உங்கள் அழகுக்கு பொருத்தமான கைப்பைகள்

பெண்களின் அழகை மேம்படுத்திக்காட்டு வதில், அவர்கள் பயன்படுத்தும் `ஹேண்ட் பேக்’களுக்கு முக்கிய பங்கு உண்டு. தங்கள் உடை, ஹேர்ஸ்டைல் செருப்பு போன்ற வைகளுக்கு பொருத்தமான ஹேண்ட் பேக்கு களை பெண்கள் பயன்படுத்தி அழகுடன் வலம் வருகிறார்கள்.

அழகுக்கும், அதேநேரம் பொருட்கள் வைத்துக் கொள்வதற்கும் பயன்படும் கைபை (ஹேண்ட்பேக்)களின் உபயோகம் பெண்களிடம் மிக அதிகமாக உள்ளது. ஆடைகளின் நிறங்களுக்கும், டிசைன்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான வகைகளில், வடிவங்களில் கைப்பைகள் தயாராகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு கொண்டு செல்வதற்கு, அலுவலகம் செல்வதற்கு, பார்ட்டிகளுக்குச் செல்வதற்கு, ஷாபிங் செல்வதற்கு என கைப்பைகள் அதிகமாக பயன்படுத்தபட்டு வரும் நிலையில், அதற்கேற்ப பல்வேறு கலர்களில், டிசைன்களில், அளவுகளில் கைப்பைகள் கிடைக்கின்றன.

முதன்முதலாக 14-ம் நுற்றாண்டில் ஐரோப்பாவில் நவீன கைப்பைகள் தயாரிக்கப்பட்டன. குறிபிட்ட வடிவத்திலேயே பயன்படுத்தபட்டு வந்த கைப்பைகள் 18-ம் நுற்றாண்டுக்கு பிறகு விதவிதமான வடிவங்களில், கலர்களில் வலம்வரத் தொடங்கின. அப்போது `ரெடிகுலஸ்’ என்ற பெயரில் அவை அழைக்கபட்டன. பின்னர் 19-ம் நுற்றாண்டில்தான் ஹேண்ட்பேக், பர்ஸ் என்ற பெயர்கள் புழக்கத்துக்கு வந்தன; மக்களின் ரசனைக்கேற்ப பல்வேறு வகையான கைப்பைகளும் தயாரிக்கபட்டன.

தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே கைப்பைகளை பயன்படுத்தி வந்தனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்களும் கைப்பைகளை பயன்படுத்தத் தொடங்கினர். ஆரம்பத்தில் சில்லறைக் காசுகள் வைப்பதற்காக மட்டுமே கைப்பைகள் உபயோகபடுத்தபட்டன. எனவே, அவை அளவில் சிறியதாக இருந்தன. பின்னர் அதிக அளவில் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பெரிய அளவிலான கைப்பைகள் தயாரிக்கபட்டன. தற்போது சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற வடிவங்களுடன் சிறிய பெட்டி மாதிரியான கைப்பைகளும் தயாரிக்கபடுகின்றன.

விலங்குகளின் தோல், சாட்டின், சில்க், சணல் போன்ற பல்வேறு துணிகளில் கைப்பைகள் தயாரிக்கபடுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் கைப்பைகளில் மணிகள், அலங்காரக்கல் போன்றவை வைத்து எம்ராய்டரி செய்யபடுகின்றன. இவ்வாறு எம்ராய்டரி செய்யபட்ட கைப்பைகளின் விலை அதிகமாக இருக்கும். இருந்தாலும், அதன் வடிவமைப்பு, அழகு கருதி பெரும்பாலான பெண்கள் எம்ராய்டரி செய்யபட்ட கைபைகளையே விரும்பி வாங்குகின்றனர்.

கைபைகளுள் குறிபிடத்தக்கவை அலுவலகம் கொண்டு செல்லக்கூடிய கைபைகள். ஏனெனில் இவற்றை வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். மதிய உணவு, பைல், செல்போன், குடை, மேக்கப் பாக்ஸ் என எப்போதும் பை நிரம்பியே இருப்பதால், எளிதில் கிழியாத, உறுதியான கைபைகளை பயன்படுத்த வேண்டும். விரைவிலேயே அழுக்காகி விடுவதால் துவைத்து பயன்படுத்தும் வகையிலான கைபைகளை வாங்குவது நல்லது.

கைபைகளின் வகைகள்

டோட் பேக்: இந்த கைபைகள் அளவில் மிகச்சிறியதாக இருக்கும்.

ஹோபோ பேக்: தோளில் தொங்கவிட்டுச் செல்லும் வகையில் வடிவமைக்கபட்டுள்ள இந்த கைபைகள் பள்ளி மற்றும் கல்லூரி, அலுவலக பயன்பாட்டிற்கு உதவும்.

டபிள் பேக்: தோளில் தொங்கவிட்டுச் செல்லும்படி நீண்ட நாடாவுடன் வடிவமைக்கபட்டிருக்கும். ஆனால், ஜிப் இல்லாமல் திறந்த வாய்பகுதியைக் கொண்டிருக்கும்.

கிளட்ச் பேக்: தொங்கவிடுவதற்கு நாடா கிடையாது. கையிலேயே எடுத்துச் செல்ல வேண்டும். பார்ட்டி மற்றும் விழாக்களில் கலந்து கொள்ளும்போது எடுத்துச் செல்லலாம்.

சாட்ச்செல் பேக்: ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக அளவில் பெரியதாக இருக்கும்.

மெசேஞ்சர் பேக்: பெரிய நாடாவுடன் இருபதால் தோளில் தொங்க விட்டுச் செல்லலாம். பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

சிகார் பேக்: சிறிய பெட்டி போன்று இருக்கும். நாடா இருக்காது. மென்மையாக இல்லாமல் சற்றுக் கடினமாக இருக்கும்.

பவுச்: சில்லறைக் காசுகள், டிஷ்யூ பேப்பர், மொபைல் போன் போன்றவற்றை வைத்துக் கொள்ளும் அளவிற்குச் சிறியதாக இருக்கும்.

பேக் பர்ஸ்

சிறிய குழந்தைகளின் தாய்மார்கள், அலுவலகம் செல்லக்கூடிய பெண்களுக்கு ஏற்றது. ஏனெனில், சிறிய குழந்தைகளுக்கான நாப்கின்கள், மாற்று உடைகள், பால் பாட்டில், தண்ணீர் பாட்டில், மருந்துகள் போன்றவை வைப்பதற்கும், அலுவலகம் செல்லக்கூடிய பெண்கள் மதிய உணவு, தண்ணீர், குடை, மேக்கப் பாக்ஸ், அலுவலகக் கோப்புகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கும் உகந்ததாக இருக்கும்.

தோல் பைகள்

விலங்குகளின் தோல்களால் தயாரிக்கபடும் இந்த பைகளின் விலை சற்று அதிகமாக இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தோல் பைகள் நீடித்து உழைக்கக் கூடியவை. தோல் பைகளில் கறுப்பு மற்றும் பிரவுன் கலர் கைபைகள் பெரும்பாலானவர்களால் விரும்பி வாங்கப்படுகிறது. இதில் மணிகள், அலங்காரக்கல் வைத்து எம்ராய்டரி செய்யபட்ட கைபைகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்தக் கைபைகளைத் துவைத்து பயன்படுத்த முடியாது.

ஹேண்ட்மேடு பேக்

இந்த வகைக் கைபைகள் கைகளாலேயே தைக்கபடுகின்றன. அதனால் தையல் எளிதில் பிரியாமல் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்கிறது. நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும், லைட் வாஷ் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை

உங்களுடைய உருவத்திற்கு ஏற்ற விதத்தில் பொருந்தக்கூடிய கைபைகளாக பார்த்து வாங்குங்கள். அதேபோல் என்ன பயன்பாட்டிற்காக வாங்குகிறீர்கள் என்பதும் முக்கியம். பார்ட்டிக்குச் செல்ல, அலுவலகம் செல்ல, பள்ளி மற்றும் கல்லூரிக்குக் கொண்டு செல்ல, ஷாப்பிங் செல்ல என பலவற்றுக்கும் கைபைகள் பயன்படுகின்றன. எனவே, என்ன தேவைக்காக கைபை வாங்கபோகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கேற்றபடி வாங்குங்கள்.

வயதுக்கேற்ற கைபைகளைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம். இளவயதினருக்கு எம்ராய்டரி செய்யபட்ட டிசைனர் கைபைகள் ஸ்டைலாக இருக்கும். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோலினால் வடிவமைக்கபட்டக் கைபைகள் பொருத்தமாக இருக்கும். உங்கள் காலணிக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய கைபைகளை வாங்கி பயன்படுத்தினால் அசத்தலாக இருக்கும். பட்டன், ஜிப், ஓபன் டைப் என பல்வேறு வகைகளில் கைபைகள் கிடைக்கின்றன. அதில் எது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை முடிவு செய்து அதைத் தேர்ந்தெடுங்கள்.

அடிக்கடி கைப்பை பயன்படுத்த வேண்டியதிருந்தால் டிசைனர் கைபைகளை வாங்காமல் தோல் பைகளை வாங்குங்கள். அவையே நீண்ட காலம் பயன்தரும். குள்ளமாக இருப்பவர்கள் சிறிய அளவிலான கைபைகளைத் தேர்ந்தெடுக்கவும். பெரிய கைபைகளை பயன்படுத்தும்போது அவை உங்களை இன்னும் உயரம் குறைவாகக் காட்டும். உயரமானவர்கள் நடுத்தரமான அல்லது பெரிய கைப்பைகளை பயன்படுத்தலாம்.

%d bloggers like this: