Daily Archives: திசெம்பர் 14th, 2009

புதுமை!மளிகைக்கடையிலும் வங்கிக்கணக்கு: தெருமுனைக்கு வருகிறது வங்கிச்சேவை

வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை; ஏ.டி.எம்., மையங்களில் பட்டனை தட்டினால், நம் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதுபோல, டெலிபோன், மின்சார, தண்ணீர் கட்டணங்களை கட்டவும், சினிமா டிக்கெட், மொபைல் ரீசார்ஜ், ஷாப்பிங் உட்பட பல சேவைகளை செய்து கொள்ளவும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் முறைகளும், ஏ.டி.எம்., மையங்களும் பயன்படுகின்றன. 24 மணி நேரமும் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகையில், குக்கிராமங்களுக்கும் வங்கிச்சேவை சென்றடைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் அடிக்கடி சொல்லி வருகின்றன. இதுபோல, எங்கும் எப்போதும், 24 மணி நேரமும் வங்கிக்கணக்குகளை கையாள வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை இன்னும் செய்து தர வேண்டும் என்றும் எண்ணுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி, இதுதொடர்பாக திட்டத்தை தயாரித்தது. அதன்படி, எந்த நேரத்திலும், குக்கிராமமாக இருந்தாலும், வங்கியில் கணக்கு ஆரம்பித்து, பணத்தை உடனுக்குடன் கையாள வசதியாக புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, மளிகைக்கடைக்காரர் முதல் மருந்துக்கடைக்காரர்கள் வரை நியமிக்கப்படுவர்; இன்சூரன்ஸ் ஏஜன்ட் போன்றவர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் , வங்கியின் “பிசினஸ் கரஸ்பாண்டன்ட்’டாக (பி.சி.,) செயல்படுவர். இவர்களுக்கு வங்கிக்கணக்குகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்து கொடுத்து, பணம் வாங்கி டிபாசிட் செய்யவும், பணம் கேட்டால் கணக்கில் இருந்து தரவும் தெரிந்திருக்க வேண்டும்.

பக்கத்து ஊரில் உள்ள வங்கியுடன் இந்த, வர்த்தக பிரதிநிதிகள் தொடர்பு வைத்திருப்பர்; வாடிக்கையாளர்களும் இவர்களிடம் பணம் டிபாசிட் செய்யலாம்; பணத்தை கணக்கில் இருந்து பெறலாம். மற்ற சேவைகளையும் இந்த பிரதிநிதி செய்து தருவார்; எல்லாவற்றுக்கும் இவருக்கு குறிப்பிட்ட கமிஷன் தொகையை வங்கி அளிக்கும். அவரே வாடிக்கையாளரிடம் இந்த கமிஷன் தொகையை வசூலிக்கக்கூடாது. மளிகைக் கடை வைத்திருப்போர், பொது தொலைபேசி பூத் நடத்துவோர், நியாய விலைக் கடை நிர்வகிப்போர், பெட்ரோல் பங்க் உரிமையாளர், அரசு சிறுசேமிப்பு துறை முகவர்கள், இன்சூரன்ஸ் முகவர்கள் என்று பல தரப்பட்டவரும் பி.சி.,க்களாக பணியாற்றலாம்.

வங்கியின் சேவைகளை செய்யும் முகவராக இந்த பிரதிநிதிகள் செயல்படுவர். வங்கிக்கணக்கு விஷயத்தில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும், அவர்கள் இணைக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சரி செய்வர். இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டால், குக்கிராமங்களிலும் வங்கி சேவை எளிதில் மேற்கொள்ள முடியும். அதன் மூலம், வங்கியின் செயல்பாடு பல மடங்கு அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.

சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி -மூலிகை கட்டுரை

அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.
சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதே குடும்பத்தைச் சார்ந்த செம்
பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக்
காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.

46 ஆண்டுக்குப்பின் புத்தரின்அஸ்தி கண்காட்சிக்கு வருகிறது


அடுத்த மாதம் நடக்கவிருக்கும் “உலக புத்தநெறி மாநாட்’டில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கிறது; 46 ஆண்டுகளாக யாரும் பார்த்திராத, புத்தரின் அஸ்தி கண்காட்சிக்கு வைக் கப்பட உள்ளது.புத்தர் தன் இறுதிக் காலத்தில் தனது அஸ்தி மீது “ஸ்தூபம்’ எனப்படும் புத்த கோவில்கள் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி அவர் இறந்த பிறகு அவரது அஸ்தி, பற்கள், எலும்புகள் இவற்றைப் புதைத்து ஸ்தூபங்கள் கட்டினர்.அசோகச் சக்கரவர்த்தி, கலிங்கப் போருக்குப் பிறகு, புத்தரின் நினைவுச் சின்னங்களைக் கண்டுபிடித்து, நாடு முழுவதும் அனுப்பி ஸ்தூபங்கள் கட்டினார்.பிரபல தொல்பொருள் ஆய் வாளர் பி.சுப்பாராவ், சமாலாஜி என்ற பகுதியின் அருகிலுள்ள தேவ்னி மோரி என்ற இடத்தில் உள்ள கி.பி., நான்காம் நூற்றாண் டைச் சேர்ந்த ஸ்தூபத்திலிருந்து, புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஒரு செப்புப் பாத்திரத்தைக் கண்� டடுத்தார்.அது கி.பி., மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்போது அந்தப் பாத்திரம், குஜராத்திலுள்ள எம்.எஸ்., பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையிடம் உள்ளது.

அத்துறையின் தலைவர் கே.கிருஷ்ணன் இதுபற்றிக் கூறுகையில்,”உலக புத்தநெறி மாநாட்டில்’ இந்த அஸ்தி ஜனவரி 15ம் தேதி முதல் இரண்டு நாட்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும். இதற் கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.தொல்பொருள் துறைப் பேராசிரியர் சோனாவானே கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் இந்த அஸ்தி 1962-63 லிருந்து இருந்து வருகிறது. மிக முக்கியமான தலைவர்கள் மட்டுமே இதைப் பார்த்துள் ளனர். பார்த்தவர்களைப் பற்றி பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த செப்புப் பாத்திரத்தின் வெளிப் புறத்தில் “தாசபால சரீர நிலைய’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு புத்தரின் அஸ்தி இருக்கும் பாத்திரம் என்று பொருள்’ என்று விளக்கினார்.

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள்

இந்த விரோதி ஆண்டு கார்த்​திகை மாதம் 1-ம் தேதி ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு,​ கேது பக​வான்​கள் மகர,​ கடக ராசியி​லி​ருந்து தனுசு,​ மீன ராசி​க​ளுக்​குப் பெயர்ச்சி ஆயி​னர். அவர்​கள் அங்கு ஒன்​றரை ஆண்​டு​கள் சஞ்​ச​ரித்​து​விட்டு,​ 09.06.2011 அன்று விருச்​சிக,​ ரிஷப ராசி​க​ளுக்​குப் பெயர்ச்சி ஆவார்​கள்.
—கே.சி.எஸ். ஐயர்
குரு பக​வான் பெயர்ச்சி

இந்த விரோதி ஆண்டு மார்​கழி மாதம் 4-ம் தேதி ​(19.12.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு ​(விடிந்​தால் ஞாயிற்​றுக்​கி​ழமை)​ குரு பக​வான் மகர ராசியி​லி​ருந்து கும்ப ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார். இங்கு அவர் 1.5.2010 வரை சஞ்​ச​ரித்​து​விட்டு,​ அதி சர கதி​யில் 2.5.2010 அன்று மீன ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார். அவர் அங்கு மீன ராசி​யில் 24.7.2010 அன்று வக்​கி​ர​ம​டைந்து,​ வக்​கிர கதி​யி​லேயே பின்​னோக்கி சஞ்​ச​ரித்து 3.11.2010 அன்று கும்ப ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார். அங்கு 19.11.2010 அன்று வக்​கிர நிவர்த்தி அடைந்து,​ கார்த்​திகை மாதம் 17ம் தேதி​யன்று ​(3.12.2010) மீன ராசிக்கு நேர்​க​தி​யில் பெயர்ச்சி ஆகி​றார்.​ ​ராகு,​ கேது பக​வான்​கள்.

தோன்​றிய வர​லாறு

தேவர்​க​ளும்,​ அசு​ரர்​க​ளும் பாற்​க​ட​லைக் கடைந்​த​னர். அப்​போது கிடைத்த அமு​தத்தை உண்ண இரு தரப்​பி​ன​ருக்​கு​மி​டையே ஏற்​பட்ட போட்டா போட்​டி​யைத் தீர்த்து வைக்க ஸ்ரீமஹா விஷ்ணு,​ மோகினி அவ​தா​ரம் எடுத்​தார். அசு​ரர்​களை தன் அழ​கால் வசி​யப்​ப​டுத்தி,​ அமு​தத்தை தேவர்​க​ளுக்கு வழங்​கிக் கொண்​டி​ருந்​த​போது “ஸவர்​பானு’ என்​கிற அசு​ரன் தனக்கு அமு​தம் கிடைக்​காது என்று உணர்ந்து,​ சூரி​யன்-​சந்​தி​ரன் இரு​வ​ருக்​கும் இடையே தேவ ரூப​மெ​டுத்து அமர்ந்து அமு​தத்தை வாங்கி உண்​டான். இதை சூரிய-​சந்​தி​ரர்​கள் ஸ்ரீம​ஹா​விஷ்​ணு​வி​டம் எடுத்​துச் சொன்​னார்​கள். உடனே ஸ்ரீவிஷ்ணு பக​வான் தன் கையி​லி​ருந்த அகப்​பை​யால் ஸவர்​பா​னு​வின் தலை​யில் ஓங்கி அடித்​தார். இத​னால் தலை முதல் மார்பு வரை கழன்று,​ தனி​யாக உருண்​டது. மீதி உடல் பகுதி,​ தனி​யாக வேறு இடத்​தில் விழுந்​தது. அமு​தம் உண்​ட​தால் தலை பாக​மும்,​ உடல் பாக​மும் உயி​ரோடு இருந்​தன. தலை பாகத்தை “பைடி​ன​ஸன்’ என்​கிற மன்​னன் எடுத்து வளர்த்​தான். இவரே ராகு!​ தன் கடும் தவத்​தால் பாம்பு உட​லைப் பெற்று கிரக அந்​தஸ்​தும் பெற்​றார். தனி​யாக விழுந்து கிடந்த மீதி உடல் பாகத்தை மினி என்​கிற அந்​த​ணர் எடுத்து வளர்த்​தார். இவரே கேது!​ ஞான மார்க்​கங்​களை அந்த அந்​த​ண​ரி​டமே கற்று,​ விஷ்​ணுவை நோக்கி கடும் தவம் செய்து பாம்​புத் தலை​யைப் பெற்று,​ கிர​கப் பத​வியை அடைந்​தார் கேது.

கிர​க​ணம்

சூரிய பக​வான்,​ சந்​திர பக​வான் இரு​வ​ரும் ஸவர்​பா​னுவை அமு​தம் உண்​ணும்​போது ஸ்ரீம​ஹா​விஷ்​ணு​வி​டம் காட்​டிக் கொடுத்​த​தால்,​ ராகு-​கேது பக​வான்​க​ளுக்கு நிரந்​தர எதி​ரி​யா​னார்​கள். சூரிய பக​வான் ஒரு வரு​டத்​தில் ராகு,​ கேது பக​வான்​களை ஒரு முறை சந்​திப்​பார். எனவே ராகு​வைக் கடக்​கும்​போது ஒரு சூரிய கிர​க​ணத்​தை​யும்,​ அதே மாதத்​தில் ஒரு சந்​திர ​கிர​க​ணத்​தை​யும் ஏற்​ப​டுத்​து​வார். ஆக மொத்​தத்​தில் ஒரு வரு​டத்​தில் இரண்டு சூரிய கிர​க​ணங்​க​ளும்,​ இரண்டு சந்​திர கிர​க​ணங்​க​ளும்,​ ஏற்​ப​டும். கிர​க​ணக் காலத்​தில் சூரி​யன்,​ சந்​தி​ரன் நின்ற ராசிக்கு 1, 5, 9ம் ராசியை லக்​ன​மா​கக் கொண்​ட​வர்​க​ளுக்​கும்,​ சூரி​யன்,​ சந்​தி​ரன் நின்ற நட்​சத்​தி​ரத்தை ​(ஜன்ம)​,​ அடுத்து வரும் 9வது ​(அனு ஜன்ம)​,​ 18வது ​(த்ரி ஜன்ம)​ நட்​சத்​தி​ரங்​க​ளில் பிறந்​த​வர்​க​ளுக்​கும் தோஷம் ஏற்​ப​டும். ​அத்​த​கை​யோர்,​ இக்​கா​லங்​க​ளில் நெற்​றி​யில் எழுதி கட்​டிக் கொள்​ளும் ஸ்லோ​கத்தை கீழே கொடுத்​துள்​ளோம் :​​ ​ சந்​திர கிர​கண பட்​டம்

யோ ùஸள வஜ் ர தர:​ தேவ:​ ஆதித்யா நாம் ப்ர​புர்​மத:​ ஸஹஸ்​நர நயந:​ சந்​திர கிரஹ பீடாம் வ்ய​போ​ஹது:

இதில் சூரிய கிர​க​ணத்​தின்​போது “சூரிய கிரஹ பீடாம்’ என்று மாற்​றிக் கொள்​ள​வும்.

சாயாக் கிர​கங்​கள் என்​ப​தால் ராகு-​கேது பக​வான்​க​ளுக்​கும்,​ தினக் கோளான சந்​திர பக​வா​னுக்​கும்,​ தாய்க் கிர​கம் என்​ப​தால் சூரிய பக​வா​னுக்​கும் வக்​கிர கதி கிடை​யாது. மற்ற ஐந்து கிர​கங்​க​ளுக்​கும் சூரிய பக​வா​னின் ஆகர்​ஷண சக்​திக்கு ஏற்ப வக்​கிர கதி உண்​டா​கி​றது.​ ​ ராசி இல்​லங்​க​ளில் ராகு-​கேது பக​வான்​க​ளுக்கு என்று தனி இல்​லங்​கள் கிடை​யாது. அவர்​கள் எந்​தக் கிர​கத்​தி​னு​டைய இல்​லங்​க​ளில் அமர்​கி​றார்​களோ அக்​கி​ர​கங்​க​ளுக்கு உண்​டான கார​கங்​க​ளை​யும்,​ நன்மை-​தீமை போன்ற பலா பலன்​க​ளை​யும் அளிக்​கி​றார்​கள். ஒரு ராசி​யில் ஒன்​றுக்கு மேற்​பட்ட கிர​கங்​கள் இருந்து அதில் ராகு இருந்​தால்,​ எல்​லாக் கிர​கங்​க​ளு​டைய பலன்​க​ளை​யும் தன​தாக்​கிக் கொண்டு ஏனைய கிர​கங்​கள் அந்த ஜாத​க​ருக்கு வழங்​கக்​கூ​டிய நன்மை ​(அல்​லது)​ தீமைப் பலன்​களை தாமே வழங்​கு​வார். இப்​ப​டிப்​பட்ட ராகு​வை​விட கேது அதி​கப் பல​மு​டை​ய​வ​ரா​கக் கரு​தப்​ப​டு​கி​றார். ​ எந்த ஒரு ஜாத​கத்​தி​லும் ராகுவோ ​(அல்​லது)​ கேதுவோ லக்​னத்தி​லி​ருந்து 3, 6, 11ம் இல்​லங்​க​ளில் இடம் பெற்​றால்,​ அக்​கி​ர​கங்​களின் தசா புக்தி காலங்​க​ளில் நன்​மை​யான யோக பலன்​கள் நடக்​கும். ​ “கரு​நா​கம்’ என்று சொல்​லப்​ப​டு​ப​வர் ராகு. இவர் ​ மேஷம்,​ ரிஷ​பம்,​ கட​கம்,​ கன்னி,​ மக​ரம் ஆகிய ஐந்து ராசி​க​ளில் எங்​கா​வது தனித்து நின்று,​ அந்த ராகு​வி​னு​டைய இல்​லத்​திற்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்​திர ஸ்தா​னங்​க​ளில் பிற கிர​கங்​கள் இடம் பெற்று இருந்​தால்,​ அந்த ஜாத​க​ருக்கு என்​றா​வது ஒரு நாள் திடீர் தன​யோ​கம் ஏற்​ப​டும். ராகு-​கேது பக​வான்​க​ளின் தசா புக்​தி​க​ளில் முதல் பாதி​யை​விட பின் பாதி நன்​மை​யாக இருக்​கும். ​ ராகு சனி​யைப் போல​வும் ​(சனி​வத் ராகு)​,​ கேது அங்​கா​ர​க​னைப் போல​வும் ​(குஜ​வத் கேது)​ பலன் தரும் என்​பர். ​ இது தவிர ராகு-​கேது தாம் நின்ற ஸ்தான அதி​பர்​க​ளின் பலன்​க​ளை​யும் தரு​வார்​கள் என்​பது ஜோதிட விதி. “ராகு கொடுத்​துக் கெடுப்​பார்,​ கேது கெடுத்​துக் கொடுப்​பார்’ என்​ப​தும் ஜோதி​டப் பழ​மொ​ழி​யா​கும். ​ ஒரு​வ​ரு​டைய ஜாத​கத்​தில் லக்​னம் உட்​பட அனைத்​துக் கிர​கங்​க​ளும் ராகு-​கேது பிடிக்​குள் அடங்​கி​யி​ருந்​தால் அவ​ருக்கு கால சர்ப்ப தோஷம் உண்​டா​கும். மேற்​படி தோஷ​மு​டை​ய​வர்​கள் 32 வய​துக்கு மேல்​தான் வாழ்க்​கை​யில் சிறப்​பான முன்​னேற்​ற​ம​டை​வார்​கள். ​ ராகு-​கேது பக​வான்​க​ளால் ஏற்​ப​டும் சர்ப்ப தோஷம் மற்​றும் கால சர்ப்ப தோஷம் ஆகி​யவை பரம்​பரை பரம்​ப​ரை​யா​கத் தொடர்​கின்​றன. பல குடும்​பங்​க​ளில் குடும்​பத்​தி​னர் அனை​வ​ருக்​குமோ ​(அல்​லது)​ பெரும்​பான்​மை​யி​ன​ருக்கோ அனைத்​துக் கிர​கங்​க​ளும் ராகு-​கேது பிடிக்​குள்ளோ,​ லக்​னம்,​ குடும்​பம்,​ சுகம்,​ பஞ்​ச​மம் ஆகிய ஸ்தா​னங்​க​ளிலோ,​ அல்​லது கிர​கங்​கள் ராகு-​கேது பக​வான்​க​ளின் சாரம் பெற்று சுபக்​கி​ர​கச் சேர்க்கை அல்​லது பார்வை பெறா​மல் போவதோ பெரும்​பான்​மை​யாக அமை​கி​றது. இத்​த​கைய குடும்​பத்​தி​ன​ருக்கு திரு​ம​ணத் தாம​தம்,​ தடை,​ புத்​திர பாக்​யம் தாம​தம்,​ தடை ஆகி​யவை பர​வ​லாக அமை​கின்​றது. இத்​த​கைய குடும்​பத்​தி​னர் சர்ப்ப சாந்தி,​ நாகப் பிர​திஷ்டை ஆகி​ய​வை​க​ளைச் செய்து குறை​க​ளைப் போக்​கிக் கொள்ள வேண்​டும். இவை பெரும்​பா​லும் சர்ப்​பத்​துக்கு முற்​பி​ற​வி​யில் செய்த துன்​பங்​க​ளின் கார​ண​மாக அமை​கி​றது என்று கூற​லாம்.

குரு பக​வான்

குரு பக​வான் நவக்​கி​ர​கங்​க​ளில் முக்​கி​ய​மா​ன​வர். ஒரு ராசி​யில் ஒரு ஆண்டு காலம் தங்கி,​ 12 ராசி​க​ளை​யும் கடக்க 12 வரு​டங்​கள் எடுத்​துக் கொள்​வார். நவக்​கி​ரக மண்​ட​லத்​தில் ஐந்​தா​வ​தாக வரு​கி​றார். சூரிய பக​வா​னுக்கு வடக்​கில் இருக்​கி​றார். இவ​ருக்கு ஒரு முகம்,​ நான்கு கைகள். குரு பக​வான் ஒரு பரி​பூ​ரண சுபர் ஆவார். நவக்​கி​ர​கங்​க​ளில் “பொன்​ன​வன்’ என்று போற்​றப்​ப​டும் குரு பக​வான்,​ ஜாத​கத்​தில் உள்ள தோஷங்​க​ளைத் தன் பார்வை மற்​றும் சேர்க்​கை​யால் நிவர்த்தி செய்​கி​றார். இவர் இருக்​கும் இடத்​தை​விட,​ பார்க்​கும் இடங்​கள் சுபிட்​ச​ம​டை​யும். இத​னால்​தான் குரு பக​வா​னின் பார்​வையை,​ “”குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி” என்​கி​றோம். ​ பிரம்​ம​தே​வ​ரின் மானஸ புத்​தி​ரர்​க​ளில் ஒரு​வ​ரும்,​ ​ சப்​த​ரி​ஷி​க​ளில் ஒரு​வ​ரு​மான ஆங்​கீ​ரஸ முனி​வ​ருக்​கும்,​ விசுதா தேவிக்​கும் 7வது புத்​தி​ர​னா​கப் பிறந்​த​வர் குரு பக​வான். அனைத்து சாஸ்​தி​ரங்​க​ளை​யும் கற்​றுத் தெளிந்​த​வர். தேவர்​க​ளுக்​கும்,​ ரிஷி​க​ளுக்​கும் குரு​வா​ன​வர். தங்​கத்தை ஆப​ர​ண​மா​கக் கொண்​ட​வர். அனைத்​துப் புத்தி தத்​து​வங்​க​ளுக்​கும் கார​ண​கர்த்தா இவரே. சட்​டம்,​ மருத்​து​வம்,​ பொரு​ளா​தா​ரம்,​ நிர்​வா​கம் ஆகி​ய​வற்​றில் முக்​கி​யத்​து​வம் பெற வைப்​ப​வர். நம் அறி​யாமை என்​கிற இருட்டை விரட்டி,​ அறிவு ஒளியை ஏற்​று​ப​வர். அறி​வைப் புகட்டி,​ வறு​மையை ஓடச் செய்து தன் கார​கத்​து​வ​மான தனத்​ தைக் கொடுப்​ப​வர். ​ ​ ஆல​யங்​க​ளில் தென் திசை நோக்கி,​ தென்​மு​கக் கட​வு​ளா​கக் காட்சி தரு​ப​வர் ஸ்ரீதட்​சி​ணா​மூர்த்தி ஆவார். சிவ​பெ​ரு​மா​னின் குரு வடி​வமே தட்​சி​ணா​மூர்த்​தி​யா​கும். தட்​சி​ணா​மூர்த்தி கல்​லால மரத்​த​டி​யில் அமர்ந்து சந​கர்,​ சநந்​த​னர்,​ சநா​த​னர் மற்​றும் சனற்​கு​மா​ரர் முத​லி​யோ​ருக்கு மௌன நிலையி​லி​ருந்து ஐயங்​களை நீக்கி,​ ஞானத்தை அருள்​கி​றார். இதில் குரு​வா​கிய தட்​சி​ணா​மூர்த்தி யௌ​வ​னம் ​(இளமை)​ உள்​ள​வ​ராக இருப்​பார்,​ பாடம் கற்​கும் ரிஷி​கள் முதி​ய​வர்​க​ளாக இருப்​பார்​கள் என்​பது குறிப்​பி​டத் தக்​கது. ​ குரு பக​வா​னின் அதி​தே​வ​தை​யாக ஸ்ரீதட்​சி​ணா​மூர்த்தி திகழ்​வ​தால் குரு பக​வா​னை​யும்,​ ஸ்ரீதட்​சி​ணா​மூர்த்​தி​யை​யும் வணங்கி வர,​ கல்வி-​கேள்வி ஞானம் உண்​டா​கும். திரண்ட செல்​வ​மும் கிடைக்​கும். குரு பக​வா​னின் அனுக்​கி​ர​கத்​தா​லேயே மாந்​தர்​க​ளுக்கு திரு​ம​ணம்,​ புத்​தி​ரம்,​ பேரன்,​ பேத்தி பிறத்​தல்,​ இள​மை​யில் நற்​கல்வி,​ நல்ல உத்​தி​யோ​கம்,​ வயோ​தி​கத்​தில் அமை​தி​யான வாழ்வு ஆகி​யவை கிடைக்​கின்​றன. பல​மான குரு பக​வான் பெண் குழந்​தை​களை நல்ல நிலை​மைக்​குக் கொண்டு வந்து,​ அவர்​க​ளால் குடும்ப கௌ​ர​வத்தை உயர்த்​து​வார். குரு​ப​க​வான் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஐந்து ஸ்தா​னங்​க​ளில் சஞ்​ச​ரித்​தால்,​ சிறப்​பு​க​ளைக் கூடு​த​லாக வழங்​கு​வார். மற்ற ராசி​க​ளில் சஞ்​ச​ரிக்க,​ பார்வை பலத்​தால் மட்​டுமே நலன்​க​ளைச் செய்​யக் கூடி​ய​வ​ரா​கி​றார். இவர் மிது​னம்,​ கன்னி,​ தனுசு,​ மீனம் லக்​னக்​கா​ரர்​க​ளுக்கு கேந்​திர ஸ்தா​னங்​க​ளில் தனித்து இருந்​தால் கேந்​தி​ரா​தி​பத்ய தோஷத்தை அடைந்து,​ அந்​தப் பாவங்​க​ளால் உண்​டா​கும் நன்​மை​க​ளைக் குறைத்​து​வி​டு​கி​றார். ​ மேலும் சுக்​கிர பக​வா​னைப் போலவே குரு பக​வா​னும் களத்ர ஸ்தா​ன​மான ஏழாம் வீட்​டில் தனித்து இருக்​கும்​போது,​ மண​வாழ்க்​கை​யில் சுகத்​தைக் கொடுப்​ப​தில்லை. அதற்​குப் பரி​கா​ர​மாக குரு பக​வா​னை​யும்,​ தட்​சி​ணா​மூர்த்​தி​யை​யும் வியா​ழக்​கி​ழ​மை​க​ளில் விர​த​மி​ருந்து,​ இரு​வ​ருக்​கும் கருப்​புக் கொண்​டைக் கடலை மாலை சாற்றி,​ மஞ்​சள் பூக்​க​ளால் அர்ச்​சித்து,​ நெய் தீப​மேற்றி வழி​பட்டு வர,​ சம தோஷ​முள்ள சம்​பந்​தத்தை உண்​டாக்​கித் தரு​வார். மேலும் குரு ஸ்த​ல​மா​கக் கரு​தப்​ப​டும் திருச்​செந்​தூர் செந்​தி​லாண்​ட​வனை வணங்கி வர,​ குரு பக​வா​னால் உண்​டா​கும் தோஷங்​கள் பறந்​தோ​டி​வி​டும். ஏனெ​னில் குரு பக​வான் திருச்​செந்​தூ​ரில் உறை​யும் செந்​தி​லாண்​ட​வரை வணங்கி நலம் பெற்​றார் என்​பது உண்மை.

ராகு பக​வான் ஸ்தோத்​தி​ரம்

அர்த்த காயம் மஹா வீர்​யம் சந்​தி​​ரா​தித்ய விமர்த்​த​னம்,
ஸிம்ஹி கா கர்ப்ப கலம் பூதம் தம் ராஹும் ப்ர​ண​மாம்​ய​ஹம்

கேது பக​வான் ஸ்தோத்​தி​ரம்

பலா ச புஷ்ப ஸங்​கா​சம் தார காக்​ரஹ மஸ்​த​கம்.
ரௌத்​ரம் ரௌத்​ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ர​ண​மாம்​ய​ஹம்.

குரு பக​வா​னால் கிடைக்​கும் யோகங்​கள்

குரு பக​வா​னுக்​குக் கேந்​திர ஸ்தா​னங்​க​ளான 1, 4, 7, 10ல் செவ்​வாய் பக​வான் இருந்​தால் குரு மங்​கள யோகம் உண்​டா​கும். இத​னால் ஜாத​க​ருக்கு பூமி,​ உண​வ​கம்,​ போலீஸ்,​ ராணு​வம் ஆகிய துறை​க​ளில் வெற்றி உண்​டா​கும். குரு பக​வா​னு​டன் சூரிய பக​வான் இணைந்தோ,​ அல்​லது அவ​ரைப் பார்த்தோ இருந்​தால் சிவ​ராஜ யோகம் உண்​டா​கி​றது. இவர்​க​ளுக்கு அர​சிய​லில் வெற்றி,​ நிர்​வா​கத் திறமை,​ ​ முதன்​மைப் பதவி ஆகி​யவை கிடைக்​கும்.
குரு பக​வா​னுக்கு திரி​கோண ஸ்தா​னங்​க​ளான 1, 5, 9 ஆகிய இடங்​க​ளில் சந்​திர பக​வான் இருந்​தால்,​ குரு சந்​தி​ர​யோ​கம் உண்​டா​கும். இந்த யோகத்​தி​னால் ஜாத​கர் ஒரு துறை​யில் சில காலம் இருந்து,​ பின்​னர் படிப்​புக்​குச் சம்​பந்​த​மில்​லாத துறை​யில் பிற்​கா​லத்​தில் ஈடு​பட்டு பெரிய வெற்​றி​க​ளைக் காண்​பார்​கள்.

கஜ​கே​சரி யோகம் :
குரு பக​வா​னுக்கு 4, 7, 10 ஆகிய கேந்​திர ஸ்தா​னங்​க​ளில் சந்​திர பக​வான் இருப்​ப​தால் இந்த யோகம் ஏற்​ப​டும். இந்த யோகத்​தைக் கொண்​ட​வர்​கள் தங்​க​ளது ஜாத​கத்​தில் உள்ள மற்ற குறை​கள் நீங்​கப் பெற்று,​ எடுத்த காரி​யங்​க​ளில் வெற்றி பெறு​வார்​கள்.

ஹம்ஸ யோகம் :
குரு பக​வான் கேந்​திர ஸ்தா​னங்​க​ளான 1, 4, 7, 10ல் ஆட்சி மற்​றும் உச்​சம் பெற்று இருப்​ப​தால் உண்​டா​வது. இது பஞ்ச மஹா புருஷ யோகங்​க​ளில் ஒன்று. இத​னால் எவ​ருக்​கும் தலை வணங்​காத தலை​மைப் பதவி கிடைக்​கும். செல்​வம்,​ செல்​வாக்​கு​டன் நீண்ட ஆயுள் உண்​டா​கும். குரு பக​வா​னும்,​ சனி பக​வா​னும் ஒரு​வர் ஜாத​கத்​தில் இணைந்​தி​ருந்​தாலோ அல்​லது சம சப்​த​மப் பார்வை செய்​தாலோ ஜாத​கர் எடுக்​கும் அனைத்து முயற்​சி​க​ளும் வெற்றி பெறும். தொழில் மற்​றும் உத்​யோ​கத்​தில் எல்​லா​வித சுகங்​க​ளை​யும் அவர் அனு​ப​விப்​பார். ஜாத​கர் கேட்​கா​ம​லேயே பல வித உத​வி​கள் கிடைக்​கும்;​ ஜாத​க​ருக்கு உதவி செய்​யப் பல​ரும் காத்​துக் கொண்​டி​ருப்​பார்​கள். ஜாத​க​ருக்​குச் சமு​தா​யத்​தில் நல்ல மதிப்​பும்,​ மரி​யா​தை​யும் கிடைக்​கும். ஜாத​க​ரின் வாக்​குக்கு எல்​லோ​ரும் கட்​டுப்​பட்டு நடப்​பார்​கள்.
—————-

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

மேஷம்

இந்த விரோதி ஆண்டு,​ கார்த்​திகை மாதம்,​ 1-ஆம் தேதி ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை,​ பகல் 11.57 மணிக்கு ராகு -​ கேது பக​வான்​கள் உங்​க​ளின் தொழில் சுக ஸ்தான ராசி​க​ளான மகர,​ கடக ராசி​களி​லி​ருந்து முறையே தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணி​தப் பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்சி ஆனார்​கள். குரு​ப​க​வான் இந்த ஆண்டு,​ ​ மார்​கழி மாதம்,​ 4ஆம் தேதி ​(19-12-2009), சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு ​(விடிந்​தால் ஞாயிற்​றுக்​கி​ழமை)​ மகர ராசியி​லி​ருந்து தொழில் ஸ்தா​னம் மற்​றும் லாப ஸ்தா​ன​மான கும்ப ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார்.

இந்​தக் கால​கட்​டத்​தில் உங்​க​ளின் இளைய சகோ​தர,​ சகோ​த​ரி​க​ளுக்கு நன்​மை​கள் உண்​டா​கும். அவர்​க​ளால் எதிர்​பார்த்த உத​வி​க​ளை​யும் பெறு​வீர்​கள். ​ அர​சாங்​கத்​தி​ட​மி​ருந்து சலு​கை​கள் கிடைக்​கும். குடும்​பத்​தி​ன​ரு​டன் தெய்வ வழி​பாட்​டில் ஈடு​ப​டு​வீர்​கள். அதே​நே​ரம் பாக்ய ஸ்தா​னத்​தில் அமர்ந்​துள்ள ராகு பக​வான் கோதண்ட ராகு​வாக அமர்ந்​தி​ருப்​ப​தால் தந்தை,​ தந்தை வழிப்​பாட்​டன் ஆகி​யோ​ரு​டன் உள்ள உற​வில் சிறு தொய்​வு​கள் ஏற்​ப​டும். ஆனா​லும் பெரிய பாதிப்​பு​கள் உண்​டா​காது. இருந்த போதி​லும் அவர்​க​ளுக்​கா​கச் சிறிது செலவு செய்ய நேரி​டும். அவர்​களை நீங்​கள் அனு​ச​ரித்​துச் செல்​வது அவ​சி​ய​மா​கும்.

மற்​ற​படி வாக​னங்​கள் வாங்​கும் யோகம் உண்​டா​கும். சமு​தா​யத்​தில் உயர்ந்​தோ​ரின் நட்பு கிடைக்​கும். வெளி​நா​டு​க​ளுக்​குச் செல்ல விசா எதிர்​பார்த்​தி​ருப்​ப​வர்​கள்,​ அது கிடைத்து வெளி​நா​டு​க​ளுக்​குச் சென்று வரு​வார்​கள். விரோ​த​மாக நடந்து கொண்​டி​ருந்த நண்​பர்​க​ளி​டம் இணக்​கம் உரு​வா​கும். புதிய முயற்​சி​க​ளில் நம்​பிக்​கை​யு​டன் ஈடு​ப​டு​வீர்​கள். குரு​ப​க​வான் லாப ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் இக்​கா​லத்​தில் செய்​தொழி​லில் நஷ்​டங்​கள் மாறி,​ லாபம் கொட்​டும். குழந்​தை​க​ளால் மகிழ்ச்சி உண்​டா​கும். அவர்​கள் வெளி​யூர்,​ வெளி​நாட்​டில் சென்று படிக்க வாய்ப்பு கிடைக்​கும். பெரி​யோர்​கள் தேடி வந்து உத​வி​க​ளைச் செய்​வார்​கள். வழக்​கு​க​ளில் சிக்கி வரு​வாய் வரா​மல் இருந்த சொத்​துக்​க​ளில் சாத​க​மான தீர்ப்​பு​கள் கிடைக்​கும். நிரந்​தர வரு​வாய் வரத் தொடங்​கும். சுய​ம​திப்பை விட்​டுக் கொடுக்​காத வாழ்க்கை அமை​யும். நற்​பெ​யர் உண்​டா​கும்.

உத்யோ​கஸ்​தர்​க​ளுக்கு விரும்​பிய இட​மாற்​ற​மும்,​ பதவி உயர்​வும் கிடைக்​கும். அலு​வ​லக வேலை​க​ளில் சுறு​சு​றுப்​பு​டன் ஈடு​ப​டு​வீர்​கள். சக ஊழி​யர்​க​ளும் உங்​க​ளுக்கு உத​வி​க​ர​மாக இருப்​பார்​கள். நீண்ட நாட்​க​ளாக நீங்​கள் விருப்​பப்​பட்ட பொறுப்பு,​ உங்​கள் கைக்கு வந்து சேரும். வரு​மா​னம் நன்​றா​கவே இருக்​கும். அதே​ச​ம​யம் ஆரம்​பத்​தில் மேல​தி​கா​ரி​கள் சிறிது கெடு​பி​டி​யாக நடந்​து​கொண்டு,​ உங்​களை சஞ்​ச​லத்​தில் ஆழ்த்​து​வர். ஆனா​லும் அவற்றை நீங்​கள் தைரி​யத்​து​டன் சமா​ளிப்​பீர்​கள். புதிய வீடு,​ வாக​னம் வாங்​கு​வ​தற்கு அலு​வ​ல​கத்​தின் அனு​ம​தி​யு​டன் கடன் கிடைக்​கும். இந்​தக் காலகட்​டத்​தில் அனைத்து விஷ​யங்​க​ளி​லும் மகிழ்ச்சி ஏற்​ப​டும்.

வியா ​பா​ரி​க​ளுக்கு எல்​லாத் தடை​க​ளும் நீங்​கும். கொடுக்​கல்,​ வாங்க​லில் லாபம் பெரு​கும். புதிய தொழில் நுட்​பங்​க​ளைக் கற்​பீர்​கள். அவற்றை வியா​பா​ரத்​தில் புகுத்தி நன்​மை​ய​டை​வீர்​கள். உங்​கள் நண்​பர்​கள் மற்​றும் கூட்​டா​ளி​க​ளி​டம் கலந்​தா​லோ​சித்து,​ தக்க முடி​வு​களை எடுப்​பீர்​கள். கடன்​கள் குறை​யும். வியா​பா​ரத்​தில் முத​லீடு செய்​வ​தற்​குத் தடை இராது. மறை​மு​கப் போட்டி,​ பொறா​மை​கள் குறை​யும். வியா​பா​ரி​கள் வட்​டா​ரத்​தில் உங்​கள் செல்​வாக்கு அதி​க​ரிக்​கும்.

விவ ​சா​யி​க​ளுக்கு இந்​தக் கால​கட்​டத்​தில் மக​சூல் நன்​றாக இருக்​கும். சந்​தை​யில் நில​வும் போட்​டி​க​ளுக்​குத் தக்​க​வாறு விலை​களை நிர்​ண​யித்து விற்​பனை செய்​வீர்​கள். வரு​மா​னம் சீராக இருக்​கும். கால்​ந​டை​கள் மூல​மா​க​வும் வரு​மா​னத்​தைப் பெருக்க முயற்சி செய்​வீர்​கள். குறிப்​பா​கப் பால் வியா​பா​ரம் செய்​ப​வர்​கள்,​ எதிர்​பார்த்த லாபத்​தைப் பெறு​வார்​கள். சக விவ​சா​யி​கள் உங்​களை மெச்​சத்​தக்க வகை​யில் பணி​யாற்​று​வீர்​கள். சிறிய முத​லீட்​டில் நிலங்​களை வாங்​க​லாம். அதே சம​யம்,​ வயல் வரப்​புச் சண்​டை​க​ளில் சுமு​க​மாக நடந்து கொள்​ளுங்​கள்.

இந்த ராசி அர​சி​யல்​வா​தி​கள் வீண் விரோ​தத்தை வளர்த்​துக்​கொள்ள வேண்​டாம். நேரி​டை​யாக மனம் விட்​டுப் பேசி,​ மனஸ்​தா​பத்​தைப் போக்​கிக் கொள்​ளுங்​கள். மற்​ற​படி எடுத்த காரி​யங்​கள் அனைத்​தை​யும் எளி​தில் வெற்​றி​யு​டன் முடித்​து​வி​டு​வீர்​கள். இதன் மூலம் கட்சி மேலி​டத்​தின் கவ​னத்தை ஈர்ப்​பீர்​கள்;​ முக்​கி​யப் பொறுப்​பு​க​ளும் கிடைக்​கும். அதே​நே​ரம் கட்சி மேலி​டத்​திற்​குத் தக​வல் அனுப்​பும்​போது எச்​ச​ரிக்​கை​யு​டன் இருக்​க​வும். தொண்​டர்​களை அர​வ​ணைத்​துச் சென்று,​ அவர்​க​ளின் ஆத​ர​வைத் தக்க வைத்​துக் கொள்​ளுங்​கள். பேச்​சில் ஆண​வம் இல்​லா​மல் பார்த்​துக்​கொள்​ளுங்​கள்.

கலைத்​து​றை​யி​னர் புக​ழும்,​ பாராட்​டும் பெறு​வீர்​கள். ரசி​கர்​க​ளின் ஆத​ர​வு​டன் பய​ணங்​க​ளைச் செய்து,​ உங்​க​ளின் திற​மையை வெளிப்​ப​டுத்​து​வீர்​கள். புதிய ஒப்​பந்​தங்​கள் கிடைக்​கும். சக கலை​ஞர்​க​ளும் உங்​க​ளுக்​குப் பக்க பல​மாக இருப்​பார்​கள். நன்கு வரு​மா​னம் வந்து கொண்​டி​ருக்​கும். துறை​யில் உங்​க​ளின் முக்​கிய இலக்கை எட்​டு​வீர்​கள். தொழி​லில் நன்​றா​கச் செயல்​பட்டு,​ கொடுத்த வாக்​கைக் காப்​பாற்​று​வீர்​கள். அதே​ச​ம​யம் இந்​தக் கால​கட்​டத்​தில் கடு​மை​யாக உழைத்​தால்​தான் நற்​ப​லன்​களை அடைய முடி​யும்.

பெண்​ம​ணி​க​ளைப் பொறுத்​த​வரை குடும்​பத்​தில் ஒற்​று​மை​யைக் காண்​பீர்​கள். உற்​றார்,​ உற​வி​னர்​களை அர​வ​ணைத்​துச் சென்று,​ உங்​கள் செல்​வாக்கை உயர்த்​திக்​கொள்​வீர்​கள். கண​வர் உங்​கள் கோரிக்​கை​களை நிறை​வேற்​று​வார். இல்​லத்​திற்​குத் தேவை​யான நவீன உப​க​ர​ணங்​களை வாங்​கு​வீர்​கள். பண வர​வும் சிறப்​பாக இருக்​கும். புதிய வீடு வாங்​கும் யோக​மும் உண்​டா​கும். வீடு மாற்​றம் செய்ய நினைப்​ப​வர்​கள் அதை இக்​கா​ல​கட்​டத்​தில் செய்​ய​லாம்.

மாண ​வ​ம​ணி​கள் தங்​க​ளின் விடா​மு​யற்​சி​யால் வெற்றி அடை​வீர்​கள். உங்​க​ளின் விருப்​பத்தை பூர்த்தி செய்ய,​ பெற்​றோர்​கள் முன் வரு​வார்​கள். ஆசி​ரி​யர்​க​ளும் உங்​க​ளுக்கு அனு​கூ​ல​மாக இருப்​பார்​கள். வெளி விளை​யாட்​டு​க​ளில் ஈடு​பட்டு வெற்​றி​ய​டை​வீர்​கள். அதே​நே​ரம் நண்​பர்​க​ளி​டம் விட்​டுக் கொடுத்து,​ எச்​ச​ரிக்​கை​யு​டன் பழ​குங்​கள்.

பரி​கா​ரம்:​ விநா​ய​கரை முடிந்த போதெல்​லாம் அரு​கம்​புல் மாலை சாற்றி வழி​பட,​ நலன்​கள் கூடும்.
—————————————————————————————————————————————-

ரிஷபம்

இந்த விரோதி ஆண்டு,​ கார்த்​திகை மாதம்,​ 1ஆம் தேதி ​(17.11.09) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு,​ கேது பக​வான்​கள் உங்​க​ளின் பாக்ய ஸ்தான ராசி​க​ளான மக​ரம்,​ கடக ராசி​களி​லி​ருந்து முறையே உங்​க​ளின் அஷ்​டம,​ குடும்ப ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணி​தப் பஞ்​சாங்க அடிப்​ப​டை​யில் பெயர்ச்சி ஆனார்​கள். அதே​போல் குரு பக​வான் இந்த ஆண்டு மார்​கழி மாதம்,​ 4ஆம் தேதி ​(19.12.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு,​ உங்​க​ளின் பாக்ய ஸ்தா​ன​மான மகர ராசியி​லி​ருந்து தொழில் ஸ்தா​ன​மான கும்ப ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார்.

இக்காலக்​கட்​ டத்​தில் நெடு​நாட்​க​ளாக உங்​களை வாட்​டிக் கொண்​டி​ருந்த உடல் உபா​தையி​லி​ருந்து முழு​மை​யாக விடு​ப​டு​வீர்​கள். மேலும் விஷக்​கடி ஒவ்​வா​மை​யி​னால் ​ ஏற்​பட்ட அரிப்பு போன்​றவை தீரும். தீயோர் சேர்க்​கை​யை​யும் தவிர்த்​து​வி​டு​வீர்​கள். நண்​பர்​கள் போல் பழ​கும் எதி​ரி​க​ளை​யும் இனம் கண்டு விலக்​கி​வி​டு​வீர்​கள். அதே​நே​ரம் எதிர்​பா​ராத ஒரு சூழ்​நி​லை​யை​யும் சந்​திக்க வேண்​டி​வ​ரும். இத​னால் மன​திற்கு சிறு சங்​க​டங்​கள் உண்​டா​கும்.

மற்​ற​படி குடும்​பத்​தில் சந்​தோ​ஷம் அதி​க​ரிக்​கும். தேவை​யான நவீன உப​க​ர​ணங்​களை வாங்​கு​வீர்​கள். காலத்தை நிர்​ண​யித்து உழைப்​பீர்​கள்;​ இலக்​கு​களை எட்​டு​வீர்​கள். உற்​றார்,​ உற​வி​னர்​க​ளின் ஆத​ரவு கிடைக்​கும். நல்​லோ​ரின் சேர்க்கை உண்​டா​கும். புதிய நண்​பர்​கள் கிடைப்​பார்​கள். குரு பக​வான் தொழில் ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் கால​மா​கை​யால்,​ செய்​தொழி​லில் மேன்மை உண்​டா​கும். உங்​கள் பெய​ரும்,​ புக​ழும் ஓங்​கும். புதிய தொழில்​கள் செய்ய வாய்ப்​பு​கள் கிடைக்​கும். தொழி​லில் புது நுட்​பங்​க​ளைப் புகுத்​து​வீர்​கள். வரு​மா​னம் சீரா​கவே காணப்​ப​டும். அதி​கா​ரம் செய்​யும் பதவி உயர்​வு​கள் கிடைக்​கும். அரசு அதி​கா​ரி​கள் உங்​க​ளுக்​குப் பக்க பல​மாக இருப்​பார்​கள். சுய மதிப்​பை​யும்,​ சுய மரி​யா​தை​யை​யும் விட்​டுக் கொடுக்​கா​மல் பணி​யாற்​று​வீர்​கள். சிலர் புதிய அசை​யும்,​ அசை​யாச் சொத்​துக்​களை வாங்​கு​வார்​கள். பங்கு சந்​தை​க​ளில் ஈடு​பட்டு,​ அதன் மூல​மும் லாபம் வந்து சேரும். அதே​நே​ரம் ஒரே இடத்​தில் பணி​யாற்​றா​மல் அடிக்​கடி பய​ணங்​களை மேற்​கொள்ள நேரி​டும். இத​னால் உடல் ஆரோக்​கி​யத்​தில் சிறிது ஆயா​சம் உண்​டா​கும். எனவே சரி​யான ஓய்வு,​ உறக்​கங்​க​ளைத் தவிர்க்​கக் கூடாது.

உத்​தி ​யோ​கஸ்​தர்​கள் அலு​வ​ல​கக் காரி​யங்​க​ளில் வெற்றி வாகை சூடு​வார்​கள். வேலை​யில் இருந்த சுமை​கள் குறை​யும். சக ஊழி​யர்​கள் உங்​க​ளி​டம் சக​ஜ​மா​கப் பழ​கு​வார்​கள். இயந்​திர வாழ்க்​கையி​லி​ருந்து விடு​பட்டு,​ உங்​கள் சிந்​த​னை​க​ளுக்​குச் செயல் வடி​வம் கொடுக்க முற்​ப​டு​வீர்​கள். உங்​கள் முன்​னேற்​றத்​திற்​கான தடை​கள் வில​கும். உங்​கள் தன்​னம்​பிக்கை பலப்​ப​டும். அதே​நே​ரம் எவ​ரி​ட​மும்,​ குறிப்​பாக மேல​தி​கா​ரி​க​ளி​டம் வீண் வாக்​கு​வா​தங்​க​ளில் ஈடு​பட வேண்​டாம். மற்​ற​படி,​ அலு​வ​லக ரீதி​யாக அடிக்​கடி பய​ணங்​க​ளைச் செய்ய நேரி​டும். சம்​பள உயர்வு எதிர்​பார்த்​த​தற்​கும் அதி​க​மா​கவே கிடைக்​கும்.

இந்த ராசி வியா​பா​ரி​கள்,​ வாடிக்​கை​யா​ளர்​க​ளின் தேவை​க​ளைப் பூர்த்தி செய்​வீர்​கள். கொடுக்​கல்,​ வாங்​கல் விஷ​யங்​கள் சிறப்​பாக முடி​யும். பழைய பாக்​கி​கள் வசூ​லா​கும். புது முத​லீ​டு​க​ளால் கடையை நவீ​னப்​ப​டுத்​து​வீர்​கள். அதே​நே​ரம் அறி​மு​கம் இல்​லா​த​வர்​க​ளுக்​குக் கடன் கொடுத்து வியா​பா​ரம் செய்ய வேண்​டாம்;​ இத​னால் சிக்​கல்​கள் ஏற்​ப​டும். ​ மேலும் கூட்​டா​ளி​க​ளி​ட​மும் வரவு-​செலவு கணக்​கு​களை அவ்​வப்​போது பகிர்ந்து கொள்​ள​வும். வாக​னங்​க​ளுக்​குப் பரா​ம​ரிப்​புச் செலவு செய்ய நேரி​டும். அதே​ச​ம​யம் பணப் புழக்​கத்​திற்கு எக்​கா​லத்​தி​லும் குறைவு வராது.

விவ​சா​யி ​க​ளுக்கு விவ​சா​யம் சிறப்​பாக நடை​பெ​றும். விளைச்ச​லில் எதிர்​பார்த்த மக​சூல் காண்​பீர்​கள். புதிய விவ​சாய உப​க​ர​ணங்​களை வாங்​கு​வீர்​கள். சக விவ​சா​யி​க​ளு​டன் போட்டி-​பொறா​மை​கள் இருந்​தா​லும் உங்​க​ளின் முயற்​சி​கள் தடை​க​ளைச் சந்​திக்​காது. புதிய குத்​தகை வாய்ப்​பு​க​ளும் வந்து சேரும். பொரு​ளா​தா​ரத்​தில் இருந்த நெருக்​க​டி​கள் மறை​யும். கடன் வாங்​கும் நிலை உண்​டா​காது. கால்​ந​டை​க​ளா​லும் பலன் அடை​வீர்​கள். அரசு மானி​யங்​கள் கிடைக்​கும்.

அர​சி​யல்​வா​தி​க​ளுக்​குச் சங்​க​டங்​கள் குறை​யும். எதிர்க்​கட்​சி​யைச் சேர்ந்​த​வர்​கள் உங்​க​ளுக்கு ஆத​ரவு தரு​வார்​கள். தெளிந்த மன​து​டன் கட்​சிப் பணி​யாற்​று​வீர்​கள். சாத​க​மான திருப்​பங்​கள் உண்​டா​கும். பய​ணங்​களை மேற்​கொள்​ளு​வீர்​கள். அச்​சத்​து​டன் இருந்த நிலைமை மாறி,​ சிறப்​பா​கப் பேசு​வீர்​கள். உங்​க​ளுக்கு எதி​ரா​கப் போடப்​பட்​டி​ருந்த வழக்​கு​க​ளில் சுமு​க​மான தீர்ப்பு கிடைக்​கும். அதே​நே​ரம் உட்​கட்சி விஷ​யங்​க​ளில் அதி​கம் தலை​யிட வேண்​டாம். எவ​ரின் நிர்ப்​பந்​தத்​துக்​கும் அடி​பணி​யா​மல் உங்​க​ளின் கொள்​கை​யில் பிடிப்​பாக இருக்​க​வும்.

கலைத்​து​றை​யி​ன​ருக்கு வேலை​யில் ஈடு​பாடு உண்​டா​கும். பொரு​ளா​தா​ரத்​தில் மேன்மை அடை​வீர்​கள். புதிய ஒப்​பந்​தங்​க​ளைச் செய்​வீர்​கள். அனைத்து விஷ​யங்​க​ளி​லும் உங்​க​ளின் தனி முத்​தி​ரை​யைப் பதிப்​பீர்​கள். ரசி​கர்​க​ளின் ஆத​ர​வைப் பெற்று மகிழ்​வீர்​கள். வரு​மா​னம் திருப்​தி​க​ர​மாக இருக்​கும். இல்​லத்​திற்​குத் தேவை​யான ஆடம்​ப​ரப் பொருட்​களை வாங்​கு​வீர்​கள். சக கலை​ஞர்​கள் மற்​றும் தயா​ரிப்​பா​ளர்​களை அனு​ச​ரித்து நடந்​து​கொண்​டால்,​ எதிர்​கா​லப் பிரச்​சி​னை​க​ளைத் தவிர்க்​க​லாம்.

பெண் ​ம​ணி​கள் சந்​தோ​ஷத்​தைக் காண்​பீர்​கள். குடும்​பத்​தில் ஏற்​ப​டும் பிரச்​சி​னை​களை சாதுர்​ய​மா​கச் சமா​ளிப்​பீர்​கள். உங்​கள் அந்​தஸ்து உய​ரும். கண​வ​ரு​ட​னான ஒற்​றுமை சிறப்​பாக இருக்​கும். ஆடை,​ ஆப​ர​ணங்​களை வாங்கி மகிழ்​வீர்​கள். அதே​நே​ரம் பேச்​சில் நிதா​ன​மும்,​ பொறுப்​பும் தேவை.

மாண​வ​ம​ணி​கள் கவ​னத்​து​டன் படித்​தால் மதிப்​பெண்​களை அள்​ள​லாம். பல​முறை படித்து மனப்​பா​டம் செய்து,​ நல்ல மதிப்​பெண்​க​ளைப் பெற முயற்சி செய்​ய​வும். விளை​யாட்​டு​க​ளி​லும் முன்​னே​றக் கூடு​தல் கவ​னம் செலுத்த வேண்டி வரும். மற்​ற​படி பெற்​றோ​ரி​டம் கிடைக்​கும் ஆத​ரவு,​ உங்​க​ளுக்கு உந்து சக்​தி​யாக இருக்​கும்.

பரி​கா​ரம் :​ துர்​கை​யம்​மனை செவ்​வாய்க்​கி​ழமை தோறும் வழி​பட்டு வர​வும்.
———————————————————————————-

மிதுனம்

இந்த​ விரோதி ஆண்டு,​ கார்த்​திகை மாதம்,​ 1ஆம் தேதி,​ ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை,​ பகல் 11.57 மணிக்கு ராகு/​கேது பக​வான்​கள் உங்​கள் அஷ்​டம குடும்ப ஸ்தான ராசி​க​ளான மகர,​ கடக ராசியி​லி​ருந்து முறையே உங்​கள் களத்ர,​ ஜன்ம ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணித அடிப்​ப​டை​யில் பெயர்ச்சி ஆனார்​கள். குரு பக​வான் இந்த ஆண்டு மார்​கழி மாதம்,​ நான்​காம் தேதி ​(19-12-2009), சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு,​ உங்​கள் அஷ்​டம ஸ்தான ராசி​யான மகர ராசியி​லி​ருந்து பாக்ய ஸ்தா​ன​மான கும்ப ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார்.

இந்​தக் கால​கட்​டத்​தில் கூட்​டுத் தொழில் வியா​பா​ரம் செய்​ப​வர்​கள் கவ​ன​மாக இருந்து கொடுக்​கல்,​ வாங்க​லில் ஈடு​பட வேண்டி வரும். மற்​ற​படி நண்​பர்​க​ளின் தேவை​க​ளுக்கு ஏற்ப உத​வி​க​ளைச் செய்​வீர்​கள். உங்​க​ள் ​கீழ் வேலை செய்​ப​வர்​க​ளுக்கு அனு​ச​ர​ணை​யாக இருப்​பீர்​கள். இத​னால் வெளி​வட்​டா​ரத்​தில் உங்​கள் மதிப்பு,​ மரி​யாதை அதி​க​ரிக்​கும். தாய் வழி மூதா​தை​ய​ரின் சொத்​துக்​க​ளில் பாகப் பிரி​வி​னை​கள் உண்​டாகி,​ வரு​மா​னம் வரத் தொடங்​கும். உங்​கள் பேச்​சி​னால் நண்​பர்​க​ளைக் கவ​ரு​வீர்​கள். குடும்​பத்​தில் சுப காரி​யங்​களை நடத்த முயற்சி செய்​வீர்​கள். அதே​ச​ம​யம் கண​வ​னும்,​ மனை​வி​யும் விட்​டுக் கொடுத்து நடந்​து​கொண்​டால்,​ சுமுக நிலை​யைத் தக்க வைத்​துக்​கொள்​ள​லாம். மேலும் அடி​வ​யிறு சம்​பந்​தப்​பட்ட உபா​தை​க​ளுக்​கும் நீங்​கள் ஆளாக நேரி​ட​லாம்.

ராசி​யில் அமர்ந்​துள்ள கேது பக​வான் குரு பக​வா​னின் பார்​வை​யைப் பெற்​றி​ருப்​ப​தால்,​ உங்​க​ளின் இரக்​க குணம் அதி​க​ரிக்​கும். தயாள உள்​ளத்​து​டன் ஏழை எளி​ய​வர்​க​ளுக்கு உதவி செய்​வீர்​கள். உடல் ஆரோக்​கி​யம் மேம்​ப​டும். வரு​மா​னத்​திற்கு எந்​தத் தடை​யும் உண்​டா​காது. நிம்​ம​தி​யாக வாழும் சூழ்​நிலை ஏற்​ப​டும். அனை​வ​ரி​ட​மும் பய​மில்​லா​மல் பேசி,​ உங்​கள் காரி​யங்​க​ளைச் சாதித்​துக்​கொள்​வீர்​கள். குடும்​பத்​தில் மருத்​து​வச் செல​வு​கள் குறை​யும். ஆன்​மீக விஷ​யங்​க​ளில் உங்​கள் ஈடு​பாடு அதி​க​ரிக்​கும். கோயில் திருப்​பணி சம்​பந்​த​மா​கப் பிற​ருக்கு ஆலோ​ச​னை​க​ளை​யும் வழங்​கு​வீர்​கள்.

இந்​தக் காலத்​தில் குரு பக​வான் பாக்ய ஸ்தா​ன​மான ஒன்​ப​தாம் இடத்​தில் பல​மாக அமர்ந்​தி​ருப்​ப​தால் உங்​கள் வேலை​க​ளில் தன்​னம்​பிக்​கை​யு​டன் ஈடு​ப​டு​வீர்​கள். வெளியி​லி​ருந்து வர​வேண்​டிய பண​மும் வந்து சேரும். செல்​வத்​து​டன் செல்​வாக்​கும் உய​ரும். புதிய கலை​க​ளைக் கற்​றுக்​கொள்ள வாய்ப்​பு​கள் கிடைக்​கும். விரோ​தம் பாராட்​டு​ப​வர்​க​ளை​யும்,​ நய​மு​டன் பேசி அர​வ​ணைத்​துச் செல்​வீர்​கள். உங்​கள் சொல்​லுக்கு குடும்​பத்​தில் மதிப்பு உண்​டா​கும். குழந்தை இல்​லா​தோ​ருக்கு மழ​லைச் செல்​வ​மும்,​ வய​தா​னோ​ருக்கு பேரக் குழந்​தை​கள் பிறக்​கும் பாக்​கி​ய​மும் கிடைக்​கும். சமு​தா​யத்​தில் உயர்ந்​தோ​ரின் ஆசி​க​ளைப் பெற்று,​ செயற்​க​ரிய காரி​யங்​க​ளைச் செய்​வீர்​கள். வழக்​கு​க​ளி​லும் சாத​க​மான தீர்ப்​பு​கள் கிடைக்​கும். அனா​வ​சி​யப் பண விர​யம் எது​வும் இந்​தக் காலத்​தில் ஏற்​ப​டாது.

உத்யோ ​கஸ்​தர்​க​ளுக்கு இந்​தக் கால​கட்​டத்​தில் எதிர்​பார்த்த பலன் கிடைக்​கும். அலு​வ​ல​கத்​தில் சக​ஜ​மான சூழ்​நிலை நில​வும். மேல​தி​கா​ரி​கள் உங்​க​ளி​டம் அனு​கூ​ல​மாக நடந்​து​கொள்​வார்​கள். வேலை​யில் இருந்த சிறு தடு​மாற்​றங்​கள் நீங்​கும். பணப்​பு​ழக்​கம் திருப்​தி​க​ர​மாக இருக்​கும். அதே​நே​ரம் அலு​வ​லக வேலைக்​காக வெளி​யூ​ரில் பணி​யாற்ற வேண்டி வரும். சக ஊழி​யர்​க​ளி​டம் நேரி​டை​யாக,​ நேர்​மை​யா​கப் பழகி வர​வும். இல்​லை​யேல் உங்​கள் மீது வீண் பழி சுமத்​தப்​ப​ட​லாம். மேலும் புது முயற்​சி​க​ளில் நன்​றாக யோசித்து இறங்​க​வும்.

வியா​பா​ரி​கள் முன்​னேற்​ற​க​ர​மான நிலை​யைக் காண்​பீர்​கள். வியா​பா​ரத்​தில் இருந்த முட்​டுக்​கட்​டை​கள் விலகி,​ எதிர்​பார்த்த வளர்ச்சி தென்​ப​டும். வரு​மா​னம் நன்​றாக இருக்​கும். புதிய முயற்​சி​க​ளைத் திறம்​பட நிறை​வேற்​று​வீர்​கள். கடன் வாங்​கி​னா​லும் அவற்றை வியா​பா​ரத்​தைப் பெருக்​கவே பயன்​ப​டுத்​து​வீர்​கள். வெளி​யூ​ரி​லும் வியா​பா​ரத்தை விரி​வு​ப​டுத்​து​வீர்​கள். நெடு​நாட்​க​ளாக தள்​ளிப்​போட்​டி​ருந்த ஒரு முக்​கி​மான காரி​யம் நிறை​வே​றும். அதே​ச​ம​யம் அனைத்து விஷ​யங்​க​ளி​லும் கூட்​டா​ளி​க​ளு​டன் சேர்ந்து இறங்​க​வும். இல்​லை​யேல் வீண் மனக்​க​சப்​பு​க​ளைச் சந்​திக்க நேரி​டும்.

இந்த ராசி விவ​சா​யி​க​ளுக்கு விளைச்​சல் நன்​றாக இருக்​கும். குடும்​பத்​தில் ஒற்​றுமை மேலோங்​கும். இல்​லத்​தில் சுப நிகழ்ச்​சி​களை நடத்​து​வ​தற்கு முயற்சி செய்​வீர்​கள். வானம் பார்த்த பூமியை வைத்​தி​ருப்​ப​வர்​கள் தேவை​யான மழை பெய்​த​தால் உன்​ன​த​மான விளைச்​ச​லைக் காண்​பீர்​கள். விவ​சா​யத்​திற்​குத் தேவை​யான நவீன உப​க​ர​ணங்​களை வாங்​கு​வீர்​கள். பழைய குத்​த​கைப் பாக்​கி​க​ளும் வசூ​லா​கும். அதே​நே​ரம் பூச்​சி​க​ளால் பயிர்​க​ளுக்​குச் சேதம் உண்​டா​கா​மல் பார்த்​துக் கொள்​ள​வும்.

அர ​சி​யல்​வா​தி​க​ளைப் பொறுத்​த​வரை பொதுத்​தொண்​டில் சிறு சிக்​கல்​க​ளும்,​ தடங்​கல்​க​ளும் உரு​வான போதி​லும் இறு​தி​யில் வெற்றி பெறு​வீர்​கள். போட்டி,​ பொறா​மை​க​ளைச் சாதுர்​ய​மா​கச் சமா​ளிப்​பீர்​கள். அதே​ச​ம​யம் கட்சி மேலி​டத்​தின் நல்​லெண்​ணங்​க​ளுக்​குப் பாத்​தி​ர​மா​வது அவ​சி​யம். மேலும் மன​தில் தீய எண்​ணங்​க​ளுக்கு இடம் தர வேண்​டாம். குறுக்கு வழி​க​ளில் ஈடு​பட வேண்​டாம். மற்​ற​படி எதிர்க்​கட்​சி​யி​னர் உங்​க​ளி​டம் மோத மாட்​டார்​கள். வழக்​கு​க​ளில் சாத​க​மான தீர்ப்பை எதிர்​பார்க்​க​லாம். உயர்ந்​த​வர்​க​ளின் நட்பு கிடைக்​கும். தொண்​டர்​களை அர​வ​ணைத்​துச் சென்​றால்,​ மேலும் நன்மை அடை​ய​லாம்.

கலைத்​து​றை​யி​ன​ருக்கு எதிர்​பா​ராத வரு​வாய் கிடைக்​கும். தேக ஆரோக்​கி​யம் சிறப்​பாக இருக்​கும். இடை​வி​டா​மல் உழைத்து சாக​சங்​க​ளைச் செய்​வீர்​கள். உங்​கள் திறமை பளிச்​சி​டும். பண​வ​ரவு சர​ள​மாக இருப்​ப​தால்,​ ரசி​கர் மன்​றங்​க​ளுக்​குச் செலவு செய்து மகிழ்​வீர்​கள். விருந்து, கேளிக்​கை​க​ளில் கலந்து கொள்​வீர்​கள். அதே​நே​ரம் எதைச் செய்​தா​லும் ஒரு முறைக்கு இரு​முறை யோசித்​துச் செய்​ய​வும்.

பெண்​ம​ணி​க​ ளுக்கு உடல் ஆரோக்​கி​யம் நன்​றாக இருக்​கும். குழந்​தை​க​ளால் உற்​சா​கம் அடை​வீர்​கள். மற்​ற​வர்​க​ளி​டம் ஏற்​பட்ட கருத்து வேறு​பா​டு​கள் மறை​யும். கண​வர் மற்​றும் குடும்​பத்​தா​ரி​டம் நன்​ம​திப்பு கிடைக்​கும். பண​வ​ரவு நன்​றாக இருப்​ப​தால் ஆடை,​ அணி​ம​ணி​களை வாங்​கு​வீர்​கள். அதே​நே​ரம் உங்​கள் உடை​மை​க​ளைப் பத்​தி​ரப்​ப​டுத்​திக் கொள்​ளுங்​கள்.

மாண​வ​ம​ணி​க​ளுக்கு படிப்​பில் கூடு​தல் அக்​கறை உண்​டா​கும். பெற்​றோர் மற்​றும் ஆசி​ரி​யர்​க​ளி​டம் நல்ல பெயர் எடுப்​பீர்​கள். நண்​பர்​கள் உங்​க​ளுக்கு உத​வி​க​ர​மாக இருப்​பார்​கள். உடல் ஆரோக்​கி​யம் மேம்​பட உடற்​ப​யிற்​சி​க​ளைச் செய்​வீர்​கள்.

பரி​கா​ரம்:​​ பிர​தோ​ஷத்​தன்று சிவ வழி​பாடு செய்து வர​வும். குறிப்​பாக சனிப் பிர​தோ​ஷம் நலம் தரும். முடிந்த அள​வுக்கு “நம​சி​வாய’ என்று ஜபித்து வர​வும்.
—————————————————–

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

கடகம்

இந்த விரோதி ஆண்டு,​ கார்த்​திகை மாதம்,​ 1-ம் தேதி ​(17.11.09), செவ்​வாய்க்​கி​ழமை,​ பகல் 11.57 மணிக்கு ராகு/​ கேது பக​வான்​கள் உங்​கள் களத்ர,​ ஜன்ம ராசி​களி​லி​ருந்து உங்​கள் சஷ்​டம ​(ஆறா​வது)​,​ விரய ​(பன்​னி​ரண்​டாம்)​ ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணி​தப் பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்சி ஆனார்​கள். குரு​ப​க​வான் இந்த ஆண்டு மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19.12.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு உங்​க​ளின் களத்ர ராசி​யான மகர ராசியி​லி​ருந்து அஷ்​டம ​(எட்​டாம்)​ ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார்.

ஆறாம் ராசி​யில் சஞ்​ச​ரிக்​கும் ராகு பக​வான் உங்​கள் பெய​ரை​யும்,​ புக​ழை​யும் உயர வைப்​பார். ​ வெளி வட்​டா​ரத்​தில் பீடு நடை போடு​வீர்​கள். நீங்​கள் அதி​ர​டி​யா​கச் செய்​யும் காரி​யங்​கள் வெற்​றி​யைக் கொண்டு வந்து ​ சேர்க்​கும். வியா​பார ரீதி​யாக புதிய முத​லீ​டு​க​ளைச் செய்து,​ தொழிலை விரி​வு​ப​டுத்​து​வீர்​கள். ஆத​ர​வற்​ற​வர்​க​ளுக்​கும்,​ முதி​ய​வர்​க​ளுக்​கும் உதவி செய்​வீர்​கள். பொதுத் தொண்​டி​னால் உங்​க​ளின் அந்​தஸ்து உய​ரும். நெடு​நாட்​க​ளாக உங்​களை ​ வாட்​டிக் கொண்​டி​ருந்த உபா​தை​களி​லி​ருந்து விடு​ப​டு​வீர்​கள். எதி​ரி​கள் ஓடி ஒளி​வார்​கள். அதே​நே​ரம் உங்​க​ளின் எண்​ணங்​களை வெளிப்​ப​டை​யா​கக் கூற மாட்​டீர்​கள். இத​னால் உங்​க​ளைச் சேர்ந்​த​வர்​கள் உங்​க​ளின் மன ஆழத்​தைப் புரிந்​து​கொள்ள முடி​யா​மல் திண​று​வார்​கள்.

விரய ஸ்தா​னத்​தில் அமர்ந்​துள்ள கேது பக​வான் குரு பக​வா​னின் அருட் பார்​வை​யைப் பெறு​வ​தால்,​ அனா​வ​சி​யச் செல​வு​கள் உண்​டா​கா​மல் காப்​பாற்​றப்​ப​டு​வீர்​கள். மனம் பக்தி மார்க்​கத்​தில் செல்​லும். சில​ருக்கு மந்​தி​ரங்​களை தீட்சை பெறும் பாக்​கி​ய​மும் கிடைக்​கும். வெளி​யூர் மற்​றும் வெளி நாட்டி​லி​ருந்து நல்ல செய்​தி​கள் வந்து சேரும். உங்​கள் மீது மற்​ற​வர்​க​ளால் திணிக்​கப்​பட்ட பழி​கள் வில​கும்.

இந்​தக் கால​கட்​டத்​தில் குரு பக​வா​னின் அஷ்​டம ராசி சஞ்​சா​ரத்​தி​னால் உங்​க​ளின் ஆத்ம சக்தி பலப்​ப​டும். அத​னால் ப்ரா​ணா​யா​மம்,​ மனோ​வ​சி​யக் கலை​க​ளான கவ​னக்​கு​விப்பு போன்​ற​வற்​றில் தேர்ச்சி பெறு​வீர்​கள். மனக் குழப்​பங்​களி​லி​ருந்​தும் விடு​ப​டு​வீர்​கள். கையி​ருப்​புப் பொருட்​களை பத்​தி​ரப்​ப​டுத்​திக் கொள்​வீர்​கள். புதிய வாக​னச் சேர்க்கை உண்​டா​கும்.

நெருங்​கிய உற​வி​னர்​கள் தக்க சம​யத்​தில் கேட்​கா​ம​லேயே உத​வி​க​ளைச் செய்​வார்​கள். அகட விக​ட​மா​கப் பேசி,​ உங்​க​ளின் காரி​யங்​க​ளைச் சாதித்​துக் கொள்​ளு​வீர்​கள். உங்​க​ளுக்​கென புதிய பாதையை வகுத்​துக் கொள்​ளு​வீர்​கள். குடும்​பத்​தில் ஒற்​றுமை ஓங்​கும். உங்​கள் நண்​பர்​க​ளுக்​காக எதை​யும் செய்​வீர்​கள். குழந்​தை​க​ளா​லும் மகிழ்ச்சி உண்​டா​கும். அதே​நே​ரம் கெட்ட நீர் உட​லில் சேர்ந்து,​ அத​னால் உட​லில் நீர்க்​கொப்​ப​ளங்​கள் உண்​டாக வாய்ப்பு உள்​ளது. எனவே குளிர்ச்​சி​யான பதார்த்​தங்​களை அதி​கம் உட்​கொள்ள வேண்​டும்.

உத்​தி​யோ​கஸ்​தர்​க​ளுக்கு விரும்​பிய இட​மாற்​றம் கிடைக்​கும். அலு​வ​ல​கத்​தில் அமை​தி​யாக வேலை செய்​வீர்​கள். உங்​கள் மீது கூறப்​பட்​டி​ருந்த குற்​றச்​சாட்​டு​களி​லி​ருந்து விடு​விக்​கப்​ப​டு​வீர்​கள். இத​னால் தாம​த​மா​கி​யி​ருந்த உயர் பத​வி​க​ளும்,​ ஊதிய உயர்​வு​க​ளும் வந்து சேரும். புதிய வீடு,​ வாக​னம் வாங்​கு​வ​தற்​குக் கடன் உத​வி​கள் கிடைக்​கும். உங்​க​ளின் கோரிக்​கை​கள் மெது​வா​கப் பரிசீ​லிக்​கப்​பட்​டா​லும் சாத​க​மாக நிறை​வே​றும். அதே​நே​ரம் உங்​கள் வேலை​கள் அனைத்​தை​யும் கவ​னம் சித​றா​மல் பட்​டிய​லிட்டு,​ செய்து முடிக்​க​வும். உழைப்​ப​தற்கு அஞ்​சக்​கூ​டாது.

இந்த ராசி வியா​பா​ரி​க​ளுக்கு இது​வரை இருந்த மந்த நிலை மாறி,​ கொடுக்​கல்-​வாங்​கல் கைகொ​டுக்​கும். வியா​பா​ரம் அபி​வி​ருத்தி அடைந்து,​ பொரு​ளா​தார நிலை உய​ரும். இத​னால் புதிய வாக​னங்​களை வாங்​கு​வீர்​கள். உங்​கள் பொருட்​களை பல சந்​தை​க​ளுக்​கும் கொண்டு சென்று விற்​பனை செய்​வீர்​கள். பழைய வழக்​கு​க​ளில் முடி​வைக் காண்​பீர்​கள். செய்​தொழி​லில் புதிய மாற்​றங்​கள் ஏற்​ப​டும். அதே​நே​ரம் வரவு-​செலவு விஷ​யங்​க​ளில் அக்​கறை காட்​ட​வும்.

விவ​சா​யி​கள்,​ விளைச்​சல் அதி​க​ரித்து மகிழ்ச்​சி​யைக் காண்​பீர்​கள். புதிய பயிர்​க​ளைப் பயி​ரி​டு​வ​தற்​கான முயற்​சி​களை மேற்கொள்​வீர்​கள். வரு​மா​னம் சீராக இருக்​கும். இத​னால் குடும்​பச் செல​வு​களை ஈடு​செய்​வீர்​கள். கால்​ந​டை​க​ளா​ளும் சில நன்​மை​கள் உண்​டா​கும். புதிய குத்​த​கை​கள் தானாக வந்து சேரும். பழைய குத்​த​கை​க​ளும் திரும்​பக் கிடைக்​கும்.

அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு கட்​சிப் பணி​க​ளில் நாட்​டம் அதி​க​ரிக்​கும். தொண்​டர்​க​ளும் தங்​க​ளின் ஆத​ரவை முழு​மை​யாக வழங்​கு​வார்​கள். கட்​சி​யில் உங்​கள் செல்​வாக்கு அதி​க​ரிக்​கும். மேலி​டத்​தைக் கவ​ரு​வீர்​கள். இத​னால் புதிய பொறுப்​பு​க​ளும் கிடைக்​கும். கட்​சிப் பணி​க​ளுக்​காக ​ சந்​தோ​ஷம் தரும் பய​ணங்​க​ளை​யும் மேற்​கொள்​வீர்​கள்.

கலைத்​து​றை​யி​ன​ரைப் பொறுத்​த​வரை,​ இது​வரை இருந்து வந்த பின் தங்​கிய நிலையி​லி​ருந்து விடு​ப​டு​வீர்​கள். வாய்ப்​பு​க​ளின் எண்​ணிக்கை படிப்​ப​டி​யாக உய​ரும். பண வர​வும் அதி​க​ரிக்​கும்.

அதே​நே​ரம் முழு முயற்​சி​யோடு நீங்​கள் திற​மை​களை வெளிப்​ப​டுத்​தி​னால்​தான்,​ துறை​யில் நல்ல லாபம் கிடைக்​கும்;​ நழு​விச் சென்ற வாய்ப்​பு​க​ளை​யும் திரும்​பப் பெற முடி​யும்.

பெண்​ம​ணி​கள் குடும்​பத்​தில் ஒற்​று​மை​யைக் காண்​பீர்​கள். கண​வ​ரு​டன் ஒற்​றுமை அதி​க​ரிக்​கும். குடும்ப முன்​னேற்​றத்​திற்​குப் பாடு​ப​டு​வீர்​கள். அதே​நே​ரம் முன்​பின் தெரி​யா​த​வர்​க​ளி​டம் உங்​கள் விஷ​யங்​க​ளைப் பகிர்ந்​து​கொள்ள வேண்​டாம். வரு​வாய் சீராக இருக்​கு​மெ​னி​னும் எதிர்​கால அவ​ச​ரத் தேவை​களை ஈடு கட்ட,​ சிக்​க​னத்​தோடு இருப்​பது அவ​சி​யம்.

மாண​வ​ம ​ணி​கள் வருங்​கா​லத்​திற்​கா​கச் செய்​யும் பயிற்​சி​கள் அனைத்​தும் வெற்​றி​க​ர​மாக அமை​யும். மன​தைக் கட்​டுப்​ப​டுத்​தும் கலை​க​ளான ப்ரா​ணா​யா​மம் போன்​ற​வற்​றைச் செய்​வ​தன் மூலம் உங்​கள் கவ​னக் குவிப்பு அதி​க​ரிக்​கும். அத​னால் கடி​ன​மான பாடங்​க​ளை​யும் சுல​ப​மா​கப் புரிந்து கொண்​டு​வி​டு​வீர்​கள். பெற்​றோ​ரின் ஆத​ரவு இருக்​கும்.

பரி​கா​ரம்:​ சனிக்​கி​ழ​மை​க​ளில் சனி​ப​க​வா​னை​யும்,​ பைர​வ​ரை​யும் வழி​பட்டு வர,​ நலன் உண்​டா​கும்.
**********************

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

சிம்மம்

இந்த விரோதி ஆண்டு,​ கார்த்​திகை மாதம்,​ 1ஆம் தேதி ​(17.11.2009), செவ்​வாய்க்​கி​ழமை,​ பகல் 11.57 மணிக்கு ராகு,​ கேது பக​வான்​கள் உங்​கள் சஷ்​டம ​(ஆறாம்)​,​ விரய ​(பன்​னி​ரண்​டாம்)​ ராசி​களி​லி​ருந்து பூர்​வ​புண்​ணிய லாப ஸ்தான ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்​குப் பெயர்ச்சி ஆனார்​கள். குரு​ப​க​வான் உங்​க​ளின் சஷ்​டம ​(ஆறாம்)​ ராசி​யான மக​ரத்தி​லி​ருந்து,​ களத்ர ராசி​யான கும்ப ராசிக்கு இந்த ஆண்டு மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19-12-2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார்.

பூர்​வ​புண்​ணிய ஸ்தா​னத்​தில் அமர்ந்​துள்ள ராகு பக​வான்,​ உங்​க​ளின் சிந்​த​னை​யில் இருந்த குழப்​பங்​களை விலக்​கு​வார். மனம் ஒரு நிலைப்​ப​டும். முன் யோச​னை​யு​டன் செயல்​க​ளைச் செய்​வீர்​கள். வறு​மையி​லி​ருந்து விடு​ப​டு​வீர்​கள். பொன்,​ பொருள் சேர்க்கை உண்​டா​கும். அவ​ச​ரப்​ப​டா​மல் விவே​கத்​து​டன் செயல்​ப​டு​வீர்​கள். எதிர்​பா​ராத இடங்​களி​லி​ருந்து புதிய வாய்ப்​பு​கள் கிடைக்​கும். ஷேர் மார்க்​கெட் போன்ற துறை​க​ளி​லும் வரு​மா​னம் கொட்​டும். லாப ஸ்தா​னத்​தில் அமர்ந்​துள்ள கேது பக​வான்,​ குரு பக​வா​னின் கனிந்த பார்​வை​யைப் பெறு​கி​றார். எனவே மனதி​லி​ருந்த சஞ்​ச​லங்​கள் வில​கும். உங்​க​ளின் அகங்​கா​ரம் அகன்று,​ அனை​வ​ரி​ட​மும் பணிந்து செல்​லும் சுபா​வம் ஏற்​ப​டும். இத​னால் எளி​மை​யாக,​ அலட்​டல் இல்​லா​மல் காரி​ய​மாற்​று​வீர்​கள்.

உங்​களை ஏமாற்ற நினைத்​த​வர்​கள் ஏமா​று​வார்​கள். உங்​க​ளின் புத்​திக்​கூர்மை பளிச்​சி​டும். தெய்வ காரி​யங்​க​ளில் மன​தைச் செலுத்​து​வீர்​கள். மற்​ற​வர்​க​ளின் எண்​ணங்​களை முன்​கூட்​டியே புரிந்​து​கொள்​வீர்​கள். உங்​கள் நண்​பர்​க​ளின் பேச்​சுக்கு மதிப்பு கொடுப்​பீர்​கள். ஏழை,​ எளி​ய​வர்​க​ளுக்​குத் தானம் செய்​வீர்​கள். உங்​கள் ஞாபக சக்தி கூடும்.

இக்கால ​கட்​டத்​தில் குரு பக​வான் உங்​க​ளின் களத்ர ஸ்தான ராசி​யான ஏழா​மி​டத்​தில் சஞ்​ச​ரிப்​ப​தால் உங்​க​ளின் வசதி,​ வாய்ப்​பு​கள் பெரு​கும். குடும்​பத்​தில் ஒற்​று​மை​யைக் காண்​பீர்​கள். பதவி உயர்​வும்,​ புதிய பொறுப்​பு​க​ளும் கிடைக்​கும். உங்​க​ளின் அறி​வு​ரையை அனை​வ​ரும் கேட்​கும் சூழ்​நிலை உண்​டா​கும். ஆற்​ற​லு​டன் சாத​னை​க​ளைச் செய்து,​ வரு​மா​னத்​தைப் பெருக்​கு​வீர்​கள். கூட்டு வியா​பா​ரத்​தில் முன்​னேற்​றங்​கள் ஏற்​ப​டும். புதிய கல்வி கற்​ப​தற்கு வெளி​யூர்,​ வெளி​நாடு செல்​லும் வாய்ப்பு உண்​டா​கும். குடும்​பத்​தில் திரு​ம​ணம் போன்ற சுப காரி​யங்​களை நடத்தி மகிழ்​வீர்​கள். அதே​நே​ரம் அவ​ச​ரக் காரி​யங்​க​ளால் சில குறை​கள் உண்​டா​கும். ​உங்​கள் சக்​திக்கு மீறிய ஆசை​கள் ஏற்​ப​டும். அத​னால் ஆடம்​ப​ர​மாக வாழ நினைக்​கா​மல்,​ அமை​தி​யாக இருக்​க​வும். மேலும் அனா​வ​சி​யப் பிடி​வா​தங்​க​ளை​யும் விட்​டு​வி​ட​வும்.

உத்​யோ​கஸ்​தர்​கள் தங்​கள் வேலை​யில் மனம் ஈடு​ப​டா​மல் இருந்த சூழ்​நிலை மாறி,​ கருத்​தூன்​றிச் செயல்​ப​டத் தொடங்​கு​வார்​கள். உங்​க​ளின் தனிப்​பட்ட விஷ​யங்​களை மறந்​து​விட்டு,​ அலு​வ​ல​கக் காரி​யங்​க​ளைச் செய்​யுங்​கள். மேல​தி​கா​ரி​க​ளி​டம் அனு​ச​ர​ணை​யாக நடந்து கொள்​ளுங்​கள். ஒரு முறைக்கு இரு முறை உங்​கள் கோரிக்​கை​களை வைத்​தால் அவை நிறை​வே​றி​வி​டும். நிச்​ச​யம் உங்​கள் உழைப்​புக்கு ஏற்ற வரு​மா​னம் கிடைக்​கா​மல் போகாது. மேலும் பதவி உயர்வு கிடைக்​க​வும் வாய்ப்பு உண்​டா​கும். அதே​நே​ரம் அலு​வ​ல​கத்​தில் பிரத்​யேக சலு​கை​களை நீங்​கள் எதிர்​பார்க்க முடி​யாது.

வியா​பா​ ரி​கள் அதி​க​மாக உழைத்து பொரு​ளீட்​டு​வீர்​கள். வியா​பா​ரத்​தில் கூட்​டா​ளி​க​ளின் தலை​யீ​டு​கள் அவ்​வப்​போது இருந்​தா​லும் உங்​கள் காரி​யங்​களை மிக​வும் சாதுர்​ய​மாக முடித்​து​வி​டு​வீர்​கள். பணப்​பு​ழக்​கம் நன்​றாக இருக்​கும். கொடுக்​கல்,​ வாங்க​லி​லும் லாபத்​தைக் காண்​பீர்​கள். இந்​தக் கால​கட்​டத்​தில் புதிய தொழி​லைத் தொடங்​கு​வீர்​கள். இத​னால் உங்​கள் செல்​வாக்கு உய​ரும். வங்​கி​க​ளி​ட​மி​ருந்​தும் கடன்​கள் கிடைக்​கும். உற்​சா​க​மா​கப் பணி​யாற்​றும் சூழ்​நிலை ஏற்​ப​டும்.

இந்த ராசி விவ​சா​யி​க​ளுக்கு இக்​கா​லத்​தில் கொள்​மு​தல் லாபம் அதி​க​ரிக்​கும். விவ​சா​யத்தை விரி​வு​ப​டுத்த சீரிய முயற்​சி​களை மேற்​கொள்​வீர்​கள். விவ​சா​யப் பணி​யா​ளர்​கள் உங்​க​ளுக்கு உத​வி​க​ர​மாக இருப்​பார்​கள். போட்​டி​க​ளைச் சாதுர்​யத்​து​டன் சமா​ளிப்​பீர்​கள். கையி​லுள்ள பொருட்​க​ளுக்கு சந்​தை​யில் மதிப்பு அதி​க​ரிக்​கும். நீர்​வ​ரத்து நன்​றாக இருப்​ப​தால் ஊடு​ப​யிர்​க​ளைப் பயி​ரிட்டு,​ மேலும் லாபம் அடை​வீர்​கள். மனது திருப்​தி​க​ர​மாக இருக்​கும்.
அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு கட்​சி​யில் மதிப்​பும்,​ மரி​யா​தை​யும் உண்​டா​கும். உங்​க​ளின் மக்​கள் தொண்​டு​க​ளுக்கு நல்ல அங்​கீ​கா​ரம் கிடைக்​கும். இத​னால் சமூ​கத்​தில் அந்​தஸ்​தான பத​வி​க​ளைப் பெறு​வீர்​கள். மேலும் நீங்​கள் தீட்​டும் ரக​சி​யத் திட்​டங்​கள் வெற்​றி​பெ​றும். உயர்ந்​த​வர்​க​ளைச் சந்​தித்து வேலை​களை வெற்​றி​க​ர​மாக முடித்​து​வி​டு​வீர்​கள். அரசு அதி​கா​ரி​க​ளி​டம் உங்​க​ளுக்கு செல்​வாக்கு அதி​க​ரிக்​கும். புகழ் ஏணி​யில் ஏறத் துவங்​கு​வீர்​கள்.

கலைத்​து​றை​யி​ன​ரைப் பொறுத்​த​வரை,​ உற்​சா​க​மான சூழ்​நிலை அமை​யும். புக​ழை​யும்,​ பணத்​தை​யும் சம்​பா​திக்​கும் யோகம் உண்​டா​கும். துறை​யில் போட்டி,​ பொறா​மை​கள் குறை​யும். புதிய வாய்ப்​பு​க​ளைத் தேடிப் பெறு​வீர்​கள். தொழில் சம்​பந்​த​மாக வெளி​யூர்,​ வெளி​நாடு செல்​லும் வாய்ப்பு உண்​டா​கும். உடல் ஆரோக்​கி​யத்​தில் நல்ல முன்​னேற்​றத்​தைக் காண்​பீர்​கள். எதிர்​பார்த்த நல்ல தக​வல்​கள் வந்து சேரும்.

பெண்​ம​ணி​க​ளுக்கு அனைத்​துச் சங்​க​டங்​க​ளும்,​ சஞ்​ச​லங்​க​ளும் தீரும். குடும்​பத்​தில் குதூ​க​லம் ஏற்​ப​டும். பெரி​யோர்​க​ளின் ஆசி​யு​டன் திட்​டங்​களை வெற்​றி​க​ர​மாக முடிப்​பீர்​கள். குழந்​தை​க​ளுக்​கா​க​வும்,​ முதி​ய​வர்​க​ளுக்​கா​க​வும் சில செல​வு​க​ளைச் செய்​வீர்​கள். திருடு போன​தாக நினைத்​துக் கொண்​டி​ருந்த பொருட்​கள் கைக்​குக் கிடைக்​கும். தேக ஆரோக்​கி​யம் சீராக இருக்​கும்.

மாண​வ​ம​ணி​க​ளுக்​குக் கல்​வி​யில் நாட்​டம் அதி​க​ரிக்​கும். பள்​ளி​யில் நல்ல பெயர் வாங்​கு​வீர்​கள். உங்​களை எதி​ரி​க​ளாக நினைத்​த​வர்​க​ளும் நட்பு பாராட்​டு​வார்​கள். ​ வெளி​யூர்,​ வெளி​நாடு சென்று படிக்க வாய்ப்பு உண்​டா​கும். உடல் ஆரோக்​யம் சிறக்க,​ தகு​தி​யான வெளி விளை​யாட்​டு​க​ளில் ஈடு​ப​டு​வீர்​கள்.

பரி​கா​ரம்:​ ஆஞ்​ச​நே​யப் பெரு​மானை “ராம் ராம்’ என்று ஜபித்​துக்​கொண்டே சுற்றி வர​வும்.
———————————————————————

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

கன்னி

இந்த விரோதி ஆண்டு,​ கார்த்​திகை மாதம்,​ 1ஆம் தேதி ​(17.11.2009), செவ்​வாய்க்​கி​ழமை,​ பகல் 11.57 மணிக்கு ராகு -​ கேது பக​வான்​கள் உங்​கள் பூர்​வ​புண்ய ​(ஐந்​தாம்)​,​ லாப ​(பதி​னொன்​றாம்)​ ராசி​களி​லி​ருந்து,​ சுக ​(நான்கு)​,​ தொழில் ​(பத்து)​ ஸ்தான ராசி​க​ளுக்கு திருக்​க​ணித பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்சி ஆனார்​கள். குரு பக​வான் இந்த ஆண்டு மார்​கழி மாதம்,​ 4ஆம் தேதி ​(19.12.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு உங்​க​ளின் பூர்வ புண்​ணிய ராசி​யான மகர ராசியி​லி​ருந்து சஷ்​டம ​(ஆறாம்)​ ராசி​யான கும்ப ராசிக்​குப் பெயர்ச்​சி​யா​கி​றார்.

சுக ஸ்தான ராசி​யில் சஞ்​ச​ரிக்​கும் ராகு பக​வான்,​ உங்​கள் கல்​வி​யில் நல்ல மாற்​றங்​களை ஏற்​ப​டுத்​து​வார். சில​ருக்கு வெளி​யூர் சென்று,​ விரும்​பிய பாடப் பிரி​வு​க​ளில் சேர்ந்து படிக்​கும் வாய்ப்பு கிடைக்​கும். வீடு,​ வாக​னம் வாங்​கும் யோகம் உண்​டா​கும். கலை​க​ளில் ஆர்​வம் ஏற்​ப​டும். அதே​நே​ரம் புதி​ய​வர்​களை நம்பி எதை​யும் செய்​யக்​கூ​டாது;​ அவர்​க​ளால் பண நஷ்​டங்​கள் ஏற்​ப​ட​லாம். மேலும் சிறிய விஷ​யங்​க​ளைப் பெரி​து​ப​டுத்த ú வண்​டாம்.

தொழில் ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் கேது பக​வான்,​ குரு​ப​க​வா​னின் பார்​வை​யைப் பெறு​வ​தால் தொழி​லில் சிறப்​பான வெற்​றி​க​ளைக் காண்​பீர்​கள். உங்​க​ளின் வசீ​கர சக்தி கூடும். கூட்​டா​ளி​க​ளி​டம் சுமு​க​மான உற​வைத் தக்க வைத்​துக்​கொள்​வீர்​கள். பணம் பல வழி​க​ளி​லும் வந்து சேரும். அலைச்​சல்​கள் இருந்​தா​லும் முடிவு சாத​க​மா​கவே இருக்​கும். உங்​கள் வேலை​க​ளைப் பட்​டிய​லிட்டு,​ குறிப்​பிட்ட காலத்​திற்​குள் செய்து முடிப்​பீர்​கள். சில​ருக்கு அரசு ஒப்​பந்​தங்​கள் கிடைக்​கும். அதைச் செம்​மை​யாக முடித்து,​ நல்ல வரு​வா​யைப் பெறு​வீர்​கள்.

இக்​கா​ல​கட்​டத்​தில் குரு பக​வான் சஷ்​டம ​(ஆறாம்)​ ராசி​யில் சஞ்​ச​ரிக்​கி​றார். இத​னால் கடி​ன​மாக உழைக்க நேரி​டும். மற்​ற​படி திற​மை​யு​டன் பணி​யாற்​று​வீர்​கள். உழைப்​பிற்​கேற்ற வரு​மா​னத்​தைக் காண்​பீர்​கள். புதிய யுக்​தி​க​ளைக் கற்க ஆர்​வம் அதி​க​ரிக்​கும். சமு​தா​யத்​தில் பெய​ரும்,​ புக​ழும் கூடும். ​ சில​ருக்கு வீடு மாறும் யோகம் உண்​டா​கும். விரோ​தி​க​ளால் எந்​தத் தொந்​த​ர​வும் உண்​டா​காது. தர்ம ஸ்தா​பன விஷ​யங்​க​ளில் நாட்​டம் அதி​க​ரிக்​கும். சில​ருக்கு úக்ஷத்​தி​ரா​ட​னம் செல்​லும் வாய்ப்​பும் கிடைக்​கும். அதே​நே​ரம் வயிறு சம்​பந்​தப்​பட்ட உபா​தை​கள் வர வாய்ப்பு உள்​ள​தால்,​ ஆகார விஷ​யங்​க​ளில் கவ​னம் செலுத்​த​வும். மன​தில் ஏற்​ப​டும் சஞ்​ச​லங்​க​ளைக் குறைக்க யோகா,​ ப்ரா​ணா​யா​மம் போன்​ற​வற்​றைச் செய்​யுங்​கள். மேலும் தீய​வர்​க​ளின் சக​வா​சங்​க​ளைத் தவிர்க்​க​வும்.

உத்​யோ​கஸ்​தர்​கள் பதற்​றப்​ப​டா​மல் அமை​தி​யாக அலு​வ​லக வேலை​க​ளைச் ​ செய்​வீர்​கள். உழைப்​பிற்​குத் தகுந்த ஊதி​யத்​தைப் பெறு​வீர்​கள். அலு​வ​ல​கத்தி​லி​ருந்த கெடு​பி​டி​கள் குறை​யும். தெரி​யாத வேலை​களை சக ஊழி​யர்​க​ளின் உத​வி​யு​டன் செய்து முடிப்​பீர்​கள். மேல​தி​கா​ரி​க​ளின் உத​வி​யும் கிடைக்​கும். மன​துக்கு விருப்​ப​மான இட​மாற்​றத்​தைப் பெறு​வீர்​கள். வேலைப்​பளு கூடி​னா​லும் திட்​ட​மிட்​டுச் செய்து முடித்து,​ நல்ல பெயர் வாங்​கு​வீர்​கள். வரு​மா​னத்​தில் நல்ல முன்​னேற்​றம் தென்​ப​டும். அலு​வ​ல​கத்​தில் இழந்த பொறுப்​பு​க​ளைத் திரும்​பப் பெறு​வீர்​கள்.

வியா​பா​ரி​கள் நஷ்​டங்​களி​லி​ருந்து மீண்டு வந்​து​வி​டு​வீர்​கள். உங்​கள் கடின உழைப்​புக்கு ஏற்ப,​ நன்கு விற்​பனை நடக்​கும். அதே​ச​ம​யம் சரி​யா​கத் திட்​டம் தீட்​டிய பிறகே எந்த வேலை​யை​யும் செய்​ய​வும். யாருக்​கும் கடன் கொடுக்க வேண்​டாம். மற்​ற​படி எதிர்​வ​ரும் தடை​களை மன தைரி​யத்​து​டன் சமா​ளிப்​பீர்​கள். அர​சாங்​கத்தி​லி​ருந்து எதிர்​பார்த்த சலு​கை​கள் கிடைக்​கும். உங்​கள் சுறு​சு​றுப்பு கூடும்.

இந்த ராசி விவ​சா​யி​கள் கடு​மை​யாக உழைக்க வேண்​டி​வ​ரும். ஆனா​லும் அதற்​கேற்ற வரு​மா​னம் கிடைக்​கும். குடும்​பத்​தில் திரு​ம​ணம் போன்ற சுப நிகழ்ச்​சி​கள் நடக்​கும். நெல்,​ கோதுமை பயிர் செய்​ப​வர்​கள் சுமா​ரான பலன்​க​ளையே பெறு​வார்​கள். கருப்பு நிறப் பொருட்​களை பயிர் செய்​ப​வர்​கள் அதிக மக​சூ​லைப் பெற்று,​ லாபத்தை அள்​ளு​வார்​கள். உங்​க​ளின்​ கீழ் வேலை செய்​ப​வர்​களை அர​வ​ணைத்​துச் செல்​வீர்​கள். இத​னால் உங்​க​ளின் மதிப்பு,​ மரி​யாதை உய​ரும்.

அர​சி​யல்​வா​தி​ கள் சமு​தா​யப்​பணி செய்து,​ மக்​க​ளுக்கு விழிப்​பு​ணர்ச்​சியை ஏற்​ப​டுத்​து​வீர்​கள். இத​னால் மன​தில் திருப்தி உண்​டா​கும். விருந்து,​ கேளிக்​கை​க​ளில் கலந்து கொண்டு மகிழ்​வீர்​கள். பிர​சா​ரத்​தில் சலிப்​ப​டை​யா​மல் ஈடு​ப​டு​வீர்​கள். கட்சி மேலி​டத்​தால் பாராட்​டப்​ப​டு​வீர்​கள். புதிய பத​வி​க​ளைப் பெறு​வீர்​கள். வரு​மா​னத்​துக்​கும் எந்​தத் தடை​யும் வராது.

கலைத் ​து​றை​யி​ன​ருக்கு சர​ள​மான பண வச​தி​கள் கிடைக்​கும். உங்​க​ளின் திற​மை​யி​னால் புதிய படைப்​பு​களை உரு​வாக்​கு​வீர்​கள். பெய​ரும்,​ புக​ழும் உய​ரும். சக கலை​ஞர்​க​ளின் ஒத்​து​ழைப்பு நன்​றாக இருக்​கும். புதிய வாய்ப்​பு​க​ளைப் பெறு​வீர்​கள். சில​ருக்கு விருது பெறும் அதிர்ஷ்​ட​மும் கிடைக்​கும். அதே​நே​ரம் வீணான செல​வு​க​ளைச் செய்ய வேண்​டாம்.

பெண்​ம​ணி​க​ளுக்கு இனம் புரி​யாத மனக் குழப்​பம் இருக்ó​கும். எனி​னும் உங்​கள் காரி​யங்​க​ளில் முழு​தாக ஈடு​ப​டு​வீர்​கள். புதிய வழி​க​ளில் வரு​மா​னம் வரத் தொடங்​கும். உற்​றார்,​ உற​வி​னர்​க​ளு​டன் சுமு​க​மான உறவை வைத்​துக் கொள்​ளு​வீர்​கள். இத​னால் குடும்​பத்​தில் எந்​தப் பிரச்​சி​னை​யும் ஏற்​ப​டாது. கண​வ​ரின் ஒத்​து​ழைப்​பும் நன்​றாக இருக்​கும்.

மாண​வ ​ம​ணி​க​ளைப் பொறுத்​த​வரை,​ படிப்​பில் ஆர்​வம் அதி​க​ரிக்​கும். விளை​யாட்​டு​க​ளில் உற்​சா​கத்​து​டன் ஈடு​ப​டு​வீர்​கள். ஆத்ம ஒளி பெற,​ யோகா மற்​றும் ப்ரா​ணா​யா​மத்​தில் ஈடு​ப​டு​வீர்​கள். பெற்​றோர் மற்​றும் ஆசி​ரி​யர்​க​ளி​டம் அனு​கூ​ல​மான போக்​கைக் கடை​பி​டித்து,​ அவர்​க​ளி​டம் உங்​கள் கோரிக்​கை​களை நிறை​வேற்​றிக் கொள்​வீர்​கள்.

பரி​கா​ரம்:​​ சனி​ப​க​வானை முடிந்​த​பொ​ழு​தெல்​லாம் “சனி அஷ்​ட​கம்’ படித்து வழி​பட்டு வர​வும்.
——————————————————————-

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

துலாம்

இந்த விரோதி ஆண்டு கார்த்​திகை மாதம் 1ஆம் தேதி ​ ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு,​ கேது பக​வான்​கள் உங்​கள் சுகம் ​(நான்கு)​,​ தொழில் ​(பத்து)​ ஸ்தான ராசி​களி​லி​ருந்து தைரிய,​ பாக்ய ஸ்தான ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணித பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்​சி​யா​னார்​கள். இந்த ஆண்டு மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19.12.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு குரு​ப​க​வான் உங்​கள் சுக ​(நான்கு)​ ஸ்தான ராசியி​லி​ருந்து,​ பூர்​வ​புண்ய ​(ஐந்து)​ ஸ்தான ராசிக்​குப் பெயர்ச்​சி​யா​கி​றார்.

தைரிய ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் ராகு பக​வான்,​ எடுத்த காரி​யங்​க​ளில் திற​மை​யா​கப் பணி​யாற்​றும் வல்​ல​மை​யைத் தரு​வார். பெரும் பணி​களை ஏற்று நிர்​வா​கத் திற​மை​யு​டன் செயல்​ப​டுத்தி புக​ழ​டை​வீர்​கள். உங்​க​ளின் கீழ் பணி​யாற்​று​ப​வர்​கள்,​ உங்​கள் சொல்​படி நடப்​பார்​கள். எதி​ரி​க​ளின் சூழ்ச்​சி​களை முன்​பா​கவே புரிந்து கொள்​வீர்​கள். வாழ்க்கை வச​தி​க​ளைப் பெருக்​கிக் கொள்​வீர்​கள். ஆன்​மீ​கப் பெரி​ய​வர்​க​ளு​டன் சேர்ந்து,​ திருப்​ப​ணி​க​ளில் ஈடு​ப​டு​வீர்​கள். சாஸ்​திர ஆராய்ச்​சி​க​ளில் குறிப்​பாக மறை​முக விஷ​யங்​க​ளில் ஈடு​பட்டு நல்ல தேர்ச்சி பெறு​வீர்​கள். சகோ​தர,​ சகோ​த​ரி​க​ளு​டன் இணக்​க​மான உறவை வைத்​துக் கொள்​வீர்​கள். நண்​பர்​க​ளின் மறை​முக நட​வ​டிக்​கை​களை சாதுர்​ய​மா​கச் சமா​ளித்து,​ அவர்​கள் தங்​கள் தவ​று​களை உணர வைப்​பீர்​கள்.

கேது பக​வான் பாக்ய ஸ்தான ராசி​யில் அமர்ந்து குரு பக​வா​னின் பார்​வை​யைப் பெறு​வ​தால்,​ உங்​க​ளின் தயாள குணம் பரி​ம​ளிக்​கும். பல வழி​க​ளில் பணம் ​ திரட்​டு​வீர்​கள். புதிய துறை​க​ளி​லும் ஈடு​ப​டு​வீர்​கள். உங்​கள் ஞாபக சக்தி கூடும். உயர்ந்த அந்​தஸ்து கிடைக்​கும். அதே​நே​ரம் உங்​கள் கொள்​கை​க​ளில் நிரந்​த​ரப் பிடிப்பு இராது. எந்​தக் காரி​யத்​தை​யும் சந்​தே​கக் கண்​ணோடு பார்த்து,​ நல்ல விஷ​ய​மாக இருந்​தால் மட்​டுமே ஈடு​ப​டு​வீர்​கள்.

மேலும் தந்தை வழி உற​வி​னர்​க​ளின் மறை​வால் இல்​லத்​தில் பாதிப்​பும் ஏற்​பட வாய்ப்​பு உள்​ளது. இந்​தக் கால​கட்​டத்​தில் குரு பக​வான் பூர்​வ​புண்ய ​(ஐந்​தாம்)​ ஸ்தான ராசி​யில் சஞ்​ச​ரிப்​ப​தால் ஆரோக்​கி​யம் சிறப்​பாக இருக்​கும். தொடர்ந்து வந்த மனக் கவ​லை​களி​லி​ருந்து விடு​ப​டு​வீர்​கள். சிலர் வாக​னம் வாங்​கும் யோகத்​தைப் பெறு​வார்​கள். குழந்​தை​கள் மூல​மாக மகிழ்ச்சி உண்​டா​கும்.

இல் ​லத்​தில் ​ சுப ​கா​ரி​யங்​கள் நடக்​கும். சில​ருக்கு அர​சாங்​கத்தி​லி​ருந்து விரு​து​க​ளும்,​ ரொக்​க​மும் கிடைக்​கும். குடும்ப மேன்மை ஏற்​ப​டும். ஆடை,​ ஆப​ர​ணச் சேர்க்கை உண்​டா​கும். புதிய சேமிப்​பு​க​ளைச் செய்​வீர்​கள். குரு​ப​க​வான் புத்தி ஸ்தா​னத்​தில் அமர்ந்து ராசி​யைப் பார்ப்​ப​தால் உங்​க​ளின் சூட்​சும புத்​தி​யும்,​ விவே​க​மும் உங்​கள் செயல்​க​ளில் வெளிப்​ப​டும்.

உத்​யோ​கஸ்​தர் ​க​ளுக்கு எல்லா வேலை​க​ளை​யும் திறம்​ப​டச் செய்து முடிக்​கும் ஆற்​றல் உண்​டா​கும். உன்​ன​த​மான பத​வி​க​ளைப் பெறு​வீர்​கள். உங்​க​ளுக்கு எதி​ரா​கச் சதி செய்​த​வர்​கள் அடங்​கி​வி​டு​வர். வரு​மா​னம் பல மடங்கு உய​ரும். எனவே குடும்​பத் தேவை​களை நீங்​கள் சுல​ப​மாக நிறை​வேற்​றிக் கொள்​வீர்​கள். அலு​வ​ல​கத்​தில் சில முக்​கிய அதி​கா​ரி​கள் உங்​க​ளுக்​குக் கருணை காட்​டு​வார்​கள். உங்​கள் திற​மை​களை வளர்த்​துக் கொள்ள,​ தேவை​யான பயிற்​சி​களை மேற்​கொள்​வீர்​கள்.

வியா​பா​ரி​கள் விற்​ப​னை​யில் வளர்ச்​சி​யைக் காண்​பார்​கள். புதிய முத​லீ​டு​க​ளைச் செய்​வீர்​கள். கொடுக்​கல்,​ வாங்க​லில் சிறப்​பு​கள் உண்​டா​கும். வழக்​கு​கள் சாத​க​மா​கத் தீர்ந்​து​வி​டும். கூட்​டுத் தொழி​லில் இருப்​ப​வர்​கள்,​ கூட்​டா​ளி​க​ளு​டன் கருத்து வேறு​பா​டு​கள் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ள​வும். வங்​கிக் கடன்​கள் மூலம் வியா​பா​ரத்தை ஸ்தி​ரப்​ப​டுத்​திக் கொள்​வீர்​கள்.

விவ​சா​யி​க​ ளுக்கு புது குத்​த​கை​கள் கிடைக்​கும். விளைச்ச​லில் அபி​வி​ருத்​தி​யைக் காண்​பீர்​கள். புதிய கழ​னி​களை வாங்​கு​வீர்​கள். கரும்பு பயிர் செய்​ப​வர்​கள் நல்ல வரு​மா​னத்​தைக் காண்​பீர்​கள். பழைய கடன்​களி​லி​ருந்து விடு​ப​டு​வீர்​கள். ​ வயல் வரப்​புப் பிரச்​சி​னை​க​ளும் தீரும். அதே​நே​ரம் பொரு​ளா​தார விஷ​யங்​க​ளில் விழிப்​பு​டன் இருக்​க​வும்.

அர​சி​யல்​வா​தி​கள் ​ தொண்​டர்​க​ளின் ஆத​ர​வைப் பெறு​வீர்​கள். உங்​க​ளின் கோரிக்​கை​களை கட்சி மேலி​டம் பரிசீ​லிக்​கும். உங்​க​ளின் முயற்​சி​கள் ஒன்​றன்​பின் ஒன்​றா​கப் பலன் தரும். சமூ​கத்​தில் உங்​கள் மதிப்பு,​ மரி​யா​தை​கள் உய​ரும். அதே சம​யம் உட்​கட்​சிப் பூச​லில் மாட்​டிக் கொள்ள வேண்​டாம். மாற்​றுக் கட்​சி​யி​ன​ரி​ட​மும் அனு​ச​ரித்து நடந்து கொள்​ள​வும்.

கலைத் ​து​றை​யி​னர் உற்​சா​க​மா​கப் பணி​யாற்​று​வார்​கள். ​ பழைய ஒப்​பந்​தங்​களை நன்​றாக முடித்​துக் கொடுத்து,​ புதிய ஒப்​பந்​தங்​க​ளைப் பெறு​வீர்​கள். மேலும் கைந​ழு​விப் போன வாய்ப்​பு​க​ளும் திரும்​பக் கிடைக்​கும். குடும்​பத்​தில் சுப காரிய முயற்​சி​கள் நிறை​வே​றும். புதிய முயற்​சி​க​ளில் கவ​ன​மாக ஈடு​ப​ட​வும்.

பெண்​ம​ணி​க​ளுக்கு வரு​மா​னம் நன்​றாக இருக்​கும். ஆடை,​ அணி​ம​ணி​களை வாங்​கு​வீர்​கள். குடும்​பத்​தில் பிரிந்து இருந்​த​வர்​கள் சேர வாய்ப்பு உண்​டா​கும். மன​தில் உற்​சா​கம் பிறக்​கும். உற்​றார்,​ உற​வி​னர்​கள் உங்​கள் காரி​யங்​க​ளுக்கு உறு​து​ணை​யாக இருப்​பார்​கள். குழந்​தைப் பேறு இல்​லா​த​வர்​கள் அந்​தப் பாக்​கி​யத்​தைப் பெறும் கால​கட்​ட​மிது.

மாண ​வ​ம​ணி​கள் தங்​கள் முயற்​சி​க​ளில் வெற்றி காண்​பார்​கள். நல்ல மதிப்​பெண்​க​ளை​யும் பெறு​வார்​கள். விருப்​பப் பாடங்​க​ளில் நல்ல முன்​னேற்​றத்​தைக் காண்​பார்​கள். அதே​நே​ரம் அவ​ச​ரப் படா​மல் உங்​கள் வேலை​க​ளில் ஈடு​ப​ட​வும். நண்​பர்​க​ளு​டன் சிறு ​ சல​ச​லப்​பு​கள் ஏற்​பட்​டா​லும் அவற்​றால் பெரிய பாதிப்​பு​கள் உண்​டா​காது. எனி​னும் பேச்​சில் நிதா​னம் தேவை.

பரி​கா​ரம் :​​ “கோளறு பதி​கம்’ படித்து சிவ​பெ​ரு​மா​னை​யும்,​ விநா​ய​கர் அக​வல் படித்து விநா​ய​க​ரை​யும் வழி​பட்டு வர,​ முன்​னேற்​றங்​கள் தேடி வரும்.
———————————————-

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

விருச்சிகம்

இந்த விரோதி ஆண்டு கார்த்​திகை மாதம் 1ஆம் தேதி ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு-​கேது பக​வான்​கள்,​ உங்​கள் தைரி​ய ​(மூன்று),​ பாக்​கிய ​ ​(ஒன்​பது)​ ஸ்தான ராசி​க​ளான மக​ரம் மற்​றும் கடக ராசி​களி​லி​ருந்து குடும்ப​(இரண்டு)​,​ அஷ்​டம ​(எட்டு)​ ஸ்தான ராசி​க​ளுக்கு திருக்​க​ணித பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்​சி​யா​னார்​கள். குரு பக​வான் இந்த ஆண்டு மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19.11.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு உங்​கள் தைரிய ​(மூன்று)​ ஸ்தான ராசியி​லி​ருந்து சுக ​(நான்கு)​ ஸ்தான ராசிக்​குப் பெயர்ச்​சி​யா​கி​றார்.

குடும்ப ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் ராகு பக​வா​னால் வரு​மா​னத்​தில் இருந்த சிர​மம் வில​கும். திட்​ட​மி​டும் காரி​யங்​கள் எளி​தாக நிறை​வே​றும். அதே​நே​ரம் உங்​கள் செயல்​க​ளில் சிறிது சுய​ந​லம் காணப்​ப​டும். அனா​வ​சி​யப் பேச்​சி​னால் சுல​ப​மாக முடி​யக் கூடிய காரி​யம் தாம​தப்​ப​ட​லாம். மற்​ற​படி,​ புதிய மொழி​க​ளைக் கற்​கும் வாய்ப்பு கிட்​டும். அர​சாங்​கத்தி​லி​ருந்து எதிர்​பார்த்த வாய்ப்​பு​கள் கிடைக்​கும். குடும்ப நலம் சீரா​கும். உங்​க​ளின் கீழ் பணி​யாற்​று​ப​வர்​கள் நாண​ய​மாக நடந்து கொள்​வார்​கள். அஷ்​டம ராசி​யில் அமர்ந்து குரு பக​வா​னின் பார்​வை​யைப் பெறும் கேது பக​வான்,​ உயர்ந்த சந்​தர்ப்​பங்​க​ளைத் தேடித் தரு​வார். வெளி​யூர் பய​ணங்​களை மேற்​கொள்​வீர்​கள். அனை​வ​ரி​ட​மும் அன்​பு​டன் நடந்து கொண்டு,​ நற்​பெ​யர் வாங்​கு​வீர்​கள். நோய் நொடி உபா​தை​கள் எது​வும் உண்​டா​கா​மல் காக்​கப்​ப​டு​வீர்​கள். மேலும் நம்​பிக்​கைத் துரோ​கம் செய்​ப​வர்​களை உட​னுக்​கு​டன் கண்டு கொண்டு விலக்​கி​வி​டு​வீர்​கள்.

சுக ஸ்தான ராசி​யில் சஞ்​ச​ரிக்​கும் குரு பக​வான்,​ உங்​கள் மனக் கவ​லை​க​ளைக் குறைத்​து​வி​டு​வார். உற்​றார்,​ உற​வி​னர்​க​ளுக்​குத் தேவை​யான உத​வி​க​ளைச் செய்​வீர்​கள். தாய் வழி​யில் அனு​கூ​லங்​கள் உண்​டா​கும். செய்​தொழி​லில் பல வித புதிய யுக்​தி​க​ளைப் புகுத்​து​வீர்​கள். சில​ருக்கு ​ புது வீடு வாங்​கும் வாய்ப்பு உண்​டா​கும்.

எனி​னும் எவ​ருக்​கும் ஜாமீன் போட்டு வீண் பிரச்​சி​னை​க​ளில் சிக்​க​வேண்​டாம். பேச்​சில் உஷ்​ணம் இருக்​கும். பூர்​வீ​கச் சொத்து சம்​பந்​த​மான வழக்​கு​க​ளில் சம​ர​ச​மா​கச் செல்​வதே நலம் பயக்​கும். வாக​னங்​க​ளுக்கு சிறிது செலவு செய்ய நேரி​டும். அதே​நே​ரம் கைத்​தொ​ழில் செய்​ப​வர்​கள் சிறப்​பான முன்​னேற்​றங்​களை அடை​வார்​கள். ​ பிள்​ளை​கள் உங்​கள் பேச்​சைக் கேட்டு நடப்​பார்​கள். பெரி​யோர்​கள் உங்​க​ளைத் தேடி வந்து ஆசி​களை வழங்​கும் கால​கட்​டம் இது.

உத் ​யோ​கஸ்​தர்​க​ளுக்கு அலு​வ​லக வேலை​கள் சுமு​க​மாக முடி​யும். உட​லில் இருந்த சோர்​வு​கள் நீங்கி,​ உற்​சா​க​மா​கப் பணி​யாற்​று​வீர்​கள். உங்​கள் தவ​று​க​ளைத் திருத்​திக் கொண்டு,​ அலு​வ​லக வேலை​க​ளில் கவ​னம் செலுத்​து​வöர்​கள். இத​னால் மேல​தி​கா​ரி​க​ளின் பாராட்​டு​க​ளைப் பெறு​வீர்​கள். அதே​நே​ரம் கால நேரங்​களை வீணாக்​கா​மல் பயன்​ப​டுத்​திக் கொள்​ள​வும்.

வியா​பா​ரி​கள் வர​வேண்​டிய பண விஷ​யத்​தில் அக்​கறை காட்​டு​வர். மற்​ற​படி கொடுக்​கல்,​ வாங்​கல் விஷ​யங்​க​ளில் லாபங்​க​ளைக் காண்​பீர்​கள். வியா​பா​ரத்​தில் புதிய வளர்ச்​சி​யைக் காண்​பீர்​கள். உங்​கள் சம​யோ​ஜித புத்​தி​யால் போட்​டி​க​ளைச் சமா​ளிப்​பீர்​கள். உங்​கள் செய​லில் பின் வாங்​கா​மல் செயல்​பட்டு வெற்றி பெறு​வீர்​கள். வழக்​கு​க​ளில் சாத​க​மான திருப்​பங்​கள் உண்​டா​கும். வாடிக்​கை​யா​ளர்​கள் உங்​களை நோக்​கிப் படை​யெ​டுப்​பார்​கள்.

விவ ​சா​யி​க​ளுக்கு தோட்​டம்,​ தோப்பு உள்​ளிட்ட விவ​சா​யப் பணி​கள் நன்கு முடி​யும். விளைச்​சல் நன்​றாக இருக்​கும். இல்​லத்​தில் சுப காரி​யங்​களை நடத்​து​வீர்​கள். புதிய முயற்​சி​க​ளில் துணிந்து ஈடு​ப​ட​லாம். கால்​ந​டை​க​ளா​லும் நல்ல ​ பலன் கிடைக்​கும். பால் வியா​பா​ரம் செய்​ப​வர்​கள் கூடு​தல் லாபம் பெறு​வார்​கள். குத்​தகை வரு​வா​யும்,​ தானிய விற்​ப​னை​யும் நன்​றாக இருக்​கும். எனவே பாச​னத் துறை​யில் கூடு​தல் கவ​னம் செலுத்​த​வும்.

அர​சி​யல்​வா​தி​க​ளைப் பொறுத்​த​வரை எதிர்​பார்க்​கும் காரி​யங்​க​ளில் தடை ஏற்​பட்​டா​லும்,​ இறு​தி​யில் வெற்றி காண்​பீர்​கள். முக்​கி​யத் தலை​வர்​க​ளு​டன் இணைந்து பணி​யாற்​றும் வாய்ப்​பி​னைப் பெறு​வீர்​கள். உங்​கள் எதி​ரி​க​ளின் பலம் குறை​யும். மேலும் தொண்​டர்​க​ளின் குறை​களை அக்​க​றை​யு​டன் பரிசீ​லித்து,​ அவற்​றைத் தீர்க்க முயற்சி செய்​வீர்​கள். சொத்​துக்​க​ளின் மூலம் வரு​மா​னம் வந்து கொண்​டி​ருக்​கும்.

கலைத் ​து​றை​யி​னர் தங்​கள் கட​மையை உணர்ந்து செயல்​ப​டு​வீர்​கள். சக கலை​ஞர்​கள் உங்​க​ளுக்கு உத​வி​க​ர​மாக இருப்​பார்​கள். உங்​கள் செயல்​க​ளுக்கு புதிய அங்​கீ​கா​ரம் கிடைக்​கும். அதே நேரம் அதிக முயற்​சி​க​ளுக்​குப் பிறகே புதிய ஒப்​பந்​தங்​கள் கைகூ​டும். மற்​ற​படி புதிய படைப்​பு​களை உரு​வாக்​கும் ஆர்​வம் அதி​க​ரிக்​கும். மேலும் உயர்ந்​த​வர்​க​ளின் சந்​திப்பு உங்​க​ளுக்கு மன உற்​சா​கத்​தைக் கொடுக்​கும். ரசி​கர்​க​ளின் ஆத​ரவு மழை​யில் நனை​வீர்​கள்.

பெண்​ம ​ணி​கள் குடும்​பத்​தில் ஒற்​று​மை​யைக் காண்​பீர்​கள். கண​வ​ரி​டம் அன்​பும்,​ பாச​மும் அதி​க​ரிக்​கும். மன​திற்கு மகிழ்ச்சி தரும் செய்​தி​க​ளைக் கேட்​பீர்​கள். உங்​களை நாடி வரும் நண்​பர்​க​ளுக்கு,​ நீங்​கள் தயங்​கா​மல் உதவி செய்​வீர்​கள். இருப்​பி​னும் எவ​ரி​ட​மும் பேசும்​போது கவ​ன​மாக இருக்​க​வும்.

மாண​வ​ம​ணி​கள் நீண்ட காலத் திட்​டங்​களை தீட்ட இது உகந்த நேரம். கிரிக்​கெட்,​ ஹாக்கி போன்ற வெளி விளை​யாட்​டு​க​ளில் ஈடு​ப​ட​லாம். நண்​பர்​க​ளு​டன் சேர்ந்து செய்​யும் முயற்​சி​க​ளுக்கு எதிர்​பார்த்த அங்​கீ​கா​ரம் கிடைக்​கும். உங்​கள் கோரிக்​கை​களை பெற்​றோ​ரும்,​ ஆசி​ரி​யர்​க​ளும் நிறை​வேற்​று​வார்​கள். போதிய பயிற்​சி​களை மேற்​கொண்டு,​ நிறைய மதிப்​பெண்​களை அள்​ளு​வீர்​கள். சூரிய நமஸ்​கா​ரம் செய்து,​ ஆத்ம ஒளி பெறுங்​கள்.

பரி​கா​ரம் :​​ துர்​கை​யம்​மனை செவ்​வாய்க்​கி​ழ​மை​க​ளில் தரி​சித்து தீப​மேற்றி வழி​பட்டு வர,​ சிர​மங்​கள் மறை​யும்.
——————————————————-

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

தனுசு

இந்த விரோதி ஆண்டு கார்த்​திகை மாதம் 1ஆம் தேதி ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு,​ கேது பக​வான்​கள் உங்​கள் குடும்ப ​(இரண்டு),​ அஷ்​டம​(எட்டு)​ ராசி​க​ளான மக​ரம்,​ கட​கம் ராசி​களி​லி​ருந்து ஜன்ம ​(ஒன்று)​,​ களத்ர ​(ஏழு)​ ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணித பஞ்​சாங்​கப்​படி ​ பெயர்ச்​சி​யா​னார்​கள். குரு பக​வான் இந்த ஆண்டு மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19.11.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு,​ உங்​க​ளின் குடும்ப ஸ்தான ராசி​யான மகர ராசியி​லி​ருந்து தைரிய ஸ்தான ராசி​யான கும்ப ராசிக்​குப் பெயர்ச்சி ஆகி​றார்.

ஜன்ம ராசி​யில் சஞ்​ச​ரிக்​கும் ராகு பக​வான் கோதண்ட ராகு​வாக இருப்​ப​தால் உங்​க​ளின் நன்​ன​டத்தை கூடும். இழி​வான செயல்​களி​லி​ருந்து விடு​ப​டு​வீர்​கள். வறுமை அகன்று,​ வரு​மா​னம் சீரா​கும். உற்​றார்-​உற​வி​னர்​க​ளி​டம் விட்​டுக் கொடுத்து நடந்து,​ விரோ​தங்​க​ளைத் தவிர்த்​து​வி​டு​வீர்​கள். புதிய முயற்​சி​க​ளில் தொய்​வில்​லா​மல் ஈடு​ப​டு​வீர்​கள். உங்​கள் தன்​னம்​பிக்கை கூடும். களத்ர ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் கேது பக​வான்,​ குரு பக​வா​னின் பார்​வை​யைப் பெறு​கி​றார். எனவே இனி​மை​யா​கப் பேசி,​ உங்​க​ளின் காரி​யங்​க​ளைச் சாதித்​துக் கொள்​வீர்​கள். உங்​க​ளின் தோற்​றத்​தில் பொலிவு உண்​டா​கும். உடல் வலிமை கூடும். வீர விளை​யாட்​டு​க​ளி​லும் ஈடு​ப​டு​வீர்​கள். சொந்த வீடு,​ வாக​னம் வாங்​கும் யோக​மும் உண்​டா​கும். ஆதா​யம் தரும் பய​ணங்​களை மேற்​கொள்​வீர்​கள். அதே​நே​ரம் கடு​மை​யாக உழைக்க நேரி​டும். உட​லில் அவ்​வப்​போது ஏற்​ப​டும் ஆயா​சத்​தால்,​ சிறப்​பா​கச் செய​லாற்​றும் ஆற்ற​லி​ருந்​தா​லும் மித​மான நிலை​யி​லேயே செயல்​ப​டும் நிலைமை காணப்​ப​டும்.

இக்​காலகட்​டத்​தில் குரு பக​வான் தைரிய ஸ்தா​னத்​தில் அமர்ந்​தி​ருப்​ப​தால் உங்​கள் சொல்​வன்​மை​யா​லும்,​ திற​மை​யி​னா​லும் உயர்ந்​தோ​ரி​டம் சரி சம​மாக வாதம் செய்து புகழ் பெறு​வீர்​கள். மேலும் உங்​களை எதிர்ப்​ப​வர்​க​ளை​யும் வெற்றி காண்​பீர்​கள். நுண் கலை​க​ளில் ஆர்​வ​மும்,​ சாஸ்​தி​ரத்​தில் தேர்ச்​சி​யும் உண்​டா​கும். ஆன்​மீ​கத்​தில் ஈடு​பாடு ஏற்​ப​டும். அர​சிய​லி​லும் ஈடு​பட்டு வெற்றி பெறு​வீர்​கள். அதே​நே​ரம் உங்​கள் உள் மன​தில் ஒரு பயம் குடி​கொண்​டி​ருக்​கும். இதை விரட்ட யோகா,​ ப்ரா​ணா​யா​மம் போன்​ற​வை​க​ளைச் செய்​வீர்​கள். மேலும் நீதி,​ நேர்​மை​யு​டன் நடந்து கொள்​வீர்​கள். மற்​ற​படி நீங்​கள் சம்​பா​திக்​கும் பொருளை பத்​தி​ர​மா​கப் பாது​காப்​பீர்​கள். மேலும் வெளிப்​ப​டை​யாக பழக மாட்​டீர்​கள். உங்​கள் ரக​சி​யங்​க​ளை​யும் வெளி​யில் கூற மாட்​டீர்​கள். அதே​ச​ம​யம் உங்​களை அண்டி வந்து உதவி கேட்​ப​வர்​க​ளுக்கு உங்​க​ளால் முடிந்த அள​விற்கு,​ எந்த எதிர்​பார்ப்​பு​மில்​லா​மல் உதவி செய்​வீர்​கள்.

உத் ​யோ​கஸ்​தர்​கள் தங்​கள் வேலை​யில் சற்று தொய்வு ஏற்​பட்​டா​லும்,​ திட்​ட​மிட்ட வேலை​க​ளைத் தடை​யில்​லா​மல் முடித்​து​வி​டு​வீர்​கள். எதிர்​பார்த்த ஊதிய உயர்வு இரட்​டிப்​பா​கக் கிடைத்து​ மகிழ்​வீர்​கள். அலு​வ​லக ரீதி​யான பய​ணங்​க​ளா​லும் பண​வ​ரவு உண்​டா​கும். சக ஊழி​யர்​க​ளின் உத​வி​யு​டன் உங்​கள் வேலைப் பளு​வைக் குறைத்​துக் கொள்​வீர்​கள். மேல​தி​கா​ரி​கள் உங்​கள் நல​னில் அக்​கறை செலுத்​து​வார்​கள்.

வியா​பா​ரி​க​ளுக்கு வரு​மா​னம் நன்​றாக இருக்​கும். நீண்ட நாள் பாக்​கி​க​ளும் வசூ​லா​கி​வி​டும். கொடுக்​கல்,​ வாங்​கல் விஷ​யங்​க​ளில் முன்​னேற்​ற​மான திருப்​பங்​க​ளைக் காண்​பீர்​கள். உங்​க​ளின் மனம் தள​ராத உறுதி,​ உங்​களை வெற்​றி​யின் பக்​கம் இட்​டுச் செல்​லும். நண்​பர்​க​ளு​டன் சேர்ந்து,​ புதிய முயற்​சி​க​ளைச் செயல்​ப​டுத்​து​வீர்​கள். அதே​நே​ரம் அவர்​க​ளி​டம் எந்த ரக​சி​யத்​தை​யும் பகிர்ந்து கொள்​ளா​தீர்​கள். மேலும் அன்​னி​யர்​களை நம்பி எந்​தக் கடன்​க​ளை​யும் கொடுக்க வேண்​டாம்.

விவ​சா​யி​க​ளின் கொள்​மு​தல் லாபம் அதி​க​ரிக்​கும். புது தானி​யங்​க​ளைப் பயி​ரிட்டு,​ நல்ல மக​சூ​லைக் காண்​பீர்​கள். அதே சம​யம் நீர்ப்​பா​சன வச​தி​க​ளுக்​காக நீங்​கள் சிறிது செலவு செய்ய நேரி​டும். மற்​ற​படி புதிய குத்​த​கை​கள் பெறு​வீர்​கள். கால்​ந​டை​க​ளா​லும் எதிர்​பார்த்த வரு​மா​னம் கிடைக்​கும். இந்த கால​கட்​டத்​தில் உடல் உழைப்பை அதி​க​மாக நம்​பு​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு இடை​யி​டையே சிறு பிரச்​சி​னை​கள் தோன்றி மறை​யும். எவ​ரி​ட​மும் வாக்​கு​வா​தம்,​ மோதல் ஆகி​ய​வற்றை மேற்​கொள்​ளா​தீர்​கள். உங்​க​ளுக்​குத் தேவை​யா​ன​வற்​றில் மட்​டுமே கவ​னம் செலுத்​த​வும். உங்​கள் மன​தில் புதிய நம்​பிக்கை உண்​டா​கும். கட்​சி​யில் மதிப்பு,​ மரி​யாதை வள​ரும். தொண்​டர்​களை அர​வ​ணைத்​துச் சென்று உங்​கள் எண்​ணங்​க​ளைப் பூர்த்தி செய்து கொள்​வீர்​கள். மக்​கள் வேலை​யில் ஈடு​பட்டு மகிழ்ச்​சி​ய​டை​வீர்​கள்.

கலைத் ​து​றை​யி​ன​ரின் திற​மை​கள் பளிச்​சி​டும். சக கலை​ஞர்​க​ளின் ஆத​ரவு தொடர்ந்து இருக்​கும். உங்​கள் படைப்​பு​கள் மக்​க​ளி​டம் சரி​யான முறை​யில் சென்​ற​டைந்து,​ வர​வேற்​பு​க​ளைப் பெறும். நிதா​னத்​து​டன் இருந்து,​ புதிய பொறுப்​பு​க​ளைப் பெறு​வீர்​கள். அதோடு கர்​வத்தை விட்​டொ​ழித்​தால் மேலும் வளர்ச்சி அடை​ய​லாம்.

பெண்​ம​ணி​கள் தம் கண​வ​ரோடு ஒற்​று​மை​யு​டன் பழ​கு​வார்​கள். அதே​நே​ரம் கார​ண​மில்​லா​மல் மன​தில் சற்று அமைதி குறை​யும். ​ பெரி​யோர்​க​ளின் ஆத​ர​வு​டன் திட்​ட​மிட்ட வேலை​க​ளைச் செவ்​வனே செய்து முடிப்​பீர்​கள். பிள்​ளை​க​ளால் பெருமை அடை​வீர்​கள். பண​வ​ரவு சீராக இருக்​கும். ஆன்​மீ​கத்​தில் நாட்​டம் அதி​க​ரிக்​கும்.

மாண​வ​ம​ணி​க​ளைப் பொறுத்​த​வரை சோம்​பே​றித்​த​னத்​திற்கு இடம் தரா​மல்,​ படிப்​பில் முழுக் கவ​னம் செலுத்தி நல்ல மதிப்​பெண்​க​ளைப் பெற முயற்​சிக்​க​வும். உங்​கள் சந்​தே​கங்​களை உட​னுக்​கு​டன் ஆசி​ரி​யர்​க​ளி​டம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்​ள​வும்.

மற்​ற​படி தேக ஆரோக்​கி​ய​மும்,​ மன​வ​ள​மும் மேம்​பட யோகா,​ ப்ரா​ணா​யா​மம் போன்​ற​வை​க​ளைச் செய்​ய​வும். பெற்​றோர்​க​ளின் ஆத​ரவு உங்​க​ளுக்கு கிடைக்​கும்.

பரி​கா​ரம் :​​ செவ்​வாய்க்​கி​ழ​மை​க​ளில் முரு​கப்​பெ​ரு​மா​னை​யும்,​ துர்​கை​யை​யும் வழி​பட்டு வர,​ அனு​கூ​லங்​கள் பிறக்​கும்.
————————————————

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

மகரம்

இந்த விரோதி ஆண்டு கார்த்​திகை மாதம் 1ஆம் தேதி ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு-​கேது பக​வான்​கள்,​ உங்​கள் ஜன்ம ​(ஒன்று)​ மற்​றும் களத்ர ​(ஏழு)​ ராசி​க​ளான மகர,​ கடக ராசி​களி​லி​ருந்து விரய ​(பன்​னி​ரெண்டு)​,​ மற்​றும் சஷ்​டம ​(ஆறு)​ ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணித பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்​சி​யா​னார்​கள். குரு​ப​க​வான் இந்த ஆண்டு ​ மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19.11.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு,​ உங்​க​ளின் ஜன்ம ராசி​யான மகர ராசியி​லி​ருந்து குடும்ப ராசி​யான கும்ப ராசிக்​குப் பெயர்ச்​சி​யா​கி​றார்.

விரய ஸ்தான ராசி​யில் சஞ்​ச​ரிக்​கும் ராகு பக​வான் உங்​களை அனா​வ​சி​யச் செல​வு​க​ளை​யும்,​ பய​ணங்​க​ளை​யும் செய்ய வைப்​பார். தடைப்​பட்​டி​ருந்த செயல்​களை எப்​பா​டு​பட்​டா​வது முடித்​து​வி​டு​வீர்​கள். அதற்கு உங்​க​ளின் அனு​பவ அறிவு கைகொ​டுக்​கும். உற​வி​னர்​க​ளுக்கு உங்​க​ளா​லான உத​வி​க​ளைச் செய்​வீர்​கள். சில​ரைப் பற்றி பேசிய பேச்​சுக்​காக அப​வா​தங்​கள் உண்​டா​கும். எவ​ருக்​கும் வாக்கு கொடுப்​பதோ,​ முன் ஜாமீன் போடு​வதோ கூடாது. மற்​ற​படி வரு​வாய்க்கு எந்​தக் குறை​வும் உண்​டா​காது.

சஷ் ​டம ​(ஆறு)​ ஸ்தா​னத்​தில்,​ குடும்ப ஸ்தா​னத்​தில் பலம் பெற்ற குரு பக​வா​னின் பார்​வை​யில் உள்ள கேது பக​வான்,​ உங்​க​ளின் மறை​முக எதிர்ப்​பா​ளர்​களை ஓடச் செய்​வார். கூட்​டா​ளி​க​ளும் உங்​கள் ஆலோ​ச​னை​க​ளைக் கேட்டு நடப்​பார்​கள். உடல் ஆரோக்​கி​யம் சிறப்​பாக இருக்​கும். போட்​டி​க​ளில் வெற்றி பெறு​வீர்​கள். பேச்​சில் விக​டம் கலந்​தி​ருக்​கும். உற்​றார்,​ உற​வி​னர்​கள் பகை மறந்து நேச​மா​வார்​கள். வெளி​யில் கொடுத்​தி​ருந்த பணம் கைக்கு வந்து சேரும். ​ தாய் வழி உற​வி​னர்​க​ளின் மூலம் சொத்து,​ சுகங்​கள் சேரும். பிள்​ளை​கள் சூட்​டி​கை​யாக இருப்​பார்​கள். ​ இந்​தக் கால​கட்​டத்​தில் குரு பக​வான் உங்​கள் பொரு​ளா​தார நிலையை உயர்த்​து​வார். புது வீடு,​ வாக​னம் வாங்​கும் யோகம் உண்​டா​கும். பிற​ருக்​குச் செய்​யும் உத​வி​கள்,​ அவர்​களை பன்​ம​டங்கு உயர்த்​தும். அனை​வ​ரி​ட​மும் தந்​தி​ர​மா​கப் பேசி,​ உங்​க​ளின் காரி​யங்​க​ளைச் சாதித்​துக் கொள்​வீர்​கள். அடுத்​த​வர்​கள் தங்​க​ளின் ரக​சி​யங்​களை உங்​க​ளி​டம் தெரி​விப்​பார்​கள். குடும்​பத்​தில் சுப காரி​யங்​கள் நடக்​கும். குழந்தை இல்​லா​தோர்க்கு அந்​தப் பாக்​கி​யம் உண்​டா​கும். சந்​தர்ப்​பச் சூழ​லுக்​கேற்ப உங்​கள் செயல்​களை மாற்றி,​ வெற்றி பெறு​வீர்​கள். குடும்​பத்​து​டன் குல தெய்​வப் பிரார்த்​த​னை​களை நிறை​வேற்​று​வீர்​கள். வம்பு வழக்​கு​களி​லி​ருந்து விடு​ப​டு​வீர்​கள். இல்​லத்​திற்​குத் தேவை​யான ஆடம்​ப​ரப் பொருட்​க​ளை​யும் வாங்​கு​வீர்​கள். அதே​நே​ரம் உங்​க​ளின் காரி​யங்​களை மற்​ற​வர்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கா​மல் நீங்​களே செய்து முடித்​தால் சிறப்​பு​கள் உண்​டா​கும்.

உத்​யோ​கஸ்​தர்​ கள் இடை​வி​டா​மல் உழைக்க வேண்​டி​யி​ருக்​கும். அலைச்​சல் இருந்​தா​லும் திட்​ட​மிட்ட பணி​கள் யாவை​யும் திறம்​பட முடிப்​பீர்​கள். மேல​தி​கா​ரி​க​ளின் பாராட்​டு​க​ளைப் பெறு​வீர்​கள். வாக​னம் வாங்க அலு​வ​ல​கத்தி​லி​ருந்து கடன்​கள் கிடைக்​கும். சக ஊழி​யர்​கள் நட்​பு​டன் நடந்து கொள்​வர். பதவி உயர்வு கிடைக்​கும். அலு​வ​லக விஷ​ய​மாக பய​ணங்​க​ளைச் செய்ய நேரி​டும்.

வியா​பா​ரி​க​ளுக்கு அர​சாங்​கத்தி​லி​ருந்து சில அனு​கூ​லங்​கள் கிடைக்​கும். எதி​ரி​கள் அடங்​கி​வி​டு​வர். ​ உங்​கள் வியா​பா​ரத்​தைச் சிறப்​பாக நடத்தி முடிப்​பீர்​கள். வெளியி​லி​ருந்து கடன்​கள் வாங்கி,​ உங்​கள் வியா​பா​ரத்​தைப் பெருக்​கு​வீர்​கள். அதே​நே​ரம் கூட்​டா​ளி​கள் சற்று பாரா​மு​க​மாக நடந்து கொள்​வார்​கள். அத​னால் கணக்கு வழக்​கு​களை நன்கு,​ சரி​யாக வைத்​துக் கொள்​ள​வும்.

மற்​ற​படி கொடுக்​கல்,​ வாங்க​லில் நலன்​க​ளைக் காண்​பீர்​கள். அதி​க​மாக விற்​ப​னை​யா​கும் பொருட்​க​ளுக்கு முன்​னு​ரிமை கொடுத்து,​ லாபத்​தைப் பெருக்​கிக் கொள்​ள​வும்.

விவ ​சா​யி​க​ளுக்கு விளைச்​சல் நன்​றாக இருக்​கும். தேவை​யான விவ​சாய உப​க​ர​ணங்​களை வாங்​கு​வீர்​கள். வரு​மா​னம் நன்​றாக இருந்​தா​லும் பூச்​சிக்​கொல்லி மருந்​துக்கு நீங்​கள் சிறிது செலவு செய்ய நேரி​டும். விவ​சா​யத்​தில் புதிய யுக்​தி​க​ளைப் புகுத்​து​வீர்​கள். நீர்​வ​ரத்​தைப் பயன்​ப​டுத்தி,​ பாசன வச​தி​க​ளைப் பெருக்​கிக் கொள்​வீர்​கள். புதிய குத்​த​கை​களை நாடிச் சென்று பெறு​வீர்​கள். ஊடு பயி​ராக காய்​க​றி​க​ளைப் பயி​ரிட்டு,​ மேலும் பய​ன​டை​வீர்​கள்.

அர ​சி​யல்​வா​தி​கள் அனை​வ​ரு​ட​னும் இன்​மு​கத்​து​டன் பேசி,​ தங்​கள் காரி​யங்​க​ளைச் சாதித்​துக் கொள்​வார்​கள். உங்​க​ளின் பொதுச் சேவை​யில் அனு​கூ​ல​மான திருப்​பங்​கள் உண்​டா​கும். முக்​கி​யப் பொறுப்​பு​கள் கிடைத்து மகிழ்ச்சி அடை​வீர்​கள். அர​சாங்க அதி​கா​ரி​க​ளின் ஆத​ர​வைப் பெற்று,​ உங்​கள் காரி​யங்​களை முடிப்​பீர்​கள். அதே​நே​ரம் பேச்​சில் கண்​ணி​யம் காக்​க​வும்.

கலைத் துறை​யி​ன​ருக்கு எதிர்​பார்த்த செல்​வாக்கு கிடைக்​கும். பொறு​மை​யு​டன் செயல்​பட்டு,​ பிரச்​சி​னை​க​ளைத் தவிர்ப்​பீர்​கள். புதிய ஒப்​பந்​தங்​கள் கிடைக்​கப் பெறு​வீர்​கள். ரசி​கர்​க​ளின் ஆத​ர​வைப் பெற்று,​ செயற்​க​ரிய சாத​னை​க​ளைச் செய்​வீர்​கள். உங்​கள் வேலை​களை நூதன முயற்​சி​க​ளால் வெற்​றி​யு​டன் முடித்​து​வி​டு​வீர்​கள்.

பெண்​ம​ணி​கள் குடும்​பத்​தில் சுப நிகழ்ச்​சி​களை நடத்தி மகிழ்​வார்​கள். அதே​நே​ரம் உற்​றார்,​ உற​வி​னர்​களை அர​வ​ணைத்​துச் செல்​ல​வும். கண​வ​ரு​ட​னான ஒற்​றுமை நன்​றாக இருக்​கும். உட​லும்,​ மன​மும் பலப்​ப​டும். ஆன்​மீக நாட்​டம் கூடும். ஆடை ஆப​ர​ணங்​க​ளை​யும் வாங்கி மகிழ்​வீர்​கள். அதே​ச​ம​யம் பேச்​சில் நிதா​னம் தேவை.

மாண​வ​ம​ணி​கள் நல்ல மதிப்​பெண்​களை அள்​ளு​வீர்​கள். பெற்​றோர்​க​ளின் ஆத​ர​வைப் பெறு​வீர்​கள். உங்​க​ளின் கோரிக்​கை​கள் நிறை​வே​றும். சில இடை​யூ​று​கள் தோன்​றி​னா​லும் குறிக்​கோளை ​ நோக்​கித் தைரி​யத்​து​டன் முன்​னே​று​வீர்​கள். மேலும் விளை​யாட்​டி​லும் வெற்றி பெறு​வீர்​கள்.

பரி​கா​ரம் :​​ “மஹா​தேவ மஹா​தேவ’ என்று ஜபித்து,​ ஈஸ்​வ​ரனை தரி​சி​யுங்​கள்;​ சிறப்​பு​கள் கூடும்
———————————————————

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

கும்பம்

இந்த விரோதி ஆண்டு கார்த்​திகை மாதம் 1ஆம் தேதி ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு-​கேது பக​வான்​கள்,​ உங்​கள் விரய ​(பன்​னி​ரண்டு)​ மற்​றும் சஷ்​டம ​(ஆறு)​ ராசி​க​ளான மகர,​ கடக ராசி​களி​லி​ருந்து உங்​க​ளின் லாப ​(பதி​னொன்று)​,​ பூர்​வ​புண்ய​(ஐந்து)​ ராசி​க​ளான தனுசு,​ மிதுன ராசி​க​ளுக்கு திருக்​க​ணி​தப் பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்​சி​யா​னார்​கள். குரு பக​வான் உங்​க​ளின் விரய ​(பன்​னி​ரெண்டு)​ ராசி​யான மகர ராசியி​லி​ருந்து,​ ஜன்ம ​(ஒன்று)​ ராசி​யான கும்ப ராசிக்கு இந்த மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19.11.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்​குப் பெயர்ச்​சி​யா​கி​றார்.
லாப ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் ராகு பக​வான் கோதண்ட ராகு​வாக இருப்​ப​தால்,​ மூத்த சகோ​தர-​சகோ​த​ரி​க​ளின் உத​வி​யால் பெரிய அள​வில் லாபங்​க​ளைக் காண்​பீர்​கள். ஒன்​றுக்கு மேற்​பட்ட துறை​க​ளில் ஈடு​ப​டும் வாய்ப்பு உண்​டா​கும். வெளி​நாட்டு சம்​பந்​தத்​து​டன் தொழி​லில் அபி​வி​ருத்தி உண்​டா​கும். புதிய வீடு,​ வாக​னம் வாங்​கும் முயற்​சி​க​ளில் வெற்றி காண்​பீர்​கள். குழந்​தை​கள் வெளி​யூர்,​ வெளி​நாடு சென்று படிக்க வாய்ப்பு தேடி வரும். ஏழை எளி​ய​வர்​க​ளுக்கு உங்​க​ளால் முடிந்த அள​வுக்கு உதவி செய்து மகிழ்​வீர்​கள். தேக ஆரோக்​கி​யத்​தில் குறைவு ஏற்​ப​டாது. மன​தும்,​ உட​லும் உற்​சா​கத்​து​டன் இருக்​கும்.
பூர்​வ​புண்ய ஸ்தா​னத்​தில் சஞ்​ச​ரிக்​கும் கேது பக​வான்,​ உங்​கள் வேலை​க​ளைச் சரி​யான இலக்​கில் செல்ல வைப்​பார். பெரி​யோர்​க​ளின் அறி​வு​ரை​க​ளைக் கேட்டு நடப்​பீர்​கள். உங்​க​ளின் தனித்​தி​றமை வெளிப்​ப​டும். ​ செல்​வந்​தர்​க​ளின் சேர்க்​கை​யி​னால் வாழ்க்கை வச​தி​கள் கூடும். குடும்​பத்​தில் ஒற்​று​மை​யைக் காண்​பீர்​கள். உங்​கள் தொழி​லில் உண்மை,​ நீதி போன்​ற​வை​க​ளைக் கடை​பி​டித்து நற்​பெ​யர் வாங்​கு​வீர்​கள். அதே​நே​ரம் உங்​களை தூற்​று​ப​வர்​க​ளைக் கண்​டு​கொள்ள மாட்​டீர்​கள். இந்​தக் காலத்​தில் குரு பக​வான் ஜன்ம ராசி​யில் அமர்ந்​தி​ருப்​ப​தால் உங்​கள் சிந்​த​னை​க​ளில் தெளி​வு​கள் பிறக்​கும். பல புண்​ணிய காரி​யங்​க​ளைச் செய்​வீர்​கள். உங்​கள் கீழ் வேலை செய்​ப​வர்​கள் நன்றி பாராட்​டு​வார்​கள். உங்​கள் தோற்​றத்​தில் பொலிவு கூடும். தந்​தைக்​குப் புகழ்,​ பெயர் உண்​டா​கும். மதி​யூ​கத்​தால் அறி​ஞர்​க​ளி​டம் விவா​தித்து,​ நற்​பெ​யர் வாங்​கு​வீர்​கள். அதே​நே​ரம் பணம் சம்​பா​திக்க அலைந்து திரிய பிரி​யப்​பட மாட்​டீர்​கள். எனி​னும் இருக்​கும் இடத்​திற்கே பணம் வந்து சேரும்!

உத்​யோ​கஸ்​தர்​க​ளுக்கு வேலை​க​ளில் பளு அதி​க​ரித்​தா​லும்,​ உழைப்​புக்​கேற்ற பலன் கிடைக்​கும். சாதுர்​ய​மா​கச் செயல்​ப​டு​வீர்​கள். கோரிக்​கை​கள் ​ ஒவ்​வொன்​றாக நிறை​வே​றும். அதே​நே​ரம் உங்​கள் பொறுப்​பு​களை எவ​ரி​ட​மும் ஒப்​ப​டைக்க வேண்​டாம். மேலும் எதை​யும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்​துச் செயல்​பட வேண்​டும். மற்​ற​படி அலு​வ​லக ரீதி​யான பய​ணங்​க​ளால் நன்​மை​கள் உண்​டா​கும். மனத் தளர்ச்​சிக்கு இடம் தரா​மல் நடந்து கொண்​டால் பிரச்​சி​னை​யில்​லா​மல் தப்​பிக்​க​லாம்.

வியா​பா​ரி​கள் புதிய முயற்​சி​களை மேற்​கொண்டு,​ விற்​ப​னை​யைப் பெருக்​கு​வார்​கள். சிறு தடை​கள் ஏற்​ப​டி​னும் அவற்றை நன்கு சமா​ளித்​து​வி​டு​வீர்​கள். உங்​க​ளைத் தேடி,​ வர வேண்​டிய பணம் வந்து சேரும். மன உறு​தி​யு​டன் செயல்​பட்டு வரு​மா​னத்தை மேலும் பெருக்​கு​வீர்​கள். இந்​தக் கால​கட்​டத்​தில் பழைய கடன்​களை அடைத்​து​வி​டு​வீர்​கள். அதே​நே​ரம் நன்கு யோசித்து புதிய முத​லீ​டு​க​ளைச் செய்​ய​வும். கூட்​டா​ளி​க​ளி​ட​மும் வெளிப்​ப​டை​யா​கப் பழக வேண்​டாம். மேலும் வாக​னங்​க​ளைப் பழுது பார்க்க செலவு செய்ய நேரி​டும்.

விவ​சா​யி​க​ ளுக்கு மக​சூல் மந்​த​மாக இருக்​கும். அதே சம​யம் விவ​சா​யப் பணி​கள் சுமு​க​மாக முடி​யும். தானிய விற்​ப​னை​யின் மூலம்,​ எதிர்​பார்த்த வரு​மா​னத்​தைப் பெறு​வீர்​கள். அறு​வடை விஷ​ய​மாக ஆழ்ந்து திட்​டம் தீட்​டு​வீர்​கள். மற்​ற​படி புதிய நிலம் குத்​த​கைக்கு வந்து சேரும். நீர்ப்​பா​சன வச​தி​க​ளைப் பெருக்​கிக் கொள்​வீர்​கள்.

அர​சி​ யல்​வா​தி​க​ளைப் பொறுத்​த​வரை பொதுச் சேவை​யில் அனு​கூ​ல​மான திருப்​பங்​க​ளைக் காண்​பீர்​கள். உங்​கள் சொல்​லுக்கு நல்ல வர​வேற்பு இருக்​கும். தொண்​டர்​க​ளின் ஆத​ரவு கிடைக்​கும். உங்​கள் வளர்ச்​சிக்கு முட்​டுக் கட்டை போட்ட எதி​ரி​கள் வில​கி​வி​டு​வார்​கள். கட்சி மேலி​டத்​தின் கரி​ச​னப் பார்வை உங்​கள் மீது விழுந்து,​ புதிய பணி​க​ளைச் செய்​வீர்​கள். அதே​நே​ரம் எதை​யும் தீர ஆலோ​சித்த பின்பே செயல்​ப​டுத்​த​வும்.

கலைத்​து​றை​யி​ன​ருக்கு துறை​யில் பிரச்​சி​னை​கள் தோன்​றி​னா​லும்,​ முடிவு சாத​க​மா​கவே இருக்​கும். உங்​க​ளின் சீரிய முயற்​சி​கள் வெற்​றிக்கு வழி வகுக்​கும். விருந்து,​ கேளிக்​கை​க​ளில் கலந்து கொண்டு மகிழ்​வீர்​கள். புது ஒப்​பந்​தங்​க​ளைப் பெறு​வீர்​கள்.

அதே​ச​ம​யம் புதிய திற​மை​களை வளர்த்​துக் கொள்​ளுங்​கள். மற்​ற​படி நண்​பர்​க​ளால் நன்மை அடை​வீர்​கள். ​ பய​ணங்​கள் மூலம் பண வர​வை​யும் எதிர்​பார்க்​க​லாம்.

பெண்​ம​ணி​ கள் கண​வ​ரி​டம் ஒற்​று​மை​யோடு பழ​கு​வார்​கள். எனி​னும் இக்​கால கட்​டத்​தில் ​ கார​ண​மில்​லா​மல் மன அமைதி குறைய வாய்ப்​புள்​ளது. அத​னால் அனை​வ​ரி​ட​மும் விட்​டுக் கொடுத்து நடந்து கொள்​ள​வும். ​ பண​வ​ரவு நன்​றாக இருந்​தா​லும் தொடர்ந்து அங்​கொன்​றும் இங்​கொன்​று​மா​கச் சில்​ல​றைச் செல​வு​கள் உண்​டா​கிக் கொண்டே இருக்​கும். தேக ஆரோக்​கி​யத்​தில் பெரிய பாதிப்பு ஏற்​பட வாய்ப்​பில்லை. குழந்​தை​க​ளால் சந்​தோ​ஷம் அடை​வீர்​கள்.

மாண​வ​ம​ணி​கள் படிப்​பில் முன்​னேற்​றம் அடை​வார்​கள். சிரத்​தை​யா​கப் படித்து நல்ல மதிப்​பெண்​களை அள்​ளு​வீர்​கள். விளை​யாட்​டில் ஈடு​பாட்​டைக் குறைத்​துக் கொள்​ளுங்​கள். மனதை ஒரு நிலைப்​ப​டுத்​தும் தியா​னங்​க​ளைச் செய்து,​ உங்​கள் ஆற்​ற​லைக் கூட்​டிக் கொள்​ள​வும். தேவை​யில்​லாத பிரச்​சி​னை​க​ளில் சிக்​கிக் கொள்​ளா​மல் சாமர்த்​தி​ய​மாக நடந்து கொள்​ள​வும்.

பரி​கா​ரம் :​​ பிரதி புதன் மற்​றும் வெள்​ளிக்​கி​ழ​மை​க​ளில் பெரு​மா​ளை​யும்,​ தாயா​ரை​யும் வழி​பட்டு வாருங்​கள்;​ கஷ்​டங்​கள் நீங்​கும். முடிந்​தால் விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்​தி​ரத்​தைப் படித்து வர அல்​லது கேஸட்​டில் கேட்​டும் வர,​ சிர​மங்​கள் குறை​யும்.
——————————————————-

ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் – 2009

மீனம்

இந்த விரோதி ஆண்டு கார்த்​திகை மாதம் 1ஆம் தேதி ​(17.11.2009) செவ்​வாய்க்​கி​ழமை பகல் 11.57 மணிக்கு ராகு-​கேது பக​வான்​கள்,​ உங்​க​ளின் லாப ​(பதி​னொன்று)​ மற்​றும் பூர்​வ​புண்​ணிய ​(ஐந்து)​ ஸ்தான ராசி​க​ளான மகர,​ கடக ராசி​களி​லி​ருந்து உங்​கள் தொழில் ​(பத்து)​,​ சுக ​(நான்கு)​ ஸ்தான ராசி​க​ளுக்கு திருக்​க​ணி​தப் பஞ்​சாங்​கப்​படி பெயர்ச்​சி​யா​னார்​கள். இந்த ஆண்டு மார்​கழி மாதம் 4ஆம் தேதி ​(19.11.2009) சனிக்​கி​ழமை நள்​ளி​ரவு 12.16 மணிக்கு குரு​ப​க​வான்,​ உங்​கள் லாப ​(பதி​னொன்று)​ ஸ்தான ராசியி​லி​ருந்து விரய ​(பன்​னி​ரண்டு)​ ஸ்தான ராசிக்​குப் பெயர்ச்​சி​யா​கி​றார்.

ராகு பக​வான் தொழில் ஸ்தா​னத்​தில் அமர்ந்​தி​ருப்​ப​தால்,​ செய்​தொழி​லில் அபி​வி​ருத்​தி​க​ளைக் காண்​பீர்​கள். நல்​ல​வர்​க​ளின் நேச​மும்,​ நண்​பர்​க​ளின் உத​வி​யும் கிடைத்து,​ வெற்​றி​க​ர​மாக உங்​கள் காரி​யங்​க​ளைச் செய்து முடிப்​பீர்​கள். அர​சாங்​கத்தி​லி​ருந்து கெடு​பி​டி​கள் குறை​யும். பூர்​வீ​கச் சொத்து விஷ​யங்​க​ளில் இருந்து வந்த தடை​கள் மறைந்து,​ சுமு​க​மான பாகப் பிரி​வினை உண்​டா​கும். ​ மேலும் வெளி​யில் கொடுத்த கடன்​க​ளும் திரும்​பக் கைக்கு வந்து சேரும். உங்​க​ளுக்​குத் தொல்லை கொடுத்​த​வர்​களை உட​னுக்​கு​டன் மன்​னித்து மறந்​து​வி​டு​வீர்​கள்.

குரு ​ப​க​வா​னின் பார்வை பெற்று சுக ஸ்தா​னத்​தில் அமர்ந்​துள்ள கேது பக​வான்,​ உங்​கள் வாழ்க்​கை​யில் சுகங்​களை கூட்​டிக் கொடுப்​பார். இத​மா​கப் பேசி உங்​கள் காரி​யங்​களை எளி​தாக முடித்​து​வி​டு​வீர்​கள். பல நாட்​க​ளாக வாட்டி வந்த உடல் உபா​தை​க​ளும்,​ மன வருத்​தங்​க​ளும் வில​கி​வி​டும். விரோத மனப்​பான்​மை​யு​டன் இருக்​கும் உற​வி​னர்​க​ளி​டம் நேசக்​க​ரம் நீட்டி இணக்​க​மா​வீர்​கள். சுற்று வட்​டா​ரத்​தில் உங்​கள் செல்​வாக்கு உய​ரும். கல்​வி​யில் சிறப்​பான அபி​வி​ருத்தி உண்​டா​கும். குடும்​பத்​தா​ரு​டன் மகிழ்ச்சி தரும் பய​ணங்​களை மேற்​கொள்​வீர்​கள்.

இந் ​தக் காலத்​தில் குரு பக​வா​னின் சஞ்​சா​ரத்​தி​னால் எதிர்​பார்த்த வரு​வாய் இல்​லை​யென்​றா​லும்,​ தேவைக்​கேற்​ற​வாறு தொடர்ந்து வந்து கொண்​டி​ருக்​கும். சுப காரி​யங்​கள் சீரிய முயற்​சி​க​ளுக்​குப் பிறகே கைகூ​டும். உங்​கள் காரி​யங்​களை ஒரு முறைக்கு இரு​முறை யோசித்​துச் செய்ய வேண்​டி​யி​ருக்​கும். மேலும் எவ​ருக்​கும் கேட்​கா​மல் அறி​வுரை கூற வேண்​டாம். பெரி​யோர்​க​ளின் ஆசி​க​ளைப் பெறு​வீர்​கள். கொடுத்த வாக்கை எப்​பா​டு​பட்​டே​னும் காப்​பாற்​றி​வி​டு​வீர்​கள். வங்​கி​க​ளி​ட​மி​ருந்து கடன்​கள் கிடைக்​கும். உடல் நலத்​தைப் பேணிக் காக்க யோகா,​ ப்ரா​ணா​யா​மம் ​ போன்​ற​வை​க​ளைச் செய்​வீர்​கள். குடும்​பத்​தில் குழந்​தை​கள் படிப்பு,​ திரு​ம​ணம் போன்ற காரி​யங்​கள் நடக்​கும். ​ வழக்​கு​க​ளில் வெற்றி உண்​டா​கும். உங்​கள் சுய மரி​யா​தையை இழக்​கா​மல் காரி​ய​மாற்​று​வீர்​கள்.

உத்​யோ​கஸ்​தர்​கள் அலு​வ​ல​கத்​தில் இருந்த கெடு​பி​டி​கள் குறை​யக் காண்​பார்​கள். ​ கோரிக்​கை​கள் ஒவ்​வொன்​றாக நிறை​வே​றும். அவ்​வப்​போது வேலை​யில் கூடும் பளுவை சக ஊழி​யர்​க​ளின் துணை​யோடு குறைத்​துக் கொள்​வீர்​கள். எதிர்​பார்த்த ஊதி​யம்,​ விரும்​பிய இட​மாற்​றத்​தைப் பெறு​வீர்​கள். அதே​நே​ரம் உங்​க​ளின் செயல்​கள் எதை​யும்,​ குறுக்கு வழி​யில் செய்ய முயல வேண்​டாம்.

வியா​பா​ரி​க​ளுக்கு வரு​மா​னம் திருப்​தி​க​ர​மாக கிடைக்​கும். அதோடு மேலும் வளர்ச்சி அடை​வ​தற்​கான முயற்​சி​க​ளில் ஈடு​ப​டு​வீர்​கள். மக்​கள் விரும்​பும் பொருட்​களை வியா​பா​ரம் செய்து வரு​மா​னத்​தைப் பெருக்​கு​வீர்​கள். வியா​பா​ரத்​தில் சிறு இடை​யூ​று​கள் தோன்​றி​னா​லும்,​ பாதிப்பு எது​வும் இருக்​காது. எனி​னும்,​ நண்​பர்​களைக் கலந்​தா​லோ​சித்த பிறகே புதிய முத​லீ​டு​க​ளில் ஈடு​ப​ட​வும். மன​தில் வீண் ஆசா​பா​சங்​களை வளர்த்​துக் கொள்​வ​தைத் தவிர்க்​க​வும்.

விவ​சா​யி​கள் அதிக மக​சூ​லைக் காண்​பீர்​கள். புதிய சாத​னங்​கள் மூலம் விவ​சா​யத்​தைப் பெருக்​கு​வீர்​கள். விவ​சா​யப் பணி​க​ளைச் செய்து முடிப்​ப​தில் சிறிது தாம​தம் ஏற்​பட்​டா​லும்,​ இறு​தி​யில் வெற்​றி​யா​கவே முடி​யும். கால்​ந​டை​க​ளால் பலன் அதி​க​ரிக்​கும். புது மாற்​றுப் பயிர்​க​ளை​யும் உற்​பத்தி செய்து லாபத்​தைப் பெருக்​க​லாம். புதிய குத்​த​கை​க​ளும் உங்​களை நாடி வரும். அதே சம​யம் தேவை​யற்ற வரப்பு விவ​கா​ரங்​க​ளில் மூக்கை நுழைக்க வேண்​டாம்.

அர ​சி​யல்​வா​தி​க​ளின் பொதுச் சேவையை அனை​வ​ரும் பாராட்​டு​வார்​கள். எனி​னும் எதி​ரி​க​ளி​டம் எச்​ச​ரிக்​கை​யு​டன் இருக்​க​வும். தொண்​டர்​க​ளின் நல​னில் கூடு​தல் அக்​கறை செலுத்​த​வும். நண்​பர்​க​ளால் வாழ்க்​கை​யில் திருப்​பங்​க​ளைக் காண்​பீர்​கள். உங்​க​ளி​டம் கட்சி மேலி​டம் புதிய பொறுப்​பு​களை வழங்​கும். அவை​களை நேர்த்​தி​யா​கச் செய்து கொடுத்து பதவி உயர்​வை​யும்,​ பாராட்​டை​யும் பெறு​வீர்​கள்.

கலைத் ​து​றை​யி​னர் மன​திற்​கி​னிய புதிய ஒப்​பந்​தங்​க​ளைச் செய்​வார்​கள். ரசி​கர்​களை உற்​சா​கப்​ப​டுத்தி அவர்​க​ளின் பேரா​த​ர​வைப் பெறு​வீர்​கள். பண​வ​ர​வுக்​கும் குறைவு வராது. உங்​கள் திற​மை​யும் பளிச்​சி​டும். வெளி​யூர் சென்று கலை நிகழ்ச்​சி​க​ளில் கலந்து கொண்டு சந்​தோ​ஷம் அடை​வீர்​கள். உங்​க​ளின் திட்​டங்​கள் யாவும் வெற்றி பெறும். புதிய வாக​னங்​களை வாங்​கும் பாக்​ய​மும் கிடைக்​கும்.

பெண்​ம​ணி​ கள் ஆடை அணி​ம​ணி​களை வாங்கி மகிழ்​வார்​கள். உங்​க​ளுக்கு குடும்​பத்​தில் மதிப்பு உய​ரும். கண​வ​ரி​டம் ஒற்​றுமை அதி​க​ரிக்​கும். அதே​நே​ரம் பெற்​றோ​ருக்கு உடல்​ந​லத்​தில் சிறிது பாதிப்பு ஏற்​ப​ட​லாம். எனி​னும் மன​தில் இருப்​பதை உற​வி​னர்​கள் மற்றும் மூத்த சகோ​தர-​சகோ​த​ரி​க​ளி​ட​மும் கொட்​டி​விட வேண்​டாம். எவ​ரி​ட​மும் வீண் வாக்​கு​வா​தங்​க​ளில் ஈடு​பட வேண்​டாம். மற்​ற​படி மன​திற்​கி​னிய பய​ணங்​க​ளைச் செய்​வீர்​கள். பிள்​ளை​க​ளின் எதிர்​கா​லத்​தைப் பற்றி கவ​னம் செலுத்​து​வீர்​கள்.

மாண​வ​ம​ணி​க​ளின் கோரிக்​கை​கள் ​ நிறை​வே​றும். நீண்​ட​கா​லத் திட்​டங்​க​ளைத் தீட்​டு​வ​தற்கு இது உகந்த நேரம். படிப்​பில் நாட்​டம் அதி​க​ரிக்​கும். உள்​ள​ரங்கு விளை​யாட்​டு​க​ளில் மட்​டுமே ஈடு​ப​ட​வும். உடல் ஆரோக்​கி​யத்​தில் கவ​னம் செலுத்​த​வும். யோகா,​ ப்ரா​ணா​யா​மம்,​ சூரிய நமஸ்​கா​ரம் ஆகி​ய​வை​க​ளைச் செய்​ய​வும். மற்​ற​படி எதை​யும் சிந்​தித்​துப் பார்த்​துச் செய​லாக்​கு​வீர்​கள்.

பரி​கா​ரம் :​​ விநா​ய​க​ரை​யும்,​ நந்​தி​கேஸ்​வ​ர​ரை​யும் அரு​கம்​புல் மாலை​யிட்டு வழி​பட்டு வர,​ சிறப்​பு​கள் தேடி வரும்.’
—–கே.சி.எஸ். ஐயர்

பேரைச் சொல்லக் கூட… (ஆன்மிகம்)


பகவானுக்கு பக்தர்கள் மீது பிரியம்; பக்தர்களுக்கு பகவான் மீது பிரியம். இருவருக்குமே பகவான் நாமாக்களின் மீது மிகப் பிரியம். பக்தர்கள் எங்கே நாம சங்கீர்த்தனம் செய்கின்றனரோ, அங்கே பகவான் நாராயணன் வந்து விடுகிறானாம். எங்கே நாராயணன் இருக்கிறானோ, அங்கே ஸ்ரீ மகாலட்சுமியும் வந்துவிடுகிறாளாம்.
பகவான் நாராயணனும், மகாலட்சுமியும் இருக்கும் இடத்தில் மங்களம் பொங்கி வழியும். விஷயம் தெரிந்தவர்கள் அடிக்கடி, “நாராயணா, கிருஷ்ணா, கோவிந்தா…’ என்று முணு, முணுத்துக் கொண்டே இருப்பர்; தெரியாதவர்கள் பரிகாசம் செய்து கொண்டே போவர். நாமா சொன்னவன் நற்கதி பெறுகிறான்; பரிகாசம் செய்தவன் அதோகதியடைகிறான்!
வைகுண்டம் போக, ஸ்ரீராமன் புறப்படும்போது, ஆஞ்சநேயரைப் பார்த்து, “நீயும் வைகுண்டம் வருகிறாயா?’ என்று கேட்டாராம். அதற்கு, “அங்கே ஸ்ரீமத் ராமாயணம் பிரவசனம் உண்டா, ராம நாமா சொல்லப்படுமா?’ என்று கேட்டாராம் ஆஞ்சநேயர். அதற்கு, ராமன், “அங்கே அதெல்லாம் கிடையாது! சதா, என்னை தரிசனம் செய்து கொண்டிருக்கலாம்; அவ்வளவு தான். ராமாயணம், ராமநாமா எல்லாம் இங்கு பூலோகத்தில் தான்!’ என்றாராம்.
“அப்படியானால், எனக்கு ராம நாமா இல்லாத வைகுண்டம் வேண்டாம். நான், ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டும், ராமாயணம் கேட்டுக் கொண்டும் ஆனந்தமாக இங்கேயே இருந்து விடுகிறேன்!’ என்றாராம் ஆஞ்சநேயர். ராமனும் அப்படியே அனுக்ரகம் செய்தாராம். அதனால், இன்றும் ராமாயணம் நடக்கும் இடத்திலும், ராம நாமம் கேட்கும் இடத்திலும் சிரஞ்சீவியாக ஆஞ்சநேயர் இருந்து கொண்டிருப்பதாகச் சொல்வர்.
பகவான் நாமா வை சொல்பவர்கள் பகவானை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். பகவானுக்கு அபசாரம் செய்து விட்டால் கூட, அவர் பொறுத்துக் கொள்வார்; பக்தனுக்கு அபசாரம் செய்து விட்டால், அவர் பொறுக்க மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள பக்தியையும், அன்பையும் கண்டு அவர்களுடைய பாவங்கள் எல்லாவற்றையும் பகவான் பொறுத்துக் கொள்வதால், அவனுக்கு, “சஹிஷ்ணு’ என்று பெயர். பகவானுடைய ஆயிரம் நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் இப்படி பொருள் உண்டு.
மனிதன் செய்யும் எவ்வளவோ தவறுகளை அவன் பொறுத்துக் கொள்கிறான். அளவு மீறிப் போகும் போது தான் பொறுமையை இழக்கிறான்; தண்டிக்கிறான். சிசுபாலன் கதை தெரிந்திருக்கும். கிருஷ்ணனால் தான் அவனுக்கு வதம் என்று சிசுபாலனின் தாயாருக்குத் தெரிந்தது.
கிருஷ்ணனை, “நீ, என் மகனை கொன்று விடக் கூடாது…’ என்று வேண்டினாள்.
அதற்கு, “அவன், என்னை நூறு முறை திட்டும் வரையில் பொறுத்துக் கொள்கிறேன்; அதற்கு மேல் போனால் வதம் செய்து விடுவேன்…’ என்றார் கிருஷ்ணன். “அப்படியானால், ஒரு நாளைக்கு நூறு என்று வைத்துக் கொள்!’ என்று (இவளும், கிருஷ்ணனுக்கு ஒரு அத்தை உறவு!) வேண்டிக் கொண்டாள்; பகவானும் சரி என்றார்.
அன்று முதல் கிருஷ்ணனை 100 தடவை திட்டிவிட்டு பேசாமலிருந்து விடுவான் சிசுபாலன்; பகவானும் பொறுத்துக் கொள்வார். ராஜசூய யாகத்தின்போது, தன்னை மறந்து 100 தடவைக்கு மேல் கண்ணனைத் திட்டி விட்டான் சிசுபாலன். சக்ராயுதத்தால் உடனே அவனை வதம் செய்துவிட்டார் பகவான்.
ஆக, பகவான் ரொம்பவும் பொறுமையுள்ளவர்; கருணை உள்ளவர்; பக்த ரட்சகர். அவரது நாமாவை சொல்லி அவரை உபாசித்து வந்தால், நம் நலன்களை கவனித்துக் கொள்வார். கடைசியில், மோட்சத்தையும் அளிக்கிறார். இதைச் செய்வதில் நமக்கு என்ன சிரமம்?