எய்ட்ஸ் தடுப்பு மருந்து ஆய்வில் முன்னேற்றம்


உயிர்க்கொல்லி நோயான எய்ட்சை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒருபுறம் முயற்சிகள் மேற்கொண்டுவர… மறுபுறம் அந்த நோயை தடுப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான ஆராய்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வந்தாலும், அதில் எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்க வில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் நிதி உதவியோடு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட எய்ட்ஸ் தடுப்பு மருந்தும், இன்னொரு பகுதியினருக்கு வழக்கமாக பயன்படுத்தும் தடுப்பு ஊசியும் போடப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்களுக்கு, வழக்கமான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களை விட 30 சதவீதம் கூடுதலாக எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்த ஆய்வு முடிவு, எய்ட்சை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

%d bloggers like this: