கிருஷ்ண பக்தர்களாகும் சீனர்கள்!

சீனா என்றதுமே அந்த நாடு நமக்குக் கொடுத்துவரும் தொல்லைகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சத்தமில்லாமல் ஒரு விஷயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், ஆயிரக்கணக்கான சீனர்கள் கிருஷ்ண பக்தர்களாகியுள்ளனர்.

நம் நாட்டிலும் பிரபலமாகத் தொடங்கியிருக்கும் `பெங்க் சூயி’யைக் கூட சீன கம்யூனிச அரசு ரசிப்பதில்லை. ஆனால் தேசஎல்லைகளை எல்லாம் தாண்டும் இணையம், செஞ்சீன மண்ணில் கிருஷ்ண பக்திக்கு வித்திட்டுள்ளது. தற்போது தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் கிருஷ்ணரை `ஆன்லைன்’ முலமாகத் தரிசிக்கிறார்கள், ஆன்மிக உரைகளைக் கேட்கிறார்கள், அதுதொடர்பான விவாதங்களில் பங்கேற்கிறார்கள்.

சமீபத்தில் நான்கு சீன கிருஷ்ண பக்தர்கள் பெங்களூரில் உள்ள `இஸ்கானுக்கு’ புனித பயணம் வந்திருந்தனர்.

அப்படி புனித பயணம் வந்தவர்கள்- `புருஸ் லீ’ என்ற தனது பெயரை `குருசேவ தாஸா’ என்று மாற்றிக் கொண்டிருப்பவர், `மெங் மெங்’கிலிருந்து `மா நரசிம்ம தாஸா’வாகியிருப்பவர், அவரது அம்மா `விஷாகா’, ஆசிரியையான வாங் ஆகியோர். ஆண்கள் இருவரும் இந்திய ஆடவர் ஆடைகளுக்கும், பெண்கள் சேலைக்கும் மாறியிருந்தது இன்னுமொரு குறிபிடத்தக்க விசேஷம்.

`பு ருஸ் லீ’ கிருஷ்ண பக்தராக மட்டுமல்ல, முழு நேர கிருஷ்ண பிரச்சாரகராகவே மாறிவிட்டாராம். தனது மதமாற்றம் குறித்து அவர் கூறுகையில், “எனது இளமை பருவம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. எனது பெற்றோர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருபார்கள். கடைசியில் அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்போது எனக்கு 20 வயதுதான். அந்தக் குழப்பம், கவலையில் குடிபோதை, புகை பழக்கம் என்று ழுழ்கிவிட்டேன். எந்தத் திசையில் போவது என்ற தெளிவே எனக்கு இல்லை. அப்போது நான் சந்தித்த ஒரு `குங்பூ’ மாஸ்டர்தான் எனக்கு இந்து வேதத்தை பற்றிக் கூறினார்…”

அடுத்து அவர், சீனாவில் ரகசியமாக நடத்தபட்ட `யோகா’ வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

“நான் அடிப்படையான ஹதயோகாவைக் கற்றுக் கொண்டேன். அது கெட்ட பழக்கங்களிலிருந்து நான் விடுபட உதவியது. `இஸ்கான்’ நிறுவனரான குரு பிரபுபாதா, கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உனக்கு வேண்டுமானால்  புகைத்தல், குடித்தல், தவறான உறவில் இருந்து முற்றிலுமாக மீள வேண்டும், சுத்த சைவமாக வேண்டும் என்று கூறிவிட்டார்” என்கிறார் `புரு ஸ் லீ’ என்ற `குரு சேவ தாஸா’.

தற்போது கிருஷ்ண பக்தியை பரப்புவதுதான் லீயின் முக்கிய வேலை.

“காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் நான், குளித்ததற்கு பின் கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பேன். பின்னர் நான் இணையத்தில் `சாட் ருமை’ திறந்து கிருஷ்ணபகவானை பற்றி அறிய நினைபவர்களுக்கு அவரை பற்றி போதிப்பேன்” என்கிறார்.
`பகவத் கீதை’ உட்பட பல இந்து சமய புத்தகங்களை சீன மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார் லீ. சமீபத்தில் இவர் மொழிபெயர்த்தது, `ஸ்ரீமத் பாகவதத்தின்’ முன்றாம் பாகம்.

லீயை போல மற்ற வரும் கூட இணையத்தின் முலமாக கிருஷ்ண பக்தியைவளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். “நரம்பு சம்பந்தமான பிரச்சினையால் எங்கம்மா கட்டுபாடில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டில் அவருக்கு தோழி ஒருவர் பகவத் கீதையைக் கொடுத்தார். அவர் கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கியதுமே அமைதியும் நிம்மதிம் அடைந்தார். எங்கம்மாவை பின்பற்றி நானும் இன்றுள்ள இந்த நிலையை அடைந்திருக்கிறேன்” என்கிறார், தற்போது மா நரசிம்ம தாஸாவாக ஆகியிருக்கும் பொருளாதார ஆசிரியர் மெங் மெங்.

திருப்பதி உள்ளிட்ட பல ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றுவிட்டு இவர்கள் சீனா திரும்பியிருக்கிறார்கள்.

%d bloggers like this: