செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்!


சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும். தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம்.

இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ராக்கெட்டுகளைவிட பலமடங்கு சக்தி வாய்ந்தது இந்த ராக்கெட்.

இந்த நிறுவனம் நாசாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி க்ஷிகிஷிமிவிஸி என்ற ராக்கெட்டை 2013-ல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளது.

தற்போது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் ராக்கெட்டுகளை இயக்க ஆண்டு தோறும் 7.5 டன்கள் எரிபொருள் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் புதிய ராக்கெட்டுகளை பயன்படுத்தினால் 0.3 டன்கள் எரிபொருள் மட்டுமே செலவாகும். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணமும், எரிபொருளும் மிச்சமாகும்.

மற்ற ராக்கெட்டுகளின் ஆரம்பகட்ட உந்து வேகத்திலும் பிளாஸ்மா ராக்கெட் சிறப்புத் தன்மை உடையது. ஒரே உந்துதலுக்குப் பிறகு ஆண்டுக்கணக்கில் இயங்கும் திறன் பெற்றது. நீராவி மூலம் இயங்கும் இதன் என்ஜின் தண்ணீரை கொதிக்கவைத்து நீராவியை உருவாக்கிக் கொள்ளும். இதன் வேகமும் சாதாரண ராக்கெட்டுகளைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த என்ஜினின் வெப்பநிலை சூரியனின் உட்புற வெப்பநிலைக்கு நிகராக இருக்கும். இதனால் மற்ற பாகங்கள் உருகாமல் இருக்கும் அளவுக்கு பாதுகாப்பாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டை வடிவமைத்துள்ள ஆட் ஆஸ்ட்ரா நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி நிலையம், செயற்கை கோள்கள், எரிபொருள் மையங்கள் ஆகியவற்றின் தொழில்ட்பம் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

%d bloggers like this: