Daily Archives: திசெம்பர் 10th, 2009

மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.

இதைத் தொடாதீங்க…!-எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

நமது உடம்பின் எரிபொருள் உணவுதான். எனவே நீங்கள் சாப்பிடுவது, நாள் முழுவதும் உங்கள் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் உங்களுக்குள் உற்சாகத்தை பாய்ச்சுவதைம், சில உணவுகள் உங்களைத் தொய்ந்துபோக வைப்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமானால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்…

சர்க்கரை அளவைக் கூட்டும் உணவுகள்

உங்களுக்கு `ஸ்வீட்’ சாப்பிடும் ஆசை அதிகமா? அது, `தடுக்கபட்ட’ உணவுகளில் உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடக் கூடும். உதாரணமாக, தித்திபான இனிப்பு, `கேக்’ போன்றவை. அவை உங்களின் உற்சாகத்தை உயர்த்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் அது தற்காலிகமானது. பீட்சா, ஒயிட் பிரெட் சாட்விச், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உங்களின் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டி உற்சாக அளவில் ஒரு தாவலை ஏற்படுத்தும்.

சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது உங்களின் முளையின் உஷார்த்தன்மையைக் கூட்டும். ஆனால் சர்க்கரை அளவு குறையக் குறைய நீங்கள் தளர்ந்து போய் விடுவீர்கள்.

மாற்று

மேற்கண்டவற்றுக்கு பதிலாக, வேதிபொருட்கள் சேர்க்காத பனைவெல்லத்துடன் எள், பாதாம்பருப்பு, பரங்கி விதை ஆகியவற்றுடன் முழுக்கோதுமை அல்லது பல தானிய ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

பொரித்த உணவுகள்

அதிகமான கொலஸ்ட்ராலும், கொழுப்பும் உங்களை பொரித்த உணவுகளிலிருந்து விலக்காவிட்டால், இதோ இன்னும் ஒரு காரணம். சிஸ், பக்கோடா, பஜ்ஜி போன்றவை செரிமானம் ஆவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறது. செரிமானத்தின்போது உடம்பின் அதிகமான சக்தி அதற்கே செலவாவதால், அப்போது நாம் சோம்பலாக உணர்வோம்.

மாற்று

சோயா செறிந்த நொறுக்குத் தீனிகள், டோக்லா, ரவா இட்லி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.

உற்சாக முட்டும் பானங்கள்

உற்சாகமுட்டும் பானங்கள் (எனர்ஜி டிரிங்ஸ்) பல அவற்றில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் `காபீனால்’ உடனடி சக்தியை அளிக்கின்றன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தச் சக்தி வடியத் தொடங்கிவிடும். அப்போது நீங்கள் மேலும் தளர்ந்தவராக ஆகிவிடுவீர்கள். பரீட்சைக்கு படிக்கும்போது விழித்திருப்பதற்காக உற்சாக முட்டும் பானங்களை பருகுவோர் விஷயத்தில் இது தெளிவான உண்மை. உற்சாகமுட்டும் பானங்கள் ஆரம்பத்தில் `காபீனின்’ உதவியால் முளைச் சக்தியைக் கூட்டும். ஆனால் சற்று நேரத்துக்கு பின் நீங்கள் சுத்தமாகக் களைத்து போய்விடுவீர்கள்.

மாற்று

உங்களுக்கு பிடித்த எந்த பழத்தைம் யோகர்ட் சேர்த்துச் சாப்பிடுங்கள். ஒரு பெரிய கிளாசில் பழச்சாறு அருந்தலாம். இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் பருகலாம்.

பதபடுத்திய உணவுகள்

கிரீம் பிஸ்கட்டுகள், நுடுல்ஸ், உப்பிட்ட உருளைக்கிழங்கு சிஸ், கிரீம் நிறைந்த சாலட், வெண்ணை வழியும் பீட்சா ஆகியவற்றில் நிறைய சோடியம்

உள்ளது. சோடியமானது தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை `டீஹைட்ரேஷன்’, அமைதியற்ற நிலை, எளிதாக எரிச்சலுக்குள்ளாகும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். பதபடுத்திய உணவுகளின் தயாரிப்பின்போது அவை அதிக நாள் கெடாமல் இருபதற்காக `ஹைட்ரேஷன் பிராசஸுக்கு’ உட்படுத்தபடுகின்றன. அவை பல்வகை `டிரான்ஸ்பேட்ஸை’ ஏற்படுத்துகின்றன. இந்தக் கொழுப்புகளைச் சாப்பிடுவது, குறிபிடத்தக்க அளவு சக்தியைக் குறைக்கும்.

மாற்று

வறுத்த தானியங்களை சாபிடலாம்.

காபி

நாம் `டல்’லாக உணரும்போது சூடாக ஒரு `கப்’ காபி சாபிடலாம் என்று நினைப்போம்- அது உடனடியாகத் தெம்பூட்டும் என்ற எணத்தில். ஒரு கோப்பை `ஸ்ட்ராங்’ காபி உங்களை விழிப்பாக வைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அது சிறிது நேரத்துக்குத்தான்.

காபியில் உள்ள `காபீன்’, உங்களின் உள்ளமைப்பைத் தூண்டி சோர்வை விடுவிக்கிறது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது அடிமைத்தன்மையை ஏற்படுத்திவிடும்.

அதிகமாகக் காபி பருகுவது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கும், தூக்கத்தைத் தொந்தரவு படுத்தும். நீண்ட இடைவேளைக்கு இடையே கொஞ்சம் கொஞ்சம் காபி சாப்பிடுவது நல்லது.

மாற்று

`லெமன் டீ’ அல்லது காய்கறி சூப் சாபிடுங்கள்.

மாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி!


பிறந்த குழந்தையானது முதல் மாதத்திலிருந்து பன்னிரண்டாவது மாதம் வரை அதாவது ஒரு வருடம் வரை படிப்படியாக எப்படி, என்ன வளர்ச்சிகளைக் காண்கிறது தெரியுமா? இதை குழந்தை பெற்ற பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதம்

பிறந்த குழந்தையை தூக்கும் போது, அதன் தலை நேராக நிற்காமல் விழும் தலையோடு சேர்த்து தூக்க வேண்டும். அதை குப்புறப் படுக்க வைத்தால், அதன் இடுப்பு, கைகள் மற்றும் கால்களைவிட சற்று உயரத்தில் இருக்கும். அதன் உள்ளங்கையைத் தொட்டால், கைகளை மூடிக் கொள்ளும்.

இரண்டாம் மாதம்

கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளும், இடுப்புப் பகுதியைக் கீழே வைத்துக் கொள்ளும்.

மூன்றாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலை லேசாக நிற்கும். கட்டை விரலை வாயில் வைத்து சூப்ப ஆரம்பிக்கும்.

நான்காவது மாதம்

தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கும். நிற்க வைக்க இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்தால் பிடித்துக் கொள்ளும்.

ஐந்தாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலையையும் நெஞ்சையும் உயர்த்தும்.

ஆறாம் மாதம்

எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். முன்னங்கைகளைத் தரையில் அழுத்தமாக ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.

ஏழாம் மாதம்

பிடிமானமில்லாமல் உட்காரக் கற்று கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நிற்கும். தனது கைகளை உபயோகிக்கக் கற்று கொள்ளும்.

எட்டாம் மாதம்

கொஞ்சம் தடுமாற்றமின்றி நன்றாகவே உட்காரும். உடலின் மொத்த எடையையும் தன் கால்களில் தாங்கியபடி நிற்கப் பழகும். டம்ளர், பால் பாட்டில் போன்றவற்றைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும்.

ஒன்பதாம் மாதம்

பத்து நிமிடங்கள் வரை தடுமாறாமல் உட்கார முடியும். எதையாவது பிடித்தபடி நிற்க ஆரம்பிக்கும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகக் குவிக்கக் கற்றுக் கொள்ளும்.

பத்தாம் மாதம்

முன் பக்கமாகச் சாய்ந்து அங்கே கிடக்கும் பொருட்களை எடுக்கும். கைகளை ஊன்றியபடி தரையில் தவழ ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக் கொள்ளும்.

பதினோராம் மாதம்

உட்கார்ந்த நிலையில் உடலைத் திருப்ப அதனால் முடியும். முழங்கால்களைத் தரையில் ஊன்றியபடி தவழ ஆரம்பிக்கும். நேராக நிற்கக் கற்றுக் கொள்ளும். ஆட்காட்டி விரலால் தரையில் எதையாவது எழுதுகிற மாதிரிச் செய்யும்.

பன்னிரண்டாம் மாதம்

கைகளையும், கால்களையும் உபயோகித்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும் கூட ஸ்திரமாக நிற்கப்பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்ளும்.

யோக முத்ரா

செய்முறை:

பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியாவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம். தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள் முடிந்த அளவு முயிற்சித்துவிட்டு, விட்டுவிடவும், கொஞ்ச நாளில் முழு நிலை அடையலாம்.

பலன்கள்:

முதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். தாது இழுப்பு, பலக்குறைவு நீங்கும், நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும். அஜீரணம், மலச்சிக்கல் ஒழியம். நுரையீரல் நோய்க் கிருமிகள் நாசமடையும்.

பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும். வயற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செய்யக் கூடாது.

லட்சியம் இல்லாமல் வாழாதே -விவேகானந்தர்


இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.

என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.

எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.

மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்