இந்தோனேசிய ஆசாமி உயரத்தில் கின்னஸ் சாதனை

Top global news update

//
//

ஜகார்த்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், உலகின் மிக உயரமான மனிதர் என, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்த விவசாயி சுல்தான் கோசன் என்பவர் தான், தற்போது உலகின் மிக  உயரமான மனிதராக உள்ளார். இவரது உயரம் 2.41 மீட்டர். இந்த உலக சாதனையை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள லாம்பங் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளியான, சுபர்வோனா(25) முறியடிக்க உள்ளார். இவரது உயரம் 2.71 மீட்டர் (8.89 அடி) என, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் சாதனை பதிவுத்துறை மேலாளர் நதாரி கூறியதாவது: எங்கள் குழுவினர், சுபர்வோனாவை, இந்தோனேசியாவின் மிக உயரமான மனிதராக அறிவித்துள்ளனர். இவர், இந்தோனேசியாவில் முந்தைய சாதனையாக இருந்த 2.21 மீட்டர் உயரத்தை முறியடித்துள்ளார். இவர், உலகிலேயே மிக உயரமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளோம். இவ்வாறு நதாரி கூறினார்.

இதுகுறித்து சுபர்வோனா கூறுகையில்,”சில நேரங்களில் என் உயரத்தை பற்றி பெருமைப்படுகிறேன். ஆனால், அதிக உயரமாக இருப்பது சில நேரங்களில் எனக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. என்னால் சாதாரண மக்களை போல வாழ முடியவில்லை. பஸ்சில் ஏறுவது மற்றும் எனக்கு  ஏற்ற உடைகளை தேர்ந்தெடுப்பதில், மிகவும் பிரச்னை ஏற்படுகிறது’ என்றார்.

%d bloggers like this: