Daily Archives: திசெம்பர் 6th, 2009

அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!


பெரும்பாலானவர்கள் `அரிப்பு’ என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்ற போகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறபுறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறபுறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையிலுள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.

கருவுற்ற காலங்களில் கர்பபை வாசல், பிறப்புறுபு போன்ற வற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை புறபகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறபுறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்துக் குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறபுறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.

குடாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறபுறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு.

அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்! நடிகையின் கண்டுபிடிப்பு!

பெண்களில் முன்று வகையானவர்களை ஆண்கள் விரும்புவதில்லை என்று கூறி, அவர்களை பற்றி விளக்குகிறார் இந்தி கவர்ச்சி நட்சத்திரம் கொய்னா மித்ரா.

நீங்கள் ஓர் இளம்பெண்ணா…? அப்படியானால் இந்த பட்டியலில் நீங்கள் இல்லையே என்பதை `செக்’ செய்துகொள்ளுங்கள்…

தேவைகள் குறித்து நச்சரிபவள்

எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்து பயப்படுவது இந்த பெண்ணைத்தான். இந்த பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள்.

ஆண்களை வெறுபவள்

இந்த பெண்ணின் பலம் கோபம். அதன் காரணமாகவே பொறுப்பு கொண்ட ஓர் உறவில் இந்த பெண்ணுடன் ஈடுபட ஆண்கள் விரும்ப மாட்டார்கள். இந்த பெண்ணை படுக்கைக்குக் கொண்டு போக முடிந்தால் அதுவே தங்களின் வெற்றி என்று நினைப்பார்கள். எளிமையாகக் கூறினால், இந்த வகை பெண் ஆண்கள் மீதான தனது வெறுப்பையே தான் காயப்படாமல் தப்பிபதற்கான கவசமாக பயன்படுத்திக்கொள்வாள்.

`ஸ்பீக்கர்’ பெண்

ஓர் ஆணின் பார்வையில் சளசளவென்று பேசும் பெண் சிறந்தவளுமில்லை, மோசமானவளுமில்லை. ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டபடுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாக பேசுவாள்’ என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாக பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.

பெண்கள் தங்கள் தோழிகளுடன் வெகு இயல்பாக பேசிக்கொள்வார்கள். ஆண்களால் ஒருவருக்கு ஒருவர் அப்படி எளிதாக பேசிக்கொள்ள முடிவதில்லை. ` பேசினால்… நான் பேசுவேன்… நம் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வோம்’ என்பதுதான் பெண்களின் உலகம். வேறு பெண்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, தங்களுக்கு பிடித்த விஷயம் என்றால் பெண்கள் தயங்காமல் உடன் இணைந்து விடுவார்கள்.

படபடவென்று முச்சு விடாமல் பேசி முடிக்கிறார் கொய்னா மித்ரா.

ஆரம்பிச்சாச்சு குளிர்! -அலர்ஜி முதல் ஆஸ்துமா வரை பாதிக்கும்

* அலர்ஜி முதல் ஆஸ்துமா வரை பாதிக்கும்
* இதய பாதிப்புள்ளோர் முழு உஷார்
வெயில் காலத்தில் கூட தாங்கி விடலாம்; ஆனால், மழைக்காலம் தான் யாரையும் பாடாய்படுத்தி விடும். மூக்கை சிந்துவது முதல் காய்ச்சல் வரை வலம் வரும். அதையும் தாண்டி, குளிர்காலத்தில் தான் “வீக்’கான பலரும் முழு உஷாரில் இருக்க வேண்டும். அதிகாலையில் வாக்கிங் போவது முதல், உணவுக்கட்டுப்பாடு வரை கவனத் தில் இருந்து சிதறி விடக்கூடாது; டாக்டர் சொல்படி கேட்டு நடந்து கொள்வதே நல்லது. இல்லாவிட்டால்…?
ஒன்று, நிலைமை மோசமாகி விடும்; மருத்துவமனையில் ஏகப் பட்ட பணம் இழக்க வேண்டியிருக்கும்.
இதய நோயாளியா?
குளிர் காலத்தில் தான் பலருக்கும் அலர்ஜி சுலபமாக, உடலில் கோளாறுகளை ஏற்படுத்தி விடும். குறிப்பாக, ஆஸ்துமாவுக்கு குளிர் காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக்குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் ரொம்பவும் கடுப்பை ஏற்றிவிடும். சுவாசக்கோளாறுகளை விட, இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு தான் குளிர்காலம் “பரம எதிரி’யான பருவம். இவர்கள் மிகவும் எச்சரிக் கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது தான். கோடை காலத்தை போல நினைத்து குளிரில் வெளியில் சென்று வர முடியாது.
ஏன் ஆபத்து மிகுந்தது?
குளிர் காலத்தில் இதய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன; சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடுவதால், இதய பாதிப்புக்கு காரணமாகிறது.
* குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.
* வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
* உடலில் வெப்ப சக்தி தேவை. இந்த வெப்பத்தை தருவதற்கு இதயம் வேலை செய்வது முக்கியம். இதய வால்வுகள் வேலை செய்தால் தான் அங்கிருந்து ரத்தம் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்; ரத்தத்தில் ஆக்சிஜன் இருப்பது அவசியம். குளிர்காலத்தில் இது குறைந்து விடும்.
* அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது; குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும்.
* அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவும் குறையும்.
இடம் மாறலாமா?
குளிர் அதிகம் உள்ள டில்லி, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து சென்னை, கோல்கட்டா, மும்பை போன்ற இடங்களுக்கு மாறினால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாமா என்று கேட்கலாம். வெப்ப இடங்களுக்கு சென்றால், பாதிப்பு வரவே வராது என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட இடத்தில் உள்ள வானிலையில் பழக்கப்பட்டவர்கள், வேறு இடங்களுக்கு சென்றால், அங்கு “பாடி கிளாக்’ சீராக சில மாதம் பிடிக்கும்.
அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்னை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்டர் சொல்படி நடப்பதே நல்லது.
யாருக்கு பாதிப்பு அதிகம்?
அறுபது வயதை கடந்தவர்கள் பொதுவாகவே குளிர் காலத்தில் அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை “மூட்டை’ கட்டி வைக்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக்கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தடுக்க முடியாதா?
குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது; ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்.
* நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெயில் வந்தவுடன் செய்யலாம்.
* காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
* குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும.
100 ஐ தாண்டினால்…
* ரத்த ஓட்டம் ஏற்படுத்த இதய சுருக்கியக்கத்தின் போது எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை அறிவதுதான் “சிஸ்டாலிக் பிளட் பிரஷர்’ இது 100 ஐ தாண்டக்கூடாது.
* எதுவும் சாப்பிடாமல் எடுக்கும்போது எடுக்கப்பட்ட சர்க்கரை அளவு 100 மில்லியை தாண்டக்கூடாது.
* எல்.டி.எல்.,கொலஸ்ட்ரால் (கெட்ட கொழுப்பு) 100 ஐ தாண்டக்கூடாது.
* அதுபோல, ட்ரைகிளிசரைட்ஸ் 100 ஐ தாண்டக்கூடாது.
அதனால், குளிர் காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி, பரிசோதனை செய்து மிகவும் உஷாராக இருப்பது முக்கியம்.

குழந்தை வளர்ப்பு

உங்கள் குழந்தை வளர்ந்து பெரியவரானதும் தன்னம்பிக்கையுடனும் தயக்க சுபாவமின்றியும் இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்தானே? அப்படியானால் கீழ்க் கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளைத் தொந்தரவாக நினைத்து வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவர்களை உடன் அழைத்துச் செல்வதை பல பெற்றோர்கள் தவிர்ப்பதைப் பார்க்கிறோம். அது தவறான செயல்.

நீங்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தைகளை தவிர்க்காதீர்கள். புதிய சூழ்நிலைகளை சந்திப்பதிலிருந்து தவிர்க்கப்படும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானாலும் பலவித பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்பது மனநல நிபுணர்களின் கருத்து. குழந்தைகளை வீட்டில் என்னதான் கண்டிப்புடன் வளர்ந்தாலும், வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அந்தக் கண்டிப்பைத் தொடர்வது நல்லதல்ல. அதாவது வெளியிடங்களில் பெரியவர்களைப் பார்த்ததும் வணக்கம் சொல்லச் சொல்வது, ரைம் ஒப்பிக்கச் சொல்வது, போன்றவற்றைத் தவிருங்கள்.

பெரியவர்களது விரோதம், குழந்தைகளைப் பாதிக்க வேண்டாம். எல்லோருடனும் கலகலப்பாகப் பேசிப் பழக அனுமதியுங்கள். உங்கள் குழந்தை வீட்டில் படு சுட்டியாக இருக்கலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே வந்ததும் அவர்கள் இயல்பாக நடந்து கொள்ளாமல் பயப்படக்கூடும். வெளியே அழைத்துச் செல்லும்போது உங்கள் குழந்தைகளை எந்த விஷயத்திற்கும் கட்டுப்படுத்தாமல் அவர்களது போக்கிலேயே விட்டுவிடவும். புதிய சூழ்நிலையின் பயம் தெளிந்ததும், அவர்கள் தாமாக மற்றவரிடம் பேசவும், பழகவும் முன்வருவார்கள்.

உங்கள் குழந்தையைப் பிறருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போது அவர்களது நிறைகளையும், பலங்களையும் மட்டுமே எடுத்துச் சொல்லுங்கள். அவர்களது குறைகளைப் பகிரங்கப் படுத்தவோ பட்டப்பெயர் சொல்லி அழைக்கவோ செய்யாதீர்கள். வீட்டிற்கு வருந்தாளிகள் வரும் போது, குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இழுத்து வைத்துப் பேசச் சொல்லாமல், வந்தவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது, காபி கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துங்கள்.

எல்லோரிடமும் அமைதியாக இனிமையாக பேசப் பழக்குங்கள்.வருடத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகளை உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். தவறு செய்யும்போது அவர்களைக் கண்டிப்பதுபோல நல்ல செயல்களை செய்யும்போது பாராட்டவும், ஊக்கப்படுத்தவும், முடிந்தால் ஏதேனும் பரிசு கொடுக்கவும் முயற்சி செய்யுங்கள்.

மென்மையான கைகள் வேண்டுமா…

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ் கள் இதோ…

கைகள் பராமரிப்பு:
முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.
*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக <உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.
* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.
அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

பணம் லபக்கும் புதிய வைரஸ் ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்

லண்டன்:வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஐபோன் மூலம் மேற்கொள்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய வைரஸ் ஒன்று ஐபோனிலுள்ள வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்களைக் “லபக்’கிடும் அபாயம் தலைதூக்கியுள்ளது.மொபைல் போன் என்பது பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது இவற்றைக் கடந்து, அன்றாட தொழில் சம்பந்தமான பணப் பரிவர்த்தனை, வங்கிக் கணக்கு கையாளல் போன்றவற்றுக்கு கூட இப்போது பயன்படுத்தப்படுகிறது.

சைபர் கிரிமினல்கள் என்ற கணினி அல்லது மொபைல் போன்மூலம் கொள்ளையடிக்கும் கும்பல், இப்போது இந்தப் புது வகை உயர் ரக போன்களிலும் புதிய வைரசைப் பரப்பி வருகிறது.குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இந்தப் புதிய வகை வைரஸ் புயல் வேகத்தில் பரவி வருகிறது. மொபைல் போனில் புரியாத வார்த்தைகள், பிரபலங் களின் படங்கள் திடீரென தோன்றினால், அது புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வைரஸ், மொபைல் போனில் பதிவிடப்பட்டிருக்கும் வங்கிக் கணக்குகளை அப்படியே லவட்டி, சைபர் கிரிமினல்களுக்கு அனுப்பி விடும். போன் உரிமையாளரால் கூட இதைக் கட்டுப்படுத்த முடியாது.வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்டு உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைக்குரிய அத்தனை ரகசியங்களும் சைபர் கிரிமினல்களின் கைக்குச் சென்றுவிடும்.ஆப்பிள் நிறுவன மொபைல் போன் போல் போலிதயாரிப்புகள் வருகின்றன.

அவை மூலம் இந்த வைரஸ் அதிவேகத்தில் பரவுகிறது.சில வாரங்களுக்கு முன் தான் இந்த வைரசை அடையாளம் கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள். இது பற்றிய விவரங்கள் www.fsecure.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த வைரஸ் பரப்பப்படுவதில் பண மோசடி செய்யும் கும்பல் மிகப் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்களை காக்கும் காய்கறிகள்

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.

குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.
இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

முடக்கத்தான்


முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டன்ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

கோமாதாவை பூஜித்தால்… (ஆன்மிகம்)

பகவானால் படைக்கப்பட்டுள்ள விலங்குகளில் பசுக்களும் அடங்கும். பசுமாடு என்றால், பால் கொடுக்கும் ஒரு விலங்கு என்று நினைக்கிறோம்; ஆனால், அது ஒரு தெய்வீக விலங்கு. மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த பசுக்கள் எப்படி தோன்றியது என்பதும் புராணத்தில் உள்ளது.
ஆதிகாலத்தில், கடும் தவம் செய்து சுரபி என்னும் கோவையும், அதோடு கூட ஒரு ஆச்சரியமான புருஷனையும் உண்டு பண்ணினார் பிரம்ம தேவர். இவர்களின் வழி வந்தவை தான் பசுக்கள். இவர்களால் பசுக் கூட்டம் உண்டாயிற்று.
பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளினாராம். பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர்.
பசுவின் கொம்பு, முகம், நாக்கு இவைகளில் தேவேந்திரன் இருக்கிறான்; எல்லா துவாரங்களிலும் வாயு இருக்கிறான்; கால்களில் – சப்த மருத்துக்கன்; கொண்டையில்- ருத்ரன்; வயிற்றில்-அக்னி; காம்புகளில்- சரஸ்வதி; கோமயத்தில்-லட்சுமி; மலத்தில்-கீர்த்தியும், கங்கையும்; பாலில்-மேதை; வாயில்- சந்திர பகவானும்…
இதயத்தில் – எமனும்; வாலில் – தர்ம தேவதையும்; மயிர்க்கால்களில் – யாகம் முதலிய கிரியைகளும்; கண்களில் – சூரியனும்; பூட்டுக்களில் – சித்தர்களும்; அசைவில்- காரிய சித்தியும், தவமும், சக்தியும் உள்ளனர்.
இப்படி, பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். உலகிற்கு சிறந்த புண்ணியமும், ஹோமத் திரவியமும் கொடுக்கிறது.
சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு, துக்கப்பட்ட பிறகு, வம்சத்து ரிஷி ஒருவர், பசும்பாலின் நுரையை உட்கொண்டு கோலோகத்தை அடைந்தாராம். பசுவை வளர்த்துப் பாதுகாப்பதிலேயே, கண்ணும், கருத்துமாக இருந்தார் அந்த ரிஷி. பசுவின் பாலை கறக்காமல், கன்றுக் குட்டி குடிக்கட்டும் என்று விட்டுவிடுவார்.
தாய்ப் பசுவிடம், கன்றுக் குட்டிகள் பால் குடித்த பிறகு, பசுவின் மடியில் இருக்கும் பாலின் நுரையை மட்டும் இவர் சாப்பிட்டு ஜீவித்து வந்தார். தபஸ்வியான இவர் இப்படி செய்து, பிறகு சொர்க்கம் சென்றார் என்பது கதை.
பசு மாடு என்றால், அதன் பாலை ஒட்டக் கறந்து விடக்கூடாது என்பது தர்மம்; கன்றுக் குட்டிக்கும் பால் விட வேண்டும். நம் குழந்தை மாதிரி, பசுவுக்கு அதன் கன்றும் குழந்தை தானே! பசுவின் மடியில் உள்ள நான்கு காம்புகளில், ஒரு காம்பு தேவதைகளுக்கும், ஒன்று, பூஜைக்கும், ஒன்று, கன்றுக் குட்டிக்கும் என்பது சாஸ்திரம்.
கன்றுக்குட்டி இல்லாத பசுவின் பால், பூஜைக்கு உதவாது என்று சாஸ்திரம் உள்ளது. வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டியைக் காட்டி கறக்கப்படும் பசும் பால் கூட பூஜைக்கு உதவாதாம்.
புண்ணியமான ஜீவன் பசு. அதை ரட்சிக்க வேண்டும்; பூஜிக்க வேண்டும். பசுமாடு வந்து விட்டால், தடி எடுத்து அடித்து விரட்டாமலிருந்தாலே போதும், அதுவே புண்ணியம் தான்.

யோகக் கலை

யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது. யோகம் என்றால் என்ன? யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும். அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும். யோகப் பயிற்சியின் சிறப்புகள் 1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது. 2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது. 3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது. 4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது. 5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன. ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்: 1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும். 2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது. 3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன. 4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது. 5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது. 6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.