Daily Archives: நவம்பர் 11th, 2009

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்: டிப்ஸ்

நம் கருத்துக்களை, திட்டத்தினை விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் அருமையான ஒரு வழியாகப் பலராலும் கடைப்பிடிக்கப் படுகிறது. குறிப்பாக மாணவர்கள் இதனை அடிக்கடி தங்கள் வகுப்புகளில் கையாளத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கான சில எளிமையான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன்டேஷன் முழுவதும் அதனையே பயன்படுத்தவும்.
2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக்கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.
3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத்தவும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும். மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்துகள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்க வேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.
4. நாம் நம் கருத்துகளைக் கூற ஸ்லைட் �ஷா தயாரித்து வழங்குகிறோம். இது பார்ப்பவர்களுக்கான கண் பார்வை சோதனையாக இருக்கக் கூடாது. ஸ்லைடில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அளவு குறைந்தது 36 பாய்ண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். பின் ஸ்லைட் அளவைப் பொறுத்து இதனை அதிகரிக்கலாம்.
5. ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட் ஐந்து வரிகளே அதிகம் இருக்க வேண்டும். சிறிய சொல் தொடர்களையும், புல்லட் லிஸ்ட்களயும் பயன்படுத்தவும்.
6. ஸ்லைடுகளில் உள்ள சொற்களை, வாக்கியங்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டாம். ஸ்லைடுகளில் உள்ளதைக் காட்டிலும் அதிக விபரங்களை நீங்கள் தருவீர்கள் என்று, காட்சியைக் காண்பவர்கள் எதிர்பார்க்க வேண்டும்.
7. டெக்ஸ்ட் வரிகளில் எந்த தவறும் இருக்கக் கூடாது. ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப் பிழைகளை முன்கூட்டியே பார்த்து நீக்கிவிடவும். இதில் பிழைகள் இருந்தால் பார்ப்பவர்களின் கவனம், சொல்லவந்ததிலிருந்து சிதறும்.
8. உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் நேரடியாகப் பார்த்துப் பேசவும். ஸ்லைடுகளைப் பார்த்து திரும்பி நின்று பேசவே கூடாது. உங்கள் குரல் உரக்க இருக்க வேண்டும். குரல் ஒலி குறைவாக இருந்தால், கேட்பவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. ஸ்லைடுகளை முதலில் தனியாக ஒரு முறை போட்டு பார்த்துக் கொள்ளவும். என்ன பேச வேண்டும் என்பதனையும் முதலில் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும்.

இந்தியாவின் இரும்பு மனுஷி’-இந்திரா காந்தி

`இந்தியாவின் இரும்பு மனுஷி’ என்று ஆதரவாளர்களாலும், எதிர்பாளர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி காலமாகி கால் நுற்றாண்டாகிவிட்ட நிலையில், அவருடன் நெருங்கி பழகிய சிலர், அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

சித்தார்த்த சங்கர் ரே:

1923-ம் ஆண்டு, இந்திரா காந்தியின் தாத்தா மோதிலால் நேருவைச் சந்திப்பதற்காக எனது தாத்தா சித்தரஞ்சன் தாஸ் என்னை அலகாபாத்துக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். மோதிலால் நேரு எனக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுத்தார். அப்போது ஐந்து வயதுச் சிறுமியான இந்திரா, பொம்மை கேட்டு என்னிடம் சண்டையிட்டார். கடைசியில் இநதிரா பொம்மையின் ஒரு காலோடு ஓடிவிட, என் கையில் தலை மட்டும் எஞ்சியிருந்தது. மீதமுள்ள பாகம் அந்தக் களேபரத்தில் எங்கோ போய் விழுந்துவிட்டது.

இந்திரா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு போராளியாகவே இருந்தார். ஒருமுறை ஒரிசாவில் ஒரு கலவரக்காரன் இந்திராவின் மீது கல்லை எறிந்து அவர் முக்கை உடைத்துவிட்டான். அவரை `பாண்டேஜ்’ போட்ட முக்குடன் பார்த்த நான், “நீங்கள் உங்களின் நீளமான முக்கை எல்லோருடைய விஷயங்களிலும் நுழைத்தால் இன்னும் நிறைய காயப்பட வேண்டி வரும்” என்று நகைச்சுவையாகக் கூறினேன். அதற்கு பதிலடியாக இந்திரா சொன்னார்: “எனது நீண்ட முக்கைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அது நீளமானது என்பதால் என்னால் தொலைவில் நடப்பதைக் கூட மோப்பம் பிடிக்க முடியும்! என்றார். இந்த சமயோசிதம் என்னைக் கவர்ந்தது”

எழுத்தாளர் குஷ்வந்த்சிங்:

இந்திரா அவரது தந்தை நேருவிடமிருந்து வேறுபட்டவர். ஜவகர்லால் நேருவுக்கு இந்தியாவை பற்றி ஒரு மாபெரும் தொலைநோக்கு இருந்தது. ஐந்தாண்டுத் திட்டங்கள் அவரது யோசனைதான். அவர் தனது கனவுகளில் இலேசாகத் தவறு புரிந்தார். உறவினர், நண்பர்களுக்குச் சலுகை அளிக்கும் பலவீனமும் நேருவுக்கு இருந்தது.

ஆனால் இந்திரா, உறவினர், நண்பர்களுக்குச் சலுகை அளிக்கவில்லை. எனவே அவரால் தனது தந்தையின் நிழலிலிருந்து மீண்டு வர முடிந்தது. இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி. இந்திராவின் கணவராக இருந்தும் அவருக்கென்று தனி முக்கியத்துவம் எதுவும் கிடைத்ததில்லை.

1971-ம் ஆண்டு நடந்த போர் இந்திராவுக்கு ஒரு பெரும் தோற்றத்தை உருவாக்கித் தந்தது.

இந்திரா ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது அவரை நான் நன்கு அறிந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் ஏறக்குறைய தினந்தோறும் அவரை பார்ப்பேன். அப்போது அவரது சில குறைபாடுகளையும்,

அரசியல் உச்சத்தை அடைவதற்காக அவர் மேற்கொண்ட வழிகளையும் கண்டேன்.

அவர் மிகவும் அழகான தோற்றம் கொண்ட பெண். ஆனால் மிகவும் இறுக்கமானவர். பெண்களுக்கே உரிய குணமான, அழகான மற்ற பெண்களை விரும்பாத பலவீனம் இந்திராவுக்கும் இருந்தது.

மருமகள் மேனகா குறித்து இந்திரா தானாக ஒரு முடிவு எடுத்ததால் இந்திராவுடனான எனது உறவு பாதிக்கபட்டது. நான் மேனகாவின் பக்கம் இருப்பதாக இந்திரா நினைத்தார். ஆனால் அது உண்மையில்லை. ஆனால் யார் உண்மையை இந்திராவிடம் எடுத்துச் சொல்வது? மேனகாவையோ, அவரது அம்மாவையோ இந்திராவுக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களுக்கு இடையிலான உறவு முறிவு மிக மோசமாக இருந்தது. இப்போதைய தலைவர்கள் எவரைம் இந்திராவுடன் ஒப்பிட முடியாது.

ஆர்.கே. தவான்:

1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மாலையில் இந்திரா காந்தி ஒரிசாவிலிருந்து திரும்பினார். நாடு முழுவதிலும் இருந்து வருபவர்களை தனது சதர்ஜங் இல்லத்தில் காலை 8 மணிக்கு பார்ப்பது இந்திராவின் வழக்கம். ஆனால் அவர் மாலையில் வெளியிலிருந்து திரும்பி வந்தால் மறுநாள் காலை சந்திப்பை ரத்து செய்வது என்பது ஒரு விதியானது. அதன்படி மறுநாள் காலை சந்திப்பை ரத்து செய்துவிட்டு ஓய்வெடுக்கும்படி நான் அவருக்கு ஆலோசனை கூறினேன். ஆனால் தான், பி.பி.சி.யின் பீட்டர் உஸ்டினோவுக்கு அப்பாயிட்மென்ட் கொடுத்துவிட்டதாகவும், அவர் ஏற்கனவே ஒரிசாவில் ஒரு பகுதியை பதிவு செய்திருப்பதால் மாற்ற முடியாது என்றும் கூறி விட்டார்.

எனவே தனது இருப்பிடத்தில் பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு பதிலாக அக்பர் ரோடு 1-ம் எண் இல்லத்தில் உஸ்டினோவைச் சந்திப்பது என்று முடிவானது. நான் வழக்கம்போல் அக்டோபர் 31 அன்று சதர்ஜங் 1-ம் எண் வீட்டை அடைந்தேன். ஒரு நல்ல சிகையலங்காரக் கலைஞர் வேண்டும் என்று இந்திரா காந்தி கேட்டதால் அவரது உதவியாளர் நாது ராம் அதற்கு ஏற்பாடு செய்தார்.

நான் இந்திரா காந்தியின் அறைக்குள் நுழைந்தபோது அவருக்குச் சிகை ஒழுங்குபடுத்தபட்டுக் கொண்டிருந்தது. அவர் தனது தனிபட்ட அலங்காரத்தில் மிகவும் கவனமானவர். அவரது தலையில் ஒரு முடி விலகியிருந்தாலும் நான் எனது தலையில் கைவைத்து அதைச் சைகையால் சுட்டிக் காட்டுவது வழக்கம். சிகையலங்காரக் கலைஞர் இந்திராவின் தலைமுடியை ஒழுங்குபடுத்திக் கொடிருந்தபோதே அவர் என்னை நோக்கித் திரும்பினார். ஜனாதிபதி ஜயில்சிங் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு அன்றுதான் நாடு திரும்பினார்.

அன்று மாலை தனது வீட்டில் இளவரசி ஆன்னேவுக்கு டின்னர் அளிக்க இந்திரா திட்டமிட்டிருந்தார். விருந்தினர்கள் பற்றிய சில குறிப்பான விஷயங்களை அவர் என்னிடம் கூறினார். நான் தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

சில நிமிடங்களிலேயே இந்திரா பேட்டிக்குத் தயாராகிவிட்டார். தொலைக்காட்சி பேட்டிகளின்போது எப்போதும் இந்திராவுடன் இருக்கக்கூடிய சாரதா பிரசாத், அக்பர் ரோடு இல்லத்திலிருந்து ஒரு செய்தியை அனுப்பினார்.

அதாவது, அங்கு வெடித்த தீபாவளி பட்டாசுக் காகிதங்களை இன்னும் சுத்தம் செய்யவில்லை, எனவே பேட்டியைத் தொடங்க மேலும் சில நிமிடங்கள் ஆகும் என்று தெரிவித்தார். அது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. காமிரா ஓடத் தொடங்கும்போது புல்வெளி சுத்தமாக இருக்கும்படி என்னை அதைக் கவனிக்கச் சொன்னார்.

9 மணிக்கு இந்திரா பேட்டிக்குத் தயாராகி, சதர்ஜங் வீட்டை அக்பர் ரோடு வீட்டுடன் இணைக்கும் சிறுகதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். வழக்கம்போல் அவருக்கு பின்னால் சில அடிகள் தள்ளி நான் நடந்தேன். அவர் சுறுசுறுப்பாக நடக்கக்கூடியவர். சிலசமயங்களில் அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நடப்பதே கஷ்டம். நாங்கள் நடந்து சென்றபோது, ஓர் உதவியாளர் ஒரு தட்டில் `கப் அண்ட் சாசருடன்’ சென்று கொண்டிருந்தார்.இந்திரா அவரை நிறுத்தி, எங்கே அவற்றைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்று கேட்டார். நேர்முகத்தின்போது ஒரு டீ- கப் செட்டை இந்திராவுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்டினோவ் கூறியதாக அவர் தெரிவித்தார். உடனடியாக அந்த டீ- செட்டை வேண்டாம் என்று நிராகரித்த இந்திரா, வேறு நல்லதாகக் கொண்டுவரும்படி கூறினார். பின்னர் அவர் தொடர்ந்து நடந்தார். அந்தக் கணம் பல யுகங்கள் போல எனக்குத் தோன்றுகிறது. வரலாறு அதன் அனைத்து சோகமான வடிவங்களிலும் என் கண் முன் விரிவதை நான் கண்டேன்.

அவர் சிறுகதவை எட்டியதுமே, பாதுகாவலர்களுக்கு கரம் குவித்து `நமஸ்தே’ தெரிவித்தார். அப்போது பியாந்த் சிங் தனது பிஸ்டலை உயர்த்தி இந்திராவைச் சுடுவதை நான் கண்டேன். அவர் சுருண்டு தரையில் விழுந்தார். இந்திரா விழுந்தபின்னும் சத்வந்த் சிங் தனது இயந்திரத் துப்பாக்கியால் அவரைச் சுட்டார். சத்வந்த் சிங் சுட்டபோது இந்திரா நின்றுகொண்டிருக்கக்கூட இல்லை. அவ்வளவு கொடூரமானது அது.

நான் என்னவென்றே புரியாது திகைத்து போனேன். நான் அப்போது பார்த்ததை இன்றும் மறக்க முயல்கிறேன். நான் ஒருநிலைக்கு வர முயல, பியாந்த் சிங் பஞ்சாபி மொழியில் கத்தினார், “நாங்க செய்ய வேண்டியதை நாங்க செஞ்சுட்டோம். இப்போ நீங்க செய்ய வேண்டியதை நீங்க செய்யலாம்!”-என்றார்.

இந்திராகாந்தியை நாடு இழந்துவிட்டாலும், அவர் இந்த நாட்டிற்காக செய்த தியாகங்கள் மறக்கமுடியாதவை. அவரால் இந்தியா பல துறைகளில் தலைநிமிர்ந்தது.

இலவச ஆன்லைன் ஸ்பேஸ்

டேட்டாவினை நம் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கிறோம். எவ்வளவு பெரிய ஹார்ட் டிஸ்க்காக இருந்தாலும் ஒரு நாளில் அது பைல்களை சேவ் செய்திட பற்றாக் குறையாக உள்ளது. நீங்கள் உடனே இன்னுமொரு ஹார்ட் டிரைவை வாங்கலாம்; அல்லது புளு ரே டிஸ்க் அல்லது டிவிடிக்களில் பைல்களை சேவ் செய்திடலாம். இந்த வகையில் இப்போது வந்திருக்கும் இன்னொரு வழி ஆன்லைன் சேவிங் ஆகும். நம் டேட்டா பைல்களை பேக் அப் செய்து கொள்வதற்கு இப்போதெல்லாம் பல தளங்கள் வசதியைச் செய்து தருகின்றன. ஆன்லைனில் அண்மையில் தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. 50 ஜிபி ஸ்பேஸ் இலவசமாகத் தருவதாக அறிவித்திருந்தது. அதன் விபரங்களைப் பார்க்கையில் அவசரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. இதோ அந்த தளம் குறித்த தகவல்கள்.
இந்த தளத்தின் முகவரி www.ADrive.com.

இதில் நுழைந்தவுடன் இந்த தளம் தரும் இலவச மற்றும் கட்டண சேவை விரிவாகக் காட்டப்படுகிறது. இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள நாம் முதலில் இதில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால், அதனையே யூசர் பெயராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனையும் பயன்படுத்த இருக்கும் பாஸ்வேர்டையும் கொடுத்தால், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. பின் அதனைக் கிளிக் செய்து உறுதி செய்த பின், மீண்டும் ஏ–டிரைவ் தளம் சென்று, அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று பைல்களை அப்லோட் செய்வதும் மிக எளிதாக மேற்கொள்ளலாம். அதே போல சேவ் செய்த பைலையும், மீள எடுத்துப் பயன்படுத்தி வைக்கலாம். பேசிக், சிக்னேச்சர் மற்றும் பிரிமியம் என மூன்று வகை பைல் சேவ் வசதிகளை இந்த தளம் தருகிறது.
இங்கு சேவ் செய்திடும் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்லைனில் பைல்களை வைத்தபடியே அவற்றை எடிட் செய்திடலாம்.
சிக்னேச்சர் என்ற கட்டணம் செலுத்திப் பெறும் வசதியிலும் 50 ஜிபி ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாகப் பல தொழில் நுட்ப வசதிகள் தரப்படுகின்றன. எப்.டி.பி. பைல் ட்ரான்ஸ்பர், எஸ்.எஸ்.எல். என்கிரிப்ஷன்,பைல் ரெகவரி, மற்றும் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான டெஸ்க் டாப் வசதிகள் தரப்பட்டுள்ளன.
பிரிமியம் ஸ்டோரேஜ் வசதி பெரும்பாலும் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.100, 250, 500 ஜிபி மற்றும் 1 டெரா பைட் என்ற அளவில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அளவிற்கேற்றபடி கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த தளம் தரும் வசதிகளில் ஆன்லைன் எடிட்டிங் வசதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இலவச ஸ்டோரேஜ் வசதி பெறுபவர்கள் கூட, ஆன்லைனிலேயே தங்கள் பைல்களை எடிட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து பின் திருத்த வேண்டியதில்லை.
பாதுகாப்பு, ரகசியம் என்ற அடிப்படையிலான பைல்களை இந்த ஆன்லைன் தள ஸ்டோரேஜ் வசதியில் வைத்திட விரும்பினால் கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பெறுங்கள். ஏனென்றால் இலவச ஸ்டோரேஜ் வசதியில் என்கிரிப்ஷன் வசதி தரப்படவில்லை.
அடுத்ததாக இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கான யூசர் இன்டர்பேஸ் வசதி மிக எளிமையாக இருப்பதனையும் குறிப்பிட வேண்டும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க் இடம் போதவில்லை என அங்கலாய்ப் பவர்களுக்கு இது ஒரு நல்ல போக்கிடமாகும்.

பச்சை காய்கறிகளில்

கீரை, புல், பூண்டு, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, திராட்சை, ஆப்பிள், உலர்ந்த பழங்களான பேரீச்சை, பிஸ்தா, முந்திரிக் கொட்டைகளிலும் உள்ளன. இயற்கை உணவு வகைகளில் இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளன.

உதாரணத்திற்கு ஓர் கதை. காட்டில் வாழும் சிங்கம், புலி, முதலிய மிருகங்கள் மாமிசத்தை சாப்பிடும்; பசித்தாலும் காட்டிலுள்ள புல்லைத் திண்ணாது. மாமிசமே உணவாகி விட்டால் வாழ்வது கடினம். ஆகையால் இறைவன் (இயற்கை) படைப்பில், மாமிச உணவில் இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மிருகத்திற்கு கிடைப்ப தெப்படி? புலி மானையோ, ஆட்டையோ கடிக்கும் போது கழுத்தை தான் கவ்விக் கடிக்கிறது.
காரணம், “கரோடிட்’ ரத்தக் குழாயை தாக்கி, உடலிலுள்ள ரத்தத்தை வெளியேற்றிய பிறகு மான், ஆட்டின் வயிற்றைக் கிழித்து, அதிலுள்ள உணவுகளான பச்சை இலை, புல் பூண்டு, காய்கறி கலந்த, கலவையை (ண்ச்டூச்ஞீ) முதலில் உண்டு விட்டு, மாமிச சதையை சாப்பிடுகிறது. இயற்கை உணவுள்ள எல்லா வைட்டமின்கள், கெரட் டின், ஆன்டி ஆக்ஸிடென்ட் முதலியவை, மிருகத்திற்கு பலியாகிய மான், மாடு, ஆடு வயிற்றிலிருந்த உணவில் கிடைக்கிறது.
டாக்டர்கள், முன்பெல்லாம் வைட்டமின்கள் தாதுப் பொருள்கள் நிறைந்த மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார். இன்றோ வியாதிகளுக்கு கொடுக்கும் மாத்திரைகளின் விளைவுகளான வேதியியல் பொருளான ஆக்சிடென்டைக் குறைக்க ஆன்டி ஆக்சிடென்டை எழுதிக் கொடுக்கின்றனர். இது ரெட் ஒயினில் இருக்கிறது.

ரெட் ஒயின் – சர்க்கரை நோய்க்கு மருந்தா?
“ரெட்’ ஒயின், மது வகைகளில் பிரசித்திப் பெற்ற மது. ஐரோப்பிய நாடுகளில் வீட்டுக்கு வீடு அருந்தும் பழக்கம் உண்டு. பீர், ரெட் ஒயின், வெள்ளை ஒயின் ஆகியவை மிகவும் மென்மையான மது வகைகள். பணக்கார நாடுகளில் பெண்களும் மது அருந்துவது சகஜம்.
மதுபானங்கள் பிராந்தி, ஜின், விஸ்கி என பல வகைகள், பல பிராண்டுகளில் வருகிறது. ரஷ்யாவில் பிரசித்திப் பெற்ற, “ஓட்கா’ என்ற மதுவகை, ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரையில் உள்ளன. சிவப்பு ஒயின் மதுவிலிருக்கும் ரிவரிட்டால் என்ற பொருள் தான், உடலில் சர்க்கரை அளவை உயராமல் குறைக்கிறது; சிவப்பு வைனில் ஆன்டி ஆக்சிடென்ட் சத்து நிறையவுள்ளது.

ஆன்டி ஆக்சிடென்ட்
நமது உடலில் பல உணவு உண்ணும் போது, செரிமானமாகும்போது உணவிலிருந்து பல வேதியியல் பொருள்களில் ஒன்றாக ஆக்சிடென்ட் வெளியாகிறது. இதில், சூப்பர் ஆக்சைடு எனப்படும் தேவையில்லாத நச்சுப் பொருளான இவை, உடல் தளர்ச்சி, அசாத்திய உடல் வலி, எரிச்சல் ஏற்படுவது மட்டுமின்றி, உடலிலுள்ள உறுப்புகளை தாக்குகிறது. குறிப்பாக ரத்த குழாயின் உட்சுவரைத் தாக்குகிறது. இதனால், தமணி இருக்க நோயினை (அத்திரோஸ் கிளிரோஸில்) விரைவுப்படுத்துகிறது.
இது குறிப்பாக சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு, அதிக எடை, கொழுப்பு உள்ளவர்களுக்கு விரைவாக ஆரம்பமாகிறது. இதனால், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, குண்டர்கள், அதிக கொழுப்பு உள்ளவர்கள் அடிக்கடி சோர்வு கொள்கின்றனர். இந்த சிவப்பு ஒயினிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் , இந்த சூப்பர் ஆக்சைடு போன்ற ஆக்ஸிடென்ட்களை தாக்கி அடக்கி விடுகின்றது. இதனால், சுறுசுறுப்பு, உற்சாகம் ஏற்படுகிறது.

குடிச்சா என்னாகுது
மது குடித்தவுடன் அது, கல்லீரலில் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதில் நச்சு பொருளான அசிட்டால்டிஹைடு, அசிட்டோன் என்ற பொருட்கள் வெளியாகி, பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அவை மது அருந்திய அடுத்த நாள் காலையில் ஏற்படும் சோர்வு, பசியின்மை, கண் எரிச்சல், தளர்ச்சி போன்றவை நாளடைவில் நிரந்தரமாகி விடுகிறது. இந்த விளைவுகளைத் தடுக்க மது அருந்தும் போது ஊறுகாய், மாமிசம் போன்ற பிரைடு அயிட்டங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, வெள்ளரிக்காய், வெங்காயம், கேரட், பூண்டு, கொத்தமல்லி தொக்கு முதலியவைகளை சேர்த்துக் கொண்டால் மதுவின் விளைவுகளை ஓரளவு தடுக்க முடியும்.

ஒரு “பெக்’ அடிக்கலாம்
அளவோடு தினம் ஒரு பெக் அடித்து, 80 ஆண்டுகள் வாழ்ந்தவர்களைப் பார்த்துள்ளேன். நாளொரு மேனி பொழுதொரு வண்ணம், மதுவே உயிர் என்று குடித்தவர்கள், நீண்ட நாள் வாழ்ந்த சரித்திரம் இல்லை. விஞ்ஞான ரீதியாக எதிலும் லஞ்சம் வாங்கி அகப்படாமல் வாழும் நமது அரசியல்வாதிகள் போல, மது அருந்தும் நண்பர்கள், அதன் விளைவுகள் வராமல் தடுப்பதற்கு, முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
தொடர்புக்கு: பேராசிரியர்: சு.அர்த்தநாரி. எம்.டி.டி.எம்.,
இதய ஊருடுவல் நிபுணர்,
டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக்,
221, ராயப்பேட்டை நெடுஞ்சாலை,
ராயப்பேட்டை, சென்னை-14.
தொலைபேசி: 2811 0323,
மொபைல்: 98401 60433.
இமெயில்: drarthanari.subbu54@gmail.com