Monthly Archives: திசெம்பர், 2009

அழுக்கை விரட்டும் சோலார் ஜன்னல்கள்


இனி ஜன்னல்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அழுக்கு படியாத சோலார் ஜன்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தானாகவே கறையை சுத்தப்படுத்திக் கொள்ளும். இதை இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் பல்கலைக்கழகம் இதற்கான முலப்பொருளை கண்டுபிடித்து உள்ளது.

தாமரை இலை தண்ணீர் ஒட்டாத் தன்மை கொண்டது. இதில் இருக்கும் பெப்டைடு எனப்படும் அமினோ அமில முலக்கூறுகளை இணைத்து புதிய உறையை தயாரித்து உள்ளனர். இது ஒரு மீட்டர் நீளத்தில் 100 கோடியில் ஒரு பங்காக இருப்பதால் மிகமிக சிறியதாக இருக்கும்.

இது அதிக வெப்பத்தின்போது வாக்வம் டியூப்போல செயல்பட்டு அழுக்குகளை உறிஞ்சி சுத்தப்படுத்திவிடும். இதனை ஜன்னல், கதவுகளில் அமைப்பதன் முலம் அவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த கண்டுபிடிப்பு பாலைவனம், கடற்கரை பகுதிகளிலும் மற்றும் பல அடுக்குமாடி கட்டிங்கள் கட்டும்போதும் அதிக பயன் தரும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இது எதிர்பாராத சமயத்தில் நிகழ்ந்த கண்டுபிடிப்பாகும்.

அதாவது அல்சீமர் என்னும் ஞாபக மறதி வியாதிக்கு மருந்து தேடி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதற்கு மருந்தாக தாமரையில் இருந்து விடைகிடைக்கும் என்ற நோக்கில் ஆய்வு நடந்தது. அதில் மற்றொரு சிறந்த முடிவாக இந்த புதிய பொருள் கிடைத்து உள்ளது.

அல்சீமர் வியாதிக்கான தீர்விலும் குறிப்பிட்ட அளவில் வெற்றி கிடைத்து இருப்பதாகவும், விரைவில் ஆய்வு முடிவு வெளியிடப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

மணலி கீரை


கடந்த இதழில் பொடுதலைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் மணலிக் கீரை பற்றி தெரிந்து கொள்வோம்.

மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று.

இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது.

வதைமறும் நெஞ்சேறி வந்த கபம்விலகுஞ்

சீதமுட நோய்பலவுந் தீருங்காண் – போதவுள்ளே

வீறு கிருமியோடு மேவாப் பயித்தியம்போங்

கூறுமண லிக்கீரைக் கு

– அகத்தியர் குணபாடம்

வயிற்றுப் பூச்சி நீங்க

வயிற்றில் கிருமிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீன மடைந்து காணப் படுவார்கள். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தான் இந்த வயிற்றுப் பூச்சியால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி

சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலயில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க

பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்க

மணலிக் கீரையின் சமூலத்தை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

பைத்தியம் மாற

மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை மசியல் செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு பலம் பெறும். இதனால் பைத்தியம் குணமாக வாய்ப்புண்டு.

ஈரல் பலப்பட

ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரை கிடைக்கும் காலங்களில் வாங்கி உண்டு அதன் முழு மருத்துவப் பயனையும் அடைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஓமம்


இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன.

சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல்

பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல்

பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ?

சொல்லொடுபோம் ஓமமெனச் சொல்

-அகத்தியர் குணபாடம்

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் செரியாமையைப் போக்கும் தன்மை கொண்டது.

உடல் பலம் பெற

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.

இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

வயிறுப் பொருமல் நீங்க

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

புகைச்சல் இருமல் நீங்க

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

மந்தம்

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

சுவாசகாசம், இருமல் நீங்க

காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமம் – 252 கிராம்

ஆடாதோடைச் சாறு – 136 கிராம்

இஞ்சி ரசம் – 136 கிராம்

பழரசம் – 136 கிராம்

புதினாசாறு – 136 கிராம்

இந்துப்பு – 34 கிராம்

சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.

மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.

ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

இனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கிய மானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.

டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…. ஒரே டேட்டா – பல செல்கள்

ஒரே டேட்டா – பல செல்கள்
எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
செல்களை இணைத்து தலைப்பை உருவாக்க எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கும் போது, ஏதேனும் ஒரு தலைப்பை முதலில் உருவாக்க விரும்புவோம். இதனை ஒரு செல்லில் உருவாக்குவதைக் காட்டிலும், பல செல்களை ஒன்றாக்கி அமைத்தால் பார்க்க எளிதாக இருக்கும். இவ்வாறு பல செல்களை ஒன்றாக ஆக்குவதே மெர்ஜிங் செல்ஸ் (“merging cells”) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முதலில் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar) செல்ல வேண்டும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இப்போது நாம் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நாம் விரும்பும் தலைப்பினை டைப் செய்து அமைத்துக் கொள்ளலாம்.
நீளமான எண்ணை டைப் செய்திட எக்ஸெல் செல்களில் எண்களை டைப் செய்தால் அதன் வழக்கப்படி 15 இலக்கங்களுக்கு மேல் அது அனுமதிக்காது. அப்படி டைப் செய்தால் அவற்றைத் தன் பாணியில் வடிவமைத்து ஒரு சைபரைச் சேர்த்துவிடும். ஆனால் நமக்கு ஒரு கிரெடிட் கார்டு அல்லது வங்கி அட்டை எண் போல பல இலக்கங்கள் அடங்கிய எண் வேண்டுமென்றால் என்ன செய்திடலாம். எண்ணுக்கு முன்னால் ஒரு ஒற்றை மேற்கோள் குறியைப் (apostrophe) போட்டு டைப் செய்திடவும்.
சில சுருக்கு வழிகள்
Ctrl1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.
CtrlPage Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.
CtrlPage Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
CtrlShift”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
CtrlR: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
CtrlD: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl‘: செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக்களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம்.
Ctrl$: கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.

2010: சந்திக்க இருக்கும் சவால்கள்

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேற்கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனமும், தொடர்ந்து சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கும். இந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் சவால்களைச் சந்தித்த வண்ணம் உள்ளது அனைவரும் அறிந்ததே.
2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தன் கட்டமைப்பில் பல சிக்கல்களை மைக்ரோசாப்ட் சந்தித்தது. இதன் பல பிரிவுகளில் அலுவலர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இதன் காலாண்டு வருமானம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஆண்டின் இறுதியில் விண்டோஸ் 7 கை கொடுக்க, மைக்ரோசாப்ட் தலை நிமிர்ந்தது. சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியாவதற்கு முன் வெளியிட்ட சோதனைத் தொகுப்புகளே இதன் இமேஜை நிமிர்த்தின. அக்டோபரில் விண்டோஸ் 7 வெளியானபோது மைக்ரோசாப்ட் உறுதியான தளத்தில் இருந்தது.
இதன் சர்ச் இஞ்சின் பிங் மிக அருமையான இலக்குகளை முன்வைத்து மற்றவற்றிலிருந்து மாறுபட்ட இயக்கத்தைக் கொடுத்து வெற்றி பெற்றது. இதன் வழி விளம்பர வருமானமும் இதற்குக் கை கொடுத்தது. இதன் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் வெளியான அஸூர் இன்னும் உறுதியான எதிர்காலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கியது.
இருந்தாலும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய பெரிய நிறுவனம் மேலும் பல காரணங்களால் பாதிக்கப்படுவது இயற்கையே. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மைக்ரோசாப்ட் தப்ப இயலவில்லை. தற்போது பன்னாட்டளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருவதால், 2010 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆண்டாகத் தான் இருக்கும்.
1.சாதிக்க முடியாத மொபைல் பிரிவு: மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 6.5 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், இங்கும் தன் வலிமையை நிரூபித்து நிலைக்க முடியும் என்று எண்ணியது. ஆனால் அது எடுபடவில்லை. ஏற்கனவே உறுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்குப் போட்டியாக நுழைந்து வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுப்பது, வெற்றி பெற முடியாத சவாலாகவே மைக்ரோசாப்ட் 2009ல் கண்டது.
ஆர்.ஐ.எம்., பால்ம், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் வெற்றி, வாடிக்கையாளர்கள் ஒரே நிறுவனத்திலிருந்து தங்கள் போன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் ப்ராஜக்ட் பிங்க் என்ற பெயரில் தன் மொபைல் போன்களை தயாரிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் ஸூன் சர்வீஸ் இணைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. அப்படியானல் இன்னும் ஓராண்டு நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும். ஐ போன்,பிளாக்பெரி, பால்ம் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுடன், மொபைல் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் போட்டியில் இயங்க முடியவில்லை. நல்ல ஒரு பார்ட்னர் நிறுவனத்துணையுடன் சாப்ட்வேர், சர்வீசஸ் ஆகிய இரண்டுடனும் இறங்கினால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மொபைல் சந்தையில் இயங்க முடியும். இல்லையேல் இந்தப் பிரிவை மறக்க வேண்டியதுதான்.
2. விண்டோஸ் 7: 2007–09 ஆம் ஆண்டுகள் மைக்ரோசாப்ட்டிற்கு மிகுந்த சோதனையைக் கொடுத்தது. இதற்குக் காரணம் மக்களிடையே எடுபடாமல், பல பிரச்சினைகளை வாடிக்கையாளர் களுக்குக் கொடுத்து வந்த விண்டோஸ் விஸ்டா இயக்கத்தொகுப்பாகும். ஆனால் விண்டோஸ் 7 வந்தவுடன் அதில் விஸ்டாவின் இயக்கம் துளி கூட இல்லை என்ற செய்தியே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இனிப்பாக இருந்தது. தொடக்க விற்பனையும், விஸ்டா 7 குறித்து வந்த ஆய்வுக் குறிப்புகளும் மைக்ரோசாப்ட் நிலையைத் தூக்கி நிறுத்தியது. 2010ல் இந்த நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலையாய பணியாக இருக்கும்.
3. எம்.எஸ். ஆபீஸ்: மைக்ரோசாப் நிறுவனத்திற்கு, மற்ற எந்த சாப்ட்வேர் தொகுப்பினைக் காட்டிலும் அதிக வருமானம் தரும் தொகுப்பு அதன் ஆபீஸ் தொகுப்புதான். இலவசமாகக் கிடைக்கும் ஓப்பன் ஆபீஸ் மற்றும் ஸோஹோ தொகுப்புகள் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியா என்பது இன்னும் கேள்விக் குறிதான். சர்வர்களைக் கொண்டு அலுவலகப் பணிகளை இயக்கி வரும் பெரிய நிறுவனங்கள் தற்போது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைத்தான் விரும்புகின்றன. ஆனால் கூகுள் தற்போது மிக வேகமாகக் கொண்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்கள், டேட்டா ஸ்டோரேஜ் போன்ற விஷயங்கள், மைக்ரோசாப்ட் நிலையைச் சற்று அசைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அடுத்த 2010 ஜூனில் வெளியாக இருக்கும் ஆபீஸ் 2010 கூகுள் தரும் அப்ளிகேஷன்களைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். எனவே தன்னுடைய ஆபீஸ் தொகுப்பு எப்படி மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்று காட்ட வேண்டிய சவாலை மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்திக்க வேண்டியதிருக்கும்.
4. பிங் சர்ச் இஞ்சின்: வரும் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் இலக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும். விளம்பர வழி வருமானத்தைப் பெருக்குவதும், சர்ச் இஞ்சின் பிரிவில் பெரிய அளவில் இடம் பெறுவதும் ஆகும். தற்போது இந்தப் பிரிவில் 9.9% இடத்தை பிங் கொண்டுள்ளது. யாஹூவுடன் கொண்டுள்ள ஒப்பந்தம் மற்றும் பிங் தொடர்ந்து கொடுத்து வரும் புதிய வசதிகள் நிச்சயம் 2010 ஆம் ஆண்டில் இதனை உயரத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

13 கிலோ அதிகமானால் உஷார்!

* மதுபானங்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவற்றுக்கு, “ஹார்டு டிரிங்க்’ என்று பெயரிடப்பட்டது; ஆல்கஹால் கலக்காத குளிர்பானங்கள், “சாப்ட்’ டிரிங்க் என்று அழைக்கப்படுகிறது.
* அமெரிக்காவில் குளிபானங்களுக்கு டானிக் என்றும் பெயர் உண்டு; பிரிட்டனில், “பாப்’ டிரிங் என்றும், அயர்லாந்தில், “மினரல்’ டிரிங் என்றும் பெயர்.
* பல வகை இனிப்புகள் சேர்க்கப்படும் குளிபானங் களில், திரவ, பவுடர் வடிவில், “கார்பனேட்’ செய்யப்படுகிறது. இது தான் கெடுதல்.
* குளிரூட்டப்பட்ட கேன், பாட்டிலில் வரும் ஐஸ் டீ, சுவீட் டீ, சுவையூட்டப்பட்ட திரவம், ஸ்குவாஷ், ப்ரூட் பஞ்ச் போன்ற பல பெயர்களில் குளிர்பானங்கள் விற்பனையாகின்றன.
* ஒபிசிட்டி என்பது, ஒருவரின் உகந்த எடையை விட, 13 கிலோவுக்கு மேல் அதிகரிப்பது தான். உஷாராக வேண்டிய தருணம் இது.
* சிகரெட், குளிபானங்களுக்கு அமெரிக்கா கடுமையாக வரிகளை போட்டுள்ளது; இந்தியாவில் அப்படி போட்டால், குடிப்பது குறையும்.
* குண்டான பின், முதலில் வருவது சர்க்கரை அளவு அதிகரிப்பு தான்; அப்புறம், ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு, ஸ்ட்ரோக் என்று அணிவகுக்கும்.
* “டயட்’ குளிர்பானம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களையும் கண்டபடி குடிப்பது நல்லதல்ல.
* அமெரிக்காவில் அதிகபட்சம் ஒருவர் இரண்டு லிட்டர் குளிர்பானம் குடிக்கும் வழக்கம் இருந்தது; இப்போது மிகவும் குறைந்து விட்டது; ஆனால், இந்தியாவில் இளைஞர்களிடம் இந்த அளவு எட்டிவிட்டது தான் அவலம்.
* சிகரெட் போல குளிர்பான பாட்டில்களையும் அபாய பட்டியலில் வைக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பல அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து

டயட் சோடா என்ற பெயரில் சில குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதிலும், மற்ற குளிர்பானங்களை போல, அதிக இனிப்பு கலக்கப்படுகிறது. இதனால், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது என்பதை விட, இன்னொரு பெரிய ஆபத்து உள்ளது. அது தான், கிட்னியை பாதிப்பது. டயட் சோடா குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு குறைகிறது என்பதை அமெரிக்க நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஜூஸ் தருவது ஏன் தெரியுமா?
உண்ணாவிரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும் போது, ஏன் ஜூஸ் தந்து முடிக்க வைக்கின்றனர் சக தலைவர்கள். காபி, டீ கொடுக்கக் கூடாதா? கூடவே கூடாது.
வயிற்றில் சக்தி குறைந்த நிலையில், மீண்டும் முழு உணவை ஏற்க வேண்டுமானால், ஜூஸ் மட்டுமல்ல, அதிக குடிநீரும் குடிக்க வேண்டும். அப்போது தான், உடலில் உள்ள தீயசத்துக்கள் வெளியேறும். உணவும் சிரமமின்றி சாப்பிட முடியும். ஜீரணசக்தி பாதிக்காது.
காய்கறி, பழங்களில் தோலை சீவாதீங்க!
சிலருக்கு தோலை உரித் தால் தான் பழங்களை சாப்பிட பிடிக்கும். அதுபோல, காய்கறிகளிலும் தோலை நீக்கினால் தான் சாப்பிடுவர். ஆனால், மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
“காய்கறி, பழங்களில், தோலை நீக்கவேகூடாது; அதில் தான் நார்ச் சத்தே உள்ளது. உரிக்காத பழங் களில் கலோரி குறைவாக இருக்கும். உரித்தால் அதிகமாக இருக்கும்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காபியில் சர்க்கரை குறைச்சிடுங்க
காபியில் சர்க்கரை அதிகம் போட்டுக்கொள்பவரா? அப்படியானால், படிப்படியாக குறைத்துக்கொள்ளுங்கள். 40 வயது வரை சிக்கல் இல்லை. அதற்கு முன்பே ஒபிசிட்டி இருந்தால், சர்க்கரை உட்பட கலோரி சார்ந்த உணவுகளை தவிர்ப்பதே நலம். நாற்பது வரை உணவில் கட்டுப்பாடு இருந்து விட்டால், அதன் பின் சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ அண்டவே அண்டாது.
வெள்ளைன்னா உஷாருங்க!
ஐம்பதை கடந்து விட்டால், அதுவரை எந்த உ<டல் பிரச்னையும் இல்லாமல் இருந்து விட்டீர்களானால், உணவில் வெள்ளைன்னா குறைத்துக் கொள்வதே நல்லது. வெள்ளை சாதம், சர்க்கரை, உப்பு, தயிர், பால் போன்வற்றில் கட்டுப்பாடு தேவை. அரிசி சாதத்தை குறைத்துக்கொண்டு, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால், பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.

ஆயுள் காப்பீட்டுக் கழகமே `நம்பர் 1′!

இந்திய காப்பீட்டுச் சந்தையில் `ஆயுள் காப்பீட்டுக் கழகமே’ (எல்.ஐ.சி.) தொடர்ந்து ராஜாவாக விளங்கி வருகிறது.

எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு 65.26 சதவீதமாக உள்ளது. இது நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பிரீமியத் தொகையாக 30 ஆயிரத்து 471 கோடி ருபாய் திரட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் எல்.ஐ.சி. திரட்டியது 21 ஆயிரத்து 874 கோடி ருபாய். இது மொத்தத்தில் 39.30 சதவீத வளர்ச்சி.

2009 அக்டோபர் வரையில் திரட்டப்பட்ட, சந்தைப் பங்கு அடிப்படையிலான புள்ளி விவரப்படி, எல்.ஐ.சி.க்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது `எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ்’. இது குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரீமிய வருவாயாக 3 ஆயிரத்து 74 கோடி பாய் பெற்றுள்ளது. இதன் முந்தைய ஆண்டு வருவாய் 2 ஆயிரத்து 731 கோடி ருபாய். 6.58 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், 12.56 வளர்ச்சியைக் கண்டுள்ளது. முன்றாமிடம் பெறுவது `ஐசிஐசிஐ புருடென்ஷியல்’. குறிப்பிட்ட ஆய்வுக் காலத்தில் இதன் பிரீமிய வருவாய் 2 ஆயிரத்து 588 கோடி  ருபாய் ஆகும். இதன் கடந்த ஆண்டு கால வருவாய் 3 ஆயிரத்து 870 கோடி பாயாக இருந்தது. 5.54 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 33.14 எதிர்மறை வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆய்வுக் காலத்தில் `பஜாஜ் அலயான்ஸ்’ நிறுவனத்தின் மொத்த பிரீமிய வருவாய் ஆயிரத்து 752 கோடி ருபாய். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு வருவாய் 2 ஆயிரத்து 360 கோடி ருபாய். இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு 3.75 . இந்நிறுவனம் -25.76 எதிர்மறை வளர்ச்சியை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் காப்பீட்டுச் சந்தைக்குப் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள் ஊக்க முட்டும் வளர்ச்சியை எட்டியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணத்துக்கு `கனரா எச்எஸ்பிசி ஓபிசி’, குறிப்பிட்ட காலகட்டத்தில் 333.92 கோடி பிரீமிய வருவாயுடன் 254.58 என்ற சாதகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு பிரீமிய வருவாய் 94.17 கோடி ருபாயாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. `பியூச்சர் ஜெனரலி’ நிறுவனமும் பெரும் வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இது வெறும் 19.53 கோடி ருபாயிலிருந்து 184.81 கோடி ருபாய்க்கு வளர்ச்சி கண்டுள்ளது.

அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் சிறப்பான செயல்பாட்டுக்கு தனது ஆயுள் காப்பீட்டுத் தொழிலுக்கு கள அலுவலர்களாகவும், முகவர்களாகவும் மனித சக்தியை அதிகம் சேர்த்தது, ஜீவன் சரள், ஜீவன் நிஷ்சய் என்பதை போன்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது போன்றவை முக்கியக் காரணம் என்று எல்.ஐ.சி. உயர் வட்டாரம் தெரிவிக்கிறது. மற்றொரு முக்கியக் காரணம், இறப்பு `கிளெய்முக்கு’ சரியான உடனடி நிவாரணம் அளிப்பு. அது தற்போது 98.75 -ஆக உள்ளது என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.

விண்வெளியில் கிறிஸ்துமஸ்

எந்த வயதினரையும் குழந்தைபோல் மாற்றி விடும் விண்வெளி அதிசயங்கள். பார்க்கப் பார்க்க அழகு. சிந்திக்கச் சிந்திக்க பிரமாண்டம். சுற்றி வரும் நிலவு, மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அனைத்தும் எல்லோருக்கும் வேடிக்கைதான். அதை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சிகூடும்.

சில நட்சத்திரங்கள் நேர் கோட்டில் அமைந்திருக்கும். சில நட்சத்திரங்கள் உங்களைப் பார்த்து கண்சிமிட்டும். ஒன்று மற்றொன்றை துரத்துவதுபோல் தோன்றும். இன்னும் சில சுற்றுவதுபோல் இருக்கும். திடீரென எரிந்து விழும் நட்சத்திரத்தையும் பார்க்கலாம். நகரும் மேகங்கள் உங்கள் ரசனையை தூண்டும்.

சாதாரண கண்களுக்கு இவ்வளவு காட்சிகளை விருந்தாக்கும் விண்வெளி, தொலைநோக்கி வழியாகப் பார்த்தால் இன்னும் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தரும். வெள்ளி போல விட்டுவிட்டு பிரகாசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் நீலம், மஞ்சள், காவி வண்ணங்களில் காணப்படும். எல்லா நிறமும் கலந்து குழப்பியதுபோலவும் வர்ணஜாலம் காட்டும்.

இப்படித் தோன்றும் அபூர்வ காட்சிகளில் ஒன்றுதான் விண்வெளியில் கண்ட கிறிஸ்துமஸ் விழாக்கோலம்.  ஹப்பிள் தொலைநோக்கியில் உள்ள ஒரு கேமரா படம்பிடித்த காட்சியில்தான் அது பதிவாகி இருந்தது.

இது ஒரு நட்சத்திரக்கூட்டமாகும். சூரியக்குடும்பத்தில் இருந்து சில மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த நட்சத்திரக் கூட்டத்தின் ஒளிரும் தன்மை, அதைச் சுற்றி உள்ள தூசுப் படலம் ஆகியவை அலங்கார விளக்குகள் போலவும், அவற்றில் ஏற்பட்டுள்ள குழிந்த வளைவுகள் கிறிஸ்துமஸ் அலங்கார பைன் மரங்களைப் போலவும் அழகாக காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு `ஆர் 136′ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இவற்றில் சில நட்சத்திரங்கள் அழியும் நிலையில் உள்ளன. இது நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிய ஒரு தடயமாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கவலைகளைத் துரத்தும் கல்யாணம்!

திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். `திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று பழமொழி உண்டு.

ஆனால் திருமணம் என்றால் இளைஞர்கள் சிலர் ரொம்பவே யோசிக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டவர்களும், `உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்’ என்று சலிப்பு வசனம் பேசுகிறார்கள்.

அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளோ ஒவ்வொருவருக்கும் திருமணம் அவசியம். அதனால் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கிறது என்கிறது. இதேபோல் மனோரீதியாகவும் பல நன்மைகள் உண்டு என்கிறது சமீபத்திய ஆய்வு.

சர்வதேச நல அமைப்பான டபுள்.எச்.ஓ.வின் மனநலப் பிரிவு மற்றும் நிசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்… திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள். டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருக்கிறது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது. தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது.