Daily Archives: திசெம்பர் 16th, 2009

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக?

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்பு தான் கவனிக்க முடியும். கணிக்க முடியும். அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் முதல் தடவை சிசேரியன் செய்வதால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.
முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாரலும் கணிக்க முடியாது. எனவே முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியாதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது 10,15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

தந்தூரி சிக்கன்


தேவையானப் பொருட்கள்:
கோழி – 1 முழுதாக
பெரிய வெங்காயம் – 5
இஞ்சி, பூண்டு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தனியா தூள்- 1 தேக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி
தயிர் – அரை கப்
வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சம் பழம்
உப்பு
கிராம்பு தூள்

செய்முறை:
தந்தூரி சிக்கனை சமைக்க ஓவன் வேண்டும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.
தயிரை அடித்து அதனுடன் இந்த விழுதையும், மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகம், கிராம்பு தூள், வினிகர், எலுமிச்சாம் சாறு, வெண்ணெய், உப்பு எல்லாம் சேர்த்து கிளறி வைக்கவும்.
கோழியை முழுசாக வைத்துக் கொண்டு வயிற்றுப் பகுதியை மட்டும் கீறி சுத்தம் செய்யவும்.
இப்படியே கடையில் கேட்டாலும் தருவார்கள்.
தசைப் பகுதியில் அங்கங்கே கத்தியால் கீறிவிடவும்.
தயிரில் கலந்த மசாலாவை வயிற்றுப் பகுதியில் கொஞ்சம் வைக்கவும். மீதத்தை கோழியின் மீது நன்கு தடவி சில மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறவைத்த கோழியை ஓவனில் வேக விடவும். 20 அல்லது 40 நிமிடங்களில் தந்தூரி சிக்கன் தயார்.

ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்?

வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
1.தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.
2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம் dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.
4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே. இருப்பினும், இவற்றிற்கிடையே ஏதேனும் ஒரு வழி ஒன்றை தொடர்பாக வைத்து, அதன் அடிப்படையில் பாஸ்வேர்ட்களை மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.
5. பாஸ்வேர்ட்களில் உங்கள் பெயர், இரத்த தொடர்புடைய உறவுகளின் பெயர்கள், இவர்கள் சார்ந்த தேதிகள் ஆகியவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள். இவற்றை உங்களைச் சார்ந்தவர்கள் எளிதாகக் கண்டறியலாம்.

ஜிமெயில் காண தனி கீ போர்டு

கூகுள் ஜிமெயில் தளத்தில் பல ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது பலருக்கு சிரமமாயுள்ளது என்ற குற்றச் சாட்டு பொதுவாக எழுவது உண்டு. இந்த சிரமத்தைப் போக்க, கூகுள் ஜிமெயில் தளத்தில் பயன்படுத்த எனத் தனியே கீ போர்ட் ஒன்று உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 19.99 அமெரிக்க டாலர். விரைவில் இந்தியாவிலும் இது வரலாம்.
இது 19 கீகள் கொண்டு நம்பர் கீ பேட் போல அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கீயிலும் ஒரு ஷார்ட் கட் வழி அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மெசேஜை ஸ்டார் இட்டு அமைப்பது, சர்ச் ஒன்றைத் தொடங்குவது, மெசேஜ் த்ரெட்களுக் கிடையே செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஷார்ட் கட் கீகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை செட் செய்வதற்கு எனத் தனியே டிரைவர் புரோகிராம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஜிமெயில் இணைய தளம் சென்று அதில் ஷார்ட் கட் கீகளை இயக்கும் விருப்பத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.
ஜிமெயில் இணைய தளம் இல்லாத போது, இந்த ஷார்ட் கட் கீகளில் என்ன கீகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த கீகளாக இவை செயல்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், இதனை வடிவமைத்து, உருவாக்கித் தந்தது கூகுள் நிறுவனம் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சார்லி மேசன் என்பவராவார்.
ஏற்கனவே நீங்கள் ஜிமெயில் ஷார்ட் கட் கீகளை நன்கு பயன்படுத்துபவராக இருந்தால் இந்த கீ போர்டு தேவையில்லை. இருப்பினும் விரைவான செயல்பாடு இதன் மூலம் கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இந்த கீ போர்டு உதவியாக இருக்கும்.
ஜிமெயிலில் ஏறத்தாழ 69 கீ போர்டு ஷார்ட் கட் கீகள் இருக்கின்றன என்று எண்ணுகையில் இந்த கீ போர்டு நம் வேலையை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இது கிடைக்கும் நாளை எதிர்பார்ப்போம்.

ஜிமெயில் டிப்ஸ்….
இன்று பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இலவச இமெயில் தளமாக ஜிமெயில் உருவெடுத்துள்ளது. இந்த இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டால் தான் கூகுள் தரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். எனவே பயன்படுத்துகிறோமோ இல்லையோ பலரும் ஜிமெயில் தள அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
ஜிமெயில் தளம் சென்றவுடன் நமக்கு வந்திருக்கும் மெயில்களின் பட்டியலைப் பார்த்தால் அவை நமக்கு வந்த தேதிவாரியாக வைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். பொதுவாக நாம் இமெயில்களைப் பார்த்தவுடன், அனுப்பியவர்களின் பெயரைப் பார்த்து, முக்கிய மெயில்களை முதலில் பார்ப்போம். பின்னர், மற்ற மெயில்களை சாவகாசமாகப் படிப்போம். எனவெ மெயில் வரிசையில் சில மெயில்கள் படித்தவையாகவும், சில படிக்காதவையாகவும் இருக்கும். படிக்காதவற்றைத் தேடி எடுத்து கிளிக் செய்து படிக்கும் சிரமத்தைப் போக்க, ஜிமெயில் ஒரு வசதியினைத் தந்துள்ளது. ஜிமெயில் அஞ்சல் பட்டியல் மேலாக உள்ள தேடல் பாக்ஸில் ‘is:unread in:inbox’ எனக் கொடுத்து ‘Search Mail’ கிளிக் செய்தால் நாம் படிக்காத மின் அஞ்சல்கள் மட்டும் காட்டப்படும். அவற்றைப் படிக்கலாம்; அல்லது நீக்கலாம்.

கிராஷ் ஆன பின் போல்டர்களைக் காப்பாற்ற
விண்டோஸ் எக்ஸ்பியில் நிறைய போல்டர்களைத் திறந்து வைத்து செயல்படும்போது ஒன்று கிராஷ் ஆனாலும் அனைத்தும் மூடப்படும். இதனை நாம் தவிர்க்கலாம். அதற்கான வழியை எக்ஸ்பி வைத்துள்ளது. கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் ‘Launch folder windows in a separate process’ என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேப்சிகம் பொடேட்டோ ரைஸ்


தேவையானப் பொருட்கள்:

அரிசி – 2 கப்
உருளைக்கிழங்கு-4
குடைமிளகாய்-1
தக்காளி – 4
பெரிய வெங்காயம் – 1
பட்டாணி-1/2கப்
இஞ்சி பூண்டு விழுது -1தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
பட்டை – சிறிது
ஏலக்காய் – சிறிது
சீரகம்-2தேக்கரண்டி
கிராம்பு – சிறிது
கொத்தமல்லி – கொஞ்சம்
புதினா-சிறிது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு-4 தேக்கரண்டி
தேங்காய் பால்-2கப்
மிளகாய் பொடி – 1/2 தேக்கரண்டி
தனியா பொடி – 1/2 தேக்கரண்டி
நெய்-2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை கழுகிக் கொள்ளவும்
தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்

பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும்தக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும்

அத்துடன் உகிழங்கு போட்டு கிளரவும்.அத்துடன் பட்டாணி போட்டு வதக்கவும்

தேங்காய் பால் ஊற்றி நன்கு கிளரவும்.
பிறகு மஞ்சப்பொடி,மிளகாய் பொடி, தனியா பொடி, மற்றும் உப்பு சேர்க்கவும்

அதில் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

அதில் சீரகம் தூவவும்.

அரிசியை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும்

பிறகு புதினா,கொத்தமல்லி போடவும்

பாதி வேகும் போதே எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும்

வெந்தவுடன் சூடாக தயிர் சட்னியுடன் பரிமாறவும்.

தனுராசனம்

செய்முறை:

வரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை(கரண்டைக்கால்) ஒறுகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப் கொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக மெதுவாகச் சுருக்கவும்.

பலன்கள்:

முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியம். கபம் வெளிப்படும். தொந்தி கரையும். மார்பகம் விரியும். இளமைத் துடிப்பு உண்டாகும்.

அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும். மூலபவுந்திரம், நீர்ரோகம், நீரிழிவு நோய் நீங்கும், பாங்கிரியாஸ் சிறுநீர்க் கருவிகள், ஆண்களின் டெஸ்டீஸ், பெண்களின் ஓவரி. கர்ப்பப்பை நல்ல இரத்த ஓட்டம் ஏற்பட்டு பலம் பெறும். இளமைப் பொலிவு உண்டாகும், பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.