பிரைவேட் பிரவுசிங்:

குரோம் பிரவுசர் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதி கொண்டுவரப்பட்டது. நாம் பிரவுசிங் செய்திடும் தளங்களைப் பற்றிய குறிப்புகள், பிரவுசரி ஏற்படுத்தப்படமாட்டாது. பிரவுசிங் செய்த தளங்களின் பெயர்கள் ஹிஸ்டரி என்று சொல்லப்படும் பட்டியலில் ஏறாது. அதே போல் குக்கிள் எதுவும் இந்த வகை பிரவுசிங்கில் பதியப்பட மாட்டாது. இது பப்ளிக் இன்டர்நெட் மையங்களில் பிரவுஸ் செய்கையில் மிகவும் உதவியாக இருக்கிறது. நாம் பிரவுஸ் செய்த தளங்களை மற்றவர்கள் கண்டறிய முடியாது. இப்போது பயர்பாக்ஸ் பிரவுசரிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ள Tools சென்று கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Start Private Browsing என்பதில் கிளிக் செய்திடவும். உடனே ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த செஷனில் நீங்கள் பிரவுஸ் செய்வது குறித்த எந்த தகவலையும் பயர்பாக்ஸ் பதிந்து கொள்ளாது. ஆனால் உங்களுக்கு இணைய இணைப்பு தரும் சர்வரில் அவை பதிவாகும். மேலும் அதன் மூலம் யாரும் அதனை அறிந்து கொள்ளலாம் என்பதே. இந்த பிரைவேட் பிரவுசிங் வழியை நிறுத்த வேண்டும் என்றால் அதே வழியில் Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Private Browsing என்பதில் கிளிக் செய்திடவும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,055 other followers

%d bloggers like this: