விண்வெளியில் புதுவரவுகள்!


அண்டவெளி பல மர்மங்களை உள்ளடக்கியது. அதில் மனிதன் அறிந்து கொண்ட எல்லை மிகமிகக் குறைவு. நாம் அறிந்த சூரிய குடும்பத்தில்கூட நம்மால் செல்லமுடியாத பகுதி பரந்துவிரிந்து கிடக்கின்றன.

விண்வெளியில் கோள்கள் மட்டுமல்லாது லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் பல ஒளிராதவை. இவை சாதாரண தொலைநோக்கியில் தென்படாது. இப்படி புலப்படாத சில நட்சத்திரக் கூட்டம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டுபிடித்தது ஒரு நவீன தொலைநோக்கி. இந்த அதிவிரைவு தொலைநோக்கியும், அது கண்டுபிடித்த நட்சத்திரக் கூட்டமும்தான் விண்வெளியின் புதிய வரவுகள்.

நவீன தொழில்ட்பமான இன்பிராரெட் வசதியுடன் கூடிய ஒரு புதிய தொலைநோக்கியை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர். இது வைஸ் (wise) எனப்படுகிறது. இது Widefield Infrared Survey Explorer என்பதன் சுருக்கம் ஆகும்.

இந்த தொலைநோக்கியானது பல ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புலப்படாத பொருட்களையும் கதிர்வீச்சு முறையில் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் இதுவரை கண்ணுக்கு புலப்படாத நட்சத்திரம், எரிகல் கூட்டத்தை கண்டுபிடித்து உள்ளது. இது நமது சூரியகுடும்பத்தின் பக்கத்து நட்சத்திரக்கூட்டமான பிராக்சிமா செஞ்சுரி நட்சத்திரகுடும்பத்துக்கு முன்பாகவே அமைந்திருக்கின்றன. இந்த எரிகல், நட்சத்திரக்கூட்டத்துக்கு பழுப்பு குள்ளர்கள் (பிரவுன் ட்வார்ப்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவை குளிர்ந்த நிலையில் இருக்கும் எரிகற்களாகும்.

இந்த புதிய தொலைநோக்கி மிகமிக வேகமாக செயல்படக்கூடியது. எனவே இதுபோன்ற புலப்படாத எரிகற்களால் பூமிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தையும் முன்கூட்டியே கண்டுபிடித்து அறிவித்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

%d bloggers like this: