Daily Archives: திசெம்பர் 18th, 2009

சரித்திரத்தில் இடம் பிடிக்கும் `சர்’ பட்டம்

“மக்களின் பிணிகளைத் தீர்த்து, துயரைத் துடைத்து, பாதுகாப்பு அளிக்கின்ற உன்னத பணிக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு `நைட்’ (NIGHT) பதவிம், `சர்’ (SAR) பட்டமும் தந்து கவுரவிக்கபடுகிறது.

`நைட்’ என்ற சொல் பழைய ஆங்கில மொழியிலிருந்து மருவி வந்ததாகும். `குதிரை மீது அமர்ந்து மன்னரையும், மக்களையும், நாட்டையும் காக்கும் வீரன்’ என்பது இச்சொல்லின் பொருள்.

கி.பி. 7-ம் நுற்றாண்டில் ஜெர்மனிக்கும், முஸ்லிம் சமுக அரசர்களுக்கும் இடையே நடைபெற்ற அரேபிய படையெடுப்பில், ஜெர்மனி வெற்றி பெற்றது. ஜெர்மனியிடம் பெரிய வாள்களைம், உலோகத் தடுப்புகளைம் ஏந்தி குதிரையில் அமர்ந்து போர் புரியும் `ரான்க்’ என்ற குதிரை வீரர்கள் இருந்ததால் வெற்றி எளிதாயிற்று. இவ்வாறு நாட்டைக் காத்த குதிரை வீரர்கள் மக்களிடம் செல்வாக்கு பெறத் தொடங்கினர்.

வாளால் அங்கீகாரம் வழங்கியபோது…

இதனிடையே இயேசு பயன்படுத்திய புனித பொருட்களைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் எருசலேமுக்குச் சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் புரட்சிக்காரர்களால் பெரிதும் துன்பத்தை அனுபவித்தனர். மேலும் நீண்ட பயணத்தால் பலர் நோய்வாய்பட்டு இறந்தனர். இதனால் அவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு குதிரை வீரர்களிடம் ஒப்படைக்கபட்டது.

10-ம் நுற்றாடில் வணிகர் ஒருவரின் முயற்சியால் புனிதபயணம் மேற்கொள்பவர்களுக்கு தொண்டு செய்வதற்காக `செயின்ட் ஜான் ஆ ஜெருசலேம்’ என்ற பெயரில் விடுதி ஆரம்பிக்கபட்டது. இந்த விடுதிபணியில் சேர்ந்து, பிறருக்குத் தொண்டு செய்பவர்களுக்கு `நைட்’ என்ற பெயர் சூட்டி, அவர்களின் பெயருக்கு முன்னால் `சர்’ என்ற சிறப்பு பட்டத்தைம் அளித்தனர்.

1888-ம் ஆண்டு இதன் பெயர் `கிரான்ட் பிரையாரிட்டி ரீல்ம் ஆ மோஸ்ட் வல்னரபிள் ஆர்டர் ஆ செயின் ஜான் ஆ ஜெருசலேம்’ என்று மாற்றபட்டது. அதன் தலைவராக இங்கிலாந்து அரசர் நியமிக்கபட்டார். பிரபுக்களுக்கும், அரச செல்வாக்கு பெற்றவர்களுக்குமே இந்த பட்டம் தரபட்டதால், மீண்டும் `புனித ஜான் ஆ ஜெருசலேம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கபட்டது. அரசியல் சாராத பொதுவாழ்க்கையில் மக்களின் பிணிகளைத் தீர்க்கின்ற, பிறரின் துயரைத் துடைக்கின்ற உன்னதமான பணியில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து `நைட்’ பதவியும், `சர்’ பட்டமும் தருவதை இந்த அமைப்பு செய்து வருகிறது.

இந்த `சர்’ பட்டமளிப்பு விழா மிகப்பெரிய வைபவமாகக் கொண்டாடபடுகிறது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர்கள் கலந்து கொள்கின்றனர். யாருக்கு `சர்’ பட்டம் தரபோகிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது. செயின்ட் ஜான் ஆ ஜெருசலேம் அமைப்பைச் சேர்ந்த கமான்டர், கார்டினல்ஸ் அடங்கிய குழு சிலரைத் தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்வர். அதிலிருந்து `சர்’ பட்டம் பெறத் தகுதியானவரைத் தேர்வு செய்வர்.

அப்படித் தேர்வு செய்த நிமிடத்திலிருந்து அந்த நபர் பிறர் பார்வையில் படாதபடி தனிமைபடுத்தபடுவார். அவருடைய குடும்பத்தினர்கள் கூட இரண்டு நாட்களுக்கு அவரை பார்க்க முடியாது. அந்த இரண்டு நாட்களும் பட்டம் பெறும்போது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிப்பார்கள்.

சான்றிதழ் வழங்கியபோது..

இரண்டாம் நாள் மாலை பெரிய அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெறும். பட்டம் பெறுபவர்கள் அணியும் அங்கியை அணிந்து சுமார் ஆயிரம் பேர் அரங்கில் இருபர். மனதை மயக்கும் சூழலில், கண்களை உறுத்தாத ஒளியில், அரங்கத்தின் நடுவே ஒரு மேடை அமைக்கபட்டிருக்கும். அதில் கமாண்டர் தன் கார்டினல்ஸ்களுடன் அமர்ந்திருப்பார். கமாண்டர் வெள்ளை அங்கியும், கார்டினல்ஸ் சிகப்பு அங்கிம் அணிந்திருப்பர். அங்கியின் முதுகு பகுதியிலும், கையிலும் சிலுவை போன்ற அரச முத்திரை இருக்கும்.

`சர்’ பட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முன்னும் பின்னும் கார்டினல்ஸ் புடைசூழ, அரங்கினுள் அழைத்து வரபடுவர். அங்குள்ள அறை ஒன்றில் அவர்களுக்கு அங்கி அணிவிக்கபடும். பின்னர் கமாண்டர் ஒவ்வொருவரின் பெயரையும், அவர் செய்த சேவையையும் சொல்லி அழைத்து வரச் சொல்வார். முன்புறம் ஒரு கார்டினலும், பின்புறம் ஒரு கார்டினலும் தொடர, நடுவில் `சர்’ பட்டம் பெறபோகும்அறிஞர் வருவார். அப்போது அவருடைய நாட்டின் தேசியகீதம் ஒலிக்கும்.

கமாண்டர் கார்டினலை பார்த்து, `யாரை அழைத்து வந்திருக்கிறீர்கள்? அவருக்கு நம் அமைப்பை பற்றித் தெரியுமா?’ என கேட்பார். தான் யாரை அழைத்து வந்திருக்கிறோம் என்பதை சத்தமாகக் கார்டினல் கூறுவார். பின்னர் பட்டம் பெறுபவர் மேடைக்கு அழைத்துச் செல்லபடுவார். அவரிடம், `நைட் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடு பற்றித் தெரியுமா?’ என்று கேட்பார். அவர் `ஆம்’ என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். பின் அவரிடம் உறுதிமொழி பத்திரம் தரப்படும். அதை அரங்கில் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி சத்தமாக படிக்க வேண்டும்.

மேடையின் நடுவே வெல்வெட் துணியால் போர்த்தபட்ட மேஜையில் அரசரின் வாள், அரச முத்திரை, வாயகன்ற வெள்ளிபாத்திரம் ஆகியவை இருக்கும். `நம்பிக்கை, நல்லெண்ணம், நாணயபேழை’ என்பது அந்த பாத்திரத்தின் பெயராகும். அதன் இரு பக்கமும் பெரிய மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். `சர்’ பட்டம் பெறபோகிறவர் உறுதிமொழியை படித்த பின், அதில் கையெழுத்திட வேண்டும். கமாண்டர் அரசரின் வாளை எடுத்து உறுதிமொழிக் காகிதத்தில் துளை போட்டு, தீயில் காட்டுவார். அப்போது, `நீங்கள் தந்த உறுதிமொழிக்கு எந்தவிதத் தடயமும் இல்லை. இதற்கான சாட்சி, உங்கள் மனசாட்சி மட்டுமே’ என்று கூறுவார்.

அதன் பின்னர் மேடையில் உள்ள திண்டு போன்ற அமைப்பில் பட்டம் பெறுபவர் தன்னுடைய இடது முட்டியை மடித்து மண்டியிட வேண்டும். `எனக்குத் தரபட்ட அதிகாரத்தின் பேரில் இன்று முதல் நீங்கள் புதிய `சர்’ ஆகிறீர்கள்’ என்று கூறியபடி அரசரின் வாளை எடுத்து இரண்டு தோள்களிலும், தலையிலும் வைத்து அங்கீகாரம் அளிப்பார் கமாண்டர். பின்னர் அவருக்கு `ஹூட்’ என்ற சதுரத்தொப்பி அணிவிக்கபடும். அது முடிந்ததும் கமாண்டர் பட்டம் பெற்றவரை பார்த்து, `எழுந்திருங்கள் புதிய நைட் பட்டம் பெற்றவரே’ என்று கூறுவார். அன்றுமுதல் அந்த நபர் சிறபு மிக்க `நைட்’ பட்டம் பெற்ற `சர்’ ஆகிறார். இந்தச் சடங்கானது ஒவ்வொருவருக்கும் சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். இந்த `சர்’ பட்ட சடங்கு கோலாலம்பூரில் நடந்தது.

இந்தத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டவர், புதிதாக `சர்’ பட்டம் பெற்றிருக்கும் டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன். இவர் இதுவரை 15 ஆயிரம் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி சேவையாற்றி இருப்பதே, `சர்’ பட்டம் கிடைத்ததற்கான காரணமாகும். இவரது மனைவி டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

இலவச மருத்துவ சேவை பற்றி டாக்டர் `சர்’ ஆர். ராமகிருஷ்ணன் சொல்கிறார்…

குடும்பத்தினருடன்…

“பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று சின்ன வயதிலேயே சொல்லிச் சொல்லி என் பெற்றோர் என்னை வளர்த்தனர். அதற்காகவே என்னை மருத்துவம் படிக்க வைத்தனர். மருத்துவம் படித்த பிறகு முதன்முதலில் ஜெயின் மருத்துவ சேவையில் என்னை இணைத்துக் கொடேன். பின்னர் ஆர்ய சமாஜம், ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றின் மருத்துவ சேவைகளில் பங்கு கொண்டேன். மிகவும் பின்தங்கிய வகுப்பினர்கள் வசித்து வந்த மேற்கு சைதாபேட்டையில் `அன்னை சாரதா எளியோர் மருத்துவமனை’ என்று பெயரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினேன்.

1980-ல் ஆரம்பிக்கபட்ட அந்த மருத்துவமனையில் பணம் எதுவும் வாங்காமல், 10 ஆண்டுகள் இலவசமாகவே மருத்துவம் செய்து வந்தேன். அங்கு ஒரு உண்டியல் வைக்கபட்டிருக்கும். சிகிச்சைக்கு வருபவர்கள் தங்களால் முடிந்ததை அதில் போட்டுவிட்டுச் செல்வார்கள். 1990 முதல் இரண்டு ருபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவம் செய்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது ஒரு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து சிகிச்சை அளிப்பேன்” என்கிற டாக்டர் ராமகிருஷ்ணன், மருத்துவ முகாம் ஒன்றில் டாக்டர் அருணாவை பார்த்திருக்கிறார். பார்த்ததும் அவரை பிடித்து போய்விட இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. டாக்டர் அருணா ராமகிருஷ்ணனும் பொதுச்சேவையில் ஆர்வம் கொண்டவர் என்பதால் திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவி இருவரும் இணைந்து மருத்துவ சேவை செய்து வருகிறார்கள்.

“நாங்கள் திருமணம் முடிந்ததும் முதலில் சென்றது மருத்துவ முகாமுக்குத்தான். 11/2 ஆண்டுகள் எளியோருக்கு சேவை செய்த பின்பே `ஹனிமு ன்’ புறபட்டுச் சென்றோம்” என்று பெருமை பொங்கக் கூறியவர், “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏதாவது ஒரு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். சில நாட்களில் இரண்டு, முன்று மருத்துவ முகாம்கள் கூட இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்பது மற்றவர்களுக்குத்தான் `ஹாலிடே’. எங்களை பொறுத்த வரையில் அது `சேவை தினம்”’ என்று கூறிச் சிரிக்கிறார், டாக்டர் ராமகிருஷ்ணன்.

இவர்கள் சேவை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதற்காக மகள் பவித்ராவையும் டாக்டருக்கு படிக்க வைக்கிறார்கள். பவித்ராவுக்கும் சிறுவயதில் இருந்தே சேவை ஆர்வம் அதிகம்.

டாக்டர் ராமகிருஷ்ணனின் முத்த சகோதரர் தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார். மரணமடையும்போதும் `ஜெய்ஹிந்த்’ என்று கூறி விடைபெற்றவர். `சர்’ பட்டம் தனது குடும்பத்திற்கே சொந்தம் என்கிறார் இந்த சேவை மனிதர்!

`பேஷன்’ மொபைல்


புதுமை விரும்பிகளுக்கான மொபைல் இது. கடிகாரம், பிரேஸ்லெட் செல்போன்கள் போல வளையல் மொபைல் இது. முன்று வளையங்களாக இருக்கும் மொபைலில் ஒவ்வொரு வளையமும் அனுப்பி, ஏற்பி, டயல் என ஒவ்வொரு பணியைச் செய்யும். வளையத்தின் உட்புறம் எளிதில் டயல் செய்யும் வகையில் எண்கள் அமைக்கப்பட்டிருப்பதால் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஸ்டைலை விரும்பும் வசதி படைத்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது இந்த மொபைல்.

சுற்றினாலே சார்ஜ் ஆகும்!-செல்போன்


“செல் பாதி, சொல் மீதி”, “செல் இல்லாத மனிதன் செல்வாக்கு இல்லாதவன்”. இது செல்போனைப் பற்றிய புதுமொழிகள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை டெலிபோன்கள் வைத்திருப்பவர்கள் வசதியானவர்கள். இன்றோ செல் செல்லாத இடமே இல்லை. அந்த அளவு எல்லா இடங்களையும் செல்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

இதனால் செல்போன் நிறுவனங்களுக்குள் போட்டாபோட்டி. நாள்தோறும் விதவிதமான செல்போன்கள் நவீன வசதிகளுடன் அறிமுகமாகின்றன. அவற்றில் சில புதுமையான செல்போன்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

சுற்றினாலே சார்ஜ் ஆகும்!

செல்போன்களில் வசதிக் குறைவாகத் தோன்றுவது பேட்டரியின் சார்ஜ் பிரச்சினைதான். மனம்விரும்பிய வசதிகள் நிறைய இருப்பதால் அதிகமான நேரம் செல்போனில் செலவழிக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி சார்ஜ் தீர்ந்துபோகும். பிறகு சார்ஜ் போட வேண்டும். சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆப் ஆகிப்போனால் அந்த நேரத்தில் வரும் முக்கியமான அழைப்புகளையும் ஏற்க முடியாமல் சிரமப்பட நேரிடும்.

இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவும், எளிமையான முறையில் சார்ஜ் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதுமை மொபைல். இதில் சார்ஜ் தீர்ந்துபோனால் அதில் உள்ள துளையில் விரலை நுழைத்து செல்போனை சில சுற்றுகள் சுற்றினால் போதும் தற்காலிகமாக பேசும் அளவுக்கு சார்ஜ் ஆகும். உங்கள் வேகத்துக்கு ஏற்றபடி கூடுதல் அளவு சார்ஜும் செய்து கொள்ளலாம். பிறகு வழக்கமான முறையிலும் சார்ஜ் செய்ய முடியும். விரலை பயன்படுத்துவதை விரும்பாதவர்களுக்கு அதற்கென தனி குச்சி ஒன்று தரப்படும். அதில்வைத்து செல்போனை சுழற்றினாலும் சார்ஜ் ஆகும்.

வேகமாகப் பரவும் அதிநவீன மொபைல் இது. எண்களை அழுத்தாமலே, தொடுவதை உணர்ந்தே செயல்படுவதால் ஆறாம் அறிவுடைய மொபைல் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிக்ஸ்த் சென்ஸ் வசதியை நாம் பயன்படுத்த விரும்பினால் நமது உள்ளங்கையில் எண்கள் (படத்தில் உள்ளபடி) ஒளிவடிவில் விழும்படி செய்து கொள்ளலாம். பிறகு அந்த எண்களை தொடுவதன் முலமே செல்போனை இயக்க முடியும். இந்த மாதிரி மொபைல்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

கொத்து கோழி

தேவையானப் பொருட்கள்:
கோழி – அரைக் கிலோ வெங்காயம் – ஒன்று தக்காளி – பாதி இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி தனியா தூள் – ஒரு மேசைக்கரண்டி மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி பெருஞ்சீரக பொடி – ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் கோழித் துண்டுகளை போட்டு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் ப்ரஷர் அடங்கியதும் திறந்து கோழித்துண்டுகளை எடுத்து விட்டு தண்ணீரை தனியே எடுத்து விடவும் (இதில் சூப் செய்யலாம்). மீண்டும் கோழித் துண்டுகளை குக்கரில் போட்டு மிளகாய் தூள், தனியாதூள், பெருஞ்சீரக தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் கொதிக்க விடவும். கோழி முழுமையாக வெந்து தண்ணீர் அரை பாகம் வற்றியதும் கோழித் துண்டுகளை தனியே எடுத்து ஆற வைக்கவும். குக்கரின் உள் இருக்கும் கிரேவியை தனியே எடுத்து வைக்கவும். கோழித்துண்டுகளிலிருந்து எலும்பை நீக்கி விட்டு சதைபற்றுள்ள பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம், தக்காளியுடன் உதிர்த்த கோழியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்திருக்கும் கிரேவியை சேர்த்து கிளறவும்.(கிரேவி அவரவர் ருசிக்கேற்ப முழுவதுமாகவோ அல்லது பாதியளவோ சேர்க்கவும்). கொத்து பரோட்டா போல் உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும். கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்(விருப்பப்பட்டால் மட்டும். ஆனால் சேர்த்தால் சுவையும் மணமும் தனி) சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். சுவையான கொத்துக் கோழி தயார். மிகவும் ட்ரையாக செய்யாமல் சற்று ஈரப்பதத்துடனேயே (கிரேவி போல் இருக்கக் கூடாது) இறக்கி சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடலாம். ட்ரையாக செய்தால் ரசம் சாதத்தோடு மிக சுவையாக இருக்கும்.

விண்வெளியில் புதுவரவுகள்!


அண்டவெளி பல மர்மங்களை உள்ளடக்கியது. அதில் மனிதன் அறிந்து கொண்ட எல்லை மிகமிகக் குறைவு. நாம் அறிந்த சூரிய குடும்பத்தில்கூட நம்மால் செல்லமுடியாத பகுதி பரந்துவிரிந்து கிடக்கின்றன.

விண்வெளியில் கோள்கள் மட்டுமல்லாது லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் பல ஒளிராதவை. இவை சாதாரண தொலைநோக்கியில் தென்படாது. இப்படி புலப்படாத சில நட்சத்திரக் கூட்டம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டுபிடித்தது ஒரு நவீன தொலைநோக்கி. இந்த அதிவிரைவு தொலைநோக்கியும், அது கண்டுபிடித்த நட்சத்திரக் கூட்டமும்தான் விண்வெளியின் புதிய வரவுகள்.

நவீன தொழில்ட்பமான இன்பிராரெட் வசதியுடன் கூடிய ஒரு புதிய தொலைநோக்கியை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர். இது வைஸ் (wise) எனப்படுகிறது. இது Widefield Infrared Survey Explorer என்பதன் சுருக்கம் ஆகும்.

இந்த தொலைநோக்கியானது பல ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புலப்படாத பொருட்களையும் கதிர்வீச்சு முறையில் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் இதுவரை கண்ணுக்கு புலப்படாத நட்சத்திரம், எரிகல் கூட்டத்தை கண்டுபிடித்து உள்ளது. இது நமது சூரியகுடும்பத்தின் பக்கத்து நட்சத்திரக்கூட்டமான பிராக்சிமா செஞ்சுரி நட்சத்திரகுடும்பத்துக்கு முன்பாகவே அமைந்திருக்கின்றன. இந்த எரிகல், நட்சத்திரக்கூட்டத்துக்கு பழுப்பு குள்ளர்கள் (பிரவுன் ட்வார்ப்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவை குளிர்ந்த நிலையில் இருக்கும் எரிகற்களாகும்.

இந்த புதிய தொலைநோக்கி மிகமிக வேகமாக செயல்படக்கூடியது. எனவே இதுபோன்ற புலப்படாத எரிகற்களால் பூமிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தையும் முன்கூட்டியே கண்டுபிடித்து அறிவித்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பற்களையும் கவனிக்கலாமே…


முக அழகை பேணிக்காப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும்.

மேலும், சுத்தமான பேச்சும் வராது. அதனால்தான் `பல் போனால் சொல் போச்சு’ என்று சொல்வார்கள்.

சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும்.

அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். ஒரு குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு பிறகு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த தற்காலிக பற்களை `பால் பற்கள்’ என்பார்கள். 21/2 முதல் 3 வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும்.

இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் எனப்படும் பல்சொத்தையை ஏற்படுத்தி விடுகின்றன.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து விடுவது நல்லது.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே, அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் இடைறாக இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விடுவது நல்லது. அப்படி நீக்காவிட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடைறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடைறு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடைறாக இருப்பதால் பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல் செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம்.

ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே, பல் ஈறுகளுக்கு இடையிலும் சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் ஏற்படும் அவதியை தவிர்க்கலாம்.

குழ‌ந்தை‌க்கு பாலூ‌ட்டியது‌ம் செ‌ய்ய வே‌ண்டியது

குழ‌ந்தைக‌ள் பா‌ல் குடி‌க்கு‌ம் போது அது தா‌யி‌ன் மா‌ர்‌பி‌ல் இரு‌ந்து தா‌ய்பாலை‌க் குடி‌த்தாலு‌ம் ச‌ரி, பா‌ல் பு‌ட்டி‌யி‌ல் குடி‌த்தாலு‌ம் ச‌ரி, பாலோடு சே‌ர்‌த்து கா‌ற்றையு‌ம் சே‌ர்‌‌த்து ‌‌‌முழ‌ங்‌கி‌விடு‌ம்.

எனவே ஒ‌வ்வொரு முறையு‌ம் பா‌ல் கொடு‌த்த ‌பிறகு குழ‌ந்தையை தோ‌ளி‌ல் போ‌ட்டு முது‌கி‌ன் ‌மீது லேசாக‌த் த‌ட்டி‌வி‌ட்டா‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. அ‌ப்போது அவ‌ர்களு‌க்கு ஏ‌ப்ப‌ம் போ‌ன்று கா‌ற்று வெ‌ளியே வரு‌ம்.

தோ‌ளி‌ல் போ‌ட்டு த‌‌ட்டுவதை‌ப் போ‌ன்றே, ‌சில‌ர் மடி‌யி‌ல் குழ‌ந்தையை ‌நி‌மி‌ர்‌த்‌தி உ‌ட்கார வை‌த்து‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். இத‌ன் மூலமாகவு‌ம் வ‌யி‌ற்று‌க்குள‌் செ‌ன்ற கா‌ற்று எ‌‌ளிதாக வெ‌ளியே‌றி‌விடு‌ம்.

அத‌ன்‌பிறகு குழ‌ந்தையை ‌கீழே படு‌க்க வை‌க்கலா‌ம். இதனா‌ல் பா‌ல் குடி‌த்தது‌ம் குழ‌ந்தை வா‌ந்‌தி எடு‌ப்பது போ‌ன்ற அசெளக‌ரிய‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்த ‌விஷய‌த்தை எ‌ப்போது‌ம் தவறாம‌ல் செ‌ய்ய வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

கண்ட்ரோல் பேனல் உங்கள் கைகளில்

நீங்கள் அடிக்கடி கண்ட்ரோல் பேனல் திறந்து பயன்படுத்துபவரா? ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் கிளிக் செய்து பல பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் பின் கண்ட்ரோல் பேனல் செல்கிறீர்களா? நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால் இந்த மவுஸ் அலைச்சல் தேவையில்லை. கண்ட்ரோல் பேனலைத் திறக்கும் வழியை உங்கள் டாஸ்க்பாரில் வைத்துக் கொள்ளலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Control Panel என டைப் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் ஐகான் காட்டப்படும்போது அப்படியே அதனை இழுத்து வந்து, உங்கள் டாஸ்க் பாரில் விடவும். அடுத்த முறை கண்ட்ரோல் பேனல் செல்ல எண்ணுகையில் இதனைக் கிளிக் செய்தால் போதும். எப்போதாவது இந்த ஐகான் எதற்கு டாஸ்க் பாரில் என்று எண்ணினால் இதன் மீது ரைட் கிளிக் செய்து Unpin this program from Taskbar என்பதில் கிளிக் செய்தால் போதும்.

வேர்டில் வரி அழிக்க

வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் முடிவு வரை தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து பேக் ஸ்பேஸ் அல்லது டெலீட் அழுத்துங்கள். ஏன், ஸ்பேஸ் கீ அழுத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி அழிக்கப்படும். மின்னஞ்சல் கடிதங்களை சுருக்கமாகவும் நேரடியாக விஷயத்தைத் தெரிவிப்பதாகவும் அமைத்திடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை மின்னஞ்சலுடன் இணைப்பாகத் தர எண்ணினால் அவற்றை ஸிப் செய்து அனுப்பவும். அப்போது தான் கடிதத்தினைப் பெறுபவர் அனைத்து பைல்களையும் பெறுவது உறுதிப் படுத்தப்படும். இல்லை என்றால் ஒன்று கிடைத்து ஒன்று கிடைக்காமல் போகலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் செயலாற்றிக் கொண்டிருக்கையில் திரையில் தோன்றும் விண்டோவினை பின்னுக்குத் தள்ளி மற்றதை முன்னுக்குக் கொண்டு வர Alt+ ESC அழுத்தவும்.
நம் விருப்ப புல்லட்
வேர்டில் உள்ள வரி ஒன்றின் நடுவே, புல்லட் போல சிறிய புள்ளி ஒன்று அமைக்க விரும்புகிறீர்கள். புல்லட் டூலைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் விரும்பியபடி புல்லட் அமையவில்லை. என்ன செய்யலாம்? எந்த இடத்தில் சிறிய புள்ளியை, புல்லட் ஆக அமைக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் நம்லாக் கீயை ஆன் செய்து, நியூமெரிக் கீ பேடில் ஆல்ட் கீயினை அழுத்தியவாறே 0183 என்ற எண்களை அழுத்தவும். புள்ளி அமைக்கப்படும்.

வேர்டில் பைலைத் திறக்க
வேர்டைத் திறக்கையில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்களின் பட்டியலில் நாம் செட் செய்ததற் கேற்ப 4 முதல் 9 பைல்கள் வரை காட்டும். இவை 1,2,3 என வரிசைப் படுத்தப்பட்டு மெனுவின் கீழாக இருக்கும். குறிப்பிட்ட பைலைத் திறக்க மவுஸின் கர்சரை அந்த பைலின் பெயர் மீது வைத்து கிளிக் செய்வோம். இன்னொரு குறுக்கு வழியும் உள்ளது. அந்த பைலுக்கு எந்த எண் தரப்பட்டுள்ளதோ அந்த எண்ணுக்கான கீயை (1,2,3 என்றபடி) அழுத்தினால் போதும். அந்த பைல் திறக்கப்படும்.

வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு


தேவையானப் பொருட்கள்:
வாழைக்காய் – 1
பச்சைப்பயறு – 1 கப்
பச்சை மிளகாய் – 4 அல்லது 6
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
செய்முறை:
பச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.

உத்தித பத்மாசனம்

பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்க வாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது. ஒரு முறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது. பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் சௌகரியம் போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும்.

பலன்கள்

தொந்தி கரையும். ஜுரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். புஜம், தோள் பட்டை பலம் பெறும். அஜுரணம், மலச்சிக்கல் தீரும். “பாங்கரியாஸ்” உறுப்பு நன்கு வேலை செய்யும். நீரழிவு நோய்க்குச் சிறந்த ஆசனம்.

ஆஸ்துமாக்காரர்களுக்கு நெஞ்சு விரிவடைந்து நுரையீரலில் அதிக சுவாசம் இழுக்கும் தன்மை ஏற்படும்.நெஞ்சக்கூடு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்தால் மார்பு விரியும். புஜபலம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாயின் போது வரும் வலிகள் நீங்கும்.