கழுத்து வலிகள் பலவிதம்

கழுத்து வலி சாதாரணமாகத்தான் ஆரம்பிக் கும்; ஆனால், தொடர்ந்து இருந்தால் தான் அதன் விபரீதம் புரியும். தொடர்ந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் ஏற்படுவது தான் இப்போது பல இளைஞர்களிடம் உள்ளது. சரியாக உட்கார்ந்து வேலை செய்தால் இந்த வலி வராது.
கழுத்து குருத்தெலும்பு பாதிக்கப்படும் போது, கழுத்து எலும்பு தேயும் போதும் தான் உண்மையான வலி ஆரம்பிக்கும். சில வகை நோய்களின் விளைவாகவும் வலி ஆரம்பிக்கும். அப்போது சாதா வலி தான் என்று இருக்கக்கூடாது. டாக்டரிடம் போய் விடுவது நல்லது. மற்றபடி வலிகளுக்கு உடற்பயிற்சி, ஓய்வு போதுமானது.
கழுத்து சுளுக்கு, திடீரென திரும்புவதால், விபத்தின் போது ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக குருத்தெலும்பு இழுபடுவதால் இந்த பாதிப்பு. அது சிகிச்சையில் சரியாகி விடும். வயதானவர்களுக்கு வலி வந்தால், உஷாராகி விடுவதே சரி.

பி12 வைட்டமின் குறையா?
ரத்த சோகை, பலவீனம், சோர்வு, பதட்டம், நரம்பு கோளாறு போன்றவை வர காரணம், ஒருவருக்கு உடலில் பி 12 வைட்டமின் சத்து குறைபாடு தான். ரத்த சிவப்பு அணுக்களில் இதன் தேவை முக்கியம். நரம்பு மண்டல செயல்பாடு உட்பட பல வகையில் இது தேவைப்படுகிறது. உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் குறைந்தால், சிலருக்கு உடல் மெலிந்து , நரம்பு பிரச்னை வருகிறது. அவர்களுக்கு பி12 இன்ஜெக்ஷன், மருந்து தரப்படும். பால் வேண்டாம் என்று சொல்லும் குட்டீசா, முதலில் மாற்றுங்கள். அதில் தான் இந்த சத்து அதிகம்.

ஐம்பதா… நெட் பாருங்க
நீங்கள் ஐம்பது வயதை கடந்தவரா? கம்ப்யூட்டர் அடிப்படை அறிவு இருக்கிறதா? அப்படியானால், கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அதில் உட்கார்ந்து, இன்டர்நெட் பாருங்கள்; அதில் இசை கேளுங்கள்; பல வெப்சைட்களை வலம் வாருங்கள். எதற்காக தெரியுமா? அப்போது தான் மூளையில் உள்ள செல்கள் முடங்காமல் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுமாம். மூளை சுறுசுறு என இருந்தால் பல வியாதிகளுக்கு நல்ல தீர்வாம். அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடிப்பு இது.

குழந்தைக்கு டிப்ரஷன்
டிப்ரஷன் என்பது என்ன? மனதில் சோர்வு, பதட்டம், கவலை தான். சாதாரணமாக இருக்கும் இது நீடித்தால், மோசமானால் வியாதியாகி விடும்போது இந்த பெயர் பெறுகிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் கூட வரும். இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள், சோகமாக இருக்கும்; பள்ளிக்கு போகாது; அடம்பிடிக்கும்; சாப்பிடாது. காரணம், குழந்தைக்கு எதிரில் பெற்றோர் சண்டை போடுவது, திட்டுவது, அடிப்பது போன்றவை தான். தனக்கு பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என்ற பயம் வந்து விடுகிறதாம்.

எப்பவும் “ஏசி’யா?
எப்போதும் “ஏசி’ அறையே கதி என்று இருக்க வேண்டாம்; சில மணி நேரமாவது, வெளிக்காற்று பட வேண்டும்; சுவாசத்தில் மாசற்ற காற்று புக வேண்டும்; சுவாசக்குழாயில் பாதிப்பு ஆரம்பித்து, பெரிய அளவில் கோளாறை ஏற்படுத்துவது, அறைக்குள் உள்ள தூசி , வெளியில் பரவும் தூசு, புகை மாசு தான் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும், உட்புற மாசினால் எட்டு லட்சம் பேரும், வெளிப்புற மாசினால் 15 லட்சம் பேரும் ஆண்டுதோறும் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

%d bloggers like this: