எக்ஸெல் செல் செலக்ஷன்: புது வழிகள்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வேலை செய்கையில் அடிக்கடி நாம் சில செல்களை காப்பி செய்து, பின் பல வேலைகளை மேற்கொள்வோம். சில செல்களை மொத்தமாக நீக்குவோம். காப்பி செய்வோம். மற்றவற்றை பேஸ்ட் செய்வோம். இப்படி பல வேலைகளைச் செய்வோம்.
பலமுறை நாம் செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், அடடா! தேர்ந்தெடுத்த செல்லுக்கு முன் உள்ள செல்லையும் சேர்த்துத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று எண்ணலாம். அப்படிப்பட்ட நெருக்கடியில் நாம் தேர்ந்தெடுத்த செல்களின் மேலாகவோ அல்லது வலது இடது புறமாகவோ செல்வரிசைகளைச் சாதாரணமாகக் கூடுதலாக இணைக்க முடியாது. இதற்கான வழி ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. அதனை இங்கு பார்ப்போம்.
ஒர்க்ஷீட் ஒன்றில் செல்களின் பல வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கர்சரைத் தேவையான செல்லில் வைத்து இழுத்து தேர்ந்தெடுக்கிறோம். C3 யிலிருந்து H12 வரை தேர்ந்தெடுக்கிறேன். பின் இந்த செலக்ஷனை B2 லிருந்தே செய்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
இதற்கான புதிய வழி:
1.ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு செல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு C3: H12 தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்கள் அனைத்தும், கலரால் ஷேட் செய்யப்பட்டிருக்கும் –– ஒரு செல்லைத் தவிர. அந்த செல் C3. இது மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களைப் போல் இல்லாமல் வேறு ஒரு வண்ணத்தில் இருக்கும். பெரும்பாலும் வெள்ளையாக இருக்கும். இது நமக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் முதல் செல் C3 என்று சொல்கிறது. இதனை செலக்டட் செல் எனக் கூறுவார்கள்.
2. இனி ஷிப்ட் கீயை விட்டுவிட்டு, கண்ட்ரோல் + . (முற்றுப்புள்ளி) புள்ளியை இருமுறை அழுத்தவும். முதல் முறை அழுத்துகையில் வெள்ளைக் கலரில் இருந்த செலக்டட் செல் அடையாளம் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை மேல் வரிசையின் வலது முனையில் இருக்கும் செல்லுக்கு – H3– மாறும். அடுத்து கீழாக உள்ள வலது முனை செல்லுக்கு – H12 – மாறும்.
3. இனி ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு மேல் நோக்கி உள்ள அம்புக் குறியை ஒரு முறை அழுத்துங்கள். அடுத்து கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியை ஒரு முறை அழுத்துங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களின் இடம் மேல் இடது பக்கம் ஒரு வரிசை நீட்டிக்கப்படுவதைப் பார்க்கலாம். அதாவது செலக்டட் செல் எங்கிருக்கிறதோ, அதற்கு எதிர் உச்சியில் நீட்டிக்கப்படும்.
பார்த்தீர்களா! நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த செல்களின் வரிசையை தொந்தரவு செய்திடாமல் செல் வரிசையை இணைக்க முடிகிறதே.
இதற்கு இன்னொரு அருமையான வழியும் உள்ளது. இந்த வழியில் ஒரு கீ அழுத்துவது குறைக்கப்படும். மேலே சொல்லப்பட்ட வழி 2ல் ஷிப்ட் கீயை விடாமல், டேப் கீ அழுத்தவும்.H12 உடன் செலக்டட் செல்லாக மாறும். இந்த வழியை வைத்துக் கொண்டு இன்னும் என்ன என்ன வேலைகளைச் செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த செலக்டட் ரேஞ்ச் விரிவாக்கம் அனைத்தும், செலக்டட் செல்லுக்கு குத்து எதிரே தான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
செல் ரேஞ்ச் தேர்ந்தெடுத்துவிட்டு, பின் டேப் கீ அழுத்தினால் இடது புறம் இருந்து வலது புறமாக, மேலிருந்து கீழாக செலக்டட் செல் மாறுவதனைக் காணலாம். ஷிப்ட் + டேப் அழுத்தினால் இதற்கு நேர் மாறாக செல் தேர்ந்தெடுக்கப்படுவதனைக் காணலாம். இவ்வாறு பல்வேறு இடங்களில் செலக்டட் செல்லைக் கொண்டு வந்து செல் செலக்ஷனை நீட்டித்துப் பார்க்கவும்.

%d bloggers like this: