பணம் லபக்கும் புதிய வைரஸ் ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்

லண்டன்:வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஐபோன் மூலம் மேற்கொள்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய வைரஸ் ஒன்று ஐபோனிலுள்ள வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்களைக் “லபக்’கிடும் அபாயம் தலைதூக்கியுள்ளது.மொபைல் போன் என்பது பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது இவற்றைக் கடந்து, அன்றாட தொழில் சம்பந்தமான பணப் பரிவர்த்தனை, வங்கிக் கணக்கு கையாளல் போன்றவற்றுக்கு கூட இப்போது பயன்படுத்தப்படுகிறது.

சைபர் கிரிமினல்கள் என்ற கணினி அல்லது மொபைல் போன்மூலம் கொள்ளையடிக்கும் கும்பல், இப்போது இந்தப் புது வகை உயர் ரக போன்களிலும் புதிய வைரசைப் பரப்பி வருகிறது.குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இந்தப் புதிய வகை வைரஸ் புயல் வேகத்தில் பரவி வருகிறது. மொபைல் போனில் புரியாத வார்த்தைகள், பிரபலங் களின் படங்கள் திடீரென தோன்றினால், அது புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வைரஸ், மொபைல் போனில் பதிவிடப்பட்டிருக்கும் வங்கிக் கணக்குகளை அப்படியே லவட்டி, சைபர் கிரிமினல்களுக்கு அனுப்பி விடும். போன் உரிமையாளரால் கூட இதைக் கட்டுப்படுத்த முடியாது.வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்டு உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைக்குரிய அத்தனை ரகசியங்களும் சைபர் கிரிமினல்களின் கைக்குச் சென்றுவிடும்.ஆப்பிள் நிறுவன மொபைல் போன் போல் போலிதயாரிப்புகள் வருகின்றன.

அவை மூலம் இந்த வைரஸ் அதிவேகத்தில் பரவுகிறது.சில வாரங்களுக்கு முன் தான் இந்த வைரசை அடையாளம் கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள். இது பற்றிய விவரங்கள் www.fsecure.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த வைரஸ் பரப்பப்படுவதில் பண மோசடி செய்யும் கும்பல் மிகப் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

One response

  1. how to awaid the saibarcriminals.how to remove the virus from the phone. if u have solution, please tell me. thanks.

%d bloggers like this: