூக்கம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

குறைவான தூக்கம் எப்படி இருக்கும்: ஒருவருக்கு குறைவான தூக்கம் இருந்திருந்தால் , தூக்கத்திற்கு பின்னரும் அவர்கள் களைப்பாகவே இருப்பர். எனவே மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர்களுக்குரிய தூக்கநேரத்தை சரியாக செலவழிக்க வேண்டும். குறைவான தூக்கம் குறித்து ஒருவர் கூறுகையில் குவானிட்டி ஆப் ஸ்லீப் , குவாலிட்டி ஆப் ஸ்லீப் என்கிறார். இதுதான் அழகான தூக்கம் என்கிறார்.

90 நிமிடம் தூங்கினால் அது ஒரு நல்ல தூக்க நிலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஓரு சைக்கிளாக எடுத்துக்கொள்ளப்படும் இதன்படி ஒரு மனிதர் 4 சைக்கிள் தூங்கினாலே போதுமானது. 360 நிமிடம் ( 6 மணி நேரம் ) மொத்தத்தில் 6 மணி நேரத்திற்கு குறைவில்லாமலும், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மரபு வழி பண்பியல் காரணமாகவும் இந்த பிரச்னை சிலருக்கு வரலாம். தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். அதிகம் தூங்காதே., குறைவாகவும் தூங்காதே ., தூங்கு ., உறக்கத்திற்கும் இருக்குது விதி

உடல் நலக் குறிப்புகள்

இவை எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறோம்.
தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள்.

தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள். இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது.

மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள்.

மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம்.

மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல வேண்டாம்.

சரியான தூங்கும் பழக்கம் இருப்பவர்களை முதுமை அண்டாது.

காலையில் நடை செல்ல முடியாதவர்களுக்கு மாலை 5 மணில் இருந்து 8 மணி வரை நடை செல்வதற்கு சிறந்த நேரமாகும்.

மின்னூட்டம் போட்டிருக்கும் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம். பொதுவாக செல்பேசியில் பேசுவதற்கு இடது பக்க காதைப் பயன்படுத்துங்கள்.

செல்பேசி காதுக் கருவியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு கொடுங்கள்.

உட்கார்ந்தே செய்யும் வேலையாக இருந்தாலும் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.

தொடர்ந்து கணினித் திரையை பார்த்தபடி இருப்பதும் கண்களின் தன்மையை பாதிக்கும். எனவே 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை மாற்றுங்கள்.

உண்ணாமல் இருப்பதையும், அதிகமாக உண்ணுவதையும் தவிருங்கள்.