செவ்வாயில் உயிரினங்கள்!

சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் இருக்கின்றன. மற்ற கோள்களில் உயிரினங்கள் இருக்கிறதா? என்ற ஆய்வு நீண்ட காலமாக நடந்து வந்தாலும் இதுவரையில் விடை கிடைக்காமல் இருந்து வந்தது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்து இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்து உள்ளது.

பூமிக்கு அருகில் உள்ள புதன் கோள் உயிரினங்கள் வாழ முடியாதபடி வெப்பம் மிகுந்தது. மற்ற கோள்களில் உயிர் வாழ அவசியமான வாயுமண்டலம், தண்ணீர், மணற்பரப்பு போன்றவை இல்லாமல் இருக்கின்றன. பூமியின் துணைக்கோளான சந்திரன் மற்றும் பூமியைப் போன்ற அமைப்புடைய சிவப்புக்கிரகமான செவ்வாய் ஆகிய இரண்டில்தான் உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஓரளவு இருக்கின்றன.

சந்திரனில் சமீபத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல செவ்வாயிலும் மிகப் பெரிய அளவில் கடல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் செவ்வாயில் பாக்டீரியா உயிரினங்கள் இருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள் உறுதி கூறுகிறார்கள்.

பூமி தற்போதுள்ள நிலையை கோடிக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்துக்குப் பிறகுதான் அடைந்துள்ளது. ஏராளமான விண்கற்கள் பூமியைத் தாக்கி பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் அண்டார்டிக் பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த ஒரு எரிகல்லும் குறிப்பிடத்தக்கது.

இந்த எரிகல் ஆலன் ஹில்ஸ் 84,001 என அழைக்கப்படுகிறது. இதுகுறித்த பல்வேறு ஆய்வுகள் நடந்து வந்திருக்கின்றன. பலவித கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இதுபற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்த நாசா ஆய்வுக்குழு சமீபத்தில் புதிய முடிவை அறிவித்திருக்கிறது. அந்த எரிகல் செவ்வாயில் இருந்து விழுந்தது என்பதற்கான உறுதியான தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் இருந்ததற்கான புதைபடிவங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.

%d bloggers like this: