Daily Archives: நவம்பர் 27th, 2009

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?!

ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும். தன்னுடைய இளம்பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதிக்காக ஏங்குகிறார்கள். எந்த பணம் அவர்களைத் துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததோ, அந்த பணத்தை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.

எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளைம், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை

வடிவமைக்கிறது.பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக் கூடாது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது.

மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைபடுகிறவர்கள் என இரண்டு வகை. நியாயமான கவலைகள் மனித இயல்பு. நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைபடுவதும், அடுத்து தொலைத்ததை விட பணக்கார உறவினர் முலமாக அதிகபணம் ஈட்டிவிட முடிமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும்?

வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது? கொடுத்த கடன் திரும்ப வருமா? பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா? இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிபார்க்கும்.

கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.

அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.

இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடைகடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.

சவால் என்பது சாதாரணமல்ல… ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்..

நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிறபோது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.

ங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கபடுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது.

வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக்கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள்.

எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.

ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.

ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்… ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோது… அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.

எக்ஸெல் டிப்ஸ்… டிப்ஸ்….

 

வரிசைகள் எத்தனை?
எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்?
மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக வராது. எக்ஸெல் இதற்கென்றே ஒரு வசதியைக் கொண்டுள்ளது.
எக்ஸெல் தொகுப்பே உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்திடும் வரிசைகளை எண்ணிச் சொல்லும். அதுவும் நீங்கள் செல்களை ஹைலைட் செய்திடும்போதே அவை எண்ணப்பட்டு எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குச் சொல்லப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வசதி உங்கள் கண் முன் எப்போதும் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை இது வரை உற்று நோக்கவில்லை. அதனை இங்கு பார்ப்போம். அடுத்த முறை நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திடுகையில் படுக்கை வரிசைகளுக்கான எழுத்துக்கள் தோன்றும் இடத்திற்கு மேலாகப் பாருங்கள். அல்லது இறுதியாக ஹைலைட் ஆன செல்லுக்கு அருகாமையில் மேலாகப் பாருங்கள். எத்தனை காலம் எனக் காட்டப்படும். எடுத்துக்காட்டாக நான்கு காலம் என்றால் 4இ எனக் காட்டப்படும். காலம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே போல ரோ எனப்படும் படுக்கை வரிசை செலக்ட் ஆகும்போது 4கீ எனக் காட்டப்படும். எங்கே, உடனே இந்த எண்ணிக்கையை முயற்சி செய்து பார்த்துவிடுங்கள்.

படுக்கை வரிசைகளை இடைச்சேர்க்க:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இன்ஸெர்ட் மூலம் ஒரு வரிசையினை இணைப்பது எளிது. ஆனால் பல வரிசைகளை இணைக்க விரும்பினால் என்ன செய்வது? அதற்கான இரு வழிகளை இங்கு காணலாம். ஒவ்வொன்றாக இன்ஸெர்ட் அழுத்தி அடுத்தடுத்து வரிசைகளை இணைக்கலாம். முதல் வரிசையை இணைத்தவுடன் எப்4 கீயை அழுத்தினால், அழுத்த அழுத்த ஒரு வரிசை இணைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். (எப்4 கீ அழுத்துகையில் அதற்கு முன்னால் என்ன செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதோ அதே செயல்பாடு திரும்ப மேற்கொள்ளப்படும் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.)
இன்னொரு வழி தான் இங்கு புதிதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் ஐந்து படுக்கை வரிசைகளை இணைக்க விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு இணைக்குமுன், ஏற்கனவே இருக்கின்ற ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் இன்ஸெர்ட் மெனுவில் கீணிதீண் என்பதைத் தேர்ந்தெடுத்தால், எக்ஸெல் அழகாக ஐந்து படுக்கை வரிசைகளை இன்ஸெர்ட் செய்திடும்.

செல் பார்முலா :
செல் ஒன்றில் உள்ள எண்ணைக் கொண்டு, பார்முலா ஒன்றை அமைக்கிறீர்கள். அந்த செல்லில் எண் உள்ளதோ இல்லையோ, எக்ஸெல் அந்த செல்லைத் தேடி, அதில் உள்ள மதிப்பைக் கொண்டு பார்முலாவினை இயக்கத் தொடங்கும். எண் இல்லாவிட்டால் என்ன ஆகும்? அல்லது எண்ணுக்குப் பதிலாக டெக்ஸ்ட் இருந்தால் விளைவு என்ன? அதில் எண்ணை நிரப்புமாறு கட்டளை இடச் சொல்லி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, A3 செல்லில் உள்ள மதிப்பைக் கொண்டு ஒரு பார்முலாவினை அமைக்கிறீர்கள். பார்முலா இப்படி அமைக்கலாம் =IF(ISNUMBER(A3), (A3*12)/52,”Enter number in cell A3″). A3 செல்லில் எண் இருந்தால், A3 * 12) / 52 என்ற கணக்கின் அடிப்படையில் மதிப்பு பார்முலாவிற்கான செல்லில் அமைக்கப்படும். இல்லை என்றால் “Enter number in cell A3.” என்ற டெக்ஸ்ட் அமைக்கப்படும்.

மைக்ரோசாப்ட் ஆன்லைன் சேவை


சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கை களுக்கான செலவினைக் குறைக்கும் வழிகளை மைக்ரோசாப்ட் தன் ஆன்லைன் சேவை மூலம் வழங்குகிறது. டில்லியில் அண்மையில் இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடக்க கட்டணம் மாதம் ரூ.95 (2 டாலர்). மின்னஞ்சல், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, இன்டர்நெட் வழி கான்பரன்சிங் மற்றும் இவை சார்ந்த வழிகளை ஒரு நிறுவனம் தனக்கெனப் பெற்றுப் பயன்படுத்த முடியும். இந்த சேவையினை www.microsoft.com/india/onlineservices என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளம் சென்று பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் சேவைக்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென இணைய தள சேவையை கூடுதல் செலவின்றி பெற முடியும். மேலும் இந்த சேவையினைத் தங்கள் நிறுவன வளாகம் மட்டுமின்றி, எந்த இடத்திலிருந்தும் பெற முடியும். இதனால் நிறுவனத்தின் நிர்வாகத்திறன் உயரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இன்றைய போட்டி மிகுந்த உலகில், வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தி, செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்கான செலவை மிச்சப்படுத்த இந்த ஆன்லைன் வசதி கை கொடுக்கும் என இதனை அறிமுகப்படுத்திய விழாவில் மைக்ரோசாப்ட் பிசினஸ் குரூப் தலைவர் ஸ்டீபன் குறிப்பிட்டார். இந்த சேவைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் எச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த சேவை முறை, சோதனை முறையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஏறத்தாழ 1,800 பேர் இதனைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நிறைவான வரவேற்பினைத் தெரிவித்ததால், சென்ற நவம்பர் 7 முதல் இது முழுமையாக அறிமுகமாகியுள்ளது. இந்த சேவைப்பிரிவில் மின்னஞ்சல்களுக்கு ஆன்லைன் எக்சேஞ்ச், இணைய தளங்களைப் பயன்படுத்த ஆபீஸ் ஷேர் பாய்ண்ட், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன அலுவலர்கள் இடையே கலந்தாய்வு மேற்கொள்ள ஆபீஸ் லைவ் மீட்டிங், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்பி பதில் பெற மைக்ரோசாப்ட் ஹோஸ்டட் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் ஆகிய வசதிகள் தரப்படுகின்றன

விறுவிறு வளர்ச்சி காணும் காப்பீட்டுத் துறை


கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் காப்பீட்டுத் தொழில்துறையில் இரு அடிப்படை நிறுவனங்கள்தான் இருந்தன. ஒன்று, `லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்.ஐ.சி.) மற்றொன்று `ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (ஜி.ஐ.சி). இரண்டுமே அரசுத் துறை நிறுவனங்கள். ஜி.ஐ.சி., நான்கு துணை நிறுவனங்களைக் கொண்டிருந்தது. அவை, ஒரியண்டல் இன்சூரன்ஸ், நி இண்டியா அஸ்ரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் ஆகியவை. அவை ஜி.ஐ.சி.யில் இருந்து 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிக்கப்பட்டன.

இந்தியாவில் காப்பீட்டுத் தொழில்துறை நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, ஆயுள் காப்பீடு, தீவிபத்துக் காப்பீடு, கடல் காப்பீடு, பொது மற்றும் பிறவற்றுக்கான காப்பீடு.

2000-2001-ல் புதிதாக 16 காப்பீட்டு நிறுவனங்கள் வந்தன. சந்தைக்குப் பல நிறுவனங்கள் வந்ததால், தற்போது இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் காப்பீட்டுத் தொழில் துறை பெருமளவில் வளர்ந்துள்ளது. அதேநேரம் இது அதிகமான வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் முதல், பட்டதாரிகள், தொழிற்படிப்பு படித்தவர்கள், புள்ளியியலாளர்கள், எம்.பி.ஏ. பட்டதாரிகள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரதிநிதிகள், `ரிஸ்க்’ மேலாளர்கள், பொறியாளர்கள், மேலாளர்கள், தகவல் தொழில்ட்ப நிபுணர்கள், மனிதவள மேலாளர்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலர்கள் என்று தேவைப்படுபவர்களின் பட்டியல் நீளமானது. வர்த்தகம், தொழில், கலை, சட்டம் மற்றும் தகவல் தொழில்ட்பப் பட்டதாரிகள் என பல்வேறு வகை பட்டதாரிகள் காப்பீட்டுத் துறையில் பணிபுரிய ஏற்றவர்கள். பட்டப் படிப்புடன், காப்பீட்டுத் துறை பற்றிய அறிவும் உள்ளவர்களுக்கு நல்ல `டிமாண்ட்’ உள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்சூரன்ஸ் மற்றும் ரீஇன்சூரன்ஸ் முகவர்கள், ரீஇன்சூரன்ஸ் கம்பெனிகள், புள்ளிவிவர நிறுவனங்கள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள், ண்கடன் நிறுவனங்கள், `கிளெய்ம்’ விஷயங்களைக் கவனிக்கும் தகவல் தொழில்ட்ப நிறுவனங்கள் இன்சூரன்ஸ் அறிவு உள்ளவர்களைப் பணியில் அமர்த்துகின்றன.

முதன்முதலாக வேலை தேடுபவர்களுக்கு நிர்வாக பயிற்சி அலுவலர்கள், எக்சிக்ட்டிவ் பயிற்சி அலுவலர்கள், பிசினஸ் அனலிஸ்ட்கள், பிசினஸ் மேம்பாட்டு மேலாளர், ஆக்சூரியல் அனலிஸ்ட், இன்சூரன்ஸ் அனலிஸ்ட் போன்ற வாய்ப்புகள் உள்ளன. அவை நிறுவனம் மற்றும் ஒருவரின் தகுதியைப் பொறுத்தவை.

பொதுக் காப்பீட்டுத் துறைக்கு வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரீமியத் தொகையை நிர்ணயம் செய்துகொள்ளும் சுதந்திரம் ஏற்பட்டுள்ளது. `ரிஸ்க்’ ஏற்புத் திறன், `ரிஸ்க்’ மேலாண்மை நடைமுறையைப் பொறுத்து நிறுவனங்கள் பிரீமியத்தை நிர்ணயித்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

உலக அளவில் ஒப்பிடும்போது, மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு தவிர்த்த காப்பீடுகள் பெற்றவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. எனவே காப்பீட்டுத் துறை இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெறுவதற்கான அடிப்படை உள்ளது.

வாழ்க்கை மற்றும் சொத்துகளுக்கான பாதுகாப்பு கணிக்க முடியாததாக மாறிக் கொண்டிருப்பதால், ஒரு பாதுகாப்பு அமைப்பாக காப்பீட்டை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனவே இத்துறையில் வளர்ச்சி வாய்ப்பும், இத்துறையில் வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பும் உள்ளன என்பது உண்மை.

கலர் கலராய் கவரும் காலணி


ஆடை, ஆபரண மோகம் மட்டுமல்ல; விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் பெண்களுக்கு அதிகரித்துவிட்டது.

எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

எனக்கு தெரிந்த ஒரு பெண் சற்று உடல் எடை அதிகமாக கொண்டவர். இப்போதெல்லாம், டி.வி. நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்துபோகும் மாடல்கள் ஒய்யாரமாக அணிந்துவரும் ஹீல்ஸ் செருப்பை தானும் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை.

அந்த மாடல் செருப்பு தனக்கு ஒத்து வருமா? என்ற சந்தேகத்துடன், பெரிய ஷோரு ம்களுக்குச் சென்று தேடிபிடித்து அதை வாங்கி வந்துவிட்டார். அவரது கால் சைசுக்கு தகுந்தாற்போல் பெரிய அளவிலேயே ஹீல்சை தேர்வு செய்திருந்தார்.

எதற்கும் ஹீல்சை பார்ட்டிகளுக்கு அணிந்து போவதற்குமுன், வீட்டில் அதை போட்டுக்கொண்டு கொஞ்சம் டிரெய்லர் பார்ப்போமே… என்ற எண்ணத்தில், அதை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடக்க முயற்சித்தார்.

ஆனால், முதல் அடியே பலமாக விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கஷ்டப்பட்டு காலை ஹீல்சுக்குள் விட்டவர், இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் தொபுக்கடீர்னு கீழே விழுந்து அடி வாங்கிக்கொண்டதுதான் மிச்சம்.

பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.

எந்த பொருளாக இருந்தாலும் அதற்கு ஆரம்பம் ஒன்று இருக்கும். இந்த செருப்புக்கு என்றும் வரலாறு உண்டு.

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீக வளர்ச்சியை எட்டாத மனிதர்கள் செருப்பு அணிந்து காடுகளில் அலைந்து திரிந்துள்ளனர். அமெரிக்காவில் போர்ட்ராக்கேவ் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள்தான் உலகில் முதன் முதலில் செருப்பை அணிந்துகொண்ட பெருமைக்கு உரியவர்கள்.

இவர்கள் தாவரம் மற்றும் மரங்களின் இலை-தழைகளை மொத்தமாக கோர்த்து, அதை செருப்பு போன்று அணிந்துள்ளனர். அதன்பிறகுதான், பூமியின் பிற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் செருப்பின் அவசியத்தை உணர்ந்து, அதை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

காலபோக்கில் இலை-தழைகளுக்கு பதிலாக மரம், விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை பயன்படுத்தியும் செருப்புகள் உருவாக்கிக்கொண்டார்கள். சில நுறு ஆண்டுகளுக்கு முன்புதான் நாகரீக செருப்புகள் உருவாக்கபட்டு, பயன்பாட்டுக்கு வந்தன.

செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.

பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.

இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.

எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.

இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அணிகின்றனர். நடிகைகளின் கால்களை அலங்கரிக்கும் இந்த அழகு செருப்புகள் தங்கள் கால்களையும் அலங்கரித்தால் எப்படி இருக்கும்? என்று எணும் இன்றைய புதுமை விரும்பி பெண்கள், அந்த குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள்.

இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக்காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக்அப் ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ… என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன.

இந்த செருப்பு வகைகளுடன் மேரி ஜேன் என்ற செருப்பும் இன்றைய புட்வேர் மார்க்கெட்டில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த செருப்பை வடிவமைத்து உருவாக்கியவர் அமெரிக்க பெண்ணான மேரி ஜேன். அவரது பெயரிலேயே அவர் உருவாக்கிய செருப்பு அழைக்கபடுகிறது. ப்யூர் லெதரால் உருவாக்கப்படும் இந்த செருப்பு, அதை அணிந்து கொள்ளும் பெண்களின் கால்களை கடிக்காது. மாறாக, மென்மையை கொடுக்கிறது.ஹீல்ஸ் வகை செருப்புகள் பெண்களுக்கு பல வழிகளிலும் உதவி புரிகின்றன. குட்டையான பெண்கள் அதை அணிந்துகொண்டால் உயரமான பெண்ணாகி விடுகிறார்கள்.

இந்த ஹீல்ஸ் வகை செருப்பை அணிந்து கொண்டால் முட்டு வலி ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். பொருத்தமான ஹீல்சை தேர்வு செய்து அணிந்தால் இந்த பயம் தேவையில்லை. புதிதாக ஹீல்சை அணியும்போது வலி இருக்கலாம். நாளடைவில் அது சரியாகிவிடும். புதிதாய் எந்த செருப்பு வாங்கி அணிந்துகொண்டாலும் கடிக்கும்தானே…?

ஹீல்சில் பிளாட் மற்றும் பாயின்ட்டட் மாடல்கள் இன்று நிறைய கிடைக்கின்றன. 40 முதல் 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்கள் மாத்திரமே பாயின்ட்டட் மாடல் ஹீல்சை அணிந்துகொள்ளலாம். மற்றவர்கள் அணிந்தால் சிரமமாக இருக்கும். நடக்கும்போது கால் இடறி விழுந்துவிடக்கூடும். அதேநேரம், பிளாட் மாடல் ஹீல்ஸ்களை எந்த வயதினரும், எவ்வளவு உடல் எடை கொண்டவர்களும் அணிந்து கொள்ளலாம்.

மேலும், ஹீல்ஸ் அணியும்போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த விஷயங்கள் : ஹீல்சை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் ஓடக்கூடாது. வேகமாகவும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். மழைக்காலங்களில் ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட வேண்டும். அந்த நேரங்களில் ஹீல்ஸ் அசவுகரியத்தையே ஏற்படுத்தும். இந்த வகை செருப்புகளை தனியாக ஒரு பாக்ஸில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்ற செருப்புகளுடன் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், ஹீல்ஸ் பொலிவை இழந்துவிடும். அதன் ஆயுளும் குறைந்துவிடும். ஹீல்சின் பளபளப்பு குறைவதாகத் தெரிந்தால், அவ்வப்போது பாலீஷ் போட்டுக்கொள்ள வேண்டும். பாயின்ட்டட் ஹீல்ஸ் தேர்வு செய்யும்போது, அதில் உள்ள ஹீல்சின் உயரம் 2 முதல் 4 இஞ்ச் வரை மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்வது (நடந்து செல்வதற்கும், உடல் நலத்திற்கும்) நல்லது.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி ஒர்க் செருப்புகள் உள்ளன. இவற்றை மிகச்சிலரே விரும்பி அணிகின்றனர்.

பாலிவுட் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர், தங்களைவிட உயரமான தீபிகா படுகோனே, சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய் போன்றோருடன் நடிக்கும்போது பிளாட் மாடல் ஹீல்ஸ் அணிந்து கொள்கின்றனர்.

கிருபானந்த வாரியார்- கடவுளை எளிமையாக வழிபடுங்கள்

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்