உடலை வெட்டாமல் பிரேத பரிசோதனை

பெர்னே : சுவிட்சர்லாந்து நாட்டில், “ஆப்டிகல் 3டி ஸ்கேனர்’ என்ற புதிய வகை கருவி மூலம் உடலை வெட்டாமல் பிரேத பரிசோதனை செய்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில் 2006ம் ஆண்டு, பெர்னே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் தாலி மற்றும் அவரது குழுவினர், பிரேத பரிசோதனை செய்ய “ஆப்டிகல் 3டி ஸ்கேனர்’ கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறைக்கு “விர்டாப்சி’ என பெயரிட்டுள்ளனர். இந்த கருவி மூலம், பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடலை வெட்டாமல் அப்படியே சோதனை செய்து, இறப்பிற்கான காரணத்தை கண்டறியலாம்.

இதுகுறித்து, பேராசிரியர் மைக்கேல் தாலி கூறியதாவது:பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடலை வெட்டாமல், இந்த ஸ்கேனர் கருவி மூலம் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான காயங்கள் மற்றும் இறப்பிற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிகிறோம்.இந்த ஸ்கேனர் மூலம் கண்டறியப்படும் தகவல்கள் நிரந்தரமான ஆவணமாக இருக்கும். இதை இன்டர்நெட் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த முறையில் பிரேத பரிசோதனை செய்ய, 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு டேபிள் மேல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடலை வைத்து, ஸ்கேனரின் ரோபாட்டிக் கைகள் மூலம் பரிசோதிக்கப்படும்.இரண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள், கம்ப்யூட்டரை பயன்படுத்தி காரணத்தை கண்டறிவர். இதில், சி.டி., ஸ்கேனர் எலும்பில் ஏற்பட்டிருக்கும் காயங்களை கண்டறியும். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மென்மையான திசுக்களில் ஏற்பட்டிருக்கும் காயங்களை கண்டறியும்.இவ்வாறு மைக்கேல் கூறினார்.

%d bloggers like this: