எடுத்துச் செல்லக்கூடிய டிவிடி ரைட்டர்

ட்ரான்ஸெண்ட் நிறுவனம் கையில் எடுத்துச் சென்று இணைத்துப் பயன்படுத்தக் கூடிய சிடி/டிவிடி ரைட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். மிகவும் ஸ்லிம்மான இந்த போர்ட்டபிள் டிவிடி ரைட்டர், 8எக்ஸ் வேகத்தில் டிவிடியையும், 24 எக்ஸ் வேகத்தில் சிடியையும் இயக்குகிறது. இதனை இயக்குவதற்கு தனியே மின் இணைப்பு வழங்க வேண்டியதில்லை. யு.எஸ்.பி. சக்தியிலேயே இயங்குகிறது.
இந்த ரைட்டருடன் பைல்களை எழுத, சைபர் லிங்க் பவர் டுகோ என்ற சாப்ட்வேர் வழங்கப்படுகிறது. சைபர்லிங்க் தரும் மீடியா ஷா என்ற சாப்ட்வேர், 30 நாட்களுக்கு சோதனை செய்து பார்க்கத் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி சிடி/டிவிடிக்களில் டேட்டா எழுதுவது மற்றும் படிப்பதை மேற்கொள்வது மட்டுமின்றி, சிறிய சாப்ட்வேர் இன்டர்பேஸ் ஒன்றின் வழியாக இந்த மீடியா பைல்களை அடுக்கி வைக்கலாம். அண்மையில் பிரபலமான டூயல் லேயர் டிவிடி மீடியா வரையில் அனைத்து பார்மட்களிலும் இது இயங்குகிறது. இரண்டு ஆண்டு வாரண்டியுடன் ரூ.4,300க்குக் கிடைக்கிறது.

%d bloggers like this: