Advertisements

Daily Archives: நவம்பர் 12th, 2009

வைரஸ் வந்துவிட்டதா?

நாள்தோறும் ஏதேனும் வைரஸ் வந்து நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் வைரஸ் பாதிக்காத கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும், எங்கே வைரஸ் வந்துவிட்டதோ என்ற பயத்தில் கம்ப்யூட்டரை இயக்குகின்றனர். அப்படியானால் எந்த சூழ்நிலையில் வைரஸ் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும்; அப்படி ஒரு வைரஸ் வந்துவிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம். நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறந்ததாகவும், அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதாகவும் இருந்தால், வைரஸ் பாதித்த பைல்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கையில் அல்லது வைரஸ் பாதித்த பைல்கள் உள்ள சிடி அல்லது பிளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரால் படிக்கப்படுகையில், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு எச்சரிக்கைக் கட்டத்தைக் காட்டி இந்த பைலில் இந்த வைரஸ் இருந்தது. உடனே அது அழிக்கப்பட்டுவிட்டது; அல்லது வைரஸ் உள்ள பைல் இது, இதனை அழித்தால் பைலும் சேர்ந்து அழிந்துவிடும்; என்ன செய்யலாம் என்று கேட்டு ஒரு பாப் அப் மெசேஜ் கட்டம் கிடைக்கும்.

இதெல்லாம் முன்னரே கண்டறியப்பட்டு, வகை பிரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் வகையில் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு உருவாக்கப்பட்டிருந்தால் இந்த எச்சரிக்கை கிடைக்கும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கண்டறிய முடியாத புதியதாக உருவாக்கப்பட்ட வைரஸ் வந்தால் அது ஜம்மென்று நம் கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, அதன் அழிவு அல்லது நாச வேலையைத் தொடங்கிவிடும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு அப்டேட் செய்யப்படாமல் இருந்தாலும், வைரஸ்கள் கம்ப்யூட்டருக்குள் வருவது எளிதாகிவிடும்.
அப்படியானால் இது போல புதிய அல்லது ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் கண்காணிப்பிற்குத் தப்பித்து வரும் வைரஸ் அல்லது ஸ்பை புரோகிராம்களான வைரஸ்களை எப்படிக் கண்டறிவது? நம் கம்ப்யூட்டர் செயல்படும் விதத்திலிருந்துதான் கண்டறிய முடியும். அந்த செயல்பாடுகள் எப்படிப் பட்டவையாக இருக்கும் எனப் பார்ப்போம்.
திடீர் திடீர் என நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் மூடப்படுகிறதா? அல்லது திறக்கவே முடியவில்லையா? அப்ளிகேஷன் புரோகிராம்களின் இ.எக்ஸ்.இ. பைல்கள் ஒன்றுக்கு இரண்டாக பல டிரைவ்களில் இடம் பிடித்து எதுவும் திறக்க மறுக்கிறதா? சூப்பர் பாஸ்ட் வேகத்தில் செயல்பட்ட உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், பாசஞ்சர் வேகத்தைக் காட்டிலும் மெதுவாக இயங்குகின்றனவா? இந்த செயல்பாடுகள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அனுமதியின்றி வந்து தங்கிவிட்ட மால்வேர் அல்லது வைரஸ்களை அடையாளம் காட்டுவன ஆகும்.
இதுவரை உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு ஒழுங்காக அச்சிட்டுக் கொடுத்த பிரிண்டர் என்ன கட்டளை கொடுத்தாலும் இயங்க மறுக்கிறதா? நிச்சயமாய் அது வைரஸ் வேலைதான்.
சில டிரைவ்களை நீங்கள் அணுக முடியாது. பைல்களைத் திறக்க முடியாது எனச் சிறிய கட்டங்களில் பாப் அப் மெசேஜ் கிடைக்கிறதா? ஏதோ வைரஸ் பிரச்னை என்றுதான் பொருள்.
ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த, சின்ன சின்ன அளவில் உருவாக்கி வைத்திருந்த பைல்களில் சில, பெரிய அளவிலான பைல்களாக உருவாகி, டிஸ்க் இடத்தை விழுங்கி நிற்கின்றனவா? நிச்சயமாய் இது வைரஸ் வேலைதான்.
திடீரென உங்கள் இமெயில் முகவரியிலிருந்தே உங்களுக்கு இமெயில் வருகிறதா? அதில் இணைப்பு பைல் ஒன்று திறக்கச் சொல்லி அன்புக் கட்டளை வருகிறதா? அதே நேரத்தில் உங்கள் நண்பர்கள் பலரிடம் இருந்து என்னப்பா ஒரு பைலை அனுப்பி உள்ளாய்; திறந்து பார்க்கலாமா? என்று உஷாரான நண்பர்கள் இமெயில் அனுப்பி உள்ளார்களா? இதுவும் ஒரு மால்வேர் புரோகிராம் வேலைதான்.
மேலே சொல்லப்பட்ட விளைவுகள் நிச்சயமாய் உங்கள் கம்ப்யூட்டரின் வேண்டாத விருந்தாளியை அடையாளம் காட்டும் செயல்களாகும். வைரஸ் அல்லது அது போன்ற புரோகிராம் ஒன்று உங்கள் கம்ப்யூட்டருக்குள், எப்படியோ அனைத்து பாதுகாப்பு வழிகளையும் மீறி வந்துவிட்டது என்று பொருள்.

Advertisements

வேர்ட் டிப்ஸ், டிப்ஸ்-4

ஹைபனேஷன் – என்ன நடக்கிறது?

வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது அடிக்கடி சொற்களில் ஹைபனேஷன் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் கட்டயாம் நீங்கள் அதனோடு தொடர்புள்ள ஹாட் ஸோன் (Hot Zone) என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வேர்ட் உங்கள் டாகுமெண்ட்டை ஹைபனேட் செய்திடுகையில், ஹைபனேட் செய்யப்படும் சொல்லில் எவ்வளவு பகுதியை முந்தைய வரியில் அமைக்க முடியும் என்று கணக்கிடுகிறது. இதற்காகத்தான் ஹாட் ஸோன் அல்லது ஹைபனேஷன் ஸோன் என்பதைக் கணக்கிடுகிறது. ஒவ்வொரு வரியிலும் தேவைப்படும்போது இந்த ஹாட் ஸோன் வலது முனையில் கிடைக்கிறது. இந்த ஹாட் ஸோன் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அதாவது 0.25 அங்குலம் என வைத்துக் கொண்டால் அந்த அளவிற்குள் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடமுடிந்தால் மட்டுமே, வேர்ட் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடும். இல்லை என்றால் அடுத்த வரிக்குக் கொண்டு வந்திடும். இதனை செட் செய்வதற்குக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும். மெனு பாரில் Tools அழுத்திப் பின் Language என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த சப் மெனுவில் Hyphenation என்ற பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் Hyphernate என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் ஒரு டாகுமெண்ட் தானாக ஹைபனேட் செய்திடட்டுமா? பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களை மட்டும் ஹைபனேட் செய்திடவா? என்ற ஆப்ஷன்களோடு Hot Zone எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற ஆப்ஷனும் தரப்படும். இதனை நாமே செட் செய்து கொள்ளலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறி, ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டில் இதனைச் சோதனை செய்து கொள்ளலாம்.
சிறிய டேஷ் அமைப்பது எப்படி?
வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில் ஹைபன் என்னும் சிறிய இடைக்கோடு அமைக்கிறோம். சில வேளைகளில் இரண்டு ஹைபன் அளவில் ஒரு டேஷ் கோடு அமைக்க விரும்புகிறோம். இதனை எம் டேஷ் (em dash) என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இரண்டு டேஷ் அடையாளங்களை அடுத்தடுத்து அமைத்துவிட்டால், வேர்ட் அதனைப் புரிந்து கொண்டு சற்றுப் பெரிய எம் டேஷ் ஆக அமைக்கும். சில வேர்ட் தொகுப்புகளில் இந்த வசதி எடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் சில கீகளை அழுத்துவதன் மூலம் இந்த எம் டேஷ் அடையாளத்தை அமைக்கலாம்.
1. கண்ட்ரோல்+ஆல்ட்+மைனஸ் அடையாளத்தினை அழுத்தினால் இந்த டேஷ் அடையாளம் கிடைக்கும்.
2. நம்லாக் கீயினை அழுத்திய பின் நியூமெரிக் கீ பேடில், ஆல்ட் கீயை அழுத்தியவாறு 0151 என அழுத்தினாலும் இந்த டேஷ் அடையாளம் கிடைக்கும்.
3. Insert மெனு அழுத்திக் கிடைக்கும் மெனுவில் Symbol என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் Symbol என்ற சிறிய விண்டோவில் இது போன்ற சிம்பல்கள் நிறைய இருக்கும். அதில் இதனைச் தேர்ந்தெடுத்து இன்ஸெர்ட் பட்டனை அழுத்தினால் இந்த டேஷ் அடையாளம் கிடைக்கும்.
இடது மார்ஜின் இடம் காண
வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் பொதுவாக நம் டாகுமெண்ட்டின் இடது ஓரம், மானிட்டரின் இடது பக்கமாக ஓரத்தில் உள்ள ரூலர் அருகே காட்டப்படும். வலது மார்ஜின் இட வெளி நன்றாகக் காட்டப்படும். இந்த மார்ஜின் வெளியை நன்றாகப் பார்க்க வேண்டுமென்றால், கீழாக உள்ள ஸ்குரோல் பாரினை, இருபுறமும் மாற்றி இழுத்துப் பார்க்கலாம்.
சில வேளைகளில் ட்ராப்ட் அல்லது நார்மல் வியூவில் நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்து கொண்டிருக்கையில், டாகுமெண்ட் முழுவதையும் வலது பக்கம் ஒதுக்கி இடது மார்ஜின் வெளியைப் பார்க்க விரும்புவோம். இதற்கு ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, ஸ்குரோல் பாரில் இடது ஓரத்தில் உள்ள அம்புக்குறி மீது கிளிக் செய்திடுங்கள். டாகுமெண்ட் முழுவதும் வலதுபுற ஓரத்திற்கு நகர்த்தப்பட்டு இடதுபுற மார்ஜின் வெளிகாட்டப்படும். மீண்டும் இதனை இடது ஓரமாகவும் நகர்த்திக் கொள்ளலாம்.
இந்த வேலையை நார்மல், ட்ராப்ட் அல்லது அவுட்லைன் வியூவில் இருக்கும்போது மட்டுமே மேற்கொள்ள முடியும். நார்மல் மற்றும் ட்ராப்ட் வியூ என்ற இரண்டும் ஒரே வியூதான். நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் புரோகிராமினைப் பொறுத்து இது மாறும். பிரின்ட் லே அவுட் வியூவில் இந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த வியூவில் டாகுமெண்ட்டின் முழு இடது மார்ஜின் வெளியையும் காணலாம்.
பாண்ட் டயலாக் பாக்ஸ்
வேர்டில் உள்ள ஒரு இன்ட்ரஸ்டிங் ஷார்ட் கட் கீ கண்ட்ரோல்+ ஷிப்ட்+பி (Ctrl+Shft+P). பொதுவாக ஒரு ஷார்ட் கட் கீ அதற்கான ஒரு வேலையை மேற்கொள்ளும். இந்த கீ நீங்கள் மானிட்டர் ஸ்கிரீனில் என்ன வைத்திருக்கிறீர்களோ அதற்கேற்றபடி செயல்படும். வேர்ட் புரோகிராமில் எழுத்துவகைக்கான பார்மட்டிங் டூல்பாரை இயக்கி மேலாக வைத்திருந்தால், இந்த கீகளை அழுத்தியவுடன், கர்சர் எழுத்துவகையின் அளவைக் குறிக்கும் எண் உள்ள கட்டத்தில் நிற்கும். நாம் எழுத்தை எந்த அளவில் வைக்க வேண்டுமோ அந்த அளவினை டைப்செய்து என்டர் செய்து வேலையை முடிக்கலாம். ஒரு வேளை நீங்கள் பார்மட்டிங் டூல்பாரை இயக்கமால், திரையில் அது காட்டப்படாமல் இருந்து, இந்த கீகளை இயக்கினால் என்ன செயல்பாடு நடைபெறும்? நேரடியாக பாண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இந்த டயலாக் பாக்ஸில் பாண்ட் சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்.

டிப்ஸ்… டிப்ஸ்…
விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தில் நம் கம்ப்யூட்டர் ஐகான்களை நம் இஷ்டப்பட்ட இடைவெளியில் அமைக்கலாம். டெஸ்க்டாப்பில் எங்காவது ரைட் கிளிக் செய்தி டவும். கிடைக்கும் மெனுவில் Properties பிரிவைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள Appearance டேபில் கிளிக் செய்திடவும். அங்குள்ள Advance பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு ஐtஞுட் என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று காணலாம். எடுத்துக்காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடை வெளியை மாற்றலாம். அனைத் தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் செட் செய்தபடி ஐகான்கள் அமைந் திருக்கும்.

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?’ என்று கேட்டால் நீங்கள் `இல்லை’ என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதைம் தாண்டி இதய பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மைம் கூட இதய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?
மன அழுத்தம்

“இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்த பிரச்சினை கண்டுபிடிக்கபடாமலே போகிறது” என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். “நீண்ட தூர பயணம், ஒழுங்கற்ற நேர முறைகளுடன், சுற்றுச் சூழல் மாசுபாடும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன” என்கிறார் அவர்.

`இதயநோய் பிரச்சினை ஏற்படும் வயதும் குறைந்து கொடே வருகிறது’ என்று மருத்துவர்கள் `பகீரிட’ச் செய்கின்றனர். பாரம்பரியமாக இதயநோய் பிரச்சினை இல்லாத ஒரு 28 வயது இளைஞர் தொடர் புகைபழக்கத்தின் காரணமாகவே இறந்து விட்டார் என்கிறார், மற்றொரு மருத்துவரான சந்தர் வஞ்சானி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மற்றொரு நபரும் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாக நேரிட் டது என்று அவர் கூறுகிறார். “கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும், ஒழுங்கில்லாத கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்- உயர் ரத்தஅழுத்த பிரச்சினை தொடர்பாக, 25 முதல் 39 வயதுக்கு உட் பட்ட 10 பேர் என்னை வந்து பார்த்திருக் கின்றனர்” என்கிறார் சந்தர். மனஅழுத்தத் துக்கு உள்ளாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்வதன் முலம் இதயத்தைம் காக்க லாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
போதுமான தூக்கம்

மிகவும் `பிசி’யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்’ வேக வாழ்க்கைமுறைக்கு பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்’ என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். “இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராக பராமரப்பிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொடிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை’ பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது” என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.
அதிகமாக உடற்பயிற்சி செய்வது

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “நம்மை நாமே தடித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது” என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜுதா. “அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாக பலன் தரும். அதை போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது” என்கிறார் ருஜுதா.

நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிக பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. “போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது’ என்று ஆகிவிடுவார்கள்” என்று ருஜுதா எச்சரிக்கிறார்.

முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள்.

சென்னை `முதலிடம்’

நாடு தழுவிய அளவில் 8 ஆயிரத்து 469 பேரிடம் மேற்கொள்ளபட்ட ஓர் ஆய்வில், 49.1 சதவீத இந்தியர்களுக்கு இதயநோய் ஏற்படுவதற்கான உயர் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் (1598 பேர்) இருபது தெரிய வந்திருக்கிறது.

அதிலும் அபாய பட்டியலில் முதலில் இருப்பவர்கள் நமது சென்னைக்காரர்கள்தான் (53.8 சதவீதம்). அடுத்த இடம் மும்பைக்கு (49.6 சதவீதம்). இந்நிலைக்கான காரணங்களாக மருத்துவர்கள் கூறுவது, நீண்ட வேலைநேரம், பயணம், ஆரோக்கியமற்ற உணவு முறை, போதுமான உடற்பயிற்சி இல்லாத நிலை போன்றவை ஆகும். கொஞ்சம் கவனம் எடுத்து பொறுப்பாக நடந்துகொண்டால் போதும், இதயம் காக்கலாம் என்கின்றனர் இதய நிபுணர்கள்.
+++