Daily Archives: திசெம்பர் 12th, 2009

பிராந்திய மொழிகளில் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தன் வர்த்தகம் என்றும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் எனவே எண்ணுகிறது. மைக்ரோசாப்ட் இந்தியா என்னும் இந்திய மைக்ரோசாப்ட் பிரிவு அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அண்மையில் இதன் ஹைதராபாத் ஆய்வுக் கூடம் , மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில் பிராந்திய மொழிகளில் தகவல் உள்ளீடு செய்வதற்கான டூல்ஸ் ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த டூல் மூலம், இந்திய மொழி ஒன்றின் டெக்ஸ்ட்டை, ஆங்கில எழுத்துக்களின் ஒலிப் பின்னணியில் அமைக்கலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் சிஸ்டங்கள் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்திலும் இதனை அமைக்கலாம். முதல் கட்டமாக தமிழ், இந்தி, கன்னடா, வங்காளம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான டூல் தரப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பானிய மொழியில் தன் அனைத்து சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்தது. தொடர்ந்து தான் இலக்கு வைத்திடும் நாடுகளில் இந்த கூடுதல் வசதிகளைத் தந்த மைக்ரோசாப்ட், தற்போது இந்திய மொழிகளில் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்தியாவில் 1.2 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர் பயனாளர்களும், 4.5 கோடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களும், 52.5 மொபைல் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இத்தகைய பிராந்திய மொழிகளில் டூல்ஸ்களை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களைத் தன் பக்கமே வைத்திருக்க முடியும் என மைக்ரோசாப்ட் நினைக்கிறது. டெஸ்க்டாப் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய அப்ளிகேஷன்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த டூல்ஸ் அமையும் என்று அறிவித்துள்ளது. இவற்றின் சோதனைத் தொகுப்பினை விரைவில் தன் இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் தர இருக்கிறது.

நீ தான் அனைவருக்கும் தலைவன் – சுவாமி விவேகானந்தர்

* பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, ‘நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்’ என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.

* எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

* உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.

* ‘சித்’, ‘அசித்’, ‘ஈஸ்வரன்’ என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், ‘சித்’ அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.

மயூராசனம்

செய்முறை:

மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்ததுத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு மறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.

பலன்கள்:

வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிநுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.