Daily Archives: நவம்பர் 26th, 2009

இல்லத்தரசிகளுக்கு ஒரு காவல்காரன்!

நகரத்து வாழ்க்கை, பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே வசதியானது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கோ சிறிது அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை செய்திகள் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. இதனால் பணிக்கு செல்லும் ஆண்கள்கூட அச்சப்படுவது உண்டு.

நகரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட அறிமுகம் இல்லாதவராக இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட ஒருவருக்கொருவர் பழக்கம் வைத்திருப்பது அரிதாக இருக்கிறது. இதனால் கதவுகளை தாழிட்டபடி வீட்டின் உள்ளேயே மக்கள் வசிக்கிறார்கள்.

இப்படி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில் ஒரு புதிய கருவி வந்திருக்கிறது. இந்தக் கருவியை கதவில் பொருத்திவிட்டால் போதும். கதவை யார் தொட்டாலும் உள்ளே இருக்கும் திரையில் அவர்களின் படம் தெரிந்துவிடும். இதனால் திருடர்கள் பயம், அறிமுகம் இல்லாதவர்கள் பற்றிய அச்சம் ஆகியவற்றைத் தவிர்த்து நாம் உஷாராகிவிடலாம்.

இந்தக் கருவியின் பெயர் `டிஜிட்டல் பீஹோல் விவர்’ (ஈகூகீகூஞ்ஹஙீ டக்க்சிகுச்ஙீக் யகூக்ஞுக்சு) எனப்படும். ஆஸ்திரேலியாவில் வடிவமைக்கப்பட்ட இந்தக்கருவியில் உள்ள கேமரா லென்சுகள் படம் பிடித்தும், சென்சார்கள் அதிர்வை கண்காணித்தும் எச்சரிக்கும். இந்தக்கருவியை படம் மட்டும் காட்டும் வகையிலும் அமைக்கலாம். எச்சரிக்கை ஒலி தரும் வகையிலும் அமைத்துக் கொள்ளலாம்.

இரவிலும் தெளிவான படம் காட்டும் வகையில் சிறப்பான தொழில்ட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 10 வினாடிகளுக்கு ஒருமுறை தானாகவே `சுவிட்ச் ஆப்’ ஆகிவிடும். இதனால் பேட்டரி நீண்ட நாள் உழைக்கும். திரையில் தெரியும் படங்களை பெரிதாக்கியும் பார்த்துக் கொள்ளலாம்.

இல்லத்தரசிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்தக் கருவியின் விலை ரூ.6 ஆயிரத்து 700 ஆகும்.

தாய் மொழியில் அழுகை!


தாய்மொழியில் அழுகையா? வினோதமாக இருக்கிறதுதானே! குழந்தையின் அழுகை எதையோ உணர்த்தும் பாஷை என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால் அது தாய்மொழியில் அழுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

குழந்தைகள் தாய்மொழியில் அழுகிறது என்பதே ஆச்சரியம். மேலும் கருவில் இருக்கும்போதே அழுகிறது என்றும் வியப்பூட்ட வைக்கிறார்கள் ஜெர்மன் விஞ்ஞானிகள்.

இதற்காக 30 ஜெர்மன் குழந்தைகளையும், 30 பிரெஞ்ச் குழந்தைகளையும் ஆய்வுக்குழு பரிசோதித்தது. ஆய்வில், குழந்தை அழும்போது அதன் குரலில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் அதன் தாய்மொழியை ஒத்திருப்பதாக கண்டுபிடித்தனர்.

அதாவது பிரெஞ்சு குழந்தைகள் அழும்போது மெலிதாகவும், நீண்ட நேரமும் அழுகின்றன. அதே நேரத்தில் ஜெர்மன் குழந்தைகள் நேர்மாறாக சப்தமாக அழத் தொடங்கி சிறிது நேரத்தில் நிறுத்திவிடுகிறது. ஆனால் சராசரி ஒலி அளவைப் பார்த்தால் இரு குழந்தைகளும் ஒரேவிதமாகவே அழுது முடிக்கின்றன. பிரெஞ்ச் குழந்தைகள் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து மெல்ல மெல்ல வேகமாக அழத்தொடங்குகிறது. ஜெர்மன் குழந்தைகளோ நேர்மாறாக முதலில் வேகமாக அழத்தொடங்கி சப்தத்தைக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்திவிடுகிறது.

இந்த ஏற்ற இறக்கங்கள் அவற்றின் தாய்மொழிகளை ஒத்திருக்கின்றனவாம். இதற்கு கீழ்க்கண்டவாறு விளக்கம் தருகிறார் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி ஏஞ்சலோ.

“பாபா, என்ற ஜெர்மன் சொல்லை உச்சரிக்கும்போது ஆரம்பத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டியது இருக்கும். இதே வார்த்தையை பிரெஞ்சு மொழியில் ஆரம்பத்தில் மெலிதாகவும் இறுதியில் அழுத்தமாகவும் உச்சரிக்க வேண்டியதிருக்கும். இதுபோலவே குழந்தைகளின் அழுகையும் இருக்கிறது” என்கிறார் அவர்.

மேலும் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் அழுவது சற்று தொலைவில் இருந்து கேட்டால் பாடுவதுபோல இருக்கிறதாம். அதே நேரத்தில் 12 வாரங்கள் ஆன குழந்தை அழும்போது தாய், தந்தையரைப் போல மிமிக்கிரி (ஒலி பாவனை) செய்வதுபோல இருக்கிறது என்றும் ஆய்வாளர் கூறுகிறார்.

மொத்தத்தில், “குழந்தைகள் மொழிப்புலமையை கருவிலேயே பெற்றுவிடுகிறது” என்கிறது ஆய்வு முடிவு.

“அத்தை அடிச்சாளோ, மாமன் அடிச்சாரோ, யாரடிச்சா சொல்லி அழு” என்று கேட்கிறோம். அது தாய்மொழியில்தான் அழுகிறதாம், உங்களுக்குப் புரிகிறதா?

மிரட்டும் தங்கம்!


தங்கம்தான் இன்று நடுத்தரக் குடும்பங்களைக் கவலைப்படுத்தும் பிரதான விஷயமாகிவிட்டது. அதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலை. `எங்கே செல்லும் இந்தப் பாதை?’ என்கிற மாதிரி, எங்கே போய் நிற்கும் இந்த விலையேற்றம் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் அலைபாய்கிறது.

புதிய உயர்வாக, 10 கிராம் 16 ஆயிரத்து 900 என்ற எவரெஸ்ட் உச்சத்தை எட்டியிருக்கும் தங்கம், மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள். திருமண சீசன், வலுவான உலக அளவிலான தேவை போன்றவை விலை எகிறுவதற்கு முக்கியக் காரணங்கள்.வரலாறு காணாத விலை உயர்வை தங்கம் தொடர்ந்து சாதித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கச் சந்தையில் இதுவரையில்லாத உயர்வாக ஓர் `அவுன்ஸ்’ தங்கம் ஆயிரத்து 99 டாலர்கள் ஆனது.

முதலீடாக தங்கம் புதிதாக வாங்கப்படுவதும், திருமண சீசனின் தேவையைச் சமாளிக்க நகைத் தயாரிப்பாளர்கள் அதிகளவில் தங்கம் வாங்குவதும் இந்த மகிமை மிக்க மஞ்சள் உலோகம் விலையில் சாதனை படைப்பதற்கு முக்கியக் காரணிகளாகும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

டாலர் வீழ்ச்சியால் தங்கத்தில் அதிகமான நாடுகள் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது ஒரு காரணம் என்பது உட்பட மேலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன, அலசல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த சில விற்பனை சீசன்களாக ஏறுமுகத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கம் வாங்கிய நடவடிக்கையும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் நடவடிக்கையை மேலும் பல நாடுகள் தொடரும் ஊகம் உலா வருகிறது. சவரனுக்கு 14 ஆயிரம் என்ற நிலையை நெருங்கி நிற்கிறது தங்கம். ஒரு `குறிப்பிட்ட’ நிலையை எட்டி தங்கம் நின்று

விடும் இரண்டு வருடங்களுக்காவது அந்த நிலை நீடிக்கும் என்று கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம், கலாச்சாரம் சார்ந்த விஷயமாக இருப்பதால் வாங்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவித்து நிற்கிறது நடுத்தர வர்க்கம். அலங்காரத்துக்கு `கவரிங்’கை நாடலாம் என்றாலும், திருமணம், சுபநிகழ்ச்சிகள் போன்ற அத்தியாவசியங்களுக்கு என்ன செய்வது என்பதே மக்களின் ஆழ்ந்த யோசனை.

தங்கம் அளவுக்கு இல்லாவிட்டாலும் வெள்ளியும் ஏணிப் படிகளில் ஏறிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ வெள்ளி 27 ஆயிரத்து 50 ரூபாய் என்ற நிலையில் உள்ளது.

எய்ட்ஸ் தடுப்பு மருந்து ஆய்வில் முன்னேற்றம்


உயிர்க்கொல்லி நோயான எய்ட்சை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒருபுறம் முயற்சிகள் மேற்கொண்டுவர… மறுபுறம் அந்த நோயை தடுப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான ஆராய்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வந்தாலும், அதில் எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்க வில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் நிதி உதவியோடு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட எய்ட்ஸ் தடுப்பு மருந்தும், இன்னொரு பகுதியினருக்கு வழக்கமாக பயன்படுத்தும் தடுப்பு ஊசியும் போடப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்களுக்கு, வழக்கமான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களை விட 30 சதவீதம் கூடுதலாக எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்த ஆய்வு முடிவு, எய்ட்சை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

இந்திய கர்ப்பிணிகளை மிரட்டும் நீரிழிவு நோய்


சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிற நீரிழிவுநோய் ஜனத்தொகை அதிகம் கொண்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதேபோல், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், ஜனத்தொகை அதிகமுள்ள வளர்ந்து வருகின்ற மற்றும் பின்தங்கிய நாடுகளில்தான் இந்த நோய் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

நீரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்பட, அவரது உணவு பழக்கவழக்கம் மட்டுமின்றி, மரபுவழிக் காரணிகளும் காரணமாக இருக்கிறது.

இந்நிலையில், கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை மூலம் மரபுவழியாக பரவலாம் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்

படுத்திவிடுகிறது. அதற்கு ஈடுகொடுக் கும் விதமாக, கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. இது இயற்கையான ஒன்று.

ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம் இந்த கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை. இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்திய பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 11 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரபணுக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் இந்தியப் பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு பெண்ணுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்பட்ட இந்த நோய், அவளது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்குமா? என்று கேட்டால், அதற்கும் ஆம் என்று பதிலளிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது :

இந்த கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை

கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தையும் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

இப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலினை சுரப்பது தவறு. அப்படி சுரப்பதன் மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தையின் எடை மிகவும் அதிகமாகி, இயற்கையான முறையில் பிரசவம் நடக்க முடியாமல் போய், பிரசவ காலத்தில் தாய் – சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம்.

அது மட்டுமல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது, குழந்தையின் உள்ளுறுப்புகளில் குறைபாடு ஏற்படுவது போன்ற பல பிரச்சினைகள் இதனால் உருவாகக்கூடிய ஆபத்துக்களும் இருக்கின்றன. அதோடு, இத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவுநோய் தாக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கருவுற்ற நான்காவது மாதம் முதல் தாயின் ரத்த பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவுநோயை கண்டுபிடிக்க முடியும்.

கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் 90 சதவீதத்தினருக்கு உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே அவர்களின் நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்திவிட முடியும். மற்றவர்களுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம்.

வாழ்க்கை தத்துவம்

இந்த உலகில் மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. எதிர்மறையாகச் சிந்திபவர்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ஆகும். சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அவர்கள் எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ளதாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம்.   `ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறியவுடன் நாம் ஆசைபடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது. நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை, அது நிறைவேறியவுடன் `பைக்’ மீது திரும்புகிறது. அது நிறைவேறியவுடன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது நம்மிடம் இருக்கின்ற பொருள்களைக் கொண்டு திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும்.   வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், `நான் எப்போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று புலம்பி அடுத்தகட்ட முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் `நம்மால் முடியாது’ என்ற எண்ணமே. முதலில் அந்த எண்ணத்தைத் தூக்கி போட்டுவிட்டு, உங்களின் கடந்த கால வெற்றிகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வாருங்கள். நீங்கள் பெற்ற வெற்றியின் சாதனைபட்டியல் உங்களை அடுத்த வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.   ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்தவராக இருப்பார். அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரிடம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி நம்மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நாமே சிறந்தவர் என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சாதனைகள், வெற்றிகள் சிறியதாக இருந்தாலும் அதை எண்ணி பெருமைபட வேண்டும். அதற்காக தற்பெருமைடன் திரியக் கூடாது.   வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமான சம்பவங்களும் உண்டு, கசப்பான சம்பவங்களும் உண்டு. கசப்பை ஜீரணித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. `எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது?’ என்று எண்ணி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பலர். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அதை புரிந்து கொண்டு வெற்றிக்கான தேடலைத் தொடங்குங்கள்.   மற்றவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுபவர்களை விட, பொறாமைபடுபவர்களே அதிகம். ஒருவரை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் அவரிடம் உள்ள பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கபடுத்துவதன் முலம் நாமும் முன்னேற முடியும். இப்படிச் செய்வதால் அவர் பெற்ற வெற்றி ஒருநாள் உங்கள் பக்கமும் திரும்பும். அதேநேரம் உங்களைவிடவும் அதிகமானோர் இன்னும் மேலே வர முடியாமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.   ஒருவருடைய வெற்றியை பார்த்து பொறாமைபடுவதை விட, அந்த வெற்றியை நாமும் அடைய முயற்சி செய்வது தான் சரியான வழி. அனுபவம் இல்லாமல் திடீரென ஒரு செயலில் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும். எனவே, பிறருடைய வெற்றியில் பங்கு கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், சரியான வாய்புகள் வரும்போது வெற்றியை அடையலாம். ஒரே குறிக்கோளை அடைய எண்ணி இருவர் முயற்சி செய்யும்போது ஒருவரை மற்றவர் ஊக்கபடுத்தினால் வெற்றியின் இலக்கை விரைவில் அடையலாம்.   எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருபவர்கள், தன்னை பற்றி ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் நல்ல விமர்சனங்களை உருவாக்கக் கூடிய வாய்புகளை அவர்கள் இழக்கக் கூடும். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், நல்ல விமர்சனங்களை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுங்கள். பிறருடன் ஆக்கபூர்வமாக பேசுவதே உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்துவதுடன், நீங்களே உங்களை பற்றி உயர்வாக உணரவும் வழிவகுக்கும்.   எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய அர்பணிப்பும், தெளிவான குறிக்கோளும் அவசியம். முதலில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிங்கள். அதற்காக உங்களின் சக்தி முழுவதையும் செலவழிங்கள். உங்களுடைய வாழ்க்கையையே அர்பணியுங்கள். அந்த செயலில் தோற்றால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதையும் தாமதிக்காமல் உடனே செய்யுங்கள்.   பிறருடைய வெற்றியில் இருந்தோ அல்லது தோல்வியில் இருந்தோ உங்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்ளுங்கள். அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எந்த விஷயங்களை புதிதாக சேர்த்துக் கொண்டார்? எந்த விஷயங்களை தம்மிடம் இருந்து விலக்கி வைத்தார்? போன்ற விஷயங்களை வெற்றி பெற்றவரிடம் இருந்தும், என்ன காரணத்திற்காகத் தோல்வியைத் தழுவினார் என்பதை தோல்வி அடைந்தவரிடம் இருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் இதை தெரிஞ்சுக்கணும்..!

1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.

2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

3. எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

4. பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

5. சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைபது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன.

6. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கபடும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும்.

7. டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள்.

8. வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

9. குடிரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் வெப்பத்தால் உடான உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.

10. வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்க ளிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும்.

11. பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.

12. பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும்.

13. திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும்.

14. புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம்.

15. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.

விண்டோஸ் ஆன்லைன் டிரைவ்


என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் (Windows Live SkyDrive) வசதியாகும்.
இந்த டிரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் டிரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் டிரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம். இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் டிரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.
என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் (Windows Live SkyDrive) வசதியாகும்.
இந்த டிரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் டிரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் டிரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம். இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் டிரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.

கிருபானந்த வாரியார்- குளிர் அறையில் கொதிப்பு

பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கூடாது. யாசகம் வாங்கி சோம்பேறியாக வாழ்வதும் கூடாது. பிறர் பொருளில் நெய்யும் பாலும் உண்பதைக் காட்டிலும் தன் உழைப்பினால் தண்ணீரும் சோறும் உண்பதே சிறப்பானதாகும். மூன்று பொருள்களை மிச்சமாக வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை நெருப்பு, கடன், பகை என்று குறிப்பிடுகின்றன. நெருப்பு மிச்சமிருந்தால் அந்த இடத்தையே பொசுக்கிவிடும். கடன் மிச்சமிருந்தால் வளர்ந்து சுமையாகி விடும். பகைவன் மிச்சமிருந்தால் சமயம் பார்த்து நம்மை அழித்து விடுவான். எந்த நேரம் இறைவனுடைய திருநாமம் நினைக்கப் பட்டதோ அந்த நேரம் எல்லாம் நம்முடைய நேரமாகும். எந்த பணம் தர்மத்திற்காக செலவழிக்கப்பட்டதோ அது நம்முடைய பணமாகும். இவ்விரண்டும் எப்போதும் உதவ நமக்காக காத்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி என்பது செல்வச் செழிப்பிலோ அல்லது பெரியமாட மாளிகையிலோ கிடைப்பதில்லை. ஏர்கண்டிஷன் அறையில் இருக்கும் ஒருவன் மனக்கொதிப்புடன் இருக்கக்கூடும். ஆனால், உச்சி வெயிலில் விறகினைப் பிளப்பவனின் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். மகிழ்ச்சி என்பது மனநிலையைப் பொறுத்ததே தவிர பணத்தைப் பொறுத்தது அல்ல.