Daily Archives: நவம்பர் 9th, 2009

கொஞ்சம் கூகுள் தேடல்

கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய பிங் சர்ச் இஞ்சின் மக்களிடையே மெதுவாக இடம் பிடிப்பதால், கூகுள் தன் வசதிகளைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் மனதில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சில கூறுகளை இங்கு காணலாம்.

வழக்கமான தேடுதல் விடைகளுடன், கூகுள் அப்போதைய நேரத்தைக் கூறும் திறன் கொண்டது. நாம் இருக்கும் இடத்தின் நேரம் மட்டுமல்ல; உலகின் எந்த ஊரின் நேரத்தையும் காட்டும். எடுத்துக்காட்டாக time madurai என்று கொடுத்தால் மதுரை நேரத்தையும், time tokyo என்று கொடுத்தால் அதே நேரத்தில் டோக்கியோ நகரின் நேரத்தையும் காட்டும். இது மட்டுமின்றி அந்த ஊரில் நிலவும் சீதோஷ்ண நிலையையும் காட்டும். weather delhi எனக் கொடுத்தால் அந்த ஊரின் சீதோஷ்ணநிலை மற்றும் வர இருக்கும் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் குறித்தும் தகவல் கிடைக்கும்.

கூகுள் தேடல் விண்டோவினை, கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன் படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது. 94/36* (sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற் களையும் தரலாம். எடுத்துக் காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.
ஒரு சிலர் அலுத்துக் கொள்ளலாம். நாம் எதனைக் கொடுத்தாலும், சரியாக அதனை மட்டும் கொடுக்காமல், சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி தேடலை அமைக்கலாம். அவற்றில் சில:

+ கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும்படி அமைக்கலாம். எ.கா

––netbook +11.6 +ion – (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech * இதனை wild card என கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால் (*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.

~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன்படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக் கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சியாக வேண்டுமா? எடுத்துக் காட்டாக விலை ரேஞ்ச், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15 ஏதேனும் ஒரு சொல், முதல் எழுத்துக்கள் அடங்கிய சுருக்குச் சொல் போன்றவற்றின் சிறப்பு விளக்கம் பெற

define என்ற சொல்லைக் கொடுத்துப் பின் பொருள் தேடும் சொல்லைக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக define algorithm / define WHO என்று கொடுக்கலாம்.
குறிப்பிட்ட பைல் வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத் தரலாம்.
ஓர் இணைய தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.
ண்டிtஞு: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அடையாளங்களை இ�ணைத்தும் கொடுத்துத் தேடலாம். எடுத்துக்காட்டாக +microsoft +yahoo ~talks “Matthew DeCarlo” site:techspot.com எனக் கொடுக்கலாம்

பெயர் சூட்டலாமா!-உங்கள் கம்ப்யூட்டர்

உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும். இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று மாற்றுவது? என்ற கேள்விக்கு விடை பார்ப்போமா?

மானிட்டர் திரையில் My Computer என்று ஒரு ஐகான் இருக்கிறதல்லவா? அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் பல டேப்கள் கொண்ட விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Computer Name என்ற டேபின் மீது கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைக் கவனியுங்கள். இந்த திரையில் Computer Description என்று ஒரு இடம் தெரியும். இதன் நேர் எதிரில் உள்ள கட்டத்தில் இந்த கம்ப்யூட்டர் குறித்த ஒரு சிறு விளக்கம் இருக்கும். இல்லை என்றால் நீங்கள் அமைக்கலாம். இதில் மை ஆபீஸ் கம்ப்யூட்டர் அல்லது மை கிச்சன் கம்ப்யூட்டர் என்று உங்களுக்குப் பிடித்த கம்ப்யூட்டர் குறித்த விளக்கத்தினைத் தரலாம். ஆனால் இது கம்ப்யூட்டரின் பெயர் ஆகாது. இதன் கீழாகக் Full Computer Name என்று இருக்கும். இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றால் அருகில் உள்ள Change என்பதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள கட்டத்தில் பெயரை டைப் செய்து ஓகே கிளிக் செய்திட கம்ப்யூட்டரின் பெயர் நீங்கள் டைப் செய்ததற்கேற்றபடி மாற்றப்பட்டு காட்டப்படும்.

நீரைப் பிரிக்கும் இலச்சக்கட்டை


சிறுநீரை அடிக்கடி அடக்குவதாலும், குறைந்தளவு நீர் அருந்துவதாலும் சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் அதிகரித்து, உப்புச்சத்து, கால்மற்றும் முகவீக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகுகிறார்கள். ரத்தத்தில் புரதச்சத்து மற்றும் அத்தியாவசிய உப்புகளின் அளவு அதிகரிப்பதாலும், சிறுநீர்ப்பாதையில் கற்கள் தங்குவதாலும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகளவு தேங்குவதாலும் கால்களில் வீக்கம் உண்டாகின்றன. இந்த வீக்கத்தை ஆரம்ப நிலையில் நாம் கவனிக்காமல் விடும்பொழுது வீக்கம் கடினப்பட்டு, கல் போன்று சதை இறுகி, காலின் பருமனும், எடையும் அதிகரித்து யானைக்காலைப் போன்ற வீக்கமும் உண்டாகிவிடுகிறது.
ரத்தத்தில் சிறுநீரகம் சார்ந்த சோதனைகளை செய்வதன் மூலமும், சிறுநீரக உப்புகள் மற்றும் என்சைம்களின் அளவை அறிந்தும் சிறுநீரக செயல்பாட்டை முடிவு செய்யலாம்.

சிறுநீர் சரியாக செல்லாவிட்டால் முறையான சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையில் சிறுநீர் தேங்காமல் சரிசெய்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் முழுவதும் வீக்கம் உண்டாகிவிடும். சிறுநீரைப் பெருக்கக்கூடிய, உடல் வீக்கத்தை வற்றக்கூடிய அற்புதமான கீரை இலச்சக்கட்டை கீரை. பெருத்துப்போன உடலை குறைக்கும் தன்மையுடையதால் இது இலஜ்ஜைக்கட்டை கீரை என்று கிராமப்புற மக்களால் அழைக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது.
கழிச்சலை உண்டாக்குவதால் நச்சுக்கட்டை கீரை என்றும் சிலர் அழைக்கின்றனர். இதற்கு சண்டிக்கீரை என்ற வேறுபெயரும் உண்டு. இலச்சக்கட்டை மரத்தின் இலைகளில் உள்ள வேதிச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள உப்புகளை வெளியேற்றி, சிறுநீரைப் பெருக்கி கால்களின் வீக்கத்தை குறைக்கின்றன.
பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளியை தாளிதம் செய்து அத்துடன் மசித்தப் பாசிப்பருப்பை சேர்த்து, லேசாக வதக்க வேண்டும். பின் காம்பு, நரம்பு நீக்கிய இலச்சக்கட்டை கீரையை கலந்து மிளாகய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வேகவைத்து, கீரை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை அடிக்கடி மதிய உணவுடனோ அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உட்கொண்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும். இலச்சக்கட்டை கீரை இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட சிறுநீர் நன்குவெளியேறும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், 98421-67567

மூளையை பலமாக்கும் மஞ்சள்

மஞ்சளுக்கும் பெண்களுக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. அவர்கள்தான் இந்த மஞ்சளை, தங்கள் உடல் அழகுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்; கமகம சமையலிலும் உபயோகிக்கின்றனர்.

இதே மஞ்சளுக்கு மூளையை பலமாக்கும் `பவர்’ இருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள் வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.அதாவது, சமையலுக்காக பயன்படுத்தும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்
பொருள் அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை சம்பந்தப்பட்ட மற்றும் நினைவாற்றலை குறைக்கும் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டிருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவு குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, `மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன், அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றலை இழக்கிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் இந்த புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலை தடுக்கும் சக்தியை பெற்றிருப்பது எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை மஞ்சள் கலந்த குழம்பை உணவில் சாப்பிடுபவர்களுக்கு மூளை மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சளை சமையலில் பயன்படுத்தும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.