Daily Archives: திசெம்பர் 17th, 2009

குழந்தைக்குக் காய்ச்சலா? பதட்டம் வேண்டாம்.

குழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம்? அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.

குழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே இருக்க விரும்பினால் அதை மெல்லிய பெட்ஷீட்டினால் போர்த்திப் படுக்கச் செய்யவும். அழுத்தமான துணியால் போர்த்தினால் அவற்றை குழந்தை வெப்பமாக உணரலாம். திடீரென ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என மருத்துவரிடம் முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுங்கள். உடனடியாகக் காய்ச்சல் இறங்குமென எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது அதற்கு ஒரு மணி நேரமாவது பிடிக்கும்.

ரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் குளிர்ச்சியாகவோ இல்லாதபடி சிறிது சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய துணியை நனைத்துப் பிழிந்து, குழந்தையின் முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் ஆகிய இடங்களைத் துடைத்து விடுங்கள். அதன் உடல் தானாக காயட்டும். ஒரு வேளை குழந்தைக்கு நடுக்கம் ஏற்படுகிற மாதிரித் தெரிந்தால் தண்ணீரால் துடைப்பதை நிறுத்திவிடவும். கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட சுத்தமான
தண்ணீரையோ, அல்லது நீர்த்த பழச்சாற்றையோ குழந்தைக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தையானால் ஒரு மணி நேரத்திற்கொருமுறை பாலூட்டலாம்.

ஃபேன் காற்றுக்கு நேராகக் குழந்தையைப் படுக்க வைக்காதீர்கள். காற்று போதிய அளவு குழந்தையின் மேல்படும் திசையில் வசதியாகப் படுக்கச் செய்யுங்கள். இதன் பிறகும் குழந்தைக்குக் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவரை நாடலாம்.

இரால் எண்ணெய் குழம்பு

தேவையானப் பொருட்கள்:
இரால் – 1/4 ,
மிளகாய் பொடி – 2 தே.கரண்டி,
மல்லி பொடி – 3 தே.கரண்டி,
தேங்காய் – 1/2 மூடி,
சோம்பு – 2 தே.கரண்டி,
தாளிக்கும் வடகம் – பாதி உருண்டை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 6 தே.கரண்டி.

செய்முறை:
இராலை கழுவி சுத்தப்படுத்தவும்.
தேங்காய், சோம்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் 6 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.
வடகம் பொரிந்ததும் இராலை போடவும்.
மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும்.
அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.
வாணலியை மூடி வைத்து வேகவிடவும்.
இரால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

கூகுள் மியூசிக் சர்ச்

ஆன்லைனில் பாடல்களுக்கான ஸ்டோர்களைத் தொடங்கி நடத்துவதில் இப்போது கூகுள் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இதற்கென ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. லாலா டாட் காம் ( Lala.com) மற்றும் மை ஸ்பேஸ் தொடர்புடைய ஐ லைக் ( iLike) நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடல்களைக் கேட்டு வாங்குவதற்கான வழிகளை இவை மிக எளிதாக மாற்றி அமைத்துள்ளன. கூகுள் வழங்கும் இந்த மியூசிக் சேவை ஒன்பாக்ஸ் (One Box) என அழைக்கப்படுகிறது. இந்த தேடல் மூலம் முதலில் உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பாடல் நீங்கள் தேடும் பாடல் தானா என்பதனை, அதனை இயக்கிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். மற்ற தளங்கள் இது போன்ற சோதனையாக பாடலைக் கேட்பதை 30 வினாடிகள் என வரையறை செய்துள்ள நிலையில், கூகுள் அதிக நேரம் தருவது தன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அனைத்து வழிகளிலும் தன்னிடத்தே வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக கூகுள் மேற்கொள்கிறது என்று கூறலாம்.

திருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்

கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், திருட்டு நகல் சாப்ட்வேர் வரத்தும் பெருகி வருகிறது. இதனைத் தடுக்கும் வழிகளில் மைக்ரோசாப்ட் இந்தியா களத்தில் இறங்குகிறது. ஏற்கனவே தன் விண்டோஸ் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளைத் தானாகவே சோதனை செய்து, அவை ஒரிஜினல் இல்லை என்றால் உடனே ஒரிஜினல் சாப்ட்வேர் தொகுப்புகளை வாங்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தது. அத்தகைய சாப்ட்வேர் தொகுப்பு களுக்கு உதவியை நிறுத்தியது. தற்போது வாடிக்கையாளர்களையும் இணைத்தே இந்த தடுப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சென்ற டிசம்பர் 3 அன்று நுகர்வோர் விழிப்புணர்வு தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகையில், இந்த நடவடிக்கை யினை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.
தங்களை அறியாமலேயே, தாங்கள் செலுத்திய பணத்திற்கு முறையான லைசன்ஸ் இன்றி சாப்ட்வேர் தொகுப்புகளைக் கம்ப்யூட்டர்களுடன் பலர் பெறுகின்றனர். இதனால் மால்வேர் எனப்படும் தீங்கிழைக் கும் சாப்ட்வேர்கள் இந்த கம்ப்யூட்டர்களில் பரவி இயங்கத் தொடங்குகின்றன. வாடிக்கையாளர்கள் இதனால் தொல்லைக்கு உள்ளாகின்றனர். தீங்கிழைக்கும் இந்த புரோகிராம்களால், அவர்களின் பெர்சனல் தகவல்கள் திருடப்பட்டுப் பிறரால் பயன்படுத்தப்படும் நிலை உருவாகிறது. எனவே இது போன்ற திருட்டு நகல் சாப்ட்வேர்கள் தங்கள் கம்ப்யூட்டருடன் உள்ளது எனத் தெரியவந்தால், அந்த வாடிக்கையாளர்கள் www.microsoft.com/piracy என்ற இணைய தளத்தில் தங்கள் புகார்களைப் பதியலாம். அல்லது piracy@microsoft.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதனை எப்படித் தெரிவிப்பது, எந்த விபரங்களைத் தர வேண்டும், போலி திருட்டு நகல் சாப்ட்வேர் எப்படி இருக்கும், என்பது போன்ற தகவல்களை அறிய விரும்பினால் http://www.micq�osob�t.com/howtotell என்ற முகவரியில் அவற்றைப் பெறலாம்.
சரி, நல்ல, உண்மையான சாப்ட்வேர் தொகுப்புகளை எங்கு வாங்குவது? என்ற கேள்வி எழுகிறதா? http://www.buyoriginalms.com என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம்.
மும்பை, புதுடில்லி மற்றும் லக்னோ நகரங்களில், காவல்துறை உதவியுடன், திருட்டு நகல் சாப்ட்வேர் சிடிக்களைப் பெரிய அளவில் கைப்பற்றி, விற்பனை செய்தவர்களையும், சிடிக்களைத் தயாரித்தவர்களையும் நீதிமன்றம் மூலமாக மைக்ரோசாப்ட் தண்டனை வாங்கித் தந்துள்ளது. இந்த திட்டத்தினை மைக்ரோசாப்ட் அறிவித்த பின்னர், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகார்கள் மைக்ரோசாப்ட் நிறுவன தளத்தில் பதிவானதாக இந்த பிரிவின் துணைத்தலைவர் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில் போலி மென்பொருட்களால் இந்திய அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போலி சாப்ட்வேர் தயாரிப்பினைத் தடுத்தால், கூடுதலாக 44 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 130 கோடி டாலர் அளவிற்கு உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அரசும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து வருகிறது.

வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு


தேவையானப் பொருட்கள்:
வாழைக்காய் – 1
பச்சைப்பயறு – 1 கப்
பச்சை மிளகாய் – 4 அல்லது 6
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
செய்முறை:
பச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.

மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு -சுவாமி விவேகானந்தர்


துன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.

அம்மா! வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும் முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று!

அன்னையே! மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனிலும் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.

ஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான ‘அன்னை’ ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.

உன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா.

சர்வாங்காசனம்


செய்முறை:

விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் நாடியில் கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு தாங்கி நிற்கும்படி எல் உருவத்தில் நிற்க வேண்டும். சாதாரண மூச்சு அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும்.2 நிமிடத்திற்கு ஒரு முறையாக, 3 முதல் 4 முறை செய்யலாம்.

பலன்கள்:

உடலில் உள்ள அத்தனை அங்கங்களுக்கும் பலன் கிடைப்பதால் சர்வாங்காசனம் எனப் பெயரிடப்பட்டது. முதுமையைப் போக்கும். தைராய்டு கிளாண்டு நன்கு வேலை செய்யும். கண் பார்வை மங்கல், நாடி மண்டல பலக்குறைவு நீங்கும். பெண்கள் கர்ப்பப்பை சோய் வராமல் தடுக்கும் . சுக்கிலம் பலப்படும்.

கெட்ட கனவுகள் நீக்கப்பட்டு நன்றாகத் தூக்கம் வரும். தைராய்டு, பாராதைராய்டு முதலிய இடங்களில் தேங்கி நிற்கும் இரத்தத்தை நாடி நரம்புகள் மூலம் மேலே ஏற்றி மறுபடியும் கீழே இறக்கும் சக்தி இவ்வாசனத்திற்கு உண்டு. இதனால் இரத்த நாளங்களுக்கு சுத்த இரத்தம் கிடைத்து சுகவாழ்வு பெறும்.