Daily Archives: திசெம்பர் 19th, 2009

கிருஷ்ண பக்தர்களாகும் சீனர்கள்!

சீனா என்றதுமே அந்த நாடு நமக்குக் கொடுத்துவரும் தொல்லைகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சத்தமில்லாமல் ஒரு விஷயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், ஆயிரக்கணக்கான சீனர்கள் கிருஷ்ண பக்தர்களாகியுள்ளனர்.

நம் நாட்டிலும் பிரபலமாகத் தொடங்கியிருக்கும் `பெங்க் சூயி’யைக் கூட சீன கம்யூனிச அரசு ரசிப்பதில்லை. ஆனால் தேசஎல்லைகளை எல்லாம் தாண்டும் இணையம், செஞ்சீன மண்ணில் கிருஷ்ண பக்திக்கு வித்திட்டுள்ளது. தற்போது தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் கிருஷ்ணரை `ஆன்லைன்’ முலமாகத் தரிசிக்கிறார்கள், ஆன்மிக உரைகளைக் கேட்கிறார்கள், அதுதொடர்பான விவாதங்களில் பங்கேற்கிறார்கள்.

சமீபத்தில் நான்கு சீன கிருஷ்ண பக்தர்கள் பெங்களூரில் உள்ள `இஸ்கானுக்கு’ புனித பயணம் வந்திருந்தனர்.

அப்படி புனித பயணம் வந்தவர்கள்- `புருஸ் லீ’ என்ற தனது பெயரை `குருசேவ தாஸா’ என்று மாற்றிக் கொண்டிருப்பவர், `மெங் மெங்’கிலிருந்து `மா நரசிம்ம தாஸா’வாகியிருப்பவர், அவரது அம்மா `விஷாகா’, ஆசிரியையான வாங் ஆகியோர். ஆண்கள் இருவரும் இந்திய ஆடவர் ஆடைகளுக்கும், பெண்கள் சேலைக்கும் மாறியிருந்தது இன்னுமொரு குறிபிடத்தக்க விசேஷம்.

`பு ருஸ் லீ’ கிருஷ்ண பக்தராக மட்டுமல்ல, முழு நேர கிருஷ்ண பிரச்சாரகராகவே மாறிவிட்டாராம். தனது மதமாற்றம் குறித்து அவர் கூறுகையில், “எனது இளமை பருவம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. எனது பெற்றோர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருபார்கள். கடைசியில் அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்போது எனக்கு 20 வயதுதான். அந்தக் குழப்பம், கவலையில் குடிபோதை, புகை பழக்கம் என்று ழுழ்கிவிட்டேன். எந்தத் திசையில் போவது என்ற தெளிவே எனக்கு இல்லை. அப்போது நான் சந்தித்த ஒரு `குங்பூ’ மாஸ்டர்தான் எனக்கு இந்து வேதத்தை பற்றிக் கூறினார்…”

அடுத்து அவர், சீனாவில் ரகசியமாக நடத்தபட்ட `யோகா’ வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

“நான் அடிப்படையான ஹதயோகாவைக் கற்றுக் கொண்டேன். அது கெட்ட பழக்கங்களிலிருந்து நான் விடுபட உதவியது. `இஸ்கான்’ நிறுவனரான குரு பிரபுபாதா, கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உனக்கு வேண்டுமானால்  புகைத்தல், குடித்தல், தவறான உறவில் இருந்து முற்றிலுமாக மீள வேண்டும், சுத்த சைவமாக வேண்டும் என்று கூறிவிட்டார்” என்கிறார் `புரு ஸ் லீ’ என்ற `குரு சேவ தாஸா’.

தற்போது கிருஷ்ண பக்தியை பரப்புவதுதான் லீயின் முக்கிய வேலை.

“காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் நான், குளித்ததற்கு பின் கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பேன். பின்னர் நான் இணையத்தில் `சாட் ருமை’ திறந்து கிருஷ்ணபகவானை பற்றி அறிய நினைபவர்களுக்கு அவரை பற்றி போதிப்பேன்” என்கிறார்.
`பகவத் கீதை’ உட்பட பல இந்து சமய புத்தகங்களை சீன மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார் லீ. சமீபத்தில் இவர் மொழிபெயர்த்தது, `ஸ்ரீமத் பாகவதத்தின்’ முன்றாம் பாகம்.

லீயை போல மற்ற வரும் கூட இணையத்தின் முலமாக கிருஷ்ண பக்தியைவளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். “நரம்பு சம்பந்தமான பிரச்சினையால் எங்கம்மா கட்டுபாடில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டில் அவருக்கு தோழி ஒருவர் பகவத் கீதையைக் கொடுத்தார். அவர் கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கியதுமே அமைதியும் நிம்மதிம் அடைந்தார். எங்கம்மாவை பின்பற்றி நானும் இன்றுள்ள இந்த நிலையை அடைந்திருக்கிறேன்” என்கிறார், தற்போது மா நரசிம்ம தாஸாவாக ஆகியிருக்கும் பொருளாதார ஆசிரியர் மெங் மெங்.

திருப்பதி உள்ளிட்ட பல ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றுவிட்டு இவர்கள் சீனா திரும்பியிருக்கிறார்கள்.

உங்கள் அழகுக்கு பொருத்தமான கைப்பைகள்

பெண்களின் அழகை மேம்படுத்திக்காட்டு வதில், அவர்கள் பயன்படுத்தும் `ஹேண்ட் பேக்’களுக்கு முக்கிய பங்கு உண்டு. தங்கள் உடை, ஹேர்ஸ்டைல் செருப்பு போன்ற வைகளுக்கு பொருத்தமான ஹேண்ட் பேக்கு களை பெண்கள் பயன்படுத்தி அழகுடன் வலம் வருகிறார்கள்.

அழகுக்கும், அதேநேரம் பொருட்கள் வைத்துக் கொள்வதற்கும் பயன்படும் கைபை (ஹேண்ட்பேக்)களின் உபயோகம் பெண்களிடம் மிக அதிகமாக உள்ளது. ஆடைகளின் நிறங்களுக்கும், டிசைன்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான வகைகளில், வடிவங்களில் கைப்பைகள் தயாராகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு கொண்டு செல்வதற்கு, அலுவலகம் செல்வதற்கு, பார்ட்டிகளுக்குச் செல்வதற்கு, ஷாபிங் செல்வதற்கு என கைப்பைகள் அதிகமாக பயன்படுத்தபட்டு வரும் நிலையில், அதற்கேற்ப பல்வேறு கலர்களில், டிசைன்களில், அளவுகளில் கைப்பைகள் கிடைக்கின்றன.

முதன்முதலாக 14-ம் நுற்றாண்டில் ஐரோப்பாவில் நவீன கைப்பைகள் தயாரிக்கப்பட்டன. குறிபிட்ட வடிவத்திலேயே பயன்படுத்தபட்டு வந்த கைப்பைகள் 18-ம் நுற்றாண்டுக்கு பிறகு விதவிதமான வடிவங்களில், கலர்களில் வலம்வரத் தொடங்கின. அப்போது `ரெடிகுலஸ்’ என்ற பெயரில் அவை அழைக்கபட்டன. பின்னர் 19-ம் நுற்றாண்டில்தான் ஹேண்ட்பேக், பர்ஸ் என்ற பெயர்கள் புழக்கத்துக்கு வந்தன; மக்களின் ரசனைக்கேற்ப பல்வேறு வகையான கைப்பைகளும் தயாரிக்கபட்டன.

தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே கைப்பைகளை பயன்படுத்தி வந்தனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்களும் கைப்பைகளை பயன்படுத்தத் தொடங்கினர். ஆரம்பத்தில் சில்லறைக் காசுகள் வைப்பதற்காக மட்டுமே கைப்பைகள் உபயோகபடுத்தபட்டன. எனவே, அவை அளவில் சிறியதாக இருந்தன. பின்னர் அதிக அளவில் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பெரிய அளவிலான கைப்பைகள் தயாரிக்கபட்டன. தற்போது சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற வடிவங்களுடன் சிறிய பெட்டி மாதிரியான கைப்பைகளும் தயாரிக்கபடுகின்றன.

விலங்குகளின் தோல், சாட்டின், சில்க், சணல் போன்ற பல்வேறு துணிகளில் கைப்பைகள் தயாரிக்கபடுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் கைப்பைகளில் மணிகள், அலங்காரக்கல் போன்றவை வைத்து எம்ராய்டரி செய்யபடுகின்றன. இவ்வாறு எம்ராய்டரி செய்யபட்ட கைப்பைகளின் விலை அதிகமாக இருக்கும். இருந்தாலும், அதன் வடிவமைப்பு, அழகு கருதி பெரும்பாலான பெண்கள் எம்ராய்டரி செய்யபட்ட கைபைகளையே விரும்பி வாங்குகின்றனர்.

கைபைகளுள் குறிபிடத்தக்கவை அலுவலகம் கொண்டு செல்லக்கூடிய கைபைகள். ஏனெனில் இவற்றை வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். மதிய உணவு, பைல், செல்போன், குடை, மேக்கப் பாக்ஸ் என எப்போதும் பை நிரம்பியே இருப்பதால், எளிதில் கிழியாத, உறுதியான கைபைகளை பயன்படுத்த வேண்டும். விரைவிலேயே அழுக்காகி விடுவதால் துவைத்து பயன்படுத்தும் வகையிலான கைபைகளை வாங்குவது நல்லது.

கைபைகளின் வகைகள்

டோட் பேக்: இந்த கைபைகள் அளவில் மிகச்சிறியதாக இருக்கும்.

ஹோபோ பேக்: தோளில் தொங்கவிட்டுச் செல்லும் வகையில் வடிவமைக்கபட்டுள்ள இந்த கைபைகள் பள்ளி மற்றும் கல்லூரி, அலுவலக பயன்பாட்டிற்கு உதவும்.

டபிள் பேக்: தோளில் தொங்கவிட்டுச் செல்லும்படி நீண்ட நாடாவுடன் வடிவமைக்கபட்டிருக்கும். ஆனால், ஜிப் இல்லாமல் திறந்த வாய்பகுதியைக் கொண்டிருக்கும்.

கிளட்ச் பேக்: தொங்கவிடுவதற்கு நாடா கிடையாது. கையிலேயே எடுத்துச் செல்ல வேண்டும். பார்ட்டி மற்றும் விழாக்களில் கலந்து கொள்ளும்போது எடுத்துச் செல்லலாம்.

சாட்ச்செல் பேக்: ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக அளவில் பெரியதாக இருக்கும்.

மெசேஞ்சர் பேக்: பெரிய நாடாவுடன் இருபதால் தோளில் தொங்க விட்டுச் செல்லலாம். பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

சிகார் பேக்: சிறிய பெட்டி போன்று இருக்கும். நாடா இருக்காது. மென்மையாக இல்லாமல் சற்றுக் கடினமாக இருக்கும்.

பவுச்: சில்லறைக் காசுகள், டிஷ்யூ பேப்பர், மொபைல் போன் போன்றவற்றை வைத்துக் கொள்ளும் அளவிற்குச் சிறியதாக இருக்கும்.

பேக் பர்ஸ்

சிறிய குழந்தைகளின் தாய்மார்கள், அலுவலகம் செல்லக்கூடிய பெண்களுக்கு ஏற்றது. ஏனெனில், சிறிய குழந்தைகளுக்கான நாப்கின்கள், மாற்று உடைகள், பால் பாட்டில், தண்ணீர் பாட்டில், மருந்துகள் போன்றவை வைப்பதற்கும், அலுவலகம் செல்லக்கூடிய பெண்கள் மதிய உணவு, தண்ணீர், குடை, மேக்கப் பாக்ஸ், அலுவலகக் கோப்புகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கும் உகந்ததாக இருக்கும்.

தோல் பைகள்

விலங்குகளின் தோல்களால் தயாரிக்கபடும் இந்த பைகளின் விலை சற்று அதிகமாக இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தோல் பைகள் நீடித்து உழைக்கக் கூடியவை. தோல் பைகளில் கறுப்பு மற்றும் பிரவுன் கலர் கைபைகள் பெரும்பாலானவர்களால் விரும்பி வாங்கப்படுகிறது. இதில் மணிகள், அலங்காரக்கல் வைத்து எம்ராய்டரி செய்யபட்ட கைபைகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்தக் கைபைகளைத் துவைத்து பயன்படுத்த முடியாது.

ஹேண்ட்மேடு பேக்

இந்த வகைக் கைபைகள் கைகளாலேயே தைக்கபடுகின்றன. அதனால் தையல் எளிதில் பிரியாமல் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்கிறது. நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும், லைட் வாஷ் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை

உங்களுடைய உருவத்திற்கு ஏற்ற விதத்தில் பொருந்தக்கூடிய கைபைகளாக பார்த்து வாங்குங்கள். அதேபோல் என்ன பயன்பாட்டிற்காக வாங்குகிறீர்கள் என்பதும் முக்கியம். பார்ட்டிக்குச் செல்ல, அலுவலகம் செல்ல, பள்ளி மற்றும் கல்லூரிக்குக் கொண்டு செல்ல, ஷாப்பிங் செல்ல என பலவற்றுக்கும் கைபைகள் பயன்படுகின்றன. எனவே, என்ன தேவைக்காக கைபை வாங்கபோகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கேற்றபடி வாங்குங்கள்.

வயதுக்கேற்ற கைபைகளைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம். இளவயதினருக்கு எம்ராய்டரி செய்யபட்ட டிசைனர் கைபைகள் ஸ்டைலாக இருக்கும். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோலினால் வடிவமைக்கபட்டக் கைபைகள் பொருத்தமாக இருக்கும். உங்கள் காலணிக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய கைபைகளை வாங்கி பயன்படுத்தினால் அசத்தலாக இருக்கும். பட்டன், ஜிப், ஓபன் டைப் என பல்வேறு வகைகளில் கைபைகள் கிடைக்கின்றன. அதில் எது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை முடிவு செய்து அதைத் தேர்ந்தெடுங்கள்.

அடிக்கடி கைப்பை பயன்படுத்த வேண்டியதிருந்தால் டிசைனர் கைபைகளை வாங்காமல் தோல் பைகளை வாங்குங்கள். அவையே நீண்ட காலம் பயன்தரும். குள்ளமாக இருப்பவர்கள் சிறிய அளவிலான கைபைகளைத் தேர்ந்தெடுக்கவும். பெரிய கைபைகளை பயன்படுத்தும்போது அவை உங்களை இன்னும் உயரம் குறைவாகக் காட்டும். உயரமானவர்கள் நடுத்தரமான அல்லது பெரிய கைப்பைகளை பயன்படுத்தலாம்.

முட்டை குருமா

தேவையானப் பொருட்கள்:
* முட்டை அவித்தது – 4
* தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன்
* முந்திரிபருப்பு – 4
* பட்டை-1
* கிராம்பு – 1
* ஏலம் – 1
* சோம்பு – அரை டீஸ்பூன்
* இஞ்சி – சிறிய துண்டு
* பூண்டு – 4 பல்
* மிளகாய்- 2-4
* புதினா ,மல்லி இலை – சிறிது
* வெங்காயம் – 1
* தக்காளி- 2
* எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
* மஞ்சல் பொடி – கால் ஸ்பூன்
* உப்பு – தேவைக்கு

செய்முறை:
* வெங்காயம் தக்காளி மெல்லியதாக கட் செய்து வைக்கவும்.அவித்த முட்டை
* சிறிது கீரி விட்டுக்கொள்ளவும்.
* தேங்காய் ,மற்ற பொருட்கள் யாவும் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம்,தக்காளி போட்டு ,உப்பு சேர்த்து வதக்கி ,மூடி போட்டு சிறிது மசிய விடவும்.
* பின்பு அரைத்த தேங்காய் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்கு கொதிவந்ததும் அவித்த முட்டை சேர்த்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
* சுவையான முட்டை குருமா ரெடி.

குறிப்பு:
இது சப்பாத்தி,இடியாப்பத்துடன் பரிமாறலாம்.

ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்

தேவையானப் பொருட்கள்:
* பால் – 1 லிட்டர்
* பச்சரிசி – 1 கைப்பிடி
* சர்க்கரை – 1 கப் (அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ளலாம்)
செய்முறை:
* முதல் முறை – அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
* பால் காய்ந்ததும் அரிசியைக் கழுவி பாலுடன் சேர்க்கவும்.
* அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும்.
* அரிசி குழைய வெந்ததும் இறக்கி வைத்து பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி பரிமாறவும்.
* இரண்டாம் முறை
* பாலைக் காய்ச்சவும்.
* கழுவிய பச்சரிசியைச் சேர்க்கவும்.
* குக்கரில் வைத்து குழைய வேக வைத்து எடுக்கவும்.
* குக்கரிலிருந்து இறக்கி சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி சர்க்கரை கரைந்ததும் மூடி வைத்துப் பரிமாறவும்.

உங்கள் குழந்தையும் 100-க்கு 100 வாங்க வேண்டுமா?


– விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு “என் புள்ளதான் ஸ்கூல்ல பர்ஸ்ட் மார்க்” என்று சொல்ல எந்தப் பெற்றோரும் தயங்குவதில்லை. ஆனால் எவ்வளவு படித்தாலும் மனதில் பதியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி வாழ்க்கையே சிறைக்கூடமாக தோன்றும்.

பொதுவாக ஒவ்வொருவரும் வேறுபடுவது முளைத்திறனில்தான். சிலர் அதிகமாக பயன்படுத்தி அதன் திறனை வளர்த்துக் கொள்வார்கள். சிலர் பயன்
படுத்தாமலே மழுங்கட்டையாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் பிறவி நோயால் பாதிக்கப்பட்டு எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருப்பார்கள்.

இப்படி பிறப்பிலேயே வரும் முளைப் பாதிப்பில் ஒன்று `டவுன் சிண்ட்ரோம்’ வியாதி. இதேபோல் அல்சீமர் போன்ற பல முளைத்திறன் பாதிப்பு வியாதிகள் நிறைய இருக்கின்றன. இவைகளுக்கு தீர்வு காண புதிய மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதில் வெற்றி கிடைத்து உள்ளது.

டவுன்சிண்ட்ரோம் பாதிப்பு 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களின் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இங்கிலாந்தில் 750 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இவர்களின் உடல் வளர்ச்சி மற்ற குழந்தைகள் போல இருந்தாலும் முளைவளர்ச்சி மட்டும் 2 வயது பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்.

இந்த குறைவை சரிப்படுத்தி இயல்பான குழந்தைகளைப் போலவே செயல்பட உதவுகிறது இந்த புதிய மருந்து. இதன் பெயர் எல்டோப்ஸ் (LDOPS) எனப்படும். இதை கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.

பரிசோதனைக்காக எலிகளில் செயற்கையாக டவுன்சிண்ட்ரோம் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டது. பிறகு எல்டோப்ஸ் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட முளையின் செயல்பாட்டுக்கு தேவை யான நார்பின்பிரைன் என்ற வேதிப்பொருள் கிடைக்க எல்டோப்ஸ் துணைபுரிந்தது. இதனால் நாளடைவில் பாதிப்பு உடைய எலி, இயல்பான எலிகள்போல செயல்படத் தொடங்கியது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எதிர்காலத்தில் டவுன் சிண்ட்ரோம் உள்பட பல்வேறு டிஸ்ஆர்டர்களுக்கு `எல் டோப்ஸ்’ பயன்படுத்தபடும் என்று தெரிகிறது.

செவ்வாயில் உயிரினங்கள்!

சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் இருக்கின்றன. மற்ற கோள்களில் உயிரினங்கள் இருக்கிறதா? என்ற ஆய்வு நீண்ட காலமாக நடந்து வந்தாலும் இதுவரையில் விடை கிடைக்காமல் இருந்து வந்தது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்து இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்து உள்ளது.

பூமிக்கு அருகில் உள்ள புதன் கோள் உயிரினங்கள் வாழ முடியாதபடி வெப்பம் மிகுந்தது. மற்ற கோள்களில் உயிர் வாழ அவசியமான வாயுமண்டலம், தண்ணீர், மணற்பரப்பு போன்றவை இல்லாமல் இருக்கின்றன. பூமியின் துணைக்கோளான சந்திரன் மற்றும் பூமியைப் போன்ற அமைப்புடைய சிவப்புக்கிரகமான செவ்வாய் ஆகிய இரண்டில்தான் உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஓரளவு இருக்கின்றன.

சந்திரனில் சமீபத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல செவ்வாயிலும் மிகப் பெரிய அளவில் கடல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் செவ்வாயில் பாக்டீரியா உயிரினங்கள் இருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள் உறுதி கூறுகிறார்கள்.

பூமி தற்போதுள்ள நிலையை கோடிக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்துக்குப் பிறகுதான் அடைந்துள்ளது. ஏராளமான விண்கற்கள் பூமியைத் தாக்கி பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் அண்டார்டிக் பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த ஒரு எரிகல்லும் குறிப்பிடத்தக்கது.

இந்த எரிகல் ஆலன் ஹில்ஸ் 84,001 என அழைக்கப்படுகிறது. இதுகுறித்த பல்வேறு ஆய்வுகள் நடந்து வந்திருக்கின்றன. பலவித கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இதுபற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்த நாசா ஆய்வுக்குழு சமீபத்தில் புதிய முடிவை அறிவித்திருக்கிறது. அந்த எரிகல் செவ்வாயில் இருந்து விழுந்தது என்பதற்கான உறுதியான தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் இருந்ததற்கான புதைபடிவங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.

மகத்துவ காய்கறிகள்

சில காய்கறிகளையும், அவற்றின் மகத்துவத்தையும் இங்கே பார்ப்போம் :

வெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி’, `பி’ மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். மேலும், வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவு ஆண்களுக்கு விந்துவை கெட்டிப் படுத்தி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக்காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.

கத்தரிக்காய் : இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு வந்தால் நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய் : இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.

புடலங்காய் : நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. தொடர்ந்து இதை உண்டு வந்தால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரக்காய் : இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

சுரைக்காய் : இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். இதன் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இந்த விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மை இழந்தவர்கள்கூட ஆண்மை பெறுவார்கள்.

உன்னை பலவீனன் என எண்ணாதே -சுவாமி விவேகானந்தர்


செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.

பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.

* இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

* அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

ஜானு சீராசனம்

நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து, பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்க வேண்டும். இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம் இடது கால் மூட்டைத் தொட வேண்டும். பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும். ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது. ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச் செய்தால் போதுமானது.

பலன்கள்

விலாப்புறம் பலப்படும், விந்து கட்டிப்படும். அஜீரணம், வாயுத் தொந்தரவு நீங்கும். உடல் நல்ல இளக்கம் கொடுக்கும். வயிற்றுப் பகுதியில் அதிகமான ரத்த ஓட்டம் ஏற்படும். நடு உடல் பகுதி பலப்படும்.பெருங்குடல், சிறுகுடல் இளக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். வயிற்றுவலி தீரும். முதுகு, இடுப்புவலி நீங்கும்,அடிவயிறு இழுக்கப் பெற்று தொந்தி கரையும்.