Daily Archives: திசெம்பர் 4th, 2009

கழுத்து வலிகள் பலவிதம்

கழுத்து வலி சாதாரணமாகத்தான் ஆரம்பிக் கும்; ஆனால், தொடர்ந்து இருந்தால் தான் அதன் விபரீதம் புரியும். தொடர்ந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் ஏற்படுவது தான் இப்போது பல இளைஞர்களிடம் உள்ளது. சரியாக உட்கார்ந்து வேலை செய்தால் இந்த வலி வராது.
கழுத்து குருத்தெலும்பு பாதிக்கப்படும் போது, கழுத்து எலும்பு தேயும் போதும் தான் உண்மையான வலி ஆரம்பிக்கும். சில வகை நோய்களின் விளைவாகவும் வலி ஆரம்பிக்கும். அப்போது சாதா வலி தான் என்று இருக்கக்கூடாது. டாக்டரிடம் போய் விடுவது நல்லது. மற்றபடி வலிகளுக்கு உடற்பயிற்சி, ஓய்வு போதுமானது.
கழுத்து சுளுக்கு, திடீரென திரும்புவதால், விபத்தின் போது ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக குருத்தெலும்பு இழுபடுவதால் இந்த பாதிப்பு. அது சிகிச்சையில் சரியாகி விடும். வயதானவர்களுக்கு வலி வந்தால், உஷாராகி விடுவதே சரி.

பி12 வைட்டமின் குறையா?
ரத்த சோகை, பலவீனம், சோர்வு, பதட்டம், நரம்பு கோளாறு போன்றவை வர காரணம், ஒருவருக்கு உடலில் பி 12 வைட்டமின் சத்து குறைபாடு தான். ரத்த சிவப்பு அணுக்களில் இதன் தேவை முக்கியம். நரம்பு மண்டல செயல்பாடு உட்பட பல வகையில் இது தேவைப்படுகிறது. உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் குறைந்தால், சிலருக்கு உடல் மெலிந்து , நரம்பு பிரச்னை வருகிறது. அவர்களுக்கு பி12 இன்ஜெக்ஷன், மருந்து தரப்படும். பால் வேண்டாம் என்று சொல்லும் குட்டீசா, முதலில் மாற்றுங்கள். அதில் தான் இந்த சத்து அதிகம்.

ஐம்பதா… நெட் பாருங்க
நீங்கள் ஐம்பது வயதை கடந்தவரா? கம்ப்யூட்டர் அடிப்படை அறிவு இருக்கிறதா? அப்படியானால், கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அதில் உட்கார்ந்து, இன்டர்நெட் பாருங்கள்; அதில் இசை கேளுங்கள்; பல வெப்சைட்களை வலம் வாருங்கள். எதற்காக தெரியுமா? அப்போது தான் மூளையில் உள்ள செல்கள் முடங்காமல் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுமாம். மூளை சுறுசுறு என இருந்தால் பல வியாதிகளுக்கு நல்ல தீர்வாம். அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடிப்பு இது.

குழந்தைக்கு டிப்ரஷன்
டிப்ரஷன் என்பது என்ன? மனதில் சோர்வு, பதட்டம், கவலை தான். சாதாரணமாக இருக்கும் இது நீடித்தால், மோசமானால் வியாதியாகி விடும்போது இந்த பெயர் பெறுகிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் கூட வரும். இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள், சோகமாக இருக்கும்; பள்ளிக்கு போகாது; அடம்பிடிக்கும்; சாப்பிடாது. காரணம், குழந்தைக்கு எதிரில் பெற்றோர் சண்டை போடுவது, திட்டுவது, அடிப்பது போன்றவை தான். தனக்கு பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என்ற பயம் வந்து விடுகிறதாம்.

எப்பவும் “ஏசி’யா?
எப்போதும் “ஏசி’ அறையே கதி என்று இருக்க வேண்டாம்; சில மணி நேரமாவது, வெளிக்காற்று பட வேண்டும்; சுவாசத்தில் மாசற்ற காற்று புக வேண்டும்; சுவாசக்குழாயில் பாதிப்பு ஆரம்பித்து, பெரிய அளவில் கோளாறை ஏற்படுத்துவது, அறைக்குள் உள்ள தூசி , வெளியில் பரவும் தூசு, புகை மாசு தான் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும், உட்புற மாசினால் எட்டு லட்சம் பேரும், வெளிப்புற மாசினால் 15 லட்சம் பேரும் ஆண்டுதோறும் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கோலா உருண்டைக் குழம்பு

தேவையானப் பொருட்கள்:
(கொத்தின கறி) மட்டன் கைமா – 1/2 கிலோ,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
பட்டை – சிறுதுண்டு சோம்பு,
கசகசா – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

அரைக்க:-
தேங்காய் துருவல் – 1/2 மூடி,
வெங்காயம் – 1 நறுக்கியது.
மிளகாய் வற்றல் – 4,
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம்-& 1 டீஸ்பூன்,
மேற்கண்ட பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைக்கவும்.

செய்முறை:

கொத்தின கறியை நன்கு சுத்தம் செய்து வேக வைக்கவும்.
வெந்த கறியுடன் லேசாக உப்பு சேர்த்து பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
கறியுடன் மசால் கலவை ஒன்றானவுடன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் அந்த கலவையை ஒவ்வொன்றாக உருட்டி தனியே வைக்கவும்.
குழம்பிற்கு அரைத்த மசாலாவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கூட்டி வைக்கவும்.
குழம்பு கொதித்து வரும் போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும். தேவைக்கேற்ப கெட்டியான பதத்தில் குழம்பு வரும் போது இறக்கி விடவும்.
இது டிஃபன் வகையறாக்களுக்கும், சாதத்திற்கு ஊற்றிகொள்ள நன்றாக இருக்கும்..

பாலக் தோசை

தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி & ஒரு கப், உளுத்தம்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) & ஒரு கப், பச்சை மிளகாய் & 3, பெருங்காயத்தூள் & ஒரு டீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப, எண்ணெய் & தேவைக்கேற்ப.

செய்முறை:
பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பாலக் எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து வைக்கவும். 5 மணி நேரமாவது புளிக்கவேண்டும். புளித்து பொங்கியதும் தோசைகளாக வார்க்கவும். கீரையில் வழவழப்பு இருப்பதால் உளுந்தை குறைத்துப் போடவேண்டும். வித்தியாசமான மாலை டிபன், இந்த தோசை.

உடலிலுள்ள நீர் எப்படி முறைப் படுத்தப்படுகிறது?

உங்கள் இல்லங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது, அவசியமான காரியங்கள் எவை யெனப் பகுத்துப் பார்த்துத்தானே காரியமாற்றுவீர்கள்.

உதாரணமாக, குடிப்பதற்கும் சமையலுக்கும் முதற்கட்ட முன்னுரிமை கொடுத்துப் பின், குளிப்பதற்கும், கழுவுவதற்கும் தண்ணீரைக் குறைத்துத்தானே நீங்கள் பயன்படுத்துவீர்கள். அதைப் போலவே, குறைந்த தண்ணீரைச் சரீரம் பெறும்போது, எல்லா உயிரணுக்களிலும் அடங்கியுள்ள ஹிஸ்டாமின் என்ற வேதியியல் சேர்க்கை, உடனடியாகவே ஒரு நீரமைப்பை உருவாக்கிக் கொள்ளும். இந்த அமைப்பு, உடலில் உள்ள அவயங்களுக்கு முன்னுரிமை அளித்து & அதாவது மூளை, இதயம் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு நீரை விநியோகம் செய்யும்.
ஹிஸ்டாமின், நரம்பியல் செய்தி சாதனம் என்றொரு வேதியியல் முறையினை இயக்குகின்றது. இந்த வேதியியல் பொருட்கள், நரம்பு மண்டலங்களில் உந்தும் சக்திகளை மாற்றி அமைத்தோ அல்லது உள்ளே அனுப்பி வைப்பது போன்ற வேலைகளைச் செய்யும். அதேபோல் இந்தச் சாதனம், தண்ணீரை உள்ளே எடுப்பதையும் முறைப்படுத்தும் துணை அமைப்புகளையும் இயல்பாகச் செய்கின்றன. இந்தத் துணை அமைப்புகள் க்ஷிணீsஷீஜீக்ஷீமீssவீஸீ, ஸிமீஸீவீஸீணீஸீரீவீஷீ – sமீஸீsவீஷீஸீ போன்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு, தண்ணீரை உள்ளே எடுப்பதையும், அதனை விநியோகம் செய்வதையும் சரியாகவே முறைப்படுத்துகின்றன.
வாசோபிரஸ்ஸின் என்பது ஒரு உட்சுரப்பியாகும். இது சிறுநீரகங்கள் உள்வாங்கும் தண்ணீரைக் கூடுதலாக்கும் வேலையைச் செய்கின்றன. சிறுநீர் உற்பத்தியைக் குறைக்கச் செய்துவிடும். ரெனின் என்பது (ஒருவகை செரிமானப் பொருளாகும்.) என்சைம் ஆகும். இது சிறுநீரகங்களில் சேமித்து வைக்கப்படுபவையாகும். எப்பொழுதெல்லாம் இரத்த அளவு குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த ரெனின் தொடர்ச்சியான இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, ஒரு இரசாயனப் படிவத்தை உற்பத்தி செய்கின்றன. இதுவே ஆஞ்சியோசென்சன் என்பதாகும். இந்த ஆஞ்சியோசென்சன், சிறுநீரகங்கள் வடிகட்டும் இரத்த விகிதாச்சாரத்தைக் குறைக்கச் செய்கின்றன. இப்படி குறைத்து வடிகட்டியதன் விளைவால், தண்ணீரை மேலும் தக்க வைக்க அது உடலுக்கு உதவி செய்கின்றன.
வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில், உடம்பின் நீரோட்டம் மூன்று நிலைகளில் இயக்கப்படுகின்றன. அவை, ஒன்று & —பிறப்பிற்கு முன்; அடுத்து பிறந்ததற்கும் பருவ வயதை அடைவதற்கும் இடையில்; மூன்றாவதாக & வாலிபப் பருவ காலத்தில். ஜனனத்திற்கு முன்பு, உலகம் காணாத குழந்தை, தனது வளர்ச்சிக்காகக் கூடுதல் தண்ணீர் தேவையெனக் கருதும்போது, தனது தாய்க்கு உரிய அறிவிப்புகளை சைகைகளை அனுப்பி வைக்கும். அப்படியொரு சைகை வராமல் இருந்தால் கூட, பேபியின் தேவையை தாயாரே அனுபவித்து, உணர்ந்து கொள்வார். கருவுற்ற தாயாருக்கு காலையில் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு, தனக்கான கூடுதல் நீர்த் தேவையின் அடையாளத்தினை, வெளிவராத பேபி காட்டும் அறிகுறிதான் இது.
தண்ணீர் விநியோகத்தின் மேம்பாட்டுத் தன்மை, இருபதாம் வயதில்தான் உடலின் உச்சகட்டத்தை அடைகின்றது. பின்னர் இது படிப்படியாக இறங்குமுகமாகவே வாழ்க்கையில் இருக்கிறது. எனவே வயது ஏறும்பொழுது, தாக உணர்வும் காலமுறையாக தணிந்து கொண்டே இருக்கும். இதனால்தான் வயதான காலத்தில், ஒருவேளை போதிய தண்ணீர் எடுக்காத காரணத்தினால் தான், உயர் இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி போன்ற அச்சமூட்டும் நோய்கள் தாக்கத் தொடங்குகின்றன. தேநீர், காபி, மது, கரியமில வாயு கலந்த பானங்களை நீங்கள் வழக்கமாக உட்கொள்வதால், வாழ்வின் கடைசிப் பகுதியில், உடலின் நீரோட்டத்தை வெகுவாகவே பாதிக்கச் செய்துவிடுகின்றன.
உடலின் பல்வேறு அவயங்களில் காணப்படும் திசுக்களின் உள்ளேயும் உள்ள தண்ணீரின் விகிதாச்சாரம் மிக முக்கியமானதாகும். வயது கூடும் போதெல்லாம் திசுக்களின் தண்ணீர் கொள்ளளவு குறைந்து கொண்டே போகும்.
ஒவ்வொரு திசுவிலுள்ள தண்ணீரும் வழக்கமான வேலையினை நெறிப்படுத்துவதில் சரியான பங்கை ஆற்றுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஒரு சில வேலைகளைச் செயலற்றுப் போகச் செய்துவிடும். வேலைகள் முடங்கிப் போகும் போது, உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றிவிடும்.

வயதோ 10 தோற்றமோ 70


மகனாக அப்பாவும், அப்பாவாக மகனும் நடிக்கும் அற்புதமான மருத்துவ விழிப்புணர்வு சினிமா படம் தான் “ப்பா!’ அமிதாப் பச்சன், சிறிய வயது பையனாக, அதே சமயம், வயதான தோற்றத்துடன் நடிக்கிறார்; அவரின் தந்தையாக மகன் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.
இப்படி பத்து வயது சிறுவன், எழுபது வயது கிழவனாக தோற்றமளிக்கும் நோய் தான் “ப்ரொகெரியா’ இது ஒரு மரபணு நோய்; லாமின் “ஏ’ என்ற ப்ரோட்டீனில் இருந்து உருவாகும் இந்த நோயில், சிறுவன் வளர்ச்சி மூன்று மடங்கு அதிகரிக்கும்; அதாவது, அந்த வேகத்தில் கிழத்தன்மை வரும். 12 வயதில் பார்த்தால், மண்டை பெரிதாகி, கிழடு அதிகமாக தட்டி, வழுக்கையும் விழுந்து விடும்.
உலகிலேயே 60 பேருக்கு தான் இந்த நோய் வந்துள்ளது. இந்தியாவில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து ஐந்து பேருக்கு ஏற்பட்டு, இரண்டு பேர் இறந்துவிட்டனர் என்ற தகவல் இருக்கிறது. இந்த அரிய நோய் வந்தவர்கள் 15 வயது வரை உயிருடன் இருப்பர்; அதிகபட்சம் முப்பது வயது வரை தான் வாழ முடியும்.
* இந்த நோய்க்கு “ஹட்சின்சன் கில்போர்டு சிண்ட்ரோம்’ என்றும் பெயர்.
* எடை குறையும்; ஒல்லியான தேகம் ஏற்படும்; வழுக்கை விழும் – இது தான் அறிகுறிகள்.
*தோல் மிக மெலிதாக இருக்கும். கண் புருவங்கள் குறைவாக இருக்கும்.
* பற்கள் வளரவே செய்யாது. பொக்கை வாயாக இருக்கும்.
* வயதான தோற்றம் இருந்தாலும், சிறுவனை போன்ற நினைப்பு தான் இருக்கும்; ஆனால், உடல் வளர்ச்சியின்மையால் மனப்போக்கு பாதிக்கப்படும்.
* இவர்களுக்கு இதய பாதிப்பு வெகு சுலபம்; அதனால், பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடும்.
* இவர்களால் மற்ற சிறுவர்களை போல செயல்பட முடியாது; நினைப்பும் அப்படித்தான் இருக்கும்.
* சக வயதுள்ளவர்கள் போல விளையாடவோ, பள்ளிக்கு போகவோ தெரியாது; மந்தமாகவே இருப்பர்.
* அதிக கலோரி மிக்க உணவு வகைகள் தர வேண்டும்.
* இந்த நோய் தீர எந்த மருந்தும், அறுவை சிகிச்சையும் கிடையாது; ஆனால், சுரப்பி வழி சிகிச்சை தர முடியுமா என்று ஆய்வு நடக்கிறது.
* இந்த நோயை தவிர்க்க வழியில்லை. மரபணு காரணமாக ஏற்படுவதால், அதை தடுக்க முடியும் என்று நம்பிக்கையை நிபுணர்கள் விடவில்லை.
* என்ன காரணத்தால் இந்த நோய் வருகிறது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது; நிபுணர்களுக்கும் விடை கிடைக்கவில்லை.

யாரை பிடிக்கும் “அகோர போபியா?’
* “ஒழுங்கா சாப்பிடு; இல் லாட்டி பூச்சாண்டி வந்து ஒன்னைய விழுங்கிடுவான்…’
ண் ஒழுங்கா சொல்றத கேட்டு இருக்கணும்; இல்லே, உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்; கண்ணை குத்திடுவார்…’
உங்கள் வாலுத்தனமான குட்டீசை இப்படியே மிரட்டி வைப்பவரா? முதல்ல அதை கைவிடுங்க. இப்படியே பயமுறுத்தியே வைத்துக்கொண்டிருந்தால், வயதான பின்னும் கூட அந்த பயம் அடிமனதில் பதிந்து விடும். பயம் என்பதற்கு பெயர் மருத்துவ அகராதியில் போபியா; சிறுவயது பயம் பதிந்த சிலருக்கு “அகோர போபியா’ பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அதென்ன “அகோர போபியா?’ கூட்டத்தை பார்த்தால் பயம்; சைக்கிள் ஓட்ட பயம்; காரில் பயணம் செய்ய பயம்; தனியாக வீட்டில் இருக்கவும் பயம். வரிசையில் சில நிமிடம் நின்றாலும் பயம்; தனியாக நின்றாலும் பயம்; மேடை போட்டு பேசுபவரை பார்த்தால் பயம்; தனியாக பஸ்,ரயில், விமானத்தில் சென்றாலும் பயம்; ஷாப்பிங் செய்யும் போதும் பயம்; இது தான் “அகோர போபியா.’
* இதற்கு வெளிப்படையாக தெரியும் அறிகுறிகள் பயம் தான். அதை நோயாளி தான் சொல்ல வேண்டும். அதை வைத்துத்தான் மனநோய் மருத்துவர் முடிவு செய்வார்.
* மன, உடல் நிலையில் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்று முதலில் உறுதிசெய்ய வேண்டும்.
* பயரீதியான சம்பவங்களில் பாதிக்கப்பட்டிருந்ததால் தான் இப்படி நேரிடுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி நோய் வருவோர் வெறும் 10 சதவீதம் தான். எந்த பாதிப்பும் இல்லாமலேயே சிலருக்கு இந்த போபியா நோய் ஏற்படுகிறது.
* மனதில் தைரியத்தை வளர்த் துக் கொண்டால் போதும்; அதற்கு முறைப்படி தெரபி சிகிச்சை தருவார் டாக்டர்.
* இந்த நோய்க்கு இது தான் காரணம் என்று கூற முடியாது; சிறு வயதில் இருந்தே பயத்தை மனதில் ஆழமாக பதிந்து வைத்துக்கொண்டிருப்போருக்கு வர வாய்ப்பு அதிகம்.
* கடும் கட்டுப்பாடுகள் உள்ள குடும்பங்களில் உள்ளவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த பாதிப்பு வந்துள்ளது என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
* குழந்தைப்பருவத்தில் தேவை யற்ற கட்டுப்பாடு, கெடுபிடிகள் கூடாது; தைரியத்தை வளர்க்க ஓரளவு கட்டுப்பாடுடன் சுதந்திரமாக குழந்தைகளை விட வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் முழு சிகிச்சை பெற்று திரும்பும் வரை, தனியாக வெளியில் அனுப்பக்கூடாது.

இந்தோனேசிய ஆசாமி உயரத்தில் கின்னஸ் சாதனை

Top global news update

//
//

ஜகார்த்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், உலகின் மிக உயரமான மனிதர் என, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்த விவசாயி சுல்தான் கோசன் என்பவர் தான், தற்போது உலகின் மிக  உயரமான மனிதராக உள்ளார். இவரது உயரம் 2.41 மீட்டர். இந்த உலக சாதனையை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள லாம்பங் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளியான, சுபர்வோனா(25) முறியடிக்க உள்ளார். இவரது உயரம் 2.71 மீட்டர் (8.89 அடி) என, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் சாதனை பதிவுத்துறை மேலாளர் நதாரி கூறியதாவது: எங்கள் குழுவினர், சுபர்வோனாவை, இந்தோனேசியாவின் மிக உயரமான மனிதராக அறிவித்துள்ளனர். இவர், இந்தோனேசியாவில் முந்தைய சாதனையாக இருந்த 2.21 மீட்டர் உயரத்தை முறியடித்துள்ளார். இவர், உலகிலேயே மிக உயரமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளோம். இவ்வாறு நதாரி கூறினார்.

இதுகுறித்து சுபர்வோனா கூறுகையில்,”சில நேரங்களில் என் உயரத்தை பற்றி பெருமைப்படுகிறேன். ஆனால், அதிக உயரமாக இருப்பது சில நேரங்களில் எனக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. என்னால் சாதாரண மக்களை போல வாழ முடியவில்லை. பஸ்சில் ஏறுவது மற்றும் எனக்கு  ஏற்ற உடைகளை தேர்ந்தெடுப்பதில், மிகவும் பிரச்னை ஏற்படுகிறது’ என்றார்.

தண்ணீர் நல்ல மருந்து!

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.
இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.
உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.