சரித்திரத்தில் இடம் பிடிக்கும் `சர்’ பட்டம்

“மக்களின் பிணிகளைத் தீர்த்து, துயரைத் துடைத்து, பாதுகாப்பு அளிக்கின்ற உன்னத பணிக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு `நைட்’ (NIGHT) பதவிம், `சர்’ (SAR) பட்டமும் தந்து கவுரவிக்கபடுகிறது.

`நைட்’ என்ற சொல் பழைய ஆங்கில மொழியிலிருந்து மருவி வந்ததாகும். `குதிரை மீது அமர்ந்து மன்னரையும், மக்களையும், நாட்டையும் காக்கும் வீரன்’ என்பது இச்சொல்லின் பொருள்.

கி.பி. 7-ம் நுற்றாண்டில் ஜெர்மனிக்கும், முஸ்லிம் சமுக அரசர்களுக்கும் இடையே நடைபெற்ற அரேபிய படையெடுப்பில், ஜெர்மனி வெற்றி பெற்றது. ஜெர்மனியிடம் பெரிய வாள்களைம், உலோகத் தடுப்புகளைம் ஏந்தி குதிரையில் அமர்ந்து போர் புரியும் `ரான்க்’ என்ற குதிரை வீரர்கள் இருந்ததால் வெற்றி எளிதாயிற்று. இவ்வாறு நாட்டைக் காத்த குதிரை வீரர்கள் மக்களிடம் செல்வாக்கு பெறத் தொடங்கினர்.

வாளால் அங்கீகாரம் வழங்கியபோது…

இதனிடையே இயேசு பயன்படுத்திய புனித பொருட்களைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் எருசலேமுக்குச் சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் புரட்சிக்காரர்களால் பெரிதும் துன்பத்தை அனுபவித்தனர். மேலும் நீண்ட பயணத்தால் பலர் நோய்வாய்பட்டு இறந்தனர். இதனால் அவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு குதிரை வீரர்களிடம் ஒப்படைக்கபட்டது.

10-ம் நுற்றாடில் வணிகர் ஒருவரின் முயற்சியால் புனிதபயணம் மேற்கொள்பவர்களுக்கு தொண்டு செய்வதற்காக `செயின்ட் ஜான் ஆ ஜெருசலேம்’ என்ற பெயரில் விடுதி ஆரம்பிக்கபட்டது. இந்த விடுதிபணியில் சேர்ந்து, பிறருக்குத் தொண்டு செய்பவர்களுக்கு `நைட்’ என்ற பெயர் சூட்டி, அவர்களின் பெயருக்கு முன்னால் `சர்’ என்ற சிறப்பு பட்டத்தைம் அளித்தனர்.

1888-ம் ஆண்டு இதன் பெயர் `கிரான்ட் பிரையாரிட்டி ரீல்ம் ஆ மோஸ்ட் வல்னரபிள் ஆர்டர் ஆ செயின் ஜான் ஆ ஜெருசலேம்’ என்று மாற்றபட்டது. அதன் தலைவராக இங்கிலாந்து அரசர் நியமிக்கபட்டார். பிரபுக்களுக்கும், அரச செல்வாக்கு பெற்றவர்களுக்குமே இந்த பட்டம் தரபட்டதால், மீண்டும் `புனித ஜான் ஆ ஜெருசலேம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கபட்டது. அரசியல் சாராத பொதுவாழ்க்கையில் மக்களின் பிணிகளைத் தீர்க்கின்ற, பிறரின் துயரைத் துடைக்கின்ற உன்னதமான பணியில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து `நைட்’ பதவியும், `சர்’ பட்டமும் தருவதை இந்த அமைப்பு செய்து வருகிறது.

இந்த `சர்’ பட்டமளிப்பு விழா மிகப்பெரிய வைபவமாகக் கொண்டாடபடுகிறது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர்கள் கலந்து கொள்கின்றனர். யாருக்கு `சர்’ பட்டம் தரபோகிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது. செயின்ட் ஜான் ஆ ஜெருசலேம் அமைப்பைச் சேர்ந்த கமான்டர், கார்டினல்ஸ் அடங்கிய குழு சிலரைத் தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்வர். அதிலிருந்து `சர்’ பட்டம் பெறத் தகுதியானவரைத் தேர்வு செய்வர்.

அப்படித் தேர்வு செய்த நிமிடத்திலிருந்து அந்த நபர் பிறர் பார்வையில் படாதபடி தனிமைபடுத்தபடுவார். அவருடைய குடும்பத்தினர்கள் கூட இரண்டு நாட்களுக்கு அவரை பார்க்க முடியாது. அந்த இரண்டு நாட்களும் பட்டம் பெறும்போது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிப்பார்கள்.

சான்றிதழ் வழங்கியபோது..

இரண்டாம் நாள் மாலை பெரிய அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெறும். பட்டம் பெறுபவர்கள் அணியும் அங்கியை அணிந்து சுமார் ஆயிரம் பேர் அரங்கில் இருபர். மனதை மயக்கும் சூழலில், கண்களை உறுத்தாத ஒளியில், அரங்கத்தின் நடுவே ஒரு மேடை அமைக்கபட்டிருக்கும். அதில் கமாண்டர் தன் கார்டினல்ஸ்களுடன் அமர்ந்திருப்பார். கமாண்டர் வெள்ளை அங்கியும், கார்டினல்ஸ் சிகப்பு அங்கிம் அணிந்திருப்பர். அங்கியின் முதுகு பகுதியிலும், கையிலும் சிலுவை போன்ற அரச முத்திரை இருக்கும்.

`சர்’ பட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முன்னும் பின்னும் கார்டினல்ஸ் புடைசூழ, அரங்கினுள் அழைத்து வரபடுவர். அங்குள்ள அறை ஒன்றில் அவர்களுக்கு அங்கி அணிவிக்கபடும். பின்னர் கமாண்டர் ஒவ்வொருவரின் பெயரையும், அவர் செய்த சேவையையும் சொல்லி அழைத்து வரச் சொல்வார். முன்புறம் ஒரு கார்டினலும், பின்புறம் ஒரு கார்டினலும் தொடர, நடுவில் `சர்’ பட்டம் பெறபோகும்அறிஞர் வருவார். அப்போது அவருடைய நாட்டின் தேசியகீதம் ஒலிக்கும்.

கமாண்டர் கார்டினலை பார்த்து, `யாரை அழைத்து வந்திருக்கிறீர்கள்? அவருக்கு நம் அமைப்பை பற்றித் தெரியுமா?’ என கேட்பார். தான் யாரை அழைத்து வந்திருக்கிறோம் என்பதை சத்தமாகக் கார்டினல் கூறுவார். பின்னர் பட்டம் பெறுபவர் மேடைக்கு அழைத்துச் செல்லபடுவார். அவரிடம், `நைட் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடு பற்றித் தெரியுமா?’ என்று கேட்பார். அவர் `ஆம்’ என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். பின் அவரிடம் உறுதிமொழி பத்திரம் தரப்படும். அதை அரங்கில் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி சத்தமாக படிக்க வேண்டும்.

மேடையின் நடுவே வெல்வெட் துணியால் போர்த்தபட்ட மேஜையில் அரசரின் வாள், அரச முத்திரை, வாயகன்ற வெள்ளிபாத்திரம் ஆகியவை இருக்கும். `நம்பிக்கை, நல்லெண்ணம், நாணயபேழை’ என்பது அந்த பாத்திரத்தின் பெயராகும். அதன் இரு பக்கமும் பெரிய மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். `சர்’ பட்டம் பெறபோகிறவர் உறுதிமொழியை படித்த பின், அதில் கையெழுத்திட வேண்டும். கமாண்டர் அரசரின் வாளை எடுத்து உறுதிமொழிக் காகிதத்தில் துளை போட்டு, தீயில் காட்டுவார். அப்போது, `நீங்கள் தந்த உறுதிமொழிக்கு எந்தவிதத் தடயமும் இல்லை. இதற்கான சாட்சி, உங்கள் மனசாட்சி மட்டுமே’ என்று கூறுவார்.

அதன் பின்னர் மேடையில் உள்ள திண்டு போன்ற அமைப்பில் பட்டம் பெறுபவர் தன்னுடைய இடது முட்டியை மடித்து மண்டியிட வேண்டும். `எனக்குத் தரபட்ட அதிகாரத்தின் பேரில் இன்று முதல் நீங்கள் புதிய `சர்’ ஆகிறீர்கள்’ என்று கூறியபடி அரசரின் வாளை எடுத்து இரண்டு தோள்களிலும், தலையிலும் வைத்து அங்கீகாரம் அளிப்பார் கமாண்டர். பின்னர் அவருக்கு `ஹூட்’ என்ற சதுரத்தொப்பி அணிவிக்கபடும். அது முடிந்ததும் கமாண்டர் பட்டம் பெற்றவரை பார்த்து, `எழுந்திருங்கள் புதிய நைட் பட்டம் பெற்றவரே’ என்று கூறுவார். அன்றுமுதல் அந்த நபர் சிறபு மிக்க `நைட்’ பட்டம் பெற்ற `சர்’ ஆகிறார். இந்தச் சடங்கானது ஒவ்வொருவருக்கும் சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். இந்த `சர்’ பட்ட சடங்கு கோலாலம்பூரில் நடந்தது.

இந்தத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டவர், புதிதாக `சர்’ பட்டம் பெற்றிருக்கும் டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன். இவர் இதுவரை 15 ஆயிரம் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி சேவையாற்றி இருப்பதே, `சர்’ பட்டம் கிடைத்ததற்கான காரணமாகும். இவரது மனைவி டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

இலவச மருத்துவ சேவை பற்றி டாக்டர் `சர்’ ஆர். ராமகிருஷ்ணன் சொல்கிறார்…

குடும்பத்தினருடன்…

“பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று சின்ன வயதிலேயே சொல்லிச் சொல்லி என் பெற்றோர் என்னை வளர்த்தனர். அதற்காகவே என்னை மருத்துவம் படிக்க வைத்தனர். மருத்துவம் படித்த பிறகு முதன்முதலில் ஜெயின் மருத்துவ சேவையில் என்னை இணைத்துக் கொடேன். பின்னர் ஆர்ய சமாஜம், ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றின் மருத்துவ சேவைகளில் பங்கு கொண்டேன். மிகவும் பின்தங்கிய வகுப்பினர்கள் வசித்து வந்த மேற்கு சைதாபேட்டையில் `அன்னை சாரதா எளியோர் மருத்துவமனை’ என்று பெயரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினேன்.

1980-ல் ஆரம்பிக்கபட்ட அந்த மருத்துவமனையில் பணம் எதுவும் வாங்காமல், 10 ஆண்டுகள் இலவசமாகவே மருத்துவம் செய்து வந்தேன். அங்கு ஒரு உண்டியல் வைக்கபட்டிருக்கும். சிகிச்சைக்கு வருபவர்கள் தங்களால் முடிந்ததை அதில் போட்டுவிட்டுச் செல்வார்கள். 1990 முதல் இரண்டு ருபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவம் செய்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது ஒரு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து சிகிச்சை அளிப்பேன்” என்கிற டாக்டர் ராமகிருஷ்ணன், மருத்துவ முகாம் ஒன்றில் டாக்டர் அருணாவை பார்த்திருக்கிறார். பார்த்ததும் அவரை பிடித்து போய்விட இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. டாக்டர் அருணா ராமகிருஷ்ணனும் பொதுச்சேவையில் ஆர்வம் கொண்டவர் என்பதால் திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவி இருவரும் இணைந்து மருத்துவ சேவை செய்து வருகிறார்கள்.

“நாங்கள் திருமணம் முடிந்ததும் முதலில் சென்றது மருத்துவ முகாமுக்குத்தான். 11/2 ஆண்டுகள் எளியோருக்கு சேவை செய்த பின்பே `ஹனிமு ன்’ புறபட்டுச் சென்றோம்” என்று பெருமை பொங்கக் கூறியவர், “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏதாவது ஒரு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். சில நாட்களில் இரண்டு, முன்று மருத்துவ முகாம்கள் கூட இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்பது மற்றவர்களுக்குத்தான் `ஹாலிடே’. எங்களை பொறுத்த வரையில் அது `சேவை தினம்”’ என்று கூறிச் சிரிக்கிறார், டாக்டர் ராமகிருஷ்ணன்.

இவர்கள் சேவை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதற்காக மகள் பவித்ராவையும் டாக்டருக்கு படிக்க வைக்கிறார்கள். பவித்ராவுக்கும் சிறுவயதில் இருந்தே சேவை ஆர்வம் அதிகம்.

டாக்டர் ராமகிருஷ்ணனின் முத்த சகோதரர் தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார். மரணமடையும்போதும் `ஜெய்ஹிந்த்’ என்று கூறி விடைபெற்றவர். `சர்’ பட்டம் தனது குடும்பத்திற்கே சொந்தம் என்கிறார் இந்த சேவை மனிதர்!

%d bloggers like this: