புகைக்கும் பெண்கள்…

`இந்திய பெண்கள் சிகரெட் புகைப்பதில் உலக அளவில் முன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்’ என்று சொன்னால் நம்புவீர்களா? கசப்பானது என்றாலும் அதுதான் உண்மை.

இந்த விஷயத்தில் `டாப் 20′ நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு முன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

அமெரிக்காவில் 2 கோடியே 30 லட்சம் பெண்களும், சீனாவில் 1 கோடியே 30 லட்சம் பெண்களும் புகைத்துத் தள்ளுகிறார்கள். சதவீதக் கணக்கை பொறுத்தவரை இந்தியாவில் 2 சதவீதத்துக்குக் குறைவான பெண்களே வெண்குழல் வத்தியை பத்த வைக்கிறார்கள் என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதல்.

இந்த விஷயத்தில் 30 லட்சம் பெண் புகைபாளர்களுடன் 20-வது இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.

இந்தியாவில் புகைக்கும் பெண்கள், புகை பழக்கம் இல்லாத சக மகளிரை விட எட்டாண்டுகளுக்கு முன்பே இறந்துவிடுகிறார்கள் என்பது அடுத்தகட்ட அதிர்ச்சி.

உலகஅளவில் 2 கோடியே 50 லட்சம் பெண்கள் தினசரி புகைக்கிறார்கள். அவர்களில் 22 சதவீதம் பேர் வளமிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். 9 சதவீதம் பேர் நடுத்தட்டு மற்றும் கீழ்நிலை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் புகைக்கும் பெண்களின் சதவீதம் அவ்வளவு அதிகமில்லை என்றபோதும், எண்ணிக்கை மிக பெரியதாக உள்ளது. புகை பழக்கத்தால் பெண்கள் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். காரணம் அவர்களின் மகபேற்றுத் திறனை அது பெரியஅளவில் பாதித்து விடுகிறது. புகையிலை பழக்கங்களால் ஆண்டு தோறும் உலகளவில் 60 லட்சம் பேர் இறக்கின்றனர்.

%d bloggers like this: