சிக்​குன் குனியா,​​ பன்​றிக் காய்ச்​ச​லுக்கு சித்த மருந்​து​கள்

சிக்​குன் குனியா,​​ பன்​றிக் காய்ச்​சல் உள்​ளிட்ட காய்ச்​சல்​க​ளுக்கு பக்க விளை​வு​கள் அற்ற,​​ நிரந்​த​ரத் தீர்​வைத் தரும் சித்த மற்​றும் ஹோமி​யோ​பதி மருந்​து​களை மாநில அர​சின் இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமி​யோ​பதி துறை முதன்​மைச் செய​லர் ஜி.ஏ.​ ராஜ்​கு​மார் வெளி​யிட்​டார்.

திருச்​சி​யில் வெள்​ளிக்​கி​ழமை செய்​தி​யா​ளர்​க​ளைச் சந்​தித்த அவர் கூறி​யது:

சித்தா-​ சிக்​குன் குனியா:​​ ​ தொடர்ச்​சி​யாக காய்ச்​சல்,​​ தலைவலி,​​ சோர்வு,​​ குமட்​டல் உணர்வு,​​ வாந்தி,​​ தசை​க​ளில் வலி,​​ மூட்​டு​க​ளில் வலி,​​ அரிப்​பு​டன்​கூ​டிய தடிப்பு போன்ற அறி​கு​றி​கள் இருந்​தால் அது சிக்​குன் குனி​யா​வாக இருக்​க​லாம்.​​ ​ இவை இருந்​தால்,​​ திரி​தோட மாத்​திரை ​(2),​ சுதர்​சன சூர​ணம் ஒரு கிராம் ஆகி​ய​வற்றை காலை மற்​றும் மாலை இரு வேளை தேனு​டன் கலந்து அல்​லது நில​வேம்​புக் குடி​நீ​ரு​டன் கலந்து உண​வுக்கு பின் உள்​கொள்ள வேண்​டும்.​ 15 கிராம் நில​வேம்​புச் சூர​ணத்தை அரை லிட்​டர் நீர் விட்டு காய்ச்சி 100 மில்​லி​யாக வற்ற வைத்து இரு வேளை​யும் உண​வுக்​குப் பின் உள்​கொள்ள வேண்​டும்.​​ ​ பிண்​டத் தைலம்,​​ கற்​பூ​ரா​தித் தைலம் ஆகி​ய​வற்றை சம அளவு கலந்து வலி வீக்​கம் உள்ள இடத்​துக்கு மேலே தடவ வேண்​டும்.​ இவற்றை மூன்று முதல் 5 நாள்​க​ளுக்கு தொடர்ந்து சாப்​பிட வேண்​டும்.​ அரி​சிக் கஞ்சி மட்​டும் சாப்​பி​ட​லாம்.​​ ​ காய்ச்​சல் நீங்​கிய பின்​ன​ரும் மூட்டு வலி மற்​றும் வீக்​கம் இருந்​தால்,​​ அய்​வீ​ரச் செந்​தூ​ரம் 100 மில்லி கிராம்,​​ சுதர்​சன சூர​ணம் ஒரு கிராம் ஆகி​ய​வற்றை காலை மாலை இரு வேளை தேன் அல்​லது நில​வேம்​புக் குடி​நீ​ரு​டன் கலந்து குடிக்க வேண்​டும்.​ ஏற்​கெ​னவே குறிப்​பிட்ட தைலத்​தைத் தட​வ​லாம்.

ஹோமி​யோ​பதி-​ சிக்​குன் குனியா:​​ ​ ​ யூப​டோ​ரி​யம் பெர்ப் ​(30),​ ரூட்டா ​(30)- க்ஷல​டம்​பால் ​(30),​ ரஸ்​டாக்ஸ் ​(30),​ பிரை​யோ​னியா ​(30),​ சைனா ​(30) ஆகி​ய​வற்றை தலா 5 உருண்​டை​கள்,​​ காலை,​​ மதி​யம்,​​ இரவு உண​வுக்கு முன் உள்​கொள்ள வேண்​டும்.

சித்தா-​ பன்​றிக் காய்ச்​சல்:​​ ​ தொடர்ச்​சி​யாக காய்ச்​சல்,​​ சளி ​(மூக்​கில் தொடர்ந்து சளி வடி​தல்)​,​​ தலைவலி,​​ உடல்வலி,​​ வயிற்​றுப்​போக்கு,​​ வறண்ட தொண்டை போன்​றவை பன்​றிக் காய்ச்ச​லின் அறி​கு​றி​கள்.​ ​​ ​ இவை இருந்​தால்,​​ தாளி​சாதி சூர​ணம்,​​ சீந்​தில் சர்க்​கரை ஆகி​ய​வற்றை தலா 200 மில்​லி​கி​ராம் நாளொன்​றுக்கு இரு வேளை​கள்,​​ உண​வுக்​குப் பிறகு உள்​கொள்​ள​லாம்.​ மேலும்,​​ நில​வேம்​புச் சூர​ணம்,​​ பவ​ள​மல்லி இலை சூர​ணம் ஆகி​யற்றை தலா 500 கிராம்,​​ நாளொன்​றுக்கு இரு வேளை​கள்,​​ உண​வுக்​குப் பிறகு உள்​கொள்​ள​லாம்.

ஹோமி​யோ​பதி -​ பன்​றிக் காய்ச்​சல்:​​ ​ பன்​றிக்​காய்ச்​சல் வரு​முன்​காக்க,​​ இன்​பு​ளூ​யன்​சி​னம் 200 அல்​லது 1 எம் மாத்​தி​ரையை 5 உருண்டை வாரம் தினம் ஒரு வேளை இரு வாரங்​க​ளுக்கு மட்​டும் ​ உள்​கொள்ள வேண்​டும்.​ ஆர்​ச​னிக் ஆல்​பம் 30 ஆகி​ய​வற்றை தலா 5 உருண்​டை​கள் தின​மும் ஒரு வேளை இரு வாரங்​க​ளுக்கு மட்​டும் உள்​கொள்ள வேண்​டும்.​​ ​ நோய் வந்​த​பின் குணம் பெற,​​ ஆர்​ச​னிக் ஆல்​பம் ​(30),​ அகோ​னைட் ​(30),​ பெல்​ல​டோனா ​(30),​ பிரை​யோ​னியா ​(30),​ யூப​டோ​ரி​யம் பெர்ப் ​(30),​ ஜெல்ஸ்​மி​யம் ​(30),​ ரஸ்​டாக்ஸ் ​(30) ஆகி​ய​வற்றை தலா 5 உருண்​டை​கள் மூன்று வேளை​யும் உண​வுக்கு முன் உள்​கொள்ள வேண்​டும்.

டெங்கு:​ சிக்​குன் குனி​யா​வுக்​கான மருந்​து​களே டெங்​கு​வுக்​கும் பொருந்​தும்.​ இவற்றை உள்​கொள்​வ​தால்,​​ எவ்​வி​தப் பக்க விளை​வு​க​ளும் இல்லை.​ இருப்​பி​னும்,​​ பாதிக்​கப்​ப​டும் பொது​மக்​கள்,​​ தன்​னார்வ அமைப்​பு​கள்,​​ விளக்​கம் தேவைப்​ப​டும் மருத்​து​வர்​கள் அனை​வ​ரும் அரசு சித்த மருத்​துவ அலு​வ​லர்​களை நேரிலோ,​​ தொலை​பே​சி​யிலோ தொடர்பு கொண்டு விளக்​கம் பெற​லாம்.

திருச்சி மாவட்ட சித்த மருத்​துவ அலு​வ​லர் டாக்​டர் எம்.எஸ்.​ சுகு​மார்-​ 98424 64234,​ மாவட்ட அரசு தலைமை மருத்​து​வ​மனை உதவி மருத்​துவ அலு​வ​லர்​கள்:​ ​ டாக்​டர் வி.​ சாந்தி-​ 98424 99199,​ டாக்​டர் எஸ்.​ ஆசைத்​தம்பி-​ 94435 29245,​ டாக்​டர் எஸ்.​ மோகன்-​ 97872 04819,​ டாக்​டர் எம்.​ சாரதா-​ 98420 98126.​​ ​ கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்​து​வ​ம​னை​யின் உதவி மருத்​துவ அலு​வ​லர்​கள்:​ டாக்​டர் மோகன்​ராம்-​ 93667 04267,​ டாக்​டர் பி.​ தமி​ழ​ரசி-​ 94864 93698.​​ ​ பெரம்​ப​லூர் மாவட்ட அரசு தலைமை மருத்​து​வ​ம​னை​யின் உதவி மருத்​துவ அலு​வ​லர்​கள்:​ டாக்​டர் எஸ்.​ பால​சுப்​பி​ர​ம​ணி​யம்-​ 98431 75543,​ டாக்​டர் ராம​நா​தன்-​ 94431 54221,​ டாக்​டர் நித்​தி​ய​செல்வி-​ 94430 08992.​​ ​ மருந்​து​க​ளின் அளவை,​​ நோயின் தாக்​கத்​தைப் பரி​சோ​தித்த பிறகு கூட்​டியோ,​​ குறைத்தோ மருத்​துவ அலு​வ​லர்​கள் முடிவு செய்து அளிப்​பார்​கள்’ என்​றார் ராஜ்​கு​மார்.

%d bloggers like this: