சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்துகள்
சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு பக்க விளைவுகள் அற்ற, நிரந்தரத் தீர்வைத் தரும் சித்த மற்றும் ஹோமியோபதி மருந்துகளை மாநில அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை முதன்மைச் செயலர் ஜி.ஏ. ராஜ்குமார் வெளியிட்டார்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:
சித்தா- சிக்குன் குனியா: தொடர்ச்சியாக காய்ச்சல், தலைவலி, சோர்வு, குமட்டல் உணர்வு, வாந்தி, தசைகளில் வலி, மூட்டுகளில் வலி, அரிப்புடன்கூடிய தடிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிக்குன் குனியாவாக இருக்கலாம். இவை இருந்தால், திரிதோட மாத்திரை (2), சுதர்சன சூரணம் ஒரு கிராம் ஆகியவற்றை காலை மற்றும் மாலை இரு வேளை தேனுடன் கலந்து அல்லது நிலவேம்புக் குடிநீருடன் கலந்து உணவுக்கு பின் உள்கொள்ள வேண்டும். 15 கிராம் நிலவேம்புச் சூரணத்தை அரை லிட்டர் நீர் விட்டு காய்ச்சி 100 மில்லியாக வற்ற வைத்து இரு வேளையும் உணவுக்குப் பின் உள்கொள்ள வேண்டும். பிண்டத் தைலம், கற்பூராதித் தைலம் ஆகியவற்றை சம அளவு கலந்து வலி வீக்கம் உள்ள இடத்துக்கு மேலே தடவ வேண்டும். இவற்றை மூன்று முதல் 5 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். அரிசிக் கஞ்சி மட்டும் சாப்பிடலாம். காய்ச்சல் நீங்கிய பின்னரும் மூட்டு வலி மற்றும் வீக்கம் இருந்தால், அய்வீரச் செந்தூரம் 100 மில்லி கிராம், சுதர்சன சூரணம் ஒரு கிராம் ஆகியவற்றை காலை மாலை இரு வேளை தேன் அல்லது நிலவேம்புக் குடிநீருடன் கலந்து குடிக்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்ட தைலத்தைத் தடவலாம்.
ஹோமியோபதி- சிக்குன் குனியா: யூபடோரியம் பெர்ப் (30), ரூட்டா (30)- க்ஷலடம்பால் (30), ரஸ்டாக்ஸ் (30), பிரையோனியா (30), சைனா (30) ஆகியவற்றை தலா 5 உருண்டைகள், காலை, மதியம், இரவு உணவுக்கு முன் உள்கொள்ள வேண்டும்.
சித்தா- பன்றிக் காய்ச்சல்: தொடர்ச்சியாக காய்ச்சல், சளி (மூக்கில் தொடர்ந்து சளி வடிதல்), தலைவலி, உடல்வலி, வயிற்றுப்போக்கு, வறண்ட தொண்டை போன்றவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள். இவை இருந்தால், தாளிசாதி சூரணம், சீந்தில் சர்க்கரை ஆகியவற்றை தலா 200 மில்லிகிராம் நாளொன்றுக்கு இரு வேளைகள், உணவுக்குப் பிறகு உள்கொள்ளலாம். மேலும், நிலவேம்புச் சூரணம், பவளமல்லி இலை சூரணம் ஆகியற்றை தலா 500 கிராம், நாளொன்றுக்கு இரு வேளைகள், உணவுக்குப் பிறகு உள்கொள்ளலாம்.
ஹோமியோபதி - பன்றிக் காய்ச்சல்: பன்றிக்காய்ச்சல் வருமுன்காக்க, இன்புளூயன்சினம் 200 அல்லது 1 எம் மாத்திரையை 5 உருண்டை வாரம் தினம் ஒரு வேளை இரு வாரங்களுக்கு மட்டும் உள்கொள்ள வேண்டும். ஆர்சனிக் ஆல்பம் 30 ஆகியவற்றை தலா 5 உருண்டைகள் தினமும் ஒரு வேளை இரு வாரங்களுக்கு மட்டும் உள்கொள்ள வேண்டும். நோய் வந்தபின் குணம் பெற, ஆர்சனிக் ஆல்பம் (30), அகோனைட் (30), பெல்லடோனா (30), பிரையோனியா (30), யூபடோரியம் பெர்ப் (30), ஜெல்ஸ்மியம் (30), ரஸ்டாக்ஸ் (30) ஆகியவற்றை தலா 5 உருண்டைகள் மூன்று வேளையும் உணவுக்கு முன் உள்கொள்ள வேண்டும்.
டெங்கு: சிக்குன் குனியாவுக்கான மருந்துகளே டெங்குவுக்கும் பொருந்தும். இவற்றை உள்கொள்வதால், எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லை. இருப்பினும், பாதிக்கப்படும் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், விளக்கம் தேவைப்படும் மருத்துவர்கள் அனைவரும் அரசு சித்த மருத்துவ அலுவலர்களை நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ். சுகுமார்- 98424 64234, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர்கள்: டாக்டர் வி. சாந்தி- 98424 99199, டாக்டர் எஸ். ஆசைத்தம்பி- 94435 29245, டாக்டர் எஸ். மோகன்- 97872 04819, டாக்டர் எம். சாரதா- 98420 98126. கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர்கள்: டாக்டர் மோகன்ராம்- 93667 04267, டாக்டர் பி. தமிழரசி- 94864 93698. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர்கள்: டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியம்- 98431 75543, டாக்டர் ராமநாதன்- 94431 54221, டாக்டர் நித்தியசெல்வி- 94430 08992. மருந்துகளின் அளவை, நோயின் தாக்கத்தைப் பரிசோதித்த பிறகு கூட்டியோ, குறைத்தோ மருத்துவ அலுவலர்கள் முடிவு செய்து அளிப்பார்கள்’ என்றார் ராஜ்குமார்.
விரைப்பு தன்மை குறைவு – மாரடைப்பு தொடர்பு…!
இதயம் ஒரு அற்புத இயந்திரம்; சூப்பர் கம்ப்யூட்டரை விட துல்லியமான மிஷின்; இதயம் நான்கு அறைகள், நான்கு வால்வுகள் கொண்ட, “பம்ப்’ தாயின் கருப்பையில் சிசு உருவான மூன்றாவது வாரத்தில், இதயம் இயங்க ஆரம்பித்து விடுகிறது; மூடிய கை அளவே உள்ள இது, மார்பு கூட்டில், நுரையீரலின் நடுவில், இடதுபக்கம் சாய்ந்து உள்ளது.
இதய துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு 72 முறை; தூங்கும்போது 50 முறை துடிக்கும்; கணக்கிட்டால், ஆண்டு முழுவதும் மூன்றரை கோடி முறை “லப்…டப்’ துடிப்பு. வாழ்நாள் முழுவதும் தூங்காமல் இயங்கும் இதயம், மூன்று லட்சம் டன் ரத்தத்தை,”பம்ப்’ செய்து மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இப்படிப்பட்ட அரிய இயந்திரம், ரத்த நாளச் சுருக்கத்தால் பலவீனமடைகிறது. இதனால், இதயம் பாதிப்பது மட்டுமல்ல, ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடும் ஏற்படுகிறது.
என்ன காரணம்?
உணவு, வாழ்க்கை முறையில் மாற்றம் தான் சர்க்கரை நோய், இதய பாதிப்புக்கு காரணம். எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும் என்று, உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; அதுபோல, வாழ்க்கை முறையையும் மாற்றி விடுகின்றனர். தவறான பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் எதில் போய் விடுகிறது தெரியுமா? மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய். உடலில், அதிக கொலஸ்டிரால் சேருவதும் இதனால் தான்; இந்த பாதிப்பால், “அத்திரோஸ்கிலிரோசிஸ்’ என்ற, தமனி இறுக்க நோய் ஏற்படுகிறது. ரத்த நாளத்தின் உட்சுவர் பெயர் எண்டோதீலியம்; இதில், கெட்டக் கொழுப்பை, ரத்தக் குழாயில் படரச் செய்கிறது. இதனால், குழாய் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த நாளம் முழுவதும் சிதைந்து போக வாய்ப்பு ஏற்படுகிறது. இது தான் மார்பு வலி; இதுவே, மாரடைப்புக்கு காரணமாகிறது.
எண்டோதீலியம், கண்ணாடி போன்றது. அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரையளவு, அதிக கொலஸ்டிரால் ஆகியவை, எண்டோதீலியத்தைக் கிழித்து விடும். இதனால், கெட்டக் கொழுப்பு ரத்த நாளத்தில் படர்ந்து அடைப்பு ஏற்பட்டு வருகிறது. ரப்பர் பை போன்ற ரத்த நாளம், சிலருக்கு முழுவதும் அடைத்து, சிமென்ட் பை போல ஆகிவிடுகிறது. இவற்றின் விளைவு தான், மார்பு வலி, மாரடைப்பு.
விரைப்பு தன்மை சரிவு
ஆண்களின் உறுப்பில் விரைப்பு ஏற்பட, அந்த உறுப்பில் காணப்படும் வெற்றிடமே. உடல், உறவுக்குத் தயாராகிறது என்பதற்கான அறிகுறியாக, இந்த வெற்றிடத்தில் ரத்தம் நிரம்புகிறது. இதனால் விரைப்பு ஏற்படுகிறது. இறைவன் படைத்துள்ள அற்புதமான தொழில்நுட்பம் இது. இந்த வெற்றிடத்திற்கான ரத்தம், ரத்த நாளத்திலிருந்து கிடைப்பதால், ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டால், விரைப்பு தன்மை குறையும்.
ரத்தக் குழாயின் விட்டம், ஒரு மி.மீ., முதல் 2 மி.மீ., வரை இருக்கும். “அத்திரோஸ்கிலிரோசிஸ்’ என்ற தமனி இறுக்க நோய் தாக்கினால், ரத்த நாளம் சுருங்கி விடுகிறது. இதனால், ஆண் உறுப்பின் வெற்றிடத்திற்கு ரத்தம் செல்வது குறைகிறது; விரைப்புத் தன்மையும் குறைகிறது. இதை மையமாக வைத்து தான், இதய நோய் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், விரைப்பு தன்மை இல்லாதவர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
திடீர் மரணம், மர்ம மரணம்
திடீர் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம். திடீர் மரணத்தை, “Sudden Cardiac Death’ என்று அழைக்கின்றனர். திடீர் மரணம், 90 சதவீதம் இதயத்தை சார்ந்தது. 10 சதவீதம், நுரையீரலிலுள்ள தமனி அடைப்பு பல்மனரி எம்பாலிசம் (Pulmanary Embolism) ஏற்படுவதால் நிகழலாம்.
மூச்சு பேச்சு இல்லாமல் ஒருவர் கீழே விழுந்து இருந்தால், உடனடியாக சி.பி.ஆர்., என்ற இதய நுரையீரல் முதலுதவி செய்தால் பிழைத்துக் கொள்வர். இதை ஆங்கிலத்தில் Cardio Pulmanary Resuscitation என்பர். இது மேலை நாடுகளில் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு பாடமாகச் சொல்லித் தருவர். இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைக்கின்றனர்.
அமெரிக்காவில் வருடத்தில் 15 லட்சம் பேர் திடீர் மரணமடைகின்றனர்.ஆனால், இதய நோய் எதுவும் இல்லை; எந்த தொந்தரவுமில்லை. இ.சி.ஜி. எக்கோ, டி.எம்.டி., ரத்தக் கொதிப்பு எல்லாம் நார்மலாக இருக்கிறது. இவர்கள் எப்படி திடீர் மரணமடைகின்றனர்?
நார்மலாக இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தில், சில நேரங்கள் தாறுமாறாக துடிப்பு ஏற்பட்டு, சில நொடிகளில் திடீர் மரணம் ஏற்படும். இதை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் கடினம். பாரம்பரியமாக குடும்பத்தில் திடீர் மரணம் ஏற்படுகிறதா என்பதைத் தெரிந்து கொண்டால், தாறுமாறாக துடிப்பு ஏற்படும் இடத்தைப் பரிசோதித்து, “இம்ப்லான்டபிள் டீபைபிரிலேட்டர் (Implantable Defibrillator) பொருத்தி தடுக்கலாம்.
அந்த மூன்று இளைஞர்கள்
மூன்று வாரங்களுக்கு முன், 30 வயது இளைஞர், மூச்சிரைப்போடு என்னிடம் வந்தார். “எக்கோ’ செய்ததில், அவரது இதயம் 45 சதவீதம் மட்டுமே வேலை செய்தது. உடனே, “ஆஞ்சியோகிராம்’ செய்தேன். இதயத்திற்கு ரத்தம் கொடுக்கும் இரு குழாய்களில் முழு அடைப்பு ஏற்பட்டு, மூன்றாவது குழாயிலும், 40 சதவீதம் அடைப்பு. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை. என் நண்பர்களை ஆலோசனை செய்தேன். ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தேன்; நோயாளி திரும்பவும் என்னிடம் வரவில்லை.
சென்னைக்கு அடுத்து பெரியபாளையம் அருகில், 29 வயது கசாப்பு கடை முஸ்லிம் இளைஞர், மாரடைப்புடன் வந்தார். இடது ரத்தக்குழாய் முழு அடைப்பு. பலூன் ஸ்டென் சிகிச்சை செய்து, குணமடைந்து சென்றுவிட்டார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன், என் ஊரான சேலத்திலிருந்து, 25 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். “ஆஞ்சியோ கிராம்’ செய்து, “பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட்’ சிகிச்சை மூலம் சரி செய்யப் பட்டது. இன்றும் நன்றாக வாழ்கிறார். இப்படியே பல உதாரணங்கள் உள்ளன. இது தினசரி நிகழ்வாகி விட்டது.
இளைஞர்களுக்கு அறிவுரை
இன்று இந்தியாவில் பத்தில் ஆறு பேருக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதில், பெரும்பாலோர் இளைஞர் சமுதாயமே. இந்த கொடூர வியாதியைக் கட்டுப்படுத்த, தனி மனித ஒழுக்கம், முறையான உடற்பயிற்சி, மது, மாமிசம் அதிகம் உண்ணாமை, புகைப் பிடிப்பதை அறவே நீக்குவது, யோகா பயிற்சி ஆகியவற்றை கடை பிடியுங்கள்.
– பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்.,
பீஸ் கிச்சடி வித் சிம்பிள் சில்லி சிக்கன்
தேவையானப் பொருட்கள்:
* பாஸ்மதி அரிசி – 1 1/2 டம்ளர்
* தேங்காய் பால் – ஒரு டம்ளர்
* வெங்காயம் – ஒன்று (பெரியதாக)
* தக்காளி (பொடியாக அரிந்தது) – 2 தேக்கரண்டி
* பச்சை பட்டாணி – கால் கப்
* பட்டை – 2 இன்ச் அளவு
* மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
* கரம் மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி
* பச்சை மிளகாய் – 2
* இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
* புதினா தழை – சிறிது
* எண்ணெய் – 5 தேக்கரண்டி
* நெய் – ஒரு தேக்கரண்டி
* சிக்கனுக்கு;
* சிக்கன்(எலும்பில்லாதது) – கால் கிலோ
* இஞ்சி,பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
* மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
* ரெட் ஃபுட் கலர் – சிறிது
* கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
* கார்ன் ஃப்ளார் – ஒரு தேக்கரண்டி
* சோயா சாஸ் – கால் தேக்கரண்டி
* தக்காளி சாஸ் – கால் தேக்கரண்டி
* பிரட் கிரம்ஸ் – ஒரு தேக்கரண்டி
* உப்பு – தேவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
step 1
அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
step 2
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
step 3
வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
step 4
பின்பு பட்டாணி, புதினா, மல்லி தழைகள் மற்றும் மசாலாத் தூள் வகைகள் போட்டு வதக்கவும்.
step 5
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் தேங்காய் பாலும், ஒன்றரை டம்ளர் தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பும் போடவும்.
step 6
கொதி வந்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி சேர்க்கவும்.
step 7
அதன் பிறகு நன்கு கொதிக்கும் போது குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 8 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
step 8
சுவையான உதிரியான பீஸ் கிச்சடி தயார். வெஜ் பிரியர்கள் எண்ணெய் கத்திரிக்காய், புதினா துவையலுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
step 9
சிக்கன் ஃப்ரைக்கு: நன்கு கழுவிய சிக்கனை சிறு,சிறு துண்டுகளாக்கி அதனுடன் எண்ணெய் தவிர்த்து அனைத்து சாமான்களையும் சேர்த்து பிரட்டி, பத்து அல்லது பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
step 10
10 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வெஜ் பிரைடு ரைஸ்
தேவையானப் பொருட்கள்:
பிரியாணி அரிசி – 2 குக்கர் கப் எண்ணெய் – தேவையான அளவு பட்டர்-1 மேசைக்கரண்டி பட்டை-1 இன்ச் கிராம்பு – 3 நசுக்கிய பூண்டு- 4 or 5 நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய்-2 மெலிதாக நீளமாக நறுக்கிய வெள்ளை வெங்காயம் – 1/2 கப் காம்புடன் நறுக்கிய காலிப்பிளவர்-1/4 கப் காம்புடன் நறுக்கிய ப்ரொக்கலி-1/4 கப் மெலிதாக நீளமாக நறுக்கிய முட்டை கோஸ்-1/4 கப் அஜினோமொடொ- 1பின்ச் நறுக்கிய குடைமிளகாய் – 1 சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி தக்காளி சாஸ் – 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு-2 மேசைக்கரண்டி வெள்ளை மிளகுதூள் – 1 டீஸ்பூன் மல்லி இலை – பொடியாக நறுக்கியது – 1/2 கப் உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும் எண்ணெய் ,பட்டர் காயவைத்து அதில் பட்டை,கிராம்பு இட்டு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும்.அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஒரு டவாவில் குடைமிளகாயை மீடியமாக வதக்கி எடுத்து கொள்ளவும். காலிப்பிளவர்,ப்ரொக்கலி,முட்டை கோஸ் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும் அஜினோமொடொ சேர்க்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின் சிறிது உப்பு சேர்க்கவும். குடைமிளகாயை சேர்க்கவும். காய்கறிகளின் தண்ணீர் வற்றியதும் தக்காளி சாஸ்,சோயா சாஸ் சேர்த்து 5 mins வதக்கவும் எண்ணெய் சிறிது(2 teaspoon)சேர்க்கவும். வேகவைத்த சாதம், உப்பு, எலுமிச்சை சாறு,மிளகுத்தூள் ,மல்லி இலை போட்டு நன்கு கிளறி 5 mins ஸ்ம்மில் வைக்கவும் .
மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி
தேவையானப் பொருட்கள்:
* காளான் – 1 pkt
* பச்சை அரிசி – 1 கப்
* புழுங்கல் அரிசி – 3 கப்
* அவல் – 1 tbsp
* உளுந்து – 1 கப்
* வெந்தயம் – 1 tsp
* வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1/2 கப்
* இஞ்சி – 1 அங்குலம்
* பச்சை மிளகாய் – 3
* தக்காளி பேஸ்ட் – 1/2 கப்
* டோபு – 100g
* கொத்தமல்லி தூள் – 2 tsp
* சீராக தூள் – 1/2 tsp
* கரம் மசாலா தூள் – 1/2 tsp
* சிறிய வெங்காயம் – 7
* பூண்டு – 5 பல்
* மிளகாய் தூள் – 3/4 tsp
* எண்ணெய் – 1 tbsp
* புதினா – 1 tbsp
* கொத்தமல்லி இலை – 1 tbsp
* உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* எல்லா வகை அரிசி, உளுந்து, அவல் மற்றும் வெந்தயத்தை 6 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை 10 முதல் 12 மணி வைத்து புளிக்க விட வேண்டும்.
* சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் (2), மிளகாய் தூள் எல்லாவற்றையும் நன்கு அரைத்து கொள்ள
வேண்டும்.
* எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும்
சேர்த்து நன்கு வதக்கவும்.
* இப்பொழுது காளான், தக்காளி பேஸ்ட், புதினா, கொத்தமல்லி தூள், சீராக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு
சேர்த்து வதக்கவும்.
* கடைசியாக துருவிய டோபு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.
* ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
* இட்லி தட்டில் அரைத்து புளிக்க வைத்துள்ள மாவை முழுவதும் இல்லாமல் முக்கள் பாகம் ஊற்றி ஒரு உருண்டை ஒரு
இட்லி வீதம் நடுவில் வைத்து வேக வைக்கவும்.
* சுவையான சத்தான ஸ்டஃப்டு இட்லி தயார்.
பெண்கள் நீண்ட ஆயுள் வாழ்வது ஏன்?
ஆண்களைவிட பெண்களின் வாழ்நாள் அதிகம். இது ஏன்? இந்தக் கேள்விக்கு தற்போது விடை கிடைத்து உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சாகா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்து உள்ளனர்.
பெண்களின் ஜீன்கள் இதற்கு காரணமாக இருக்கிறதா? என்ற ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சில எலிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சில எலிகள் வழக்கமான முறையில் கருத்தரித்து குட்டிகள் போட்டன.
மேலும் இரண்டு பெண் எலிகளில் ஆண் எலியின் வளராத உயிரணுவை ஆய்வக முறையில் செயற்கையாக வளர்த்து பெண் கருமுட்டையுடன் சேர்த்து கருத்தரிக்க வைக்கப்பட்டது. இதேபோல் வளர்ந்த ஆண் உயிரணுவுடன் வளராத பெண் கருமுட்டைகளை சேர்த்தும் சோதிக்கப்பட்டது.
இவ்வாறு செயற்கை தன்மையாக பிறந்த எலிகளில் வளர்ந்த பெண் கருமுட்டையின் உதவியால் பிறந்த எலிகள் மற்ற எல்லா எலிகளைவிட கூடுதல் ஆயுள் வாழ்ந்தது. அதாவது எலிகளின் சராசரி ஆயுட்காலமான 600 முதல் 700 நாட்களைவிட கூடுதலாக 186 நாட்கள் வாழ்ந்தன.
இதில் இருந்து விஞ்ஞானிகள் சில முடிவுக்கு வந்தனர். அதாவது பெண்கள் எளிமையான வாழ்வு வாழ்வதே அவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்பது தெரியவந்தது. ஆண்கள் கடினமான வேலை செய்வதாலும், அதிகமான பொறுப்புகள், அதனால் உருவாகும் மன அழுத்தம் போன்றவற்றாலும் வாழ்நாள் குறைந்துவிடுகிறது.
ஆய்வாளர் கெனோ கூறும்போது, “மனித வாழ்க்கையில் இதற்கான முழுக் காரணம் தெளிவுபடுத்தப்படாவிட்டாலும், பாலூட்டிகளின் வாழ்க்கையில் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரின் மரபுப்பண்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.
அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும். மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும். வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.
தொப்பைக்கு… `குட்பை’
இன்றைக்கு தொப்பை இல்லாத மனிதர்களை நகரங்களில் பார்பது அரிது. இது கொஞ்சம்… கொஞ்சமாக நகரத்திலிருந்து கிராமத்திற்கும் நகர்ந்து வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் `துரித உணவும், உடல் உழைப்பு இன்மையும்தான்’ என்கின்றனர், உடல்கூறு ஆய்வாளர்கள்.
தமது குண்டான உடலை இளைக்க வைக்கவும், தொப்பையை குறைக்கவும் ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு அழகு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை குறிவைத்து சில போலிகளும் விளம்பரபடுத்தி அவர்களிடம் `கறந்து’ வருகின்றன. ஆனால் தொப்பையை கரைக்க ஈசியான வழியை பழங்கள் செய்து வருகின்றன. குறிப்பாக அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரடி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி முடி வைக்கவும். மறுநாள் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு, சாறை மட்டும் வெறும் வயிற்றில் அருந்தவும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொப்பை சீக்கிரமாக கரைந்து விடும்!
மேலும் தொப்பை கரைய… யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு என்று தொடர்ந்தால் தொப்பை போயே…போச்! குண்டாக இருப்பவர்கள் தினமும் 100 கிராம் வெங்காயச் சாறை வெறும் வயிற்றில் அருந்த இதயக் கோளாறை கட்டுபடுத்தலாம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பச்சை வெங்காயத்தை தயிரோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மெலிவு நோய் தடுக்கபடும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், கர்ப்பிணிகள், 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் போலிக் அமிலம் அவசியம் தேவை. முளையை சுறுசுறுபாக்குவதில் போலிக் அமிலம் அத்தியாவசியமானது. மேலும் மனநிலை பாதிப்பு, முதுமையில் ஞாபக மறதி ஆகியவற்றை தடுக்கும். பருப்பு வகைகள், பீன்ஸ், வெண்டைக்காய், கறிவேப்பிலை, தண்டுக்கீரை, முட்டை, ஆட்டு ஈரல் ஆகிய உணவுகளில் போலிக் அமிலம் உள்ளது.
செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். இதயமும் வலுவாகும். செம்பருத்தி பூவை நிழலில் காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் தலை குளிர்ச்சியடையும். இதனால் பொடுகு நீங்கும். கூந்தலும் நன்கு கறுகறுவென வளரும். பூவையும் இலையைம் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது.
பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுபடுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு. பூண்டு ஒரு நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு. பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் கார்லிக் பால்ஸ் எனபடும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்புசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.
உத்தானபாத ஆசனம்
நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் (விறைப்பாக இல்லாமல்) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப்பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.
பலன்கள்:
அடி வயிறு இறுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப் பின் இவ்வாசனம் செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.
குறிப்பு:
உத்தானபாத ஆசனம் முதல் நிலை 3, 4 நாட்கள் செய்த பின் 2&ம் நிலைக்கு வரவும். முதல் நிலை & கால் தரையிலிருந்து 1 அடி முதல் 2 அடி உயரலாம். 2 &ம் நிலை & 4 முதல் 6 அங்குலம்தான் கால் தரையிலிருந்து உயரலாம்.