பிராந்திய மொழிகளில் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தன் வர்த்தகம் என்றும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் எனவே எண்ணுகிறது. மைக்ரோசாப்ட் இந்தியா என்னும் இந்திய மைக்ரோசாப்ட் பிரிவு அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அண்மையில் இதன் ஹைதராபாத் ஆய்வுக் கூடம் , மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில் பிராந்திய மொழிகளில் தகவல் உள்ளீடு செய்வதற்கான டூல்ஸ் ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த டூல் மூலம், இந்திய மொழி ஒன்றின் டெக்ஸ்ட்டை, ஆங்கில எழுத்துக்களின் ஒலிப் பின்னணியில் அமைக்கலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் சிஸ்டங்கள் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்திலும் இதனை அமைக்கலாம். முதல் கட்டமாக தமிழ், இந்தி, கன்னடா, வங்காளம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான டூல் தரப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பானிய மொழியில் தன் அனைத்து சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்தது. தொடர்ந்து தான் இலக்கு வைத்திடும் நாடுகளில் இந்த கூடுதல் வசதிகளைத் தந்த மைக்ரோசாப்ட், தற்போது இந்திய மொழிகளில் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்தியாவில் 1.2 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர் பயனாளர்களும், 4.5 கோடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களும், 52.5 மொபைல் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இத்தகைய பிராந்திய மொழிகளில் டூல்ஸ்களை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களைத் தன் பக்கமே வைத்திருக்க முடியும் என மைக்ரோசாப்ட் நினைக்கிறது. டெஸ்க்டாப் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய அப்ளிகேஷன்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த டூல்ஸ் அமையும் என்று அறிவித்துள்ளது. இவற்றின் சோதனைத் தொகுப்பினை விரைவில் தன் இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் தர இருக்கிறது.

%d bloggers like this: