Daily Archives: திசெம்பர் 1st, 2009

பச்சை குத்தாதீங்க!


`பச்சை’ குத்திக்கொள்ளும் மோகம் இன்றைய இளசுகளிடம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. `பச்சை’யில் இரண்டு வகை உண்டு. நிலையானவை, தற்காலிகமானவை.

ஒரு `பேஷனுக்காக’ சில நாட்கள் மட்டும் தாக்குபிடிக்கக்கூடிய `பச்சை’ குத்திக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சுற்றியிருபவர்கள் ஆரம்பத்தில் `ஆகா… ஓகோ’ எனலாம். ஆனால் `பச்சை’யானது அலர்ஜி அபாயத்தில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது. வாழ்வு முழுவதும் வருத்த பட்டும் தழும்பாகவும் அது நிலைத்து போய்விடலாம். நமது உடம்பை, படம் தீட்டும் கான்வாஸ் துணி போல பயன் படுத்தக்கூடாது என்பதற்கு இதோ இங்கு ஒரு பாடம்…

மும்பையைச் சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் எம். சைத்தன்யா. சமீபத்தில் இவன் தனது பெற்றோருடன் கோவாவுக்குச் சுற்றுலா சென்றான்.

அங்கு அராம்பால் கடற்கரைக்குச் சென்ற சைத்தன்யா, நடமாடும் `பச்சை குத்தும் நிலையத்தை’ பார்த்து குஷியானான். ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லும் அந்த நடமாடும் பச்சை நிலையத்தில் சில நாட்களுக்கு மட்டும் இருக்கும் தற்காலிக பச்சை குத்தபடும்.

பெற்றோரிடம் அனுமதி வாங்கி அந்த பச்சை நிலையத்துக்கு ஓடிய சைத்தன்யா, கையிலும், காலிலும் பச்சை குத்திக் கொடான். பச்சை குத்தியதும் மேலும் குஷியானான். அதைத் தானே பார்த்து ரசித்தும், மற்றவர்களிடம் காட்டிம் மகிழ்ந்தான்.

சில நாட்களில் அவர்கள் கோவா சுற்றுபயணம் முடிந்து மும்பை திரும்பிவிட்டார்கள். பச்சையை பார்த்தால் எங்கே பள்ளியில் திட்டுவார்களோ என்று சைத்தன்யா பயந்துகொடிருந்த வேளையில் அது அரிக்க ஆரம்பித்தது.

“விரைவிலேயே அந்த அரிப்பு மிகவும் மோசமானது. பச்சை குத்திய இடங்கள் சிவந்துவிட்டன. அதிலிருந்து ஒரு திரவமும் கசியத் தொடங்கியது. பயமுறுத்தும் விதமாக அவனது வயிற்றிலும் அது மாதிரியான அறிகுறிகள் தென்படத் தொடங்கின” என்கிறார் வருத்தம் நீங்காத குரலில் சைத்தன்யாவின் அம்மா நமீதா. பச்சை குத்திய இரண்டு வாரங்கள் கழித்தே இந்த அறிகுறிகள் ஏற்பட்டது.

அவனுக்கு `இரிட்டன்ட் கான்டாக்ட் டெர்மட்டிடிஸ்’ என்ற ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டிருக்கிறது. பச்சை மையில் உள்ள வண்ணம் தோலை பாதிப்பதால் இது ஏற்பட்டுள்ளது. இவனைபோல் `பச்சை’ குத்திய பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

`பச்சை’ மட்டுமல்ல, கடைகளில் வாங்கி இட்டுக்கொள்ளும் மெகந்தியும் கூட இதுமாதிரியான பாதிப்பை ஏற்படுத்தலாமாம்.

சிறுநீர் கழிக்கும்போது நிறத்தை பாருங்கள்


சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தற்போது அதிகமாக ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த மாதிரியான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண்ணீர், அதிக வேலைபளு, டென்ஷன், நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருத்தல் போன்றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், உடலமைப்பில் உள்ள வேறுபாடுகளே பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெண்களுக்கு மலக்குடல் துவாரமும், பிறப்புறுப்பு துவாரமும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் ஒரு துவாரத்தில் இருந்து வெளிவரும் நுண்ணுயிரிகள், மற்றொரு துவாரத்திற்கு விரைவாகவும், எளிதாகவும் பரவுகின்றன. அதுமட்டுமல்ல, ஆணின் சிறுநீர்த்தாரை சுமார் 20 செ.மீ. நீளமுடையது. எனவே, வெளியில் இருக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பெண்களுடைய சிறுநீர்த்தாரையின் நீளம் 5 செ.மீ. மட்டுமே. இதனால் வெளியில் இருக்கும் நோய்க்கிருமிகள் மிக எளிதாக சிறுநீர்பையை அடைந்து நோய்த்தொற்றை உண்டாக்குகின்றன. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.

அறிகுறிகள் தெளிவாக இல்லாமல் கலங்கலாக வெளிவரும் சிறுநீர். வழக்கம்போல் இல்லாது சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுதல். பிறப்புறுப்பு சிவந்து, தடித்து காணப்படுதல். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகுதல். பிறப்பு உறுப்பில் அரிப்பு ஏற்படுதல்.

எப்படித் தவிரப்பது? ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் நீர் பருக வேண்டும். காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டிய நீரையே பருக வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் முழுமையாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். மருத்துவ குணம் நிறைந்த சோப்பையும், சுத்தமான தண்ணீரையும் கொண்டு தினமும் பிறப்பு உறுப்பைச் சுத்தம் செய்ய வேண்டும். மிகவும் இறுக்கமாக இல்லாமல் தளர்வான உள்ளாடைகளையே அணிவது அவசியம்.. ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கருத்தடை மாத்திரைகளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பயன்படுத்தினால் சிறுநீர்த்தாரையில் அழுத்தம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும். காபியில் உள்ள `காபின்’ என்ற வேதிபொருள் சிறுநீர்பையை எளிதில் பாதிக்கும். எனவே, காபியை குறைவாக பருகுங்கள். குளிர்பானங்களை அதிகமாக பருக வேண்டாம். எப்போதும் டென்ஷனாக இருக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

தண்ணீரின் அவசியம்


மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.
நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம். உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது. மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது.

சுக்கா வறுவல்

தேவையானப் பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ

அரைக்க:

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

இஞ்சி – சிறு துண்டு

மிளகு – ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து முக்கால் வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மசாலா கலவையைப் போட்டு வதக்கவும்.

வேக வைத்த மட்டன், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து,

குறைந்த தீயிலேயே வைத்து வறுக்கவும்-. இதற்கு சற்று தாராளமாக எண்ணெய் ஊற்றி டீப்ஃப்ரை செய்யவும்.

மசால் கலவை மட்டனுடன் சேர்ந்து, நீர் வற்றி, உலர்ந்து எண்ணெய் கக்கியதும் இறக்கினால்,

மொறு மொறுவென இருக்கும்.

கேழ்வரகு வெல்ல தோசை

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு & ஒரு கப், அரிசி மாவு & ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் & ஒரு டீஸ்பூன், வெல்லத்தூள் & அரை கப், ஏலக்காய்தூள் & கால் டீஸ்பூன், துருவிய முந்திரி & ஒரு டீஸ்பூன், நெய் & சுட்டெடுக்க தேவையான அளவு.

செய்முறை:
வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காள்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும். குறிப்பு: தண்ணீரை விருப்பம்போல சிறிது கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.

கண்ணீரே ஒரு கிருமிநாசினி!

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?

ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.

மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.

லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

புளோரைடு பேஸ்ட்’ குழந்தைகளுக்கு ஆபத்து !

எல்லோருக்குமே வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும். அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும்.
உங்கள் பற்களும் முத்துப் போல் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

பிரஷ்ஷில் பேஸ்ட் வைக்கும்போது பிரஷ் முழுவதும் வைக்க வேண்டிய அவசியமில்லை. பாதி அளவு வைத்தால் போதுமானது. அந்தந்த நேரத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு பேஸ்ட்டைப் பயன்படுத்தாமல், தொடர்ந்து தரமான பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

பல் துலக்கும் போது, கண்ணாடி முன்னால் நின்று மேல்வரிசைப் பற்களை கீழ்வரிசைப் பற்களுடன் ஒட்டாமல் லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு (ஒரு விரல் அளவுக்கு) துலக்க வேண்டும். பற்களைச் சேர்த்து வைத்து துலக்கும்போது, பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் படலங்கள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே ஒட்டிக்கொண்டு விடும். பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு துலக்கும்போது உணவுத் துகள்கள், படலங்கள் வாய்க்குள் சென்றுவிடும். பின்னர் வாய் கொப்பளிக்கும்போது அவை வெளியேறி விடும்.

பற்களைத் துலக்க ஆரம்பிக்கும்பொழுது, முதலில் கடைவாய்ப் பற்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்வதால், மொத்தப் பற்களையும் வரிசையாக பிரஷ் செய்த திருப்தி கிடைக்கும்.

மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்வரிசைப் பற்களை கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும்.

மென்மையான பிரஷ்ஷையே பயன்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுவது நல்லது.

பற்பொடியை விட பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது. ப்ளோரைடு கலந்த பேஸ்ட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

நாக்கில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, டங்க் கிளீனருக்குப் பதிலாக, பிரஷ்ஷின் குச்சங்களைக் கொண்டே சுத்தம் செய்யலாம். ஏனெனில், டங்க் கிளீனர் நாக்கில் உள்ள சுவை நரம்புகளை புண்ணாக்கி விடும்.

காலையில் எழுந்த உடனும், இரவு படுக்கப்போகும் முன்பும் என ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

சிலருடைய பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படும். இவர்கள் இன்டர்டென்டல் பிரஷ் கொண்டு உணவுத் துகள்கள் மற்றும் படலங்களை அகற்றலாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குறைவாக சாப்பிட வேண்டும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் பற்சொத்தை ஏற்படும். அதேபோல் அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்தக் கூடாது.

ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு இரண்டு, மூன்று முறை நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து கொள்வது அவசியம்.

எக்ஸெல் செல் செலக்ஷன்: புது வழிகள்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வேலை செய்கையில் அடிக்கடி நாம் சில செல்களை காப்பி செய்து, பின் பல வேலைகளை மேற்கொள்வோம். சில செல்களை மொத்தமாக நீக்குவோம். காப்பி செய்வோம். மற்றவற்றை பேஸ்ட் செய்வோம். இப்படி பல வேலைகளைச் செய்வோம்.
பலமுறை நாம் செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், அடடா! தேர்ந்தெடுத்த செல்லுக்கு முன் உள்ள செல்லையும் சேர்த்துத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று எண்ணலாம். அப்படிப்பட்ட நெருக்கடியில் நாம் தேர்ந்தெடுத்த செல்களின் மேலாகவோ அல்லது வலது இடது புறமாகவோ செல்வரிசைகளைச் சாதாரணமாகக் கூடுதலாக இணைக்க முடியாது. இதற்கான வழி ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. அதனை இங்கு பார்ப்போம்.
ஒர்க்ஷீட் ஒன்றில் செல்களின் பல வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கர்சரைத் தேவையான செல்லில் வைத்து இழுத்து தேர்ந்தெடுக்கிறோம். C3 யிலிருந்து H12 வரை தேர்ந்தெடுக்கிறேன். பின் இந்த செலக்ஷனை B2 லிருந்தே செய்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
இதற்கான புதிய வழி:
1.ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு செல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு C3: H12 தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்கள் அனைத்தும், கலரால் ஷேட் செய்யப்பட்டிருக்கும் –– ஒரு செல்லைத் தவிர. அந்த செல் C3. இது மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களைப் போல் இல்லாமல் வேறு ஒரு வண்ணத்தில் இருக்கும். பெரும்பாலும் வெள்ளையாக இருக்கும். இது நமக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் முதல் செல் C3 என்று சொல்கிறது. இதனை செலக்டட் செல் எனக் கூறுவார்கள்.
2. இனி ஷிப்ட் கீயை விட்டுவிட்டு, கண்ட்ரோல் + . (முற்றுப்புள்ளி) புள்ளியை இருமுறை அழுத்தவும். முதல் முறை அழுத்துகையில் வெள்ளைக் கலரில் இருந்த செலக்டட் செல் அடையாளம் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை மேல் வரிசையின் வலது முனையில் இருக்கும் செல்லுக்கு – H3– மாறும். அடுத்து கீழாக உள்ள வலது முனை செல்லுக்கு – H12 – மாறும்.
3. இனி ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு மேல் நோக்கி உள்ள அம்புக் குறியை ஒரு முறை அழுத்துங்கள். அடுத்து கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியை ஒரு முறை அழுத்துங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களின் இடம் மேல் இடது பக்கம் ஒரு வரிசை நீட்டிக்கப்படுவதைப் பார்க்கலாம். அதாவது செலக்டட் செல் எங்கிருக்கிறதோ, அதற்கு எதிர் உச்சியில் நீட்டிக்கப்படும்.
பார்த்தீர்களா! நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த செல்களின் வரிசையை தொந்தரவு செய்திடாமல் செல் வரிசையை இணைக்க முடிகிறதே.
இதற்கு இன்னொரு அருமையான வழியும் உள்ளது. இந்த வழியில் ஒரு கீ அழுத்துவது குறைக்கப்படும். மேலே சொல்லப்பட்ட வழி 2ல் ஷிப்ட் கீயை விடாமல், டேப் கீ அழுத்தவும்.H12 உடன் செலக்டட் செல்லாக மாறும். இந்த வழியை வைத்துக் கொண்டு இன்னும் என்ன என்ன வேலைகளைச் செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த செலக்டட் ரேஞ்ச் விரிவாக்கம் அனைத்தும், செலக்டட் செல்லுக்கு குத்து எதிரே தான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
செல் ரேஞ்ச் தேர்ந்தெடுத்துவிட்டு, பின் டேப் கீ அழுத்தினால் இடது புறம் இருந்து வலது புறமாக, மேலிருந்து கீழாக செலக்டட் செல் மாறுவதனைக் காணலாம். ஷிப்ட் + டேப் அழுத்தினால் இதற்கு நேர் மாறாக செல் தேர்ந்தெடுக்கப்படுவதனைக் காணலாம். இவ்வாறு பல்வேறு இடங்களில் செலக்டட் செல்லைக் கொண்டு வந்து செல் செலக்ஷனை நீட்டித்துப் பார்க்கவும்.