உத்தித பத்மாசனம்

பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்க வாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது. ஒரு முறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது. பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் சௌகரியம் போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும்.

பலன்கள்

தொந்தி கரையும். ஜுரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். புஜம், தோள் பட்டை பலம் பெறும். அஜுரணம், மலச்சிக்கல் தீரும். “பாங்கரியாஸ்” உறுப்பு நன்கு வேலை செய்யும். நீரழிவு நோய்க்குச் சிறந்த ஆசனம்.

ஆஸ்துமாக்காரர்களுக்கு நெஞ்சு விரிவடைந்து நுரையீரலில் அதிக சுவாசம் இழுக்கும் தன்மை ஏற்படும்.நெஞ்சக்கூடு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்தால் மார்பு விரியும். புஜபலம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாயின் போது வரும் வலிகள் நீங்கும்.

%d bloggers like this: